Saturday, January 6, 2018

ஜெமோ நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை



எழுத்தாளர் வினாயக முருகன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஜெயமோகனின் ஒரு கட்டுரையை பகிர்ந்து கொண்டு அதிலே ஜெமோ எத்தனை முறை “நான், எனது” என்று எழுதியுள்ளார் என்பதை எண்ணிச் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார்.

அந்த புள்ளி விபரத்துக்குள் நான் செல்லப்போவதில்லை. ஜெமோவை பேசக் கூப்பிட்டால் அவரே கூட்டத்தையும் அழைத்து வந்திடுவார் என்ற தன்னிலை விளக்கத்தைப் பற்றியும் எனக்கு எந்த விமர்சனமும் இல்லை.

ஆனால் அவரது நண்பர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயம் ஒன்றுள்ளது.

இதோ அந்த மேட்டர்.

"அடிக்கடி நண்பர்களிடம் சொல்லும் ஒர் அச்சுறுத்தல் உண்டு, நண்பர்கள் சூழ இருந்து பழகிவிட்டேன். ஆகவே மேலே செல்வதென்றால்கூட நாலைந்து பேரை அழைத்துக்கொண்டுதான் செல்வேன் என்று"

ஆகவே ஜெமோ நண்பர்களே எச்சரிக்கையாக இருங்கள். நகைச்சுவை என்று மட்டும் நம்பி விடாதீர்கள். வெண்முரசு படிக்க வேண்டும் என்று சத்தியம் வாங்கியது போல  கடைசியில் மாஸ் சூஸைட் ஆகி விடப் போகிறது.

ஊர் சுற்றிப் பார்க்க நண்பர்கள் கூட வரலாம். உலகை விட்டுப் போகும் போதும் வர வேண்டும் என்றால் என்னய்யா நியாயம் இது? என்னய்யா  நட்பு இது?

உஷார், உஷார்,உஷார்.


மனிதர் இயக்கும் "தானியங்கி இயந்திரம்" !!!!!



காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள நகராத "தானியங்கி நகரும் படிக்கட்டுக்கள்" பற்றி சில நாட்கள் முன்பு எழுதியிருந்தேன்.

அதனை முதன்முதலாக பயன்படுத்தும் வாய்ப்பு நேற்று முன் தினம் கிடைத்து விட்டது.

அதனை இயக்க ஒரு ஊழியரை நியமித்துள்ளனர். பயணிகள் படிக்கட்டுக்களில் ஏற வரும் போது இயக்குகிறார். அவர்கள் உச்சிக்கு போனதும் நிறுத்தி விடுகிறார். மீண்டும் அடுத்த பயணி வந்ததும் அதே கதை. இயங்கிக் கொண்டிருக்கும் போது வரும் பயணிகளுக்கு மட்டும் நிறுத்தி ஏற்றிக் கொள்ளும் சலுகை கிடையாது.

பயணிகளின் பாதுகாப்புக்காக இந்த ஏற்பாடு என்றும் அந்த ஊழியரின் பணி நேரம் காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணி வரைக்கும். ஆகவே இதர நேரங்களில் படிக்கட்டு நகராது. 

ஒரு  தானியங்கி இயந்திரத்தை மனிதரால் இயக்கப்படும் இயந்திரத்தை மாற்றிய பெருமை நம் இந்திய ரயில்வேவுக்கே உண்டு.

நோக்கம் நன்றாகத்தான் உள்ளது. ஒருவருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. 

மூன்று ஷிப்டாக மாற்றினால் அனைத்துப் பயணிகளும் பயனடைவர். இன்னும் இருவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். இதனை ரயில்வே பரிசீலிக்க வேண்டும். 

Friday, January 5, 2018

இந்த சீன் ஏன் இப்போது பிடிக்கிறது?




திரைப்படத்தின் துவக்கக் காட்சியை பாருங்கள். இந்த காட்சி இப்போது பிடிப்பதற்கு  பிரச்சினையை விஜயகாந்த் தீர்ப்பது, இளையராஜாவின் பின்னணி இசை இவற்றைத் தாண்டி அக்காட்சியில் வரும் டிரைவர் கடைசியில் பேசும் வசனம்தான் காரணம்.

பின் குறிப்பு : படம் வெளிவந்து இருபத்தி ஆறு வருடங்களுக்கு மேலாகி விட்டதால் ஆர்.வி.உதயகுமார் மீது அவமதிப்பு வழக்கு போட முடியாதல்லவா?


