கின்னஸ் சாதனை படைத்துள்ள ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய
சர்ச்சையின் நிழலில் இந்திய முதலாளித்துவ ஊடகங்கள்
இன்னொரு மிகப் பெரிய உண்மையை கண்டு கொள்ளாமல்
இருக்கிறது. ஏனென்றால் அதுதான் அவர்களுக்கு வசதி.
விக்கி லீக்ஸ் இந்தியா பற்றி வெளியிட்டுள்ள தகவல்கள்
எல்லாமே இந்தியாவின் ஒவ்வொரு கொள்கை முடிவிலும்
அமெரிக்காவின் தலையீடு இருந்துள்ளது என்பதையே மிகத்
தெளிவாக உணர்த்துகின்றது. அணு சக்தி உடன்பாடு, ஈரானுடனான
இந்திய உறவு, சீனாவுடனான அணுகுமுறை என எல்லாவற்றிலும்
அமெரிக்கா இந்தியாவிற்கு கட்டளையிட்டுள்ளது.
திபெத் விஷயத்தில் நடுநிலையான முடிவு எடுக்க வேண்டும் என்று
சொன்ன வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர்மேனனை
அதட்டியுள்ளார்கள். தலாய் லாமா ஆதரவாளர்கள் ஒலிம்பிக் ஜோதி
ஓட்டத்திற்கு இடையூறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை
எடுக்கக் கூடாது என்று மிரட்டியுள்ளார்கள், லண்டன், பாரீசில்
நடைபெற்ற கலவரங்களின் பின்னணியில் இருந்தது அமெரிக்க
ஏகாதிபத்தியம்தான் என்பதும் இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.
இந்தியாவை வேவு பார்க்கும் மையமாகவே அமெரிக்க தூதரகம்
உள்ளது என்பது விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள்
அம்பலப்படுத்தி விட்டது. இந்திய இறையாண்மைக்கு மிகப் பெரிய
அபாயமாக அமெரிக்க இருக்கிறது என்று இடதுசாரிகள் தொடர்ந்து
கூறி வருவது இன்று உண்மையாகி விட்டது.
இந்த நிலைக்கு பா. ஜ.க வும் காரணம். எனவே காங்கிரசும்
பா.ஜ.க. வும் இதை திசை திருப்பும் வேலையைத் தொடங்கி
விட்டனர். ராகுல் காந்தி சொன்னதைப் பற்றிய சர்ச்சையில்
அமெரிக்க அத்துமீறலை மறைக்கப் பார்க்கிறார்கள்.
இதனை அனுமதிக்கக் கூடாது. உண்மைகளை உரக்க
சொல்லிட வேண்டும். சுதந்திர இந்தியாவின்
இறையாண்மையை பாதுகாத்திட வேண்டும்.
No comments:
Post a Comment