Tuesday, August 16, 2011

மந்திரக் கோல் கேட்கும் மதி கெட்ட மன்மோகன் சிங் எனும் மிகப் பெரும் திருடர்




விலைவாசியைக்  குறைக்க  என்னிடம்  மந்திரக்கோல்  இல்லை.
ஊழலைக்  கட்டுப்படுத்த  என்னிடம்  மந்திரக்கோல்  இல்லை
தீவிரவாதத்தை  வேரறுக்க என்னிடம்  மந்திரக்கோல்  இல்லை
வறுமையைப் போக்க  என்னிடம்  மந்திரக்கோல்  இல்லை

இப்படி  எல்லா பிரச்சினைகளுக்கும்   மந்திரக்கோலை  தேடுவதையே
பிழைப்பாகக் கொள்வது  ஒரு பிரதமருக்கு  அழகா?

தேர்தல் ஏன்? ஜனநாயகம்  ஏன்?

மந்திரவாதிகளையும்  அருள்வாக்கு  சொல்லும் பூசாரிகளையும்
பிரதமராய்  அமர வைக்கலாமே?

அனைத்துப் பிரச்சினைகளையும்  தீர்க்க  மந்திரக்கோல்
தேவையில்லை. மக்கள் மீது  அக்கறை  செலுத்தும்
நல்ல  மனம்  வேண்டும். ஐயா மன்மோகன்சிங்  அதுதான்
உம்மிடம்  இல்லை.

கையாலாகதவன்  புலம்பல்  என  தூற்றி விட்டுப் போய் விடுவார்
என  வஞ்சகமாய்  தப்பிக்கப் பார்க்கும்  மன்மோகன்சிங்கை
நேர்மையானவர்  என  யாரும் இனி சொல்லாதீர்கள்.

திருடர்களை  பாதுகாப்பவனை விட  பெரிய திருடன்
யாராவது இருக்க முடியுமா?

மன்மோகன் சிங்  அவ்வகையில்  மிகப் பெரிய திருடர்.


இது இந்தியா

மின் அஞ்சல்  மூலம் கிடைக்கப் பெற்ற 
இப்படம் நன்றாகவே உள்ளதால் 
உங்கள் பார்வைக்காக 

 

Thursday, August 11, 2011

சமச்சீர் கல்வி - சமச்சீராய் நன்றிகள் பல

இரண்டு மாதம் தூங்கி வழிந்த
புத்தகங்கள் கையிலே  புரள 
பக்கங்களோடு  கண்களும் விரிய
நன்றி சொல்ல  வேண்டும் - 
யாருக்கு?
பாடங்களுக்கு  ஊடாக  தன்
படங்களை பொருத்தியவர்க்கா?
முன்பிருந்தவர் எழுதிய எழுத்தெல்லாம்
முனைப்புடனே அழிக்க முயல்பவர்க்கா?  
குறுகிய காலத்தில்  குறைவில்லா தீர்ப்பை
நிறைவாய்  தந்த நீதியசரர்க்கா?
கோபமுற்ற  காவலரிடம் 
பிரம்படிகள்  வாங்கியும் 
சிவப்புக் கொடியேந்தி 
சிவந்த கண்களோடு 
போராடியவர்க்கா? 
தயக்கமின்றி  சொல்வேன்
நன்றிகள்  பல ........
(நீதி) அரசரோடு 
அடிகள் வாங்கியவர்க்கும்.... 


படைப்பு  -  மதுரை  பாரதி

Monday, August 8, 2011

அரை பாட்டில் கள்ளச்சாராயத்திற்கு 32 வருட சிறை

அரை பாட்டில் கள்ளச்சாராயம்  வைத்திருந்த
காரணத்தால்  உத்திர பிரதேச மாநிலத்தில் 
மான்சிங் என்பவர் கைது செய்யப்பட்டு 
முப்பத்தி இரண்டு ஆண்டுகளாக  சிறையில் 
உள்ளார். சமீபத்தில்  தன்னை விடுதலை 
செய்ய வேண்டும்  என்ற அவரது மனுவை 
உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. 


