Wednesday, December 8, 2010

வெட்கம் கெட்ட ப.சிதம்பரம்



இரண்டு நாட்கள் முன்பு எதோ ஒரு வங்கிக் கிளையை திறந்து
வைத்து பேசிய சிவகங்கைச்சீமான் ப.சிதம்பரம் பின் வருமாறு
முழங்கினார்.

' ஆகஸ்ட் ௨௦௦௮ தொடங்கி அமெரிக்காவில் வங்கிகள் திவாலாகிக்
கொண்டிருக்கிறது. வங்கிகள் திவாலாவது இன்னமும் நிற்கவில்லை.
ஆனால் இந்தியாவிலோ ஒரு வங்கிகள் கூட திவாலாகவில்லை.
ஆனால் வங்கிக் கிளைகளை திறந்து கொண்டே இருக்கிறோம்.
எங்கள் அரசின் கொள்கைகள்தான் இதற்குக் காரணம்'  என்று
அவர் தொடர்ந்து பேசிக் கொண்டே போனார்.

சிறிது கூட மனசாட்சியே இல்லாமல் பேசிய பேச்சல்லவா இது?
வங்கிகளை அழிக்க வேண்டும், பன்னாட்டு வங்கிகளை வளர்க்க
வேண்டும் என்பதல்லவா இவர்களின் கொள்கை? கடந்த ஆட்சிக்
காலத்தில் இடதுசாரிகளின் எதிர்ப்பு இல்லாமல் இருந்திருந்தால்
இந்திய வங்கிகளின் சமாதிகளில் இதனை நேரம் புல் முளைத்து
அதனையும் பன்னாட்டு வங்கிகளிடம் விற்பனை செய்திருப்பார்களே!
சமீபத்தில் கூட ஸ்டேட் வங்கியின் பங்குகளை விற்ற படுபாவிகள்
அல்லவா இவர்கள்!

ஆனால் கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாமல் பொய் பேசித்
திரியும் இந்த புனிதனுக்கு எதிராக செருப்பாயுதம் ஏந்திய அந்த
சர்தார்ஜி பத்திரிக்கையாளர் போல ஒவ்வொருவரும்
 செய்தால்தால்தான்  இந்த உத்தமர்களின் பொய் மூட்டைகள்
நின்று போகும் போல.

2 comments:

  1. சரியாக சொன்னிர்கள் நண்பரே..

    மானங்கெட்ட மனிதனுக்கு என்ன இருக்கபோகிறது...

    ReplyDelete
  2. even if gets chappal beating, he will not change,
    manmohan, pc, mantecsingh trio are the agents of
    america. They are here to sell India.

    ReplyDelete