ஆனந்த விகடன் வார இதழ் 2010 ம் ஆண்டின் டாப் பத்து மனிதர்கள்
என்று பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதிலே இடம் பெற்றுள்ள
இருவர் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்
தோழர் பி.சம்பத், மற்றும் குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர்
தோழர் ஜி.லதா. மார்க்சிஸ்ட் கட்சியின் இருவர் இந்த பட்டியலில்
இடம் பெறுவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. தேவைப்படும்
போது கலைஞர் சொல்வாரே, ஹிந்துவே சொல்லி விட்டது என்று,
அது போல அல்ல. விகடன் அளிக்கும் சான்றிதழ் முக்கியம்,
சிறப்பானது என்ற அர்த்தத்தில் எழுதவில்லை. விகடன் போன்ற
முதலாளித்துவ ஊடகங்களாலும் புறக்கணிக்க முடியாத பணி
என்பதுதான்.
இன்று தீண்டாமை ஒழிப்பிற்கான போராட்டத்தில் மார்க்சிஸ்ட்
கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் தொடர்ந்து நடத்தி
வரும் போராட்டங்களும் இயக்கங்களும் தீண்டாமை ஒழிப்பிற்கு
எதிரான போராட்ட களத்திற்கு, இன்று புதிய பரிமாணத்தை,
வேகத்தை அளித்துள்ளது. பல காலமாக தங்களின் பிரச்சினைகளை
யாரிடம் சொல்வது என்று அடங்கிக் கிடந்தவர்களுக்கு புதிய
நம்பிக்கை பிறந்துள்ளது.
அதனால்தான் விகடன் போன்ற முதலாளித்துவ ஊடகங்களால்
இப்பணியை புறக்கணிக்க இயலவில்லை. விகடன் சொன்னது
இருவர். இன்னும் இருப்பவர்கள் ஏராளம். மக்கள்தான் அவர்களின்
உண்மையான நேச சக்தி யார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த பட்டியல் நிச்சயம் தமிழக முதல்வருக்கு நிச்சயம்
எரிச்சலூட்டும். அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்கு நானே கோரிக்கை
வைத்து நானே நிறைவேற்றிக் கொண்டேன் என்ற அவரது
பொய்யான தற்புகழ்ச்சிக்கு மாறாக மார்க்சிஸ்ட் கட்சியின் ,
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தொடர் போராட்டம்தான்
காரணம் என்பதை சரியாக சுட்டிக்காட்டியுள்ளது. அதே போல
குடியாத்தம் பிரச்சினையில் பேச்சுவார்த்தை முறிந்து கைது
செய்யப்பட்டதற்கு முதல்வரின் நேரடி தலையீடுதான் காரணம்
என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் தோழர்
ஜி.ராமகிருஷ்ணன் வெளிப்படையாக குற்றம் சாட்டினார். தானே
கேள்வி எழுப்பி தானே பதில் சொல்கிற, நெருப்பு கலைஞர்
இதற்கு மட்டும் இன்னும் வாய் திறக்கவில்லை.
விகடன் பார்த்ததும் இரண்டு தோழர்களோடும் தொலைபேசியில்
பேசினேன். அது தங்களுக்கான தனிப்பட்ட பெருமை என்ற
உணர்வு இருவரிடமும் இல்லை. எல்லாம் கட்சிதான் என்றார்கள்,
கம்யூனிஸ்டாக.
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Thursday, December 30, 2010
பசிக்கு பதிலடி
உள்துறை அமைச்சராக செயல்படுவதற்கு மாறாக மம்தா பானர்ஜியின்
எடுபிடியாக கேவலமான முறையில் நடந்து கொண்ட சிவகங்கை சீமானுக்கு
மேற்கு வங்க முதல்வர் நல்ல பதிலடி கொடுத்துள்ளார். வெட்கம் கெட்ட
சிதம்பரத்திற்கு இதெல்லாம் உரைக்குமா என்றுதான் தெரியவில்லை.
மேற்குவங்கம் குறித்து ஒருதலைப்பட்சமாக மதிப்பீடு ப.சிதம்பரம் கடிதத்திற்கு புத்ததேவ் காட்டமான பதில்
கொல்கத்தா , டிச. 29-
மேற்குவங்க மாநில சட்டம் ஒழுங்குநிலைமை குறித்து மத் திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் மதிப்பீடு பார பட்சமானது என்று மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச் சார்யா கூறியுள்ளார். திரிணா முல் காங்கிரஸ் மாவோயிஸ்ட் கும்பலுடன் பகிரங்கமாக உறவு வைத்திருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர் களை வாடகைக் கொலையாளி கள் என்று சிதம்பரம் எழுதி யுள்ள கடிதத்தில் கூறியுள்ளதற்கு புத்ததேவ் பட்டாச்சார்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டிருப் பதாகவும், மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் ஆயுதப்பயிற்சி பெறுவதாகவும் மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு ப.சிதம்பரம் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறிவரும் அவதூறான குற்றச்சாட்டின் அடிப்படை யில், அவரை தாஜா செய்யும் வகையில் இந்தக்கடிதம் எழுதப் பட்டிருந்தது.
இந்தக்கடிதம் மாநில முதல் வருக்கு வந்து சேர்வதற்கு மூன்று நாளைக்கு முன்னதாகவே ஊட கங்களில் கடிதத்தின் உள்ளடக் கம் வெளியானது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு வும், மேற்குவங்க மாநிலக்குழுவும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
ப.சிதம்பரத்தின் கடிதத்திற்கு உரிய பதில் அனுப்பப்படும் என்று முதல்வர் புத்ததேவ் பட் டாச்சார்யா கூறியிருந்தார். இந் தக்கடிதத்திற்கு செவ்வாயன்று அவர் பதில் அனுப்பினார். கடி தத்தில் கூறப்பட்டுள்ள விஷயம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட தற்கு, கடிதம் உரியவரை சென்று சேர்ந்தபிறகு புதனன்று அது குறித்து தெரிவிப்பதாக அவர் பதிலளித்தார்.