இதிலே  அவர் மீது  சரியான முறையில் 
வழக்கு பதியவில்லை, எனவே இன்னும் 
கால அவகாசம்  வேண்டும்  என்று  உ.பி 
காவல்துறை மேல் முறையீடு  வேறு 
செய்தது. அது நிராகரிக்கப்பட்டு விட்டது. 


இது  போன்ற வழக்குகளில்  நீதிமன்றத்தின்
நேரம்  விரயமானால்  சாமானிய 
மக்களுக்கு  எப்படி நீதி கிடைக்கும்?  

Sunday, August 7, 2011

உம்மன் சாண்டியின் நாற்காலி




சில தினங்கள் முன்பாக  கேரள முதல்வர்
அறைக்கு போன சில அமைச்சர்கள் 
அதிர்ந்து போய் விட்டார்களாம். 


அங்கே முதல்வர் நாற்காலியில் 
ஒரு மர்ம மனிதன் அமர்ந்து கொண்டு
தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தானாம். 
பிறகு காவலர்கள்  அவனை  அப்புறப்படுத்தி 
விசாரித்த போது  மன நிலை பாதிக்கப்ப் 
பட்ட நபர் என தெரிந்ததாம். 


உம்மன் சாண்டியின் நாற்காலி 
நிலையற்றது.  அதிலே  உட்கார  வேறு 
ஆட்கள் தயாராக உள்ளார்கள்  என்பதை
இச்சம்பவம்  சிம்பாலிக்காக  
சொல்கின்றதோ!  

இம்சை முதல்வர் மூன்றாம் ரங்கசாமி





வெள்ளிக் கிழமையன்று  எங்கள்  புதுவைக் 
கிளையின் ஆண்டுபேரவைக் கூட்டத்திற்காக 
புதுச்சேரி  போயிருந்தேன்.  முதல் நாள் 
புதுவை முதல்வர் ரங்கசாமியின்  பிறந்த 
நாள் கொண்டாட்டம்  வெகு வெகு வெகு 
விமரிசையாக  நடந்திருந்தது  என்பது 
நகர்  முழுதும்  வைக்கப்பட்ட  விளம்பர 
பேனர்கள்  மூலம்  உணர முடிந்தது. 


புலிகேசி படத்தில்  ராஜாதி ராஜ, 
ராஜ குல திலக என துதி பாடுவது 
போல  எத்தனை  துதிகள்  தெரியுமா? 


மக்கள் தலைவா
மக்கள் முதல்வா
சின்ன காமராசரே
வாழும் காமராசரே,
புதுவை காமராசரே,
நிரந்தர முதல்வரே,
எங்கள் ஐயா,
எங்கள் ஐயனே
எங்கள் குல சாமி
ஆண்டவனே, ஆள்பவனே
எங்கள் தெய்வமே,
மாணிக்கமே,
தல யே
தளபதியே
தங்கப் புதல்வனே,
த்வப்புதல்வனே,
இமயமே,
உழைப்பின்  ஓவியமே,
அறுசுவையே.
சிங்கமே,
எங்கள் சாமியே,
வசந்த காலமே,
கர்ம வீரரே,
கருணை உள்ளமே
புதுவையே
புதுவையின் முகவரியே



எனது நினைவிற்கு வந்தது இவ்வளவுதான்.
நான் பார்த்ததை விட பார்க்காமல் விட்டதுதான்
அதிகம்தான்  என தோழர்கள் சொன்னார்கள். 


இந்த பேனர்களில் வித்தியாசமான 
கெட் அப் கள வேறு.  


கராத்தே  உடையிலும்  சிக்ஸ் பேக் 
கம்பீர உடலோடும்  இருந்ததுதான்  
எனக்கு பிடித்திருந்தது. 


