ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களும் டெல்லியும் வன்முறையின் பிடியில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
பதினேழு பேர் இது வரை இறந்து போனதாக கிடைத்துள்ள தகவல் வந்துள்ளது.
கலவரங்கள் குறித்து பஞ்சாப் ஹரியானா உயர்நீதி மன்றம், தானே விசாரிக்கப் போகிறது.
துணை ராணுவப்படைகள் நிலைமையை கட்டுப்படுத்த சென்று கொண்டிருக்கின்றன,
எதற்காக? எல்லாம் எதற்காக?
பாலியல் வன் கொடுமை குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்ட குர்மீத்ராம் ரஹீம் சிங் என்ற சாமியார் (போலிச்சாமியார் என்ற அடைமொழி அவசியமில்லை என்று நினைக்கிறேன். சாமியார் என்றாலே போலி என்பதுதான் யதார்த்தம்) குற்றவாளி என்று சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது.
தண்டனை என்ன என்பதை திங்கள் கிழமை அன்று அறிவிக்கப் போகிறார்கள். குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் கம்பி எண்ண வேண்டி இருக்குமாம்.
தீர்ப்பின் விளைவாக அவரது சீடர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் நம்பிக்கை வைத்த சாமியார் குற்றவாளி என்றால் "ஏண்டா என்னை ஏமாற்றினாய்?" என்று அவரை கொளுத்தினால்கூட அது நியாயம் என்று சொல்லலாம்.
ஆனால் சம்பந்தமே இல்லாமல் ரயில்களையும் பேருந்துகளையும் கடைகளையும் எரிப்பது என்ன நியாயம்?
"ஒழுங்காக தண்டனையை குறைத்திடு"
என்று நீதிமன்றத்தை மிரட்டுகிறார்களா அந்த சாமியாரின் சீடர்கள்?
வன் கொடுமையில் ஈடுபடுகிற அயோக்கியனாக சாமியார் இருக்கையில் அவனது சீடர்கள் மட்டுமென்ன உத்தமர்களாகவா இருக்கப் போகிறார்களா என்ன?
எல்லா சாமியார்களும் ஏமாற்றுப் பேர்வழிகள் என்பதுதான் காலம் கற்றுத் தருகிற பாடம்.
அந்த பாடத்தை மக்கள் சரியாக படிக்காவிட்டால்
ஏமாற்றுப் பேர்வழிகள் அதிகரித்துக் கொண்டே இருப்பார்கள்.
பின் குறிப்பு
இந்த சாமியாரை பாராட்டுகிறார் ஒருவர்.
"போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்" என்பார்கள். நாம் அசல்களிடமே மறுபடி மறுபடி ஏமாறுகிறோம் புத்தி வரவேண்டும் வரும்
ReplyDeleteசாமியார் என்றாலே போலி என்பதுதான் யதார்த்தம்**** Does it apply to your beloved pope? In bharath, communist means anti-national and traitor.
ReplyDeleteசாமியார்களைச் சொன்னால் அவர்களோடு டீலிங்கில் உள்ள சங்கிகளுக்கு கோபம் வரத்தான் செய்யும். நியாயப்படி பார்த்தால் நீங்கள் எல்லாம் வெட்கப்பட்டு வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும். சாமியார்கள் எல்லாவற்றையும்.
Deleteஆமாம் எவ்வளவு அசிங்கப்பட்டாலும் அந்த போலி தேசபக்தி வேஷத்தை கலைக்கவே மாட்டீங்களா?
காட்டிக் கொடுத்த களவாணிங்க எல்லாம் கம்யூனிஸ்டுகளைப் பற்றி பேச அருகதையே இல்லாதவர்கள்
சாமியார்களே இப்படித்தான்..இந்த ஒன்றில் அனைத்தும் முடிந்துவிட்டதே.
ReplyDeleteகலவரக்கார்களை அடக்க ஏன் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தவில்லை. அந்த சாமியாரின் இயக்கத்ததையும் அதை ஆதரிப்பவர்களையும் ஏன் தீவிரவாத இயக்கமாக தேசவிரோத இயக்கமாக அறிவிக்கவில்லை. சட்டம் வளைகிறதே-ஆளுக்குதகுந்தாற்போல.
ReplyDeleteமிகவும் அவமானம்.
ReplyDelete