இந்நிலையில், கடிதத்தின் நகல் புதனன்று பத்திரிகைக ளுக்கு வழங்கப்பட்டது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழி யர்களை வாடகைக்கொலை யாளிகள் என்று ப.சிதம்பரத்தின் கடிதத்தில் இடம்பெற்றுள்ள வார்த்தைக்கு புத்ததேவ் பட்டாச் சார்யா கடும் ஆட்சேபமும் கண் டனமும் தெரிவித்துள்ளார். திரி ணாமுல் காங்கிரஸ் தலைவரால் உருவாக்கப்பட்ட இந்த “அரு வருப்பான”வார்த்தையின் பொருள் தெரியாமல் சிதம்பரத் தின் கடிதத்தில் இந்த வார்த்தை இடம்பெற்றுள்ளதாக புத்ததேவ் பட்டாச்சார்யா கூறியுள்ளார்.
மேற்குவங்க மாநில சட்டம்- ஒழுங்கு நிலைமை குறித்து ப. சிதம்பரத்தின் மதிப்பீடு பார பட்சமற்ற ஒட்டுமொத்த மதிப் பீட்டிலிருந்து வெகுதூரம் விலகி யுள்ளது என்று குறிப்பிட்டுள்ள புத்ததேவ், சிதம்பரத்தின் மதிப் பீடு வியப்பளிப்பதாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ரகசியம் என்ற பெயரில் அனுப்பப்பட்ட கடிதம் ஊட கங்களில் முன்னதாகவே கசிந்த விதத்தையும் புத்ததேவ் கடுமை யாக விமர்சித்துள்ளார். திரிணா முல் காங்கிரஸ் மாவோயிஸ்ட்டு களுடன் ரகசியமான உறவு என்ற நிலையைத் தாண்டி பகிரங்க மாகவே இணைந்து செயல்படுவ தாகவும், இரண்டு அமைப்பு களின் தலைவர்களும் தொடர்ச் சியாக சந்தித்து உரையாடுவ தாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் தொடர்பான மோதல்களில் மார்க்சிஸ்ட் கட்சி யைச்சேர்ந்த 69 ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டுள் ளனர். 723 பேர் படுகாயம் அடைந் துள்ளனர். ஆனால் திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த 32 பேர் பலியாகியுள்ளனர் என்றும், காங் கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய மோதல் தமக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்றும், மாநிலத்தின் சில பகுதிகளில் வன்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் புத்ததேவ் பட்டாச்சார்யா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தின் எல்லையில் உள்ள சில இடங் களில் மாவோயிஸ்ட்டுகளின் வன் செயல்கள் நடைபெறுகின்றன. மூன்று மாவட்டங்களில் உள்ள 28 காவல்நிலைய எல்லைகளில் அவர்கள் பரவியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள அவர், காவல் நிலையங்களை அவர்கள் தாக்கு வதோடு ஆயுதங்களையும் கொள்ளையடிக்கின்றனர் என் றும், அவர்களது வன்செயல் களுக்கு அனைத்துக்கட்சியின ரும் இலக்காகியுள்ளனர் என் றும் குறிப்பிட்டுள்ளார்.
மாவோயிஸ்ட்டுகளின் வன் செயல்களை இயன்றவரை எதிர்த்து முறியடிப்பதில் மார்க் சிஸ்ட் கட்சி ஊழியர்கள் ஈடுபட் டுள்ளனர். மாவோயிஸ்ட்டுகளின் வன்செயல்களுக்கு இதுவரை மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் தலைவர்கள் 170 பேர் பலியாகியுள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நீங்கள் அவர்களை குற்றம் சாட்டியுள்ளீர்கள் என்று குறிப் பிட்டுள்ள புத்ததேவ், மாவோ யிஸ்ட்டுகளை எதிர்த்து தீவிரமாக போராடவேண்டியுள்ள நிலை யில், பிரச்சனையின் குவிமையத் தை திசை திருப்புவதாக உங்கள் கடிதம் அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மாவோயிஸ்ட்டுகளை தனி மைப்படுத்த நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நடவடிக் கை எடுக்கவேண்டியுள்ளது. இது ஒரு சவாலான பணி என்று குறிப்பிட்டுள்ள புத்ததேவ் பட் டாச்சார்யா, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மத்திய-மாநில கூட் டுப்படைகள் இணைந்து எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக மாவோயிஸ்ட்டுகள் ஒடுக்கப்பட் டுள்ளதை முழுமையாக பட்டிய லிட்டுள்ளார். பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள் ளது. கல்வி நிலையங்கள் இயங்கு கின்றன. வெளியேறிய மக்கள் தங்கள் வாழ்விடங்களில் குடி யேறியுள்ளனர். தொடர்ச்சியான முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வேறு மாநிலங்களிலிருந்து ஊடுருவி மாநில எல்லையில் தொல்லைகொடுக்கும் மாவோ யிஸ்ட்டுகளுக்கு எதிரான நட வடிக்கையில் மத்திய-மாநில பாது காப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபடவேண்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், வன் செயலை முடிவுக்கு கொண்டுவர உதவுமாறு அனைத்துக்கட்சி களுக்கும் வேண்டுகோள் விடப் பட்டுள்ளது என்றும், ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் இதற்கு ஒத்துழைக்க மறுக்கிறது என்றும் புத்ததேவ் பட்டாச்சார்யா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - தீக்கதிர் நாளிதழ்

மாயை அகன்றிருக்குமா?
