இன்றைக்கு
மத்யமர் ஆட்டுக்காரன் குழு பக்கம் போகவே முடியவில்லை. கெட் அவுட் ஸ்டாலின் என்பது ட்விட்டரில்
வைரலாவதால் வெறித்தனமாக இருக்கிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தல் ட்விட்டரின் நடைபெறப்
போவதான ஒரு நெனப்பில் ஆட்சியைப் பிடுத்தது
போன்ற தெம்பில் இருக்கிறார்கள்.
இந்த
பிரச்சினை எங்கே துவங்கியது?
தமிழ்நாட்டுக்கு
உரிய நிதியை அளிக்காமல் அடாவடி செய்யும் மத்தியரசை கண்டித்த உதயநிதி ஸ்டாலின் “இனி
மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் கோ பேக் மோடி என்று சொல்லாமல் கெட் அவுட் மோடி என்று
சொல்வோம்” இதற்குத்தான் ஆட்டுக்காரன் அப்படி கொதித்தான். கெட் அவுட் மோடின்னு சொல்வியா?
வெளியே போடான்னு சொல்வியா என்றெல்லாம் கேட்டவடன் :கெட் அவுட் மோடி என்று பதிவு போடத்தொடங்கி
விட்டார்கள். ட்ரெண்டிங்கும் ஆகி விட்டது.
அதனால்
வேறு வழியில்லாமல் ஆட்டுக்காரனும் “கெட் அவுட் ஸ்டாலின்” என்று தொடங்க, பாஜகவின் ஒட்டு
மொத்த ஐ.டி விங்கும் நாடு தழுவிய அளவில் பதிவுகள் போட அதுவும் ட்ரெண்டிங் ஆகி விட்டது. சங்கிகள் திட்டமிட்டு செய்தது இது. சர்க்கார் படத்தில் யோகிபாபு ஆயிரம் கள்ள வோட்டு போட்டதாக புளிச்ச மாவு ஆஜான் வஜனம் எழுதியிருப்பார். அது சாத்தியமில்லை. ஆனால் ஒரு சங்கியால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட்வீட்டுகளை போட முடியும்.
அதனால்
அதன் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதில் அதிசயம் ஒன்றுமில்லை. ஆனால் இதை வைத்து 2026 ல்
ஆட்டுக்காரனே முதல்வர் என்பதெல்லாம்
சிறுபிள்ளைத்தனம்
. . .
பிகு:
மோடியை நிஜமாகவே அசிங்கப்படுத்தியது வேறொரு ஆள். அதற்கு சங்கிகள் பொங்கினார்களா?
நாளை
பார்ப்போம்.
No comments:
Post a Comment