Monday, July 4, 2011

இதன் சிறப்பே தனிதான்!

எல்.ஐ.சி நிறுவனத்தைப் பற்றிய சில படங்களைப் பாருங்கள் !















எல்.ஐ.சி யின் சிறப்பும் கம்பீரமுமே  தனிதானே! 
 

Sunday, July 3, 2011

மந்திரி - எந்திரி

இன்று  காலை நாளிதழில்தான்  நீடாமங்கலம் நீதிமன்ற திறப்பு விழாவில் 
சட்ட அமைச்சர்  இசக்கி சுப்பையா படம் பார்த்தேன். மதியம் அவர் பதவி
பறி போய்விட்டது. எதற்கு கொடுத்தார்கள், எதற்கு பறித்தார்கள் என்பது
அம்மாவுக்கே  வெளிச்சம்.  அனைத்து அதிமுக எம்.எல்.ஏ க்களும் 
தயாராக இருங்கள் .ஐந்து வருடங்களுக்குள்  உங்களுக்கும் வாய்ப்பு 
நிச்சயம்.    

மார் தட்டி சொல்வேன்! எமக்கு நிகர் யார் இங்கே?

நடந்து முடிந்த நிதியாண்டில் மிக அதிகமான கேட்புரிமங்களை  பட்டுவாடா செய்த நிறுவனம்  என்ற புகழ் எல்.ஐ.சி நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. 


நடந்து முடிந்த 2010 - 2011  நிதியாண்டில்  ஒரு கோடியே 83 லட்சம் கேட்புரிமங்களை  53 ,000  கோடி ரூபாய்க்கு  பட்டுவாடா செய்துள்ளது. 
அதிலே 7 ,21 ,000  இறப்புக் கேட்புரிமங்களும் அடக்கம்.  அதற்காக ஆன
தொகை 6000  கோடி ரூபாய். 


மார்ச் 31  அன்று நிலுவையில்  உள்ள கேட்புரிமங்கள்  வெறும் 1 .47  %. 
நிராகரிக்கப்பட்ட கேட்புரிமங்கள் 1 .09 %.  


ஆனால் மற்ற தனியார் கம்பெனிகளின்  செயல்பாடு என்ன தெரியுமா?


நிறுவனம்                                    நிராகரிக்கப்பட்டது            நிலுவையில் உள்ளது

ஐஸிஐஸிஐ புருடென்ஷியல்       2 .8  %                                            3 .6 %
ஹெச்.டி.ஃ எப். சி லைப்                    3 .97 %                                           0 .61 %
அவயா                                                      4 .10  %                                           3 .14 % 
பிர்லா சன்லைப்                                 4 .99 %                                            0 . 35 %
இந்தியா பர்ஸ்ட் லைப்                   9 .04 %                                            0 . 03  % 
மாக்ஸ் நியூயார்க்                             14 .85  %                                         7 .19 %
எஸ்.பி.ஐ லைப்                                  16 .74  %                                          1 .03  %
ஐ.டி.பி.ஐ பெடரல் லைப்                21 %                                                14  %




ஐயா, இது தொழிற்சங்கம்  தரும் புள்ளி விபரம் அல்ல. எல்.ஐ.சி யை 
கட்டுப்படுத்தவும் தனியார் நிறுவனங்களை  வளர்த்தெடுக்கவும் 
அமைக்கப்பட்டுள்ள  காப்பீட்டு  வளர்ச்சி மற்றும்  ஒழுங்காற்று  
ஆணையம் ,தமிழில் புரியும்படி  சொல்ல வேண்டுமானால் ஐ.ஆர்.டி.ஏ
கொடுத்துள்ள  புள்ளி விபரம். 


கேட்புரிமங்களை   பட்டுவாடா செய்வதுதான்  ஒரு இன்சூரன்ஸ் 
நிறுவனத்தின் அடிப்படைப் பணி. சரியில்லாத சில இறப்பு 
கேட்புரிமங்களை  நிராகரிக்கலாம். ஆனால் நிராகரிப்பதையே 
பல கம்பெனிகள்  பணியாய் கொண்டு விட்டது போலும்! பாவம் 
அங்கே இன்சூரன்ஸ்  எடுத்து இன்னும் பணம் கட்டிக் கொண்டு 
உள்ளவர்கள்!




இப்போது சொல்லுங்கள் , எங்கள் எல்.ஐ.சி க்கு நிகர் யார் இங்கே? 




இன்னொன்றும் சொல்லுங்களேன், இதனை சீரழிக்க முயலும் 
மன்மோகன் சிங் அரசை  என்ன செய்யலாம்? 


Saturday, July 2, 2011

சீனா தெளிவாகவே உள்ளது


சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின்  90 வது ஆண்டு விழா, நேற்று சீனா 
முழுதும்  செங்கொடி ஏற்றிக் கொண்டாடப்பட்டுள்ளது. தியாமேன் 
சதுக்கத்தில்  ஆயிரக்கணக்கானவர்கள்  பங்கேற்றுள்ளனர். 
திபெத்திலிருந்து எராளமானவர்கள்  பங்கேற்று அது சீன மண்ணின்
ஒரு பகுதி என்று தலாய் லாமா முகத்தில் கரி பூசியுள்ளனர்.


மார்க்சியத்தையும்  சோஷலிசத்தையும்  உறுதியோடு தொடர்வோம் 
என்று சீன ஜனாதிபதி ஹு ஜூண்டாவா  கூறியுள்ளது முக்கியமானது.  


