Thursday, November 17, 2011

அப்துல் கலாமை அசிங்கப் படுத்திய அமெரிக்கா



அமெரிக்க அரசு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை
மீண்டும் ஒரு முறை அவமதித்துள்ளது. 


முன்னாள் குடியரசுத் தலைவர் என்று மதியாமல் 
அமெரிக்க விமான நிலையத்தில் முழுமையான
பரிசோதனை செய்துள்ளார்கள். விமானத்தில் 
அமர்ந்த பின்பும் அவரது மேலங்கியையும் 
காலணியையும் கழட்டச் சொல்லி சோதனை
செய்துள்ளனர். 


இப்படி நடப்பது இரண்டாம் முறை. அமெரிக்காவுடன்
நட்பாக உள்ள, அணு சக்தி உடன்பாட்டிற்கு ஆதரவாக
முலாயம், லாலுவை வழிக்குக் கொண்டு வந்தவருக்கே
இப்படி ஒரு கதி! 


இந்திய அரசு இதைப் பற்றி கண்டிக்காததே 
கண்டனத்துக்குரியது.




அமெரிக்காவில் இருந்து ஒரு நாய் ( நான் எந்த 
மனிதரையும் சொல்லவில்லை. நிஜமாகவே 
நாய்தான் ) ராஜ மரியாதை  கொடுப்பது 
இந்திய அரசு. 




மனிதர்களை நாயினும் கீழாய் நடத்துவது 
அமெரிக்க அரசு. 





 

4 comments:

  1. இந்த சம்பவம் நடந்து 45 நாட்கள் கழித்து இப்பொழுது பேசப் படுவதின் பின்னணி என்ன என்று தான் நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்

    ReplyDelete
  2. //இந்த சம்பவம் நடந்து 45 நாட்கள் கழித்து இப்பொழுது பேசப் படுவதின் பின்னணி என்ன என்று தான் நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்

    சரியான கேள்வி.

    ReplyDelete
  3. அப்துல் கலாமை சோதனையிட்ட அதிகாரிகள் இரண்டு பேரை அமெரிக்க அரசு டிஸ்மிஸ் செய்துள்ளது.

    ReplyDelete
  4. //மனிதர்களை நாயினும் கீழாய் நடத்துவது அமெரிக்க அரசு. // அப்புறம் எதற்கு அமெரிக்க செல்வதற்கு இத்தனை போட்டி?

    ReplyDelete