கடந்த மூன்று நாட்களாக ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள்
மறியல் நடத்தி கைதாகி உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்
தலைநகரிலும் ஒவ்வொரு நாளும் ஆயிரத்திற்கும்
மேற்பட்டவர்கள் கைதாகி உள்ளனர். அதிகமான அளவில்
பெண்கள் இப்போராட்டத்தில் பங்கேற்று கைதாகியுள்ளனர்
என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல் பொதுவாகவே
போராட்டப் பாதையில் பயணிக்கும் தமிழ்நாடு ஆரம்பப்
பள்ளி ஆசிரியர் கூட்டணி மட்டுமல்லாமல் மற்ற
மூன்று அமைப்புக்களும் கூட இப்போராட்டத்தில்
இணைந்துள்ளது மிகவும் முக்கியமான விஷயம்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இடைக்கால
நிவாரணம் அளித்து பின்பு ரணம் அளித்தது அரசு
ஊழியர்களையும் ஆசிரியர்களையும் வெகுவாக
பாதித்துள்ளது என்பதையே தொடர்ச்சியாக நடக்கும்
போராட்டம் உணர்த்துகின்றது.
என்ன ஆனாலும் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்
தன் பக்கமே நிற்பார்கள் என்ற மாயை தமிழக
முதல்வருக்கு இப்போது அகன்றிருக்கும் எனக்
கருதுகிறேன். அவர்கள் மட்டுமே சமூகத்தின் அனைத்து
பகுதி மக்களுமே வெறுப்பில் உள்ளார்கள். ஸ்பெக்ட்ரம்
பணத்தை கொடுத்து அவர்களை விலைக்கு வாங்குவது
சிரமம்தான்.

Sunday, December 26, 2010
வெண்மணியில் சங்கமித்த இன்சூரன்ஸ் ஊழியர்கள்
நேற்று 25 .12 . 2010 அன்றும் வர்க்கப்போரில் உயிர் நீத்த
வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த தமிழகம்
முழுதும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் வெண்மணியில்
திரண்டனர். அஞ்சலி என்பது வெறும் சடங்கல்ல.
அவர்களின் தியாகத்தை நெஞ்சிலேந்தி மனதில்
உரம் பெற்று போராட்டப் பயணத்தை மேலும்
உறுதியாக தொடர்வதற்காகத்தான். வெண்மணி
மண்ணில்ஒவ்வொரு முறையும் கால்
பதிககிறபோதும் நாம் நம்மை புதுப்பித்துக்
கொள்கின்றோம் என்பதுதான்
உண்மை.
ராமையாவின் குடிசையில் வைத்த தீ போராட்ட
உணர்வை அழித்துவிடும் என ஆண்டைகள் போட்ட
கணக்கு தவறு என்றும் அந்த தீ ஒவ்வொரு
உழைப்பாளி நெஞ்சிலும் இன்னமும் எரிந்து
கொண்டிருக்கிறது என்பதை ஒவ்வொரு
ஆண்டு வெண்மணி தினத்தன்றும்
நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
இவ்வாண்டும் வெண்மணி செல்வதற்கு
முன்பாக திருவாரூரில் சமூக ஒடுக்குமுறை
எதிர்ப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. தென்
மண்டல தலைவர் தோழர் எம்.குன்னிகிருஷ்ணன்
தலைமையேற்க, அகில இந்திய இணைச்செயலாளர்
தோழர் ஜே.குருமூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு
முன்னணியின் துணைத்தலைவர் தோழர்
கு.ஜக்கையன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
உத்தப்புரம் பிரச்சினையில் காவல்துறையால்
தாக்கப்பட்ட மாதர் சங்கப் பொறுப்பாளர் தோழர்
எஸ்.கே.பொன்னுத்தாய் கௌரவிக்கப்பட்டார்.
எனது எலும்புகளை உடைத்து விட்டால்
உத்தப்புரம் போராட்டத்தை முடக்கி விடலாம்.
மற்ற தலைவர்களை தாக்கினால் அடக்கி விடலாம்
என்று காவல்துறை கருதியது. அப்படி அடங்கிப்
போகின்ற அமைப்பு நாமல்ல என்றும் ஒரு
தோழர் இல்லாவிட்டால் அடுத்த தோழர்
அப்போராட்டத்தை முன்னேடுத்துச்செல்வார் என்று
காவல்துறை அறிந்திருக்கவில்லை என்று அவர்
கூறிய வார்த்தைகள் இன்னும் ஒலித்துக் கொண்டே
உள்ளது.
தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர்
கே.சுவாமிநாதனின் அற்புதமான நிறைவுரையோடு
கருத்தரங்கம் நிறைவு பெற்று வெண்மணி நோக்கிய
பயணம் தொடங்கியது.
தோழர் எம். குன்னிகிருஷ்ணன்
பங்கேற்றோர்
தோழர் எஸ்.கே.பொன்னுத்தாய் கௌரவிப்பு
தோழர் எஸ்.கே.பொன்னுத்தாய்
தோழர் ஜே.குருமூர்த்தி
தோழர் கு.ஜக்கையன்
தோழர் சுரேஷ் குமார், மதுரை
வெண்மணி இதழிற்கு வேலூர் கோட்டத்திலிருந்து
மேலும் 100 சந்தா
தோழர் ஆர்.தர்மலிங்கம்,
களப்பலியானர்களின் பட்டியல்
இந்த நினைவுத்தூணிலே
கம்பீரமாய் எழுந்து வரும்
வெண்மணி நினைவாலயம்
தோழர் கே.சுவாமிநாதன்
என்றென்றும் அதிர்வு தரும்
எழுச்சி தரும்,
வெண்மணி நினைவுச்சின்னம்
நன்றி
http://www.iceunionvellore.blogspot.com/

Thursday, December 23, 2010
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் ?
தயவு செய்து கடைசி வரை படியுங்கள். இது மிகவும் முக்கியம்.
பின் வருவது இந்தியாவின் மிக முக்கியமான ஒரு மனிதர்
பற்றிய விபரங்கள்.