மைசூர் போண்டாவும் தீர்ப்புக்களும்

ஷட் அப் பண்ணுங்க சார்


சில மாதங்கள் முன்பு சென்னையிலிருந்து பேருந்தில் வந்து கொண்டிருந்தேன்.  பேருந்து ஒரு பாடாவதி உணவகத்தில் நின்றது. அது உணவு நேரம் கூட கிடையாது. ஒரு ஐம்பது நிமிடப் பயணத்தில் வேலூரே வந்து விடும். எதற்கு இங்கே நிறுத்தினீர்கள் என்று நடத்துனரிடம் கேட்க, அவர் ஒரு கடிதத்தை காண்பித்தார்.

ஏதோ ஒரு நாள் அந்த பேருந்து அந்த உணவகத்தில் நிற்காமல் சென்ற காரணத்தால் “உங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது?” என்று நிர்வாகம் அவருக்கு அனுப்பிய மெமோ அது.

சென்னையில் அண்ணா மேம்பாலத்தில் ஒரு பேருந்து விபத்து நிகழ்கிறது. ஓட்டுனர் தொலைபேசியில் பேசிக்கொண்டே பேருந்தை ஓட்டியதால்தான் விபத்து நிகழ்ந்தது என்று எல்லோரும் அவரை குற்றம் சுமத்தினார்கள். ஆனால் உண்மை என்ன?

அவரது இருக்கை நாசமாகி விட்டது. பழுது பார்க்க நிர்வாகம் தயாராக இல்லை. கட்டை ஒன்றை முட்டுக் கொடுத்து கயிற்றால் கட்டி வைத்து பேருந்தை ஓட்டுகிறார். முட்டுக் கொடுத்த கட்டை உடைந்து போகிறது. பேலன்ஸ் தவற, இருக்கையில் அவர் தடுமாற விபத்து நேர்கிறது.

போக்குவரத்து ஊழியர்களின் பணிச்சூழல் எவ்வளவு மோசமான நிலையில் உள்ளது என்பதை இந்த இரண்டு உதாரணங்கள் உணர்த்தும்.

பழுது பார்க்கப்படாத, உதிரி பாகங்கள் மாற்றப்படாத காயலான் கடைக்குப் போக வேண்டிய பேருந்துகளைத்தான் குண்டும் குழியுமான சாலைகளில் ஓட்டிக் கொண்டு அவதிப்படுகிறார்கள்.  வெள்ளம் மழை போன்ற காலக்கட்டங்களில் சென்னையில் தனியார் டாக்ஸி நிறுவனங்கள் காணாமல் போன நேரத்தில் கூட  அரசுப் போக்குவரத்து ஊழியர்கள்தான் அயறாது பணி செய்தார்கள்.

பணி நேரம் என்பதெல்லாம் பார்க்காமல் கூடுதல் நேரத்திற்கு பணி செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். விடுமுறை கிடைப்பதோ குதிரைக் கொம்பு.  சரி ஓய்வு பெற்ற பின்பாவது ஓய்வுக்காலப் பலனையும் பென்ஷனையும் அனுபவித்துக் கொண்டு நிம்மதியாக இருக்க முடிகிறதா என்று பார்த்தால் அதற்கும் வாய்ப்பு கிடையாது.

ஓய்வு பெறும் நாளன்றே சட்டபூர்வமாக அளிக்கப்பட வேண்டிய  தொகையைப் பெறவே நீதிமன்ற படிக்கெட்டுகளில் ஏற வேண்டி உள்ளது.

கடந்த முறை வேலை நிறுத்தத்தின் போது ஒப்புக்கொண்ட  உயர்வை அளிக்காமல் அரசு ஏமாற்றுகையில் வேலை நிறுத்தம் தவிர வேறு என்ன வழி மிஞ்சியுள்ளது போக்குவரத்து ஊழியர்களுக்கு?

இன்றைய நிலைமைக்கு எடுபிடி எடப்பாடி  அரசே  காரணம்.

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவு அளிப்போம். அவர்களது கோரிக்கைகள் வெல்லட்டும் என்று வாழ்த்துவோம்.

உங்களால் அவர்களுக்கு ஆதரவளிக்க முடியவில்லையென்றாலும் பரவாயில்லை. தயவு செய்து வாயையாவது மூடிக் கொண்டிருங்கள்.


Opponents of Transport Strike – Will you please Shut up? 

பின் குறிப்பு : காலையில் எழுதினாலும் பகிர்ந்து கொள்ள நேரம் கிடைக்கவில்லை. 

அதன் பின்பே கட்டளை வந்துள்ளது.

மைசூர் போண்டாவில் மைசூர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது போல தீர்ப்பில் நீதி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று புதிய பாடம் வழங்கியுள்ளார்கள். 