அவரது அம்மாவிற்கு  வேறு  தனி 
போஸ்டர்கள்.  மாணிக்கத்தை  
பெற்றெடுத்த மரகதத் தாய். . . 


முதல் நாள் இரவு நகர் வலம்  வந்து
அனைத்து பேனர்களையும்  பார்த்தாராம்.
அவர் எந்தெந்த  பேனர்களை எல்லாம்
மிகவும்  ரசித்தார்  என்ற தகவலை 
அவரது ஓட்டுனர் சம்பத்தப்பட்ட 
ஆட்களுக்கு  தொலைபேசியில்  வேறு 
தகவல்  சொன்னாராம். 


நானும் கூட  ஒரு வித்தியாச 
கெட் அப்,   மூன்றாவது முறையாக 
முதல்வரான  ரங்கசாமி அவர்களுக்கு
தயாரித்துள்ளேன். 


நன்றாக உள்ளதா என சொல்லுங்கள் ....   
   

Thursday, August 4, 2011

பரிதாபத்திற்குரிய புதிய முதல்வர்




ஒரு வழியாக  கர்னாடகத்திற்கு  புதிய  முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்.தமிழகத்திற்கு  எதிரான  உணர்வுகளை  ஹொகனேக்கல் பரிசல் பயணம் மூலம் தூண்டி விட்டு  முதலமைச்சர்  நாற்காலியை  பிடித்த நாள் முதலே  யெடியூரப்பாவின்  ஆட்சிக்காலம்  பல்வேறு  ஊழல்  குற்றச்சாட்டுக்கள், உள்கட்சி மோதல்களால் அந்த நாற்காலி தடுமாறிக் கொண்டே  இருந்தது. 

சுரங்க ஒதுக்கீடுகளில்  முறைகேடு  நடந்துள்ளது  என லோக் ஆயுக்தா  அளித்தஅறிக்கையின்  அடிப்படையில்  பாஜக  மேலிடம்  உத்தரவிட  வேறு  வழியின்றிமுதல்வர் யெடியூரப்பா  பதவி விலக வேண்டிய  அவசியம்  ஏற்பட்டது. கடுமையான இழுபறிக்குப் பின்பு  ரகசிய  வாக்கெடுப்பு  நடத்தி  சதானந்த கௌடா  புதிய முதல்வராக  பொறுப்பேற்கப் போகின்றார்.

அவரது நிலை  உண்மையிலேயே  பரிதாபமானது. வெறும் 14  கூடுதல் வாக்குகள் மூலமே அவர் எதிர் கோஷ்டி வேட்பாளரை விட  பெற்று    நாற்காலியை  அடைந்துள்ளார்.  சுரங்க மாபியா   உரிமையாளர்களை    பகைத்துக் கொண்டால் அவருக்கு   கிடைத்த  ஆதரவு கற்பூரமாய்  காற்றில்  மறைந்து   விடும்.

யெடியூரப்பா தனக்கான  தலையாட்டி  பொம்மையாகத்தான்    சதானந்த கௌடாவை முதல்வராக்கியுள்ளார். எனவே யெடியூரப்பா   மீது  வழக்கு தொடுக்க  ஆளுனர் அனுமதி கொடுத்துள்ள  நிலையில் அந்த   வழக்கை நீர்த்துப் போகச் செய்திட வேண்டும். இல்லையென்றால்   அவர் கோபித்துக் கொள்வார்.

எதிர்கோஷ்டிகளும்  எதிர்க்கட்சிகளும்  காலை வாருவதற்கான  சரியானவாய்ப்பை   பார்த்துக் கொண்டே  இருப்பார்கள். இந்தப் பின்னணியில் கர்னாடக மாநில  புதிய  முதல்வர்  உண்மையிலேயே  பரிதாபமானவர்தான். 

இவரது நிலையே இப்படியென்றால்  கர்னாடக  மக்களின்  நிலை,
மிக மிக  பரிதாபம்.

பின் குறிப்பு  
இந்தப் படமே  அவரது நிலையை  சொல்கிறதல்லவா!