RESUME
EDUCATION /Qualification:
1950: Stood first in BA (Hons), Economics, Punjab University, Chandigarh ,
1952; Stood first in MA (Economics), Punjab University , Chandigarh ,
1954; Wright's Prize for distinguished performance at St John's College, Cambridge,
1955 and 1957; Wrenbury scholar, University of Cambridge ,
1957; DPhil ( Oxford ), DLitt (Honoris Causa); PhD thesis on India 's export competitiveness
OCCUPATION /Teaching Experience :
Professor (Senior lecturer, Economics, 1957-59;
Reader, Economics, 1959-63;
Professor, Economics, Punjab University , Chandigarh , 1963-65;
Professor, International Trade, Delhi School of Economics, University of Delhi,1969-71 ;
Honorary professor, Jawaharlal Nehru University ,New Delhi,1976 and Delhi School of Economics, University of Delhi ,1996 and Civil Servant
Working Experience/ POSITIONS :
1971-72: Economic advisor, ministry of foreign trade
1972-76: Chief economic advisor, ministry of finance
1976-80: Director, Reserve Bank of India ;
Director, Industrial Development Bank of India;
Alternate governor for India, Board of governors, Asian Development Bank;
Alternate governor for India, Board of governors, BIRD
November 1976 - April 1980: Secretary, ministry of finance (Department of economic affairs);
Member, finance, Atomic Energy Commission; Member, finance, Space Commission
April 1980 - September 15, 1982 : Member-secretary, Planning Commission
1980-83: Chairman , India Committee of the Indo-Japan joint study committee
September 16, 1982 - January 14, 1985 : Governor, Reserve Bank of India .
1982-85: Alternate Governor for India , Board of governors, International Monetary Fund
1983-84: Member, economic advisory council to the Prime Minister
1985: President, Indian Economic Association
January 15, 1985 - July 31, 1987 : Deputy Chairman, Planning Commission
August 1, 1987 - November 10, 19! 90: Secretary-general and commissioner,
south commission, Geneva
December 10, 1990 - March 14, 1991 : Advisor to the Prime Minister on economic affairs
March 15, 1991 - June 20, 1991 : Chairman, UGC
June 21, 1991 - May 15, 1996 : Union finance minister
October 1991: Elected to Rajya Sabha from Assam on Congress ticket
June 1995: Re-elected to Rajya Sabha
1996 onwards: Member, Consultative Committee for the ministry of finance
August 1, 1996 - December 4, 1997: Chairman, Parliamentary standing committee on commerce
March 21, 1998 onwards: Leader of the Opposition, Rajya Sabha
June 5, 1998 onwards: Member, committee on finance
August 13, 1998 onwards: Member, committee on rules
Aug 1998-2001: Member, committee of privileges 2000 onwards: Member, executive committee, Indian parliamentary group
June 2001: Re-elected to Rajya Sabha
Aug 2001 onwards: Member, general purposes committee
BOOKS:
India 's Export Trends and Prospects for Self-Sustained Growth -
Clarendon Press, Oxford University , 1964; also published a large number of articles in various economic journals.
OTHER ACCOMPLISHMENTS:
Adam Smith Prize, University of Cambridge , 1956
Padma Vibhushan, 1987
Euro money Award, Finance Minister of the Year, 1993;
Asia money Award, Finance Minister of the Year for Asia, 1993 and 1994
INTERNATIONAL ASSIGNMENTS:
1966: Economic Affairs Officer
1966-69: Chief, financing for trade section, UNCTAD
1972-74: Deputy for India in IMF Committee of Twenty on
International Monetary Reform
1977-79: Indian delegation to Aid-India Consortium Meetings
1980-82: Indo-Soviet joint planning group meeting
1982: Indo-Soviet monitoring group meeting
1993: Commonwealth Heads of Government Meeting Cyprus 1993: Human Rights World Conference, Vienna
RECREATION :
Gymkhana Club, New Delhi; Life Member, India International Centre,
New Delhi
மேலே சொல்லப்பட்டவை எல்லாம் பிரதமர்
மன்மோகன் சிங்கின் சிறப்பம்சங்கள் என்று
யாரோ பீற்றிக் கொண்டிருந்தார்கள்.
ஞான ஒளி திரைப்படத்தில் சிவாஜி
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்
நோ பீஸ் ஆப் மைன்ட்
என்று பாடுவார். அது போல
ஆயிரம் தகுதிகளும் அனுபவமும் இருந்து
என்ன பயன்? விலைவாசி உயர்வை குறைக்க
முடியவில்லை. ஊழலை கட்டுப்படுத்த
முடியவில்லை. கடன் அளவு அதிகமாய்க்
கொண்டே இருக்கிறது. எந்த பிரச்சினையையும்
தீர்க்க முடியாத கையாலாகாத பலவீனமான
மனிதராக பரிதாபமாக காட்சியளிக்கிறார்.

Tuesday, December 21, 2010
நாடாளுமன்றம் முடங்கியதால் ஒன்றும் குடிமுழுகிப் போகவில்லை
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடக்காமல் போனதால் 170 கோடி ருபாய்
நஷ்டம் என்ற புதிய பல்லவியை சில பத்திரிகைகள் பாடத்தொடங்கியுள்ளன.
ஸ்பெக்ட்ரம் ஊழலால் தேசம் இழந்துள்ள தொகையில் o.0001 % தான்
இந்தததொகை ( கணக்கு சரிதானே ? ) என்றாலும் அதைப் பெரிது படுத்துவதில்
சிலருக்கு ஆனந்தம்.
சரி இம்முறை நாடாளுமன்றம் நடந்திருந்தால் நாட்டிற்கும் ஏழை மக்களுக்கும்
என்ன நல்லது நடந்திருக்கும்?
விலைவாசியைக் குறைக்க ஆன்லைன் வர்த்தகத்தை முழுமையாக தடை
செய்யும் மசோதாவை அரசு கொண்டு வந்திருக்குமா?
காலம் காலமாக கிடப்பில் போடப் பட்டிருக்கும் மகளிர் மசோதாவை
மக்களவையிலும் நிறைவேற்றி இருக்குமா?
