வெண்மணி
தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப் போன இடத்தில் புதிய தமிழகம் கட்சியினர் “வெண்மணியை
கைப்பற்றுவோம்” என்று அநாகரீகமாக கோஷமிட்டதாகவும் “ஜாதிய சக்திகளை தமிழ் மண்ணிலிருந்து
வேரறுப்போம்” என்று வாலிபர் சங்கத் தோழர்கள்
பதில் முழக்கம் இட்டதும் நழுவிச் சென்றுள்ளனர் என்பதை பல தோழர்களின் பதிவிலிருந்து
பார்க்க முடிந்தது.
நான்
பார்த்த ஒரு காட்சியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
நாங்கள்
வெண்மணியில் அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பி வருகையில் எதிரில் எந்த ஆரவாரமும் இல்லாமல்
ஜான் பாண்டியன், கூட ஒருவருடன் நடந்து வந்து கொண்டிருந்தார். இவருக்கு கொலை மிரட்டல்
இருப்பதாகச் சொல்கிறார்களே, எந்த பாதுகாப்பும் இல்லாமல் தனியாக வருகிறாரே, செங்கொடி
இயக்கத்தின் இடம் என்பதால் தைரியமாக வருகிறார் போல என்று பேசிக் கொண்டோம்.
பிறகு வெண்மணி ஆர்ச் கேட்டிலிருந்து எங்கள் வாகனத்தில்
திரும்புகையில் தேவூருக்கு சற்று முன்பாக ஓவர் ஆரவாரம், அளப்பறையோடு புதிய தமிழகம்
கட்சிக் கொடி கட்டிய சுமார் பத்து வாகனங்கள் எதிரில் வெண்மணி நோக்கி வந்து கொண்டிருந்தது.
அதனால் எங்கள் வாகனத்தை கொஞ்சம் நிறுத்த வேண்டியிருந்தது.
அவர்கள்
வந்த வாகனங்களும் நின்றது. அப்போது சாலையில் ஒரு ஏழெட்டி பேர் வெள்ளை சட்டை, காவி வேட்டியோடு
நெற்றியில் செந்தூரத்தோடு நின்று கொண்டிருந்தனர். முதல் வாகனத்தில் அமர்ந்திருந்தவர்
காதிலே இந்த காவி வேட்டி பேர்வழிகள் ஏதோ ஓதிக்
கொண்டிருந்தார்கள். பிறகு மீண்டும் அதே ஆரவாரத்தோடு புதக வாகனங்கள் புறப்பட்டுப் போய்
விட்டனர். அஞ்சலி செலுத்த செல்பவர்கள் போல அவர்களின் நடவடிக்கை இல்லவே இல்லை.
காவியோடு
சேர்ந்த மருத்துவர் கிருஷ்ணசாமி ஏற்கனவே வில்லங்கமாகத்தான் செயல்பட்டு வருகிறார். எனவே
அவரது கட்சிக்காரர்களும் அப்படி செயல்படுவதில் எந்த வியப்பும் கிடையாது.
கலவரம்
செய்து குழப்பம் ஏற்படுத்தி அதிலே மீன் பிடிக்க ஆசைப்படும் காவிகளின் ஆலோசனையால்தான்
ஒரு வேளை புதக அப்படி அநாகரீகமாக நடந்து கொண்டிருக்குமோ என்று தோன்றுகிறது.
நவீன
ஆண்டைகளாக தங்களைக் கருதிக் கொள்ளும் கிருஷ்ணசாமி வகையறாக்களுக்கு வெண்மணியில் மாண்ட உழைப்பாளி மக்கள் மீதென்ன திடீர்
பாசம்?
காவிகள்
பாணியில் கலவரத்தைத் தூண்டுவதா?
பி.கு : இந்த ஆண்டு வெண்மணியில் வேலூர் கோட்டத் தோழர்கள்
பி.கு : இந்த ஆண்டு வெண்மணியில் வேலூர் கோட்டத் தோழர்கள்








