உள்துறை அமைச்சராக செயல்படுவதற்கு மாறாக மம்தா பானர்ஜியின்
எடுபிடியாக கேவலமான முறையில் நடந்து கொண்ட சிவகங்கை சீமானுக்கு
மேற்கு வங்க முதல்வர் நல்ல பதிலடி கொடுத்துள்ளார். வெட்கம் கெட்ட
சிதம்பரத்திற்கு இதெல்லாம் உரைக்குமா என்றுதான் தெரியவில்லை.
மேற்குவங்கம் குறித்து ஒருதலைப்பட்சமாக மதிப்பீடு ப.சிதம்பரம் கடிதத்திற்கு புத்ததேவ் காட்டமான பதில்
கொல்கத்தா , டிச. 29-
மேற்குவங்க மாநில சட்டம் ஒழுங்குநிலைமை குறித்து மத் திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் மதிப்பீடு பார பட்சமானது என்று மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச் சார்யா கூறியுள்ளார். திரிணா முல் காங்கிரஸ் மாவோயிஸ்ட் கும்பலுடன் பகிரங்கமாக உறவு வைத்திருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர் களை வாடகைக் கொலையாளி கள் என்று சிதம்பரம் எழுதி யுள்ள கடிதத்தில் கூறியுள்ளதற்கு புத்ததேவ் பட்டாச்சார்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டிருப் பதாகவும், மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் ஆயுதப்பயிற்சி பெறுவதாகவும் மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு ப.சிதம்பரம் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறிவரும் அவதூறான குற்றச்சாட்டின் அடிப்படை யில், அவரை தாஜா செய்யும் வகையில் இந்தக்கடிதம் எழுதப் பட்டிருந்தது.
இந்தக்கடிதம் மாநில முதல் வருக்கு வந்து சேர்வதற்கு மூன்று நாளைக்கு முன்னதாகவே ஊட கங்களில் கடிதத்தின் உள்ளடக் கம் வெளியானது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு வும், மேற்குவங்க மாநிலக்குழுவும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
ப.சிதம்பரத்தின் கடிதத்திற்கு உரிய பதில் அனுப்பப்படும் என்று முதல்வர் புத்ததேவ் பட் டாச்சார்யா கூறியிருந்தார். இந் தக்கடிதத்திற்கு செவ்வாயன்று அவர் பதில் அனுப்பினார். கடி தத்தில் கூறப்பட்டுள்ள விஷயம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட தற்கு, கடிதம் உரியவரை சென்று சேர்ந்தபிறகு புதனன்று அது குறித்து தெரிவிப்பதாக அவர் பதிலளித்தார்.
இந்நிலையில், கடிதத்தின் நகல் புதனன்று பத்திரிகைக ளுக்கு வழங்கப்பட்டது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழி யர்களை வாடகைக்கொலை யாளிகள் என்று ப.சிதம்பரத்தின் கடிதத்தில் இடம்பெற்றுள்ள வார்த்தைக்கு புத்ததேவ் பட்டாச் சார்யா கடும் ஆட்சேபமும் கண் டனமும் தெரிவித்துள்ளார். திரி ணாமுல் காங்கிரஸ் தலைவரால் உருவாக்கப்பட்ட இந்த “அரு வருப்பான”வார்த்தையின் பொருள் தெரியாமல் சிதம்பரத் தின் கடிதத்தில் இந்த வார்த்தை இடம்பெற்றுள்ளதாக புத்ததேவ் பட்டாச்சார்யா கூறியுள்ளார்.