வட இந்திய ஓட்டு அறுவடைக்காக நிறுத்தி வைத்துள்ள சேது சமுத்திரத்
திட்டத்தை தொடர்ந்து நடத்துவதற்கான வழிவகைகள் ஏதாவது
செய்திருக்குமா?
சுவிஸ் நாட்டு வங்கிகளில் முடக்கிக் கிடக்கும் அளவிட முடியாத
கோடிகளிலான கறுப்புப் பணத்தை மீட்பதற்கான சட்டம் எதாவதை
கொண்டு வந்திருக்குமா?
இந்திய வங்கிகளிடம் கடன் வாங்கி திருப்பித்தராத பெரிய மனிதர்களின்
சொத்துக்களை பறிமுதல் செய்ய சட்டம் வந்திருக்குமா/ அல்லது
அவர்களின் பட்டியலைத்தான் வெளியிட்டிருக்குமா?
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பொது விநியோக முறையை
விரிவு படுத்தப்போகின்றோம் என்று சொல்லியிருக்குமா?
வேலை உத்தரவாத சட்டத்தின் படி கூலியை உயர்த்தியிருப்பார்களா ?
அல்லது நூறு நாட்கள் என்பதை அதிகப்படுத்தியிருப்பார்களா?
இல்லை , இல்லை நிச்சயமாக இல்லை.
ஆனால்
தேசத்தின் பல சொத்துக்களை அடமானம் வைக்கும் பணி நடந்திருக்கும்.
உணவுப்பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் உள்ளதும் பறி போயிருக்கும்.
செல்வந்தர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் கண்டிப்பாக
இருந்திருக்கும்.
அமெரிக்கர்களின் அடிமைகள் நாங்கள் என்பது மீண்டும்
உரைக்கப்பட்டிருக்கும்.
வங்கி, இன்சூரன்ஸ், தொலை தொடர்பு துறைகளில் அந்நிய
ஆதிக்கத்தை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் கண்டிப்பாக
நடந்திருக்கும்.
எனவே இப்படிப்பட்ட நாடாளுமன்ற
கூட்டத்தொடர் முடங்கிப் போனதால்
மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
முதலாளிகளுத்தான் சற்று கஷ்டம்.
அதனால்தான் இந்தப் புலம்பல்

Sunday, December 19, 2010
ஸ்பெக்ட்ரம் நிழலில் மறைக்கப்படும் மற்றொரு அபாயம்
கின்னஸ் சாதனை படைத்துள்ள ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய
சர்ச்சையின் நிழலில் இந்திய முதலாளித்துவ ஊடகங்கள்
இன்னொரு மிகப் பெரிய உண்மையை கண்டு கொள்ளாமல்
இருக்கிறது. ஏனென்றால் அதுதான் அவர்களுக்கு வசதி.
விக்கி லீக்ஸ் இந்தியா பற்றி வெளியிட்டுள்ள தகவல்கள்
எல்லாமே இந்தியாவின் ஒவ்வொரு கொள்கை முடிவிலும்
அமெரிக்காவின் தலையீடு இருந்துள்ளது என்பதையே மிகத்
தெளிவாக உணர்த்துகின்றது. அணு சக்தி உடன்பாடு, ஈரானுடனான
இந்திய உறவு, சீனாவுடனான அணுகுமுறை என எல்லாவற்றிலும்
அமெரிக்கா இந்தியாவிற்கு கட்டளையிட்டுள்ளது.
திபெத் விஷயத்தில் நடுநிலையான முடிவு எடுக்க வேண்டும் என்று
சொன்ன வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர்மேனனை
அதட்டியுள்ளார்கள். தலாய் லாமா ஆதரவாளர்கள் ஒலிம்பிக் ஜோதி
ஓட்டத்திற்கு இடையூறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை
எடுக்கக் கூடாது என்று மிரட்டியுள்ளார்கள், லண்டன், பாரீசில்
நடைபெற்ற கலவரங்களின் பின்னணியில் இருந்தது அமெரிக்க
ஏகாதிபத்தியம்தான் என்பதும் இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.
இந்தியாவை வேவு பார்க்கும் மையமாகவே அமெரிக்க தூதரகம்
உள்ளது என்பது விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள்
அம்பலப்படுத்தி விட்டது. இந்திய இறையாண்மைக்கு மிகப் பெரிய
அபாயமாக அமெரிக்க இருக்கிறது என்று இடதுசாரிகள் தொடர்ந்து
கூறி வருவது இன்று உண்மையாகி விட்டது.
இந்த நிலைக்கு பா. ஜ.க வும் காரணம். எனவே காங்கிரசும்
பா.ஜ.க. வும் இதை திசை திருப்பும் வேலையைத் தொடங்கி
விட்டனர். ராகுல் காந்தி சொன்னதைப் பற்றிய சர்ச்சையில்
அமெரிக்க அத்துமீறலை மறைக்கப் பார்க்கிறார்கள்.
இதனை அனுமதிக்கக் கூடாது. உண்மைகளை உரக்க
சொல்லிட வேண்டும். சுதந்திர இந்தியாவின்
இறையாண்மையை பாதுகாத்திட வேண்டும்.

ஹெலிகாப்டரில் அலுவலகம் வரும் மாவட்ட ஆட்சியர் - தமிழகத்தில்தான்
மேலே உள்ள படங்களைப் பார்த்தீர்களா? இது சந்திர மண்டலம் குறித்து
சந்திராயன் அனுப்பிய படங்கள் அல்ல. ஏதோ கிராமத்து சாலையும் அல்ல.
வேலூர் மாநகராட்சியில்(! ?) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு
முன்பாக உள்ள சாலைதான். இந்த சாலை வழியாகத்தான் மாவட்ட
ஆட்சியர் தனது அலுவலகத்திற்குள் நுழைய வேண்டும். அருகில் உள்ள
காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மாவட்ட எஸ்.பி
இந்த சாலையைகே கடந்துதான் செல்ல வேண்டும்.
