Wednesday, October 15, 2025

அசிங்கப்பட்டது இந்திய கிரிக்கெட்தான்

 


அசிங்கத்துக்கு அடித்தளம் போட்டுக் கொடுத்தது இந்தியாவின் துரதிர்ஷ்டமான நரேந்திர மோடிதான்.

ஆசியக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தானை வென்றது. அந்த வெற்றியை ட்ரம்ப் நிறுத்தியதாக சொல்லிக் கொண்டிருக்கிற ஆபரேஷன் சிந்தூருடன் ஒப்பிட்டு தான் ஒரு பொறுப்பற்ற போர் வெறியன் என்பதை நிரூபித்துக் கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கும் மோஷின் நக்வி கையால் கோப்பையை வாங்க முடியாது என்று இந்திய அணியின் தலைவராக இருந்த சூரியகுமார் யாதவ் மறுத்து விட்டார்.

பாகிஸ்தானியர் கையிலிருந்து கோப்பையை பெற முடியாது என்று சொல்லியுள்ளார்கள், பாஜக சங்கி கவுதம் கம்பீர் பயிற்சியாளராக உள்ள வீரர்கள் இப்படிப்பட்ட நிலை எடுத்ததை தேச பக்தி என்று கூட முட்டாள்தனமாக வர்ணிக்கிறார்கள் மூடச்சங்கிகள்.

பாகிஸ்தானியரிடமிருந்து கோப்பையை பெறுவது தேச பக்தி என்றால் பாகிஸ்தானோடு விளையாடுவதை தேசத்துரோகம் என்றுதான் அழைக்க வேண்டும்.

இவ்வளவு தேசப்பற்று உள்ளதாக காண்பித்துக் கொள்ளும் இந்திய அணி வீரர்கள், பாகிஸ்தான் அணி பங்கேற்கும் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று சொல்ல வேண்டியதுதானே!

பாகிஸ்தானுடன் விளையாடினால் நெறய டிக்கெட் விற்கும், நெறய ஸ்பான்ஸர் கிடைக்கும்,  டிவி களுக்கும் நெறய விளம்பரம் கிடைக்கும். பாகிஸ்தானுடன் விளையாடினால் கோடி கோடியாய் துட்டு கிடைக்கும். கொலை செய்வதற்காக பெறப்பட்ட கூலிப் பணத்தில் ரத்தக்கறை இருக்காதல்லவா! அது போல துட்டுக்கு முன்பு தேசப்பற்று எல்லாம் ஜூம்லா.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் கையிலிருந்து கோப்பையை பெற முடியாது என்று நிலை எடுத்து இந்திய கிரிக்கெட்டை அசிங்கப்படுத்தி உள்ளார்கள் இந்திய அணி வீரர்களும் அவர்களின் பின் புலத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரியமும்.

நியாயப்படி பார்த்தால் இந்திய கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலலில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

ஆனால் 

அது நடக்காது.

அமித்ஷா மகன் ஜெய்ஷா சர்வ தேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கையில் அது சாத்தியமற்றது.

எதுவாக இருப்பினும் 

நடந்த சம்பவம் இந்தியாவிற்கு இழிவுதான்.

பிகு 1 : எழுதி பல நாளாகி விட்டது. கரூர் நெரிசல் மரணங்கள் இந்த பிரச்சினையை பின்னுக்கு தள்ளி விட்டது.

பிகு 2 : இன்னும் இரண்டு கிரிக்கெட் பதிவுகள் இருக்கிறது. 

1 comment:

  1. மிகவும் சரியான பதிவு தோழர் 👌

    ReplyDelete