மேற்குவங்க மாநில சட்டம்- ஒழுங்கு நிலைமை குறித்து ப. சிதம்பரத்தின் மதிப்பீடு பார பட்சமற்ற ஒட்டுமொத்த மதிப் பீட்டிலிருந்து வெகுதூரம் விலகி யுள்ளது என்று குறிப்பிட்டுள்ள புத்ததேவ், சிதம்பரத்தின் மதிப் பீடு வியப்பளிப்பதாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ரகசியம் என்ற பெயரில் அனுப்பப்பட்ட கடிதம் ஊட கங்களில் முன்னதாகவே கசிந்த விதத்தையும் புத்ததேவ் கடுமை யாக விமர்சித்துள்ளார். திரிணா முல் காங்கிரஸ் மாவோயிஸ்ட்டு களுடன் ரகசியமான உறவு என்ற நிலையைத் தாண்டி பகிரங்க மாகவே இணைந்து செயல்படுவ தாகவும், இரண்டு அமைப்பு களின் தலைவர்களும் தொடர்ச் சியாக சந்தித்து உரையாடுவ தாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் தொடர்பான மோதல்களில் மார்க்சிஸ்ட் கட்சி யைச்சேர்ந்த 69 ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டுள் ளனர். 723 பேர் படுகாயம் அடைந் துள்ளனர். ஆனால் திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த 32 பேர் பலியாகியுள்ளனர் என்றும், காங் கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய மோதல் தமக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்றும், மாநிலத்தின் சில பகுதிகளில் வன்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் புத்ததேவ் பட்டாச்சார்யா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தின் எல்லையில் உள்ள சில இடங் களில் மாவோயிஸ்ட்டுகளின் வன் செயல்கள் நடைபெறுகின்றன. மூன்று மாவட்டங்களில் உள்ள 28 காவல்நிலைய எல்லைகளில் அவர்கள் பரவியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள அவர், காவல் நிலையங்களை அவர்கள் தாக்கு வதோடு ஆயுதங்களையும் கொள்ளையடிக்கின்றனர் என் றும், அவர்களது வன்செயல் களுக்கு அனைத்துக்கட்சியின ரும் இலக்காகியுள்ளனர் என் றும் குறிப்பிட்டுள்ளார்.
மாவோயிஸ்ட்டுகளின் வன் செயல்களை இயன்றவரை எதிர்த்து முறியடிப்பதில் மார்க் சிஸ்ட் கட்சி ஊழியர்கள் ஈடுபட் டுள்ளனர். மாவோயிஸ்ட்டுகளின் வன்செயல்களுக்கு இதுவரை மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் தலைவர்கள் 170 பேர் பலியாகியுள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நீங்கள் அவர்களை குற்றம் சாட்டியுள்ளீர்கள் என்று குறிப் பிட்டுள்ள புத்ததேவ், மாவோ யிஸ்ட்டுகளை எதிர்த்து தீவிரமாக போராடவேண்டியுள்ள நிலை யில், பிரச்சனையின் குவிமையத் தை திசை திருப்புவதாக உங்கள் கடிதம் அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மாவோயிஸ்ட்டுகளை தனி மைப்படுத்த நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நடவடிக் கை எடுக்கவேண்டியுள்ளது. இது ஒரு சவாலான பணி என்று குறிப்பிட்டுள்ள புத்ததேவ் பட் டாச்சார்யா, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மத்திய-மாநில கூட் டுப்படைகள் இணைந்து எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக மாவோயிஸ்ட்டுகள் ஒடுக்கப்பட் டுள்ளதை முழுமையாக பட்டிய லிட்டுள்ளார். பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள் ளது. கல்வி நிலையங்கள் இயங்கு கின்றன. வெளியேறிய மக்கள் தங்கள் வாழ்விடங்களில் குடி யேறியுள்ளனர். தொடர்ச்சியான முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வேறு மாநிலங்களிலிருந்து ஊடுருவி மாநில எல்லையில் தொல்லைகொடுக்கும் மாவோ யிஸ்ட்டுகளுக்கு எதிரான நட வடிக்கையில் மத்திய-மாநில பாது காப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபடவேண்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், வன் செயலை முடிவுக்கு கொண்டுவர உதவுமாறு அனைத்துக்கட்சி களுக்கும் வேண்டுகோள் விடப் பட்டுள்ளது என்றும், ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் இதற்கு ஒத்துழைக்க மறுக்கிறது என்றும் புத்ததேவ் பட்டாச்சார்யா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - தீக்கதிர் நாளிதழ்
அன்பான தோழருக்கு,
ReplyDeleteஎன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
--கேஎஸ்