Thursday, September 1, 2011

ஆக்கிரமிப்பு விநாயகர்கள்



இன்று காலை ஒரு தோழரது புது மனை புகு விழாவிற்குப்
போய் வந்திருந்தேன்.  எனது வீட்டிலிருந்து பிரதான 
சாலை செல்லும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் 
பெரிதும் சிறிதுமாக  எட்டு விநாயகர் சிலைகள் 
வைத்திருந்தார்கள். அனைத்துமே சாலையை 
ஆக்கிரமித்து போக்குவரத்திற்கு  இடையூறாகத்தான்
வைத்துள்ளார்கள். 


 காலையில் நான் செல்லும்  போது  பக்தி பாடல்களை
ஒலித்துக்  கொண்டிருந்த ஒலி பெருக்கிகள் இப்போது
புரியாத முக்கல் முனகல்  குத்துப் பாட்டுக்களை 
ஒலி  பரப்பி பக்தி  வளர்க்கும் அரிய சேவையை 
துவங்கி விட்டன. 


1992 ம வருடம் நான்   வேலூர் வந்தேன். அந்த வருடம்
கூட  இந்த பிரம்மாண்ட சிலை வழிபாடுகள் இல்லை. 
 வேலூர்   வருவதற்கு  முன்பிருந்த நெய்வேலியில் 
 கூட  கிடையாது. 


உண்மையைச்சொல்லப்போனால்  பிள்ளையாருக்கு
 இவ்வளவு பெரிதாக  சிலை   வைத்துக் கொண்டாடுவார்கள்
என்பது நாயகன் திரைப்படம் வந்த போதுதான் தெரியும்.


பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்பே  தமிழகம் முழுதும்
 இந்த  கலாசாரம்  திட்டமிட்டு  பரப்பப்பட்டது.  பக்தி
 என்பது   இவர்களுக்கு  இரண்டாம் பட்சம்தான். 
சிலையை வைத்து கலவரம் உருவாக்குவது  என்பதே
உண்மையான நோக்கம்.


 இன்று  நான்   கண்ட இன்னொரு காட்சி. பல இடங்களில்
 இந்து முன்னணி ஆட்கள் லாரிகளில் விநாயகர்   
 சிலையை  கொண்டு வந்து இறக்கி 
 " ஓம் காளி, ஜெய  காளி" கோஷம் போட்டார்கள்.


"பார்த்திபன் கனவு"  நாவலில் அமரர் கல்கி 
   நரபலிக் கூட்டத்தார் ஓம் காளி, ஜெய  காளி
என கோஷ்மிடுவதாய்  எழுதியிருப்பார். 
இவர்களைப் பார்க்கும் போதெல்லாம்  
அந்த  நரபலிக் கூட்டம் நினைவிற்கு 
 வருவதை  தவிர்க்க முடியவில்லை.   

 சிலையை  கரைக்கச்செல்வது  என்று 
நடக்கும் ஊர்வலக் கூத்து பற்றியே 
தனியாக  எழுத வேண்டும்.
 

4 comments:

  1. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

    ReplyDelete
  2. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

    ReplyDelete
  3. மாற்றத்தை விரும்பும் உங்களுக்கு வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள் இதோ ஒரு ஓட்டு!வாங்க எங்க பக்கம்!
    தீரன்சின்னமலை-புலனாய்வு செய்தி ஊடகப்பதிவு-theeranchinnamalai.blogspot.com-

    ReplyDelete
  4. தேவை அமைதிப் பிள்ளையார்..! அரசியல் பிள்ளையார் வேண்டாம்..!

    ReplyDelete