கடந்த மூன்று நாட்களாக ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள்
மறியல் நடத்தி கைதாகி உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்
தலைநகரிலும் ஒவ்வொரு நாளும் ஆயிரத்திற்கும்
மேற்பட்டவர்கள் கைதாகி உள்ளனர். அதிகமான அளவில்
பெண்கள் இப்போராட்டத்தில் பங்கேற்று கைதாகியுள்ளனர்
என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல் பொதுவாகவே
போராட்டப் பாதையில் பயணிக்கும் தமிழ்நாடு ஆரம்பப்
பள்ளி ஆசிரியர் கூட்டணி மட்டுமல்லாமல் மற்ற
மூன்று அமைப்புக்களும் கூட இப்போராட்டத்தில்
இணைந்துள்ளது மிகவும் முக்கியமான விஷயம்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இடைக்கால
நிவாரணம் அளித்து பின்பு ரணம் அளித்தது அரசு
ஊழியர்களையும் ஆசிரியர்களையும் வெகுவாக
பாதித்துள்ளது என்பதையே தொடர்ச்சியாக நடக்கும்
போராட்டம் உணர்த்துகின்றது.
என்ன ஆனாலும் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்
தன் பக்கமே நிற்பார்கள் என்ற மாயை தமிழக
முதல்வருக்கு இப்போது அகன்றிருக்கும் எனக்
கருதுகிறேன். அவர்கள் மட்டுமே சமூகத்தின் அனைத்து
பகுதி மக்களுமே வெறுப்பில் உள்ளார்கள். ஸ்பெக்ட்ரம்
பணத்தை கொடுத்து அவர்களை விலைக்கு வாங்குவது
சிரமம்தான்.
No comments:
Post a Comment