Thursday, January 4, 2018

ரஜனி பத்தி . . .மறந்துட்டீங்களேப்பா



வாட்ஸப்பில் உலா வந்து கொண்டிருப்பது.
பலத்த சிரிப்பையும் வரவழைப்பது.
ரஜனியின் இன்னும் சில தியாகங்களை மறந்து விட்டார்கள்.

அவற்றை கடைசியில் எழுதியுள்ளேன். 



'சுயநலவாதி, ஏழைகளுக்கு உதவாதவர், பரட்டையன், தாத்தா, கர்நாடகக்காரன், தமிழின விரோதி' தமிழ் மக்களுக்கு என்ன செய்தான்னு திட்டி தீக்கிரீங்களே, 

#ரஜினி தமிழ் மக்களுக்காக செய்த உதவிகள் பல விளம்பர நோக்கமற்றவை பிரதிபலன் பாராதவை. அவற்றில் சில துளிகள்...

1) முத்து படத்துல தமிழ் மக்களுக்கு தனது சொத்து முழுவதையும் எழுதி வைத்துவிட்டார்! மறந்துட்டியா படத்தை திரும்ப ஒருமுறை பார்.

2) சிவாஜி படத்துல தமிழ்நாட்டுக்கு காலேஜ், ஆஸ்பத்திரி, ரோடு எல்லாம் செஞ்சாச்சு!

3) அருணாசலத்துல 30 நாள்ல 30 கோடிய தமிழக மக்களுக்கு கொடுத்தாச்சு!

4) படையப்பால தமிழக மக்களுக்கு கருணை வள்ளலா வாழ்ந்தாச்சு!

5) பாபால மந்திரம் மூலம் தமிழ் மக்களுக்கு பணி ஆத்தியாச்சு!

6) லிங்கா படத்துல தமிழக மக்களுக்கு சொத்தையெல்லாம் வித்து அணை கட்டியாச்சு!

இதுக்குமேலேயும் என் தலைவன்கிட்ட வேற என்னதான்யா எதிர்பாக்குரிங்க...?

தமிழக வெள்ள மழை பாதிப்புக்கு தலைவர் ஏதாவது செய்யனும்னு எதிர்பாக்குரீங்களா?

இவ்ளோ செஞ்சவரு இதுகூட செய்ய மாட்டாரா?

அடுத்த படத்துல வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆளுக்கு 1 லட்சம் கொடுக்குற மாதிரி சீன் வைக்கிறோம் போதுமா? இப்ப திருப்தியா?

போதாது ன்னா சொல்லுங்கள் அடுத்து வரவுள்ள படத்தில் ஆளுக்கு ஒரு காரு பயிக்கு இப்பிடி குடுக்கிற மாதிரி சீன் போட்டு கலக்கிறறோம், அதுக்கப்புறமும் என் தலைவனை நோக்கி தமிழ்நாட்டுக்கு என்ன  
செய்ஞ்சீங்க? என்ன செய்ஞ்சீங்கன்னு கேப்பீஙகளா நீங்க?😛😛😛


மலேசிய தமிழர்களுக்காக போராடி கபாலியில் ஜெயிலில் இருந்தார்.

மனைவியின் தொழிற்சாலை என்றும் பாராமல் தொழிலாளர்களுக்காக உண்ணாவிரதப் போராட்டமெல்லாம் மன்னன் நடத்தினார்.

ஆரம்ப காலத்திலேயே துறைமுகத்தொழிலாளர்களுக்காக சண்டையெல்லாம் போட்டு அவர்கள் மாமூல் கொடுப்பதை தடுத்தார்.
"தீ" பாருங்கள்.

யோசிச்சு பார்த்தா இன்னும் நிறைய கூட எழுதலாம். 




ம😛😛

மலே😛











சபாஷ், சரியான போட்டி (அரசியலில் அல்ல)



வாட்ஸப்பில் ஒரு தோழர் பகிர்ந்து கொண்ட காணொளி. ஐந்தாறு முறையாவது பார்த்திருப்பேன்.

அவ்வளவு அற்புதம் !

சங்கர் மகாதேவனும் புல்லாங்குழல் கலைஞர் ரசிகா சேகரும் நிகழ்த்திய ஜுகல்பந்தி அருமையோ அருமை.

நீங்களும் பாருங்கள், நிச்சயம் ரசிப்பீர்கள்







Wednesday, January 3, 2018

இன்று மாலை வேலூரில் . . .

இன்று மாலை வேலூரில் எல்.ஐ.சி கோட்ட அலுவலக வளாகத்தில் எங்கள் அன்புத் தலைவர், அருமைத்தோழர் என்.எம்.சுந்தரம் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி மற்றும் நினைவஞ்சலிக் கூட்டம்.

வாய்ப்புள்ளோர் யாவரும் பங்கேற்பீர் . . .