அயல் நாட்டு உறவுகளை விட தனது நாட்டு மக்களின் நலன்தான் 
முக்கியம்  என்பதில் சீனா தெளிவாக உள்ளது. மன்மோகன்சிங் வகையறாக்கள்  கற்றுக் கொண்டால்  கொஞ்சம் நல்லது.

Friday, July 1, 2011

நெஞ்சமெல்லாம் நிறைவாக

மனதெல்லாம்  மகிழ்ச்சியாக உள்ளது. இன்று  எங்களது அகில இந்திய 
இன்சூரன்ஸ்  ஊழியர்  சங்கத்தின் வைர விழா ஆண்டு நிறைவு நாள். 
அறுபது ஆண்டுகள் கடந்த பின்பும் அதே துடிப்போடும் உயிர்ப்போடும் 
ஒரு அமைப்பிலே  உறுப்பினராக, கோட்ட  அளவில் பொறுப்பாளராகவும் பணியாற்ற கிடைத்த  வாய்ப்பு வாழ்நாளின் அறிய வாய்ப்பு. 


வைர விழா நிறைவு நாளை ஒட்டி  இன்று நாடு முழுதும் சங்கத்தின் 
செங்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அனைத்து இடங்களிலும் மிகுந்த
உற்சாகத்தோடு  தோழர்கள்  பங்கேற்ற செய்தி, தங்களது அமைப்பின் 
மீது உறுப்பினர்கள்  கொண்ட நேசத்தின்  வெளிப்பாடு, நம்பிக்கையின்
அடையாளம். 

இந்த வாரமும் அடுத்த வாரமும்  முழுதும் கிளை வாரியான  சிறப்புக் கூட்டங்கள். நிறைவாக வரும் எட்டாம் தேதி  கோட்ட அளவிலான 
சிறப்பு விழா, அதிலே எங்கள் சங்கத்தின் அறுபது ஆண்டு நிகழ்வுகள்
குறித்து நான் தொகுத்த ஒரு புத்தக வெளியீடு, கடந்த மாதத்தில் 
சிறந்த வணிகம் புரிந்த முகவர்களுக்கு பரிசளிப்பு  என சில 
நிகழ்வுகள் உள்ளது. 



இன்று வேலூர் மையத்தில்  உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் 
சென்று தோழர்களை  சந்தித்து  வாழ்த்து சொல்லி விட்டு வந்தோம். 
அனைத்து அலுவலகங்களிலும்  தோழர்கள் அளித்த உற்சாக வரவேற்பு
மிகவும் மகிழ்ச்சியளித்தது. எதிர்கால போராட்டங்களுக்கு நாங்கள் 
தயார் என்று சொல்லாமல் சொன்னதாக எனக்கு தோன்றியது. 


போராட்டங்களுக்கு தோழர்கள் தயாராக இருப்பதை விட ஒரு 
தொழிற்சங்கத்திற்கு வேறு என்ன மகிழ்ச்சி இருக்கப் போகின்றது? 
இந்த வருடம் எங்கள் அகில இந்திய சங்கத்தின் வைர விழா நிறைவடைந்தது.  அடுத்த ஆண்டு  எங்கள் கோட்டம் வெள்ளி விழா 
காணப்போகின்றது. நெஞ்சமெல்லாம் இனிக்கிறது... 
 

Wednesday, June 29, 2011

பாவம்பா கலைஞர்! விட்டுருங்க...

பாவம் கலைஞர், போட்டு தாக்கி கொண்டே  இருக்கிறார்கள்!
இன்றைக்கு மின்னஞ்சலில்  வந்த படங்களைப் பாருங்கள் 











Tuesday, June 28, 2011

கொடியவர்களின் கூடாரமாகிப் போனது கோயில் ,மஞ்சுநாதா! மஞ்சுநாதா!!





எத்தனுக்கு எத்தன், ஏமாற்றுப் பேர்வழிக்கு ஏமாற்றுப் பேர்வழி, 
விடாக்கண்டனுக்கு  கொடாக்கண்டன் - எப்படி  வேண்டுமானாலும் 
அழைக்க முடியும். எட்டியூரப்பாவும் குமாரசாமியும் நடத்திய 
கீரி பாம்பு நாடகத்தைதான்  சொல்கிறேன். 
தர்மஸ்தலா மஞ்சுநாதர் ஆலயத்தில்  சத்தியம் செய்வாயா  என 
எட்டியூரப்பா சவால் விடுக்க, அதற்கு குமாரசாமி பதில் சவால் விட,
சட்டமன்றத்திலும் கர்நாடக மாநில மேடைகளிலும்  நடக்கும் 
நாடகத்தின்  புதிய மேடையாக கோயில் மாறிப்போனது. 


இறுதியில்  எவரும் சத்தியம் செய்யவில்லை. இருவருமே 
பொய்யர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை அம்பலப்படுத்திக் 
கொண்டனர். 


கோயிலில்  சத்தியம்  என்று மூட நம்பிக்கையை வளர்க்கும் 
கருவிகளாக இவர்கள் இருப்பதுதான் வேதனை. இவர்களின் 
வெட்டி மோதலால்  பக்தர்கள் அவதிப் பட்டதுதான் மிச்சம்.
மஞ்சுநாதர்  எங்கே போய் ஒளிந்து கொண்டாரோ?