தான் நடத்திய பொதுக்கூட்டத்தின் வழியே சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனரை எடப்பாடி எனும் எடுபிடி மிரட்டிய காணொளியை பார்த்தேன்.
ஆம்புலன்ஸ் கடந்து சென்றால் அதற்கு வழி விட வேண்டும் என்பது மனிதர்கள் பின்பற்ற வேண்டிய சாதாரண விதி. நோயாளி சிகிச்சைக்காக விரைவில் செல்ல வழி விட வேண்டும் என்பதெல்லாம் ஒருவரின் ரத்தத்தில் கலந்திருக்க வேண்டிய குணம்.
அந்த குணம் கூட இல்லாமல் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை மிரட்டுவது, பின்பு கவனித்துக் கொள் என்று கட்சிக்காரர்களுக்கு உத்தரவு போடுவதெல்லாம் கேவலம். இதை செய்துள்ள எடுபிடியை மனிதன் என்று சொல்வது மனித குலத்திற்கு அவமானம். ம்னுசன் என்று சொல்ல முடியாத ஒரு ஆள் முதல்வராக இருந்தது என்பதெல்லாம் தமிழ்நாட்டிற்கு அவமானம்.
காலி ஆம்புலன்ஸ் என்றொரு ...... பிளக்கும் வாதம் வைக்கப்படுகிறது. அட முட்டாள்களே! நோயாளியை வீட்டிலிருந்தோ, விபத்தானால் ரோட்டிலிருந்தோ அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் காலியாகத்தான் செல்ல வேண்டும்.
நான் விபத்துக்குள்ளான சமயத்தில் அடுத்த கட்ட சோதனைகளுக்காக மூன்று முறை மருத்துவ மணைக்கு ஆம்புலன்ஸில்தான் சென்றேன். என்னை வீட்டிலிருந்து அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் காலியாகத்தான் வந்தது.
இன்னொன்று இவர் கூட்டத்திற்கு வேண்டுமென்றே இடையூறு செய்கிறார்களாம்.
அதற்கெல்லாம் அவர் வொர்த்தில்லை என்பதை அவரிடம் யாராவது சொல்லுங்களேன்.
காலி ஆம்புலன்ஸ்
No comments:
Post a Comment