ஓட்டுத் திருடர் மோடியால் "பொறுக்கி" எடுக்கப்பட்ட தலைமை தேர்தல் ஆணையர் க்யானேஷ் குமார், நேற்று முன் தினம் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அது முழுக்க முழுக்க ஒரு காமெடியான பேட்டி.
"பிரமாண வாக்கு மூலம் கொடு, இல்லைன்னா மன்னிப்பு கேளு" என்று ராகுல் காந்தியை மிரட்டுவதாக நினைத்துக் கொண்டு "சந்தைக்கு போகனும், ஆத்தா வையும், காசு கொடு" என்பதை மட்டுமே சொல்லும் சப்பாணி போல அரற்றிக் கொண்டிருந்திருக்கிறார்.
ரேபரேலி தொகுதி பற்றி மோடி மந்திரி அனுராக் தாகூர் சொல்லியுள்ள குற்றச்சாட்டு பற்றி என்ன சொல்கிறீர்கள்? அவரும் பிரமாண வாக்குமூலம் கொடுக்காவிட்டால் மன்னிப்பு கேட்க வேண்டுமா என்று பத்திரிக்கைக்காரர்கள் கேட்ட கேள்வி மட்டும் அவர் காதிலே விழவில்லை. செலக்டிவ் செவிக் கோளாறு போல . . .அவருக்கு ஒரு ஹியரிங் எய்ட் யாராவது வாங்கிக் கொடுங்களேன்.
வீட்டு எண் பூஜ்ஜியம் என்று வாக்காளர் பட்டியலில் உள்ளதே என்றால் அதுக்கு ஒரு பதில் கொடுத்தார் பாருங்கள் அது காமெடியின் உச்சம். பாலத்தின் கீழே, பிளாட்பாரத்தில் தங்குபவர்களுக்கு விலாசம் இல்லாத மக்களுக்கு பூஜ்ஜியம் என்று எண் கொடுத்தார்களாம்.
65 லட்சம் வாக்காளர்களை நீக்கினீர்களே, அவர்களில் எவ்வளவு பேர் வங்க தேசத்திலிருந்து வந்த வெளி நாட்டினர்கள் என்ற கேள்விக்கு "ஹிஹி, ஹிஹி" என்ற அசட்டு இளிப்புதான் பதில்.
கண்காணிப்பு காணொளிகளை வெளியிடுவது பெண்களின் தனியுரிமைக்கு (PRIVACY) ஆபத்து என்று சொல்லும் க்யேனேஷிற்கு ஒன்று கேட்க வேண்டும். "அவை வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையம் பதிவு செய்யும் காணொளிகள்தானே! சக கட்சிக்காரர்களை வேவு பார்க்க ஆட்டுக்காரனின் வார் ரூம் திருட்டுத்தனமான பதிவு செய்யும் காணொளிகள் அல்லதானே!"
ஓட்டுத் திருட்டு தொடர்பாக ஒடிஷாவில் பிஜு ஜனதா தள்ளும் உ.பி யில் அகிலேஷ் யாதவும் புகார் கொடுத்தார்களே, என்ன நடவடிக்கை எடுத்தாய் என்ற கேள்விக்கு அவை முடிவு வந்து 45 நாட்களுக்குப் பிறகு கொடுக்கப் பட்டதால் நிராகரித்து விட்டோம். ராகுல் காந்திக்கும் அதே பதில்தான் சொல்லப் போகிறாய்! பிறகு எதற்கு பிரமாண வாக்குமூலம், எழவு எல்லாம்!
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட 56 மணி நேரத்திற்குள் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலை மாவட்ட இணைய தளங்களில் வெளியிட்டு விட்டோம் என்று சொல்கையில் சுந்தர பாண்டியன் திரைப்படத்தில் லட்சுமி மேனன் படிக்கும் கல்லூரியை கண்டுபிடித்தவுடன், "ஆபரேஷன் ஆரம்பிச்ச 48 மணி நேரத்துல வெற்றிகரமா முடிச்சுட்டோம்" என்று காமெடியன் சூரி சொல்வதுதான் நினைவுக்கு வந்தது.
கடைசியாக ஒன்னு சொன்னார் பாருங்க. அதைத்தான் தாங்கவே முடியலை.
இப்படியெல்லாம் தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்பது "அரசியல் சாசனத்தை இழிவு படுத்துவதாம்"
அடப்பாவி! ஓட்டுத் திருடர் மோடியும் அவரால் "பொறுக்கி" எடுக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் அத்துணை அதிகாரிகளும் செய்து கொண்டிருப்பதுதான் "அரசியல் சாசனத்தை இழிவு படுத்துவது" .
உங்களைப் போன்ற ஆட்கள் பதவியில் ஒட்டிக் கொண்டு தேர்தல் ஜனநாயகத்தை படுகொலை செய்து குழி தோண்டி புதைக்கிறீர்களே, அதுதான் குற்றம். நீங்கள்தான் குற்றவாளிகள்.
No comments:
Post a Comment