Friday, August 5, 2016

மறக்க முடியாத போதை ஓட்டம்

இன்னும் சில மணித்துளிகளில் ரியோ ஒலிம்பிக்ஸ் துவங்கவுள்ளது. ஒலிம்பிக்கை ஒட்டி இந்தியாவில் உலா வந்து கொண்டிருக்கும் மீம் கீழே. 
ஊர் சுற்ற மோடிக்கு காரணமும் வேண்டுமா என்ன?


ஒலிம்பிக் போட்டிகள் என்றால் என்னால் இரண்டு காட்சிகளை மறக்க முடியாது. 

1988 சியோல் ஒலிம்பிக்ஸ் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பென் ஜான்சன் வெற்றி பெறுகிறார். தொலைக்காட்சி அப்போது வந்து விட்டதால் அவர் தங்கப்பதக்கம் வென்ற ஓட்டத்தை செய்திகளில் பார்க்க முடிந்தது. மறுநாள் நண்பர்கள் எல்லாம் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம். அதுவும் ஓட்டத்தை துவக்கும் முன்பு அவரைக் காண்பித்தார்களே, அதை வைத்து  "அந்தாள் உடம்பில் இருப்பது தசையா, இரும்பா" என்று ஒரே பிரமிப்புதான்.நான் சொல்வது மிகையில்லை என்பதை கீழே உள்ள படம் சொல்லும்.


இன்ஸ்டன்டாக கதாநாயகனாக மாறினார் பென் ஜான்சன். அன்று மாலையே அந்த திடுக்கிடும் செய்தி வந்தது. போதைப்பொருள் சோதனையில் தோல்வியுற்று பதக்கத்தை பறி கொடுத்து வில்லனாக மாறியிருந்தார்.

ஆனாலும் அந்த ஓட்டத்தை மறக்க முடியாது என்பதை இணைப்பைப் பார்த்து நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள்  



அதே போல 1992 பார்சிலோனா ஒலிம்பிக்ஸில் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றும் காட்சியை மறக்க முடியுமா? ஒலிம்பிக் ஜோதி அடங்கிய  நெருப்பு அம்பை ஒரு வீரர்  வில்லில் நாணேற்றி எய்தவுடன் அது சரியாக பாய்ந்து சென்று  ஜோதி கொழுந்து விட்டெறிந்த காட்சி அவ்வளவு ஒரு அற்புதம். 




என்ன ஒரு துல்லியம்! என்னே அவர் திறமை!! அண்டோனியோ ரிபெல்லியோ என்ற அந்த வீரர் போலியோவால் பாதிக்கப்பட்ட ஒரு மாற்றுத் திறனாளி என்பது ஒரு கூடுதல் தகவல்.

அதற்கடுத்த ஒலிம்பிக்குகளில் தீபமேற்றும் நிகழ்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு நிர்ப்பந்தம் உருவானது. லண்டன், சிட்னி ஒலிம்புக்களில் அழகியல் அம்சங்கள் இருந்தாலும் தொழில் நுட்பத்தின் உதவி அதிகம். பார்சிலோனாவில் இருந்த மனித ஆற்றலுக்கு அவை நிகர் இல்லை. 

பின் குறிப்பு : அட்லாண்டா ஒலிம்பிக்ஸில் முகமது அலி நடுங்கும் கரங்களோடு ஒலிம்பிக் தீபத்தை ஏற்றுவது மனதில் வலியைத் தரும். அதனால் அதனை சேர்க்கவில்லை.
 

2 comments:

  1. இரண்டு காணொளிக் காட்சிகளும் அருமை. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. ஒலிம்பிக் தீபம் அருமைநண்பரே
    அண்டோனியோ ரிபெல்லியோ போற்றுலுக்கு உரியவர்

    ReplyDelete