ஏதோ இப்போது பெய்த மழையால் இவ்வளவு மோசமாக உள்ளது
என்று யாரும் நினைக்க வேண்டாம். கிட்டத்தட்ட எட்டு மாதமாக
இதே கதியில்தான் உள்ளது. கலெக்டர் அலுவலகம் முன்பாக உள்ள
சாலையின் பராமரிப்பு லட்சணமே இப்படி என்றால் மாவட்டம் முழுதும்
உள்ள சாலைகள் எப்படி இருக்கும் என்பதை யாரும் கற்பனை கூட
செய்ய வேண்டிய அவசியமில்லை.
ஆனால் அருகில் உள்ள தங்க நாற்கர சாலை மட்டும் நன்றாகவே
உள்ளது. அதிலே செல்ல பணம் வாங்குவதாலோ என்னவோ அதை
மட்டும் ஒழுங்காக பராமரிககிறார்கள் போலும்.
தன அலுவகம் முன்பாக, தான் அன்றாடம் பயன்படுத்தும்
ஒரு சாலையையே ஒழுங்காக பராமரிக்க முடியாத ஒரு மாவட்ட
ஆட்சியர் தந்து மாவட்டத்தை மட்டும் எப்படி நிர்வகிக்கப் போகின்றார்?
மக்களுக்கு என்ன நல்லது செய்யப்போகின்றார்?
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக சுற்றுப்புற சுவரை மாற்றி
கிரானைட் கல் பதித்து போயஸ் தோட்ட கதவு போல அமைத்து
செலவு செய்துள்ளார்கள். இக்கதவிற்கு ஒரு திறப்புவிழா வேறு
நடத்தி ஏராளமான மலர் மலைகளையெல்லாம் ஒரு நாளில்
போட்டு அலங்காரமெல்லாம் நடந்தது. ஆனால் சாலை மட்டும்
அப்படியே உள்ளது.
ஒரு வேளை இப்படி இருக்கலாமா?
மாவட்டத்தில் உள்ள எல்லா சாலையும் மோசமாக உள்ளது போல
இதுவும் இருக்கட்டும் என்ற பெருந்தன்மையோ!
அல்லது மாவட்ட ஆட்சியர் தினமும் தனது அலுவலகத்திற்கு
ஹெலிகாப்டரில் வருகின்றாரோ? அதனால்தான் அவருக்கு
சாலைகள் நிலைகள் பற்றி தெரியவில்லையோ ?
பின் குறிப்பு : காலையில் ஐந்தாறு இடங்களை புகைப்படம்
எடுத்திருந்தேன். மதியம் அந்தப்பக்கம் போன போது சில
இடங்களை மட்டும் சரி செய்து சிலவற்றை அப்படியே
வைத்திருந்தார்கள். சரி செய்த இடங்களின் புகைப்படத்தை
போடவில்லை. ஒரு தொழில் தர்மம் வேண்டுமள்ளவ்ல்லவா?
மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை தற்காலிகமாக
சரிசெய்வதற்காக தமிழக அரசு வேலூர் மாவட்டத்திற்கு
இரண்டரை கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்தப் பணத்தில்
எந்தெந்த சாலைகளை சரி செய்யப்போகின்றனர், எப்படி
செய்யப்போகின்றனர் என்பதை பார்ப்போம்.
Friday, December 17, 2010
தோழர் பாப்பா உமாநாத் அவர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நிறுவனத் தலைவர்களில்
ஒருவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் முன்னாள்
தமிழக சட்டப்பேரவை உறுப்பினருமான தோழர் பாப்பா உமாநாத் அவர்கள்
இன்று ( 17 .12 2010 ) காலமானார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தியாகத்தின் அடையாளமான தோழர் பாப்பா உமாநாத் அவர்களின்
வாழ்க்கை பொது வாழ்வில் ஈடுபடும் அனைவருக்கும் ஒரு பாடம்.
அவர்களின் நெஞ்சுறுதி போற்றத்தக்கது. கம்யூனிஸ்ட் இயக்கத்தை
தடை செய்து அதன் உறுப்பினர்களை அரசு வேட்டையாடிக்
கொண்டிருந்த நேரம் அவரும் அவரது தாயாரும் சிறையில்
அடைக்கப்பட்டனர். அவரது அன்னை லட்சுமி சிறையிலேயே
இறந்து போக கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து
விலக ஒப்புக்கொண்டால்தான் அவரது உடலை
இறுதியாக பார்க்க அனுமதிக்க முடியும் என்று நிபந்தனை
போட்ட போது அதை ஏற்க மறுத்து கொண்ட கொள்கையிலும்
இணைந்த இயக்கத்திலும் உறுதியாக இருந்த தோழரின் அரும்
பணிகள் காரணமாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்
இன்று வலிமையான அமைப்பாக உள்ளது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில சிறப்பு மாநாடு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வேலூரில் நடைபெற்றபோது அவ்வமைப்பின்
மாநிலக்குழுக் கூட்டம் எங்கள் சங்க அலுவலகம் சரோஜ் இல்லத்தில்
நடந்தது. அப்போது எங்கள் சங்க அலுவலகத்திற்கு தோழர் பாப்பா உமாநாத்
அவர்கள் வந்துள்ளார் என்பது எங்களுக்கு மிகவும் பெருமை அளித்தது.
தோழர் பாப்பா உமாநாத் அவர்களுக்கு செவ்வணக்கம்!
Wednesday, December 15, 2010
உடையும் சுவர்கள், திறக்கும் கதவுகள், தூரத்தில் தொடுவானம்
அண்ணல் அம்பேத்கர்- வெண்மணி தியாகிகள்
நினைவுக் கருத்தரங்கம்நாள் 15 .12 .2010 , புதன் மாலை 5 .30
இடம் : எல்.ஐ.சி வேலூர் கோட்ட அலுவலக வளாகம்
தலைமை : தோழர் எம்.தசரதன், தலைவர், வேலூர் கோட்டம்,
வரவேற்புரை : தோழர் எஸ்.ராமன், பொதுச்செயலாளர், வேலூர் கோட்டம்,
உடையும் சுவர்கள், திறக்கும் கதவுகள்,
தூரத்தில் தொடுவானம்
என சிறப்புரை
தோழர் கே.சாமுவேல்ராஜ், பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
நன்றியுரை: தோழர் பி.தமிழ்மணி, மாவட்டச்செயலாளர்
அனைவரும் அவசியம் பங்கேற்பீர்
இவண்
வேலூர் - திருவண்ணாமலை மாவட்டக்குழு
Tuesday, December 14, 2010
மம்தா பானர்ஜிக்கு அமைதிக்கான நோபல் பரிசு
இந்த பதிவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு பெற எளிய வழிகள்
என்றும் தலைப்பு வைக்கலாம்.
சரி என்ன வழிகள் உள்ளது?
ஒன்று நீங்கள் அமெரிக்க ஜனாதிபதியாக இருக்க வேண்டும், எதுவும்
செய்திட வேண்டாம், சொன்னால் போதும், சொன்னதற்கு நேர் மாறாக
நடந்தாலும் கவலையில்லை. ஒபாமா போல அதிர்ஷ்டம் இருந்தால்
பதவியில் இருக்கும் போதே கிடைக்கும். இல்லையென்றாலும் கண்டிப்பாக செத்துப் போவதற்கு முன்பாக கிடைக்கும் (ஜார்ஜ் புஷ்ஷிற்கு ஒரு நோபல் பரிசு பார்சல்)
அமெரிக்க ஜனாதிபாதியாக முடியாத துரதிர்ஷ்டசாலிகள் கவலைப்பட வேண்டாம், உங்களுக்கும் வாய்ப்பு உண்டு.
என்ன நீங்கள் கடுமையான கம்யூனிச எதிர்ப்பாளராக இருக்க
வேண்டும். கம்யூனிச நாடுகளில் மனித உரிமை மீறல்
நடக்கிறது என்று பினாத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
அந்த பினாத்தலை அபுகாரிப் அல்லது குவாண்டனமோ
சிறைச்சாலை வாசல்களிலிருந்து செய்தால் உத்தமம்.
சந்தேகமிருந்தால் இந்த பட்டியலைப் பாருங்கள்
ஆண்ட்ரே சகரோவ்,
லெக் வாலேசா,
தலாய் லாமா,
மிகையில் கோர்பசேவ்
இந்த வரிசையில் லியு ஜென்போ என விருது கொடுத்து
நோபல் பரிசுகுழு தனது கம்யூனிச எதிர்ப்பு நிலையை
மீண்டும் நிலை நாட்டி விட்டது.
யாசர் அராபத்திற்கும் நெல்சன் மாண்டேலாவிற்கும் கூட
விருதளித்தபோது கூடவே இஸ்ரேல் மற்றும் தென் ஆப்பிரிக்க
அரசியல்வாதிகளுக்கும் சேர்த்து விருதளித்து இவர்களுக்கு தனி
முக்கியத்துவம் கிடைக்காமல் பார்த்துக்கொன்டவர்கள்தானே
இவர்கள்!
இந்த வரிசையில் அமைதிக்கான நோபல் பரிசை அடுத்து பெற
தகுதியானவர் மம்தா பானர்ஜிதான். மாவோயிஸ்டுகளோடு இணைந்து
கம்யூனிஸ்டுகளை கொடூரமாக கொன்று குவிக்கும் அவரைத் தவிர
இந்த விருதைப் பெற யாருக்கு தகுதி உள்ளது ?
தீவிர கம்யூனிச எதிர்ப்பாளர் என்ற முறையில் நரேந்திர மோடியை விட மம்தாவிற்குத்தான் கூடுதல் மதிப்பெண்கள்.

Sunday, December 12, 2010
அன்று பாராட்டியவர்கள் இன்று மௌனமாய் இருப்பது ஏன்?
விமான நிறுவனம் ஆரம்பிக்க ஒரு அமைச்சர் பத்து கோடி ருபாய்
லஞ்சம் கேட்டார். அப்படி ஒரு தொழிலே வேண்டாம் என்று மறுத்து
விட்டேன் என ரத்தன் டாட்டா கூறியபோது, இவரல்லவா நேர்மையின்
சிகரம் என இந்திய ஊடகங்கள் புகழ்ந்து தள்ளின.
ஆனால் அதே ரத்தன் டாடா நீரா ராடியாவுடனான தொலைபேசி
பதிவுகளை வெளியிடக்கூடாது என்று வழக்கு தொடுத்துள்ளபோது
முன்பு ரத்தன் டாடாவினை வானளாவிய முறையில் புகழ்ந்த
அத்தனை ஊடகங்களும் இப்போது வாய் திறக்கவேயில்லை.
டாடா நீரா ராடியா உரையாடல் ஒன்றும் இருவர் குடும்பத்து
விவாகங்கள் பற்றியோ அல்லது விவாக ரத்துகள் பற்றியோ
கிடையாதே! அரசில் யார் இருக்க வேண்டும், கொள்கைகள் எப்படி
அமைய வேண்டும் என்பது பற்றித்தானே! இதை வெளியிட தடை
கேட்டது தனது தில்லுமுல்லுகளை மேலும் அதிகமானவர்கள்
அறியக்கூடாது என்பதற்காகத்தான்.
பாவம் ரத்தன் டாடா, தனது சுத்த சுயம்பிரகாச வேடம் சில
நாட்களிலேயே கலைந்து போகும் என்பதை வீர வசனம் பேசும்
போது அறிந்திருக்க மாட்டார். அவரோடு சேர்த்து அவர் புகழ்
பாடிய ஊடகங்களின் அரிதாரமும் கலைந்து விட்டது.
ஒரே ஒரு சந்தேகம் : ஆரிய திராவிட வாதத்தை கையில் எடுத்துள்ள
கலைஞர், ஏன் ரத்தன் டாடா பற்றி ஊடகங்கள் எழுதாதை குறிப்பிடவே
இல்லை? பெரு முதலாளிக்கு எதிராக பேசும் வல்லமை அவருக்கு
கிடையாதா என்ன? யாராவது கொஞ்சம் தெளிவு படுத்துங்களேன்...

Saturday, December 11, 2010
1 ,76 ,000 கோடி ரூபாய் எப்படி வரும்?
ஸ்பெக்ட்ரம் ஊழலில் தேசம் இழந்திருப்பது 1 ,76 ,000 கோடி ரூபாய். இதன் மதிப்பை உணர்த்த சிறு உதாரணம் தரலாம் என்று நினைக்கிறேன்.
இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான எல்.ஐ.சி யின் கடந்த 2009 -10 நிதியாண்டின் மொத்த பிரிமிய வருமானம் 1 ,86 ,000 கோடி ரூபாய். புது வணிகம் மூலம் திரட்டப்பட்ட பிரிமியமும் ஏற்கனவே உள்ள பாலிசிகளுக்கு செலுத்தப்பட்ட பிரிமியமும் சேர்ந்த தொகை இது. இந்த வருமானம் அவ்வளவு சாதாரணமாக வந்தது கிடையாது.
ஒரு மத்திய அலுவலகம்,
எட்டு மண்டல அலுவலகங்கள்,
நூற்றிப்பத்து கோட்ட அலுவலகங்கள்,
இரண்டாயிரத்து ஐம்பது கிளை அலுவலகங்கள்,
எண்ணூறு துணை அலுவலகங்கள்
இவற்றில் பணியாற்ற
இருபதாயிரம் முதல் நிலை அதிகாரிகள்,
இருபதாயிரம் வளர்ச்சி அதிகாரிகள்,
அறுபதாயிரம் மூன்றாம் பிரிவு, நான்காம் பிரிவு ஊழியர்கள்
இவர்களோடு களத்தில் பணியாற்ற
பத்து லட்சம் முகவர்கள்
இவர்கள் அனைவரும் நேரம் காலம் பார்க்காமல்
தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் என்று
பண்டிகை தினங்களுக்குக் கூட முக்கியத்துவம் தராமல்
இரவு, பகல் பார்க்காமல், இருபத்தி நான்கு மணி நேரமும்
கரம் கோர்த்து பணியாற்றியதால் திரட்டப்பட்ட
தொகை இது.
சற்று யோசித்துப் பாருங்கள், எவ்வித உழைப்போ
முயற்சியோ இல்லாமல் 1 ,76 ,000 கோடி ரூபாய்
கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது எவ்வளவு
மோசமான விஷயம்?
ஒரு பிரம்மாண்டமான நிறுவனம் மிகப்பெரிய
கட்டமைப்போடு திரட்ட சிரமப்படுகின்ற ஒரு
தொகையை கண் இமைக்கும் பொழுதில்
சிலர் சம்பாதித்து விட்டனர் என்ற செய்தி
இத்தேசத்தின் அமைப்பு முறை எவ்வளவு
பலவீனமாக உள்ளது என்பதை காண்பிக்கவில்லையா?
ஆனால் எதுவுமே நடக்கவில்லை என்று இன்னமும்
சாதித்துக் கொண்டிருக்கிற, சாதியின் பின்னர் புகலிடம்
புகுந்துள்ள வேடதாரிகளின் முகமுடிகளை அம்பலப்
படுத்த வேண்டிய கடமை இந்தியக் குடிமக்கள்
ஒவ்வொருவருக்கும் கிடையாதா?

Friday, December 10, 2010
நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு எதிராக போராட்டமாம் - நல்ல நகைச்சுவை
ஸ்பெக்ட்ரம் பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றம் முடக்கப்படுவதைக்
கண்டித்து தி.க ஆர்ப்பாட்டம் நடத்துவதாக சுவரொட்டி பார்த்தேன். தலித் என்பதால் ராசா குறி வைக்கப்படுகின்றார் என்ற கலைஞரின் பாட்டுக்கு பின்பாட்டு பாடிய மானமிகு தமிழரின் அடுத்த கட்ட நடவடிக்கை
ஆர்ப்பாட்டம் போலும்!
பெரியாரின் கருதத்துக்கள் பரவுவதை முடக்க நீதிமன்ற படிக்கட்டுக்களில் ஏறி ஏறி இறங்கியவர் நாடாளுமன்ற முடக்கல் பற்றிகவலைப்படுவது வியப்பாக உள்ளது.
இல்லை செஞ்சோற்றுக் கடனா?
நாடாளுமன்றம்முடங்கிப் போக எதிர்க்கட்சிகள் மட்டும்தான் காரணமா? மடியில்
கனமில்லை என்றால் ஏன் கூட்டுக்குழு விசாரணையை முரட்டுத்தனமாக எதிர்க்க
வேண்டும்? ஆளும் கட்சியின் பிடிவாதம் பற்றி ஒரு வேலை தி.க கண்டிக்குமோ?
ராசா என்கிற ஒரு தலித்தின் நலன் காக்க குரல் கொடுக்கும் தலைவர்களுக்கு
சில கேள்விகள்
அரசு, மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலியிடங்கள் நிரப்பப் படாததால் வேலை வாய்ப்பை இழக்கும் தலித் இளைஞர்கள் பற்றி என்றாவது நீங்கள் கவலைப்பட்டது உண்டா?
முடக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் திரைப்படம் வெளியாக என்ன செய்தீர்கள்?
அரசு ஊழியர்களாக வேண்டும் என்று கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து வருடங்களாக
போராடி வரும் சத்துணவு ஊழியர்களிலும் போராட்டம் நடத்தியதற்காக
பணி நீக்கம், இடை நீக்கம் செய்யப்பட்ட தலைவர்களிலும் உள்ள தலித்துக்கள்
பற்றி யோசித்தது உண்டா?
குடியாத்தத்தில் ஆளும் கட்சி குண்டர்களால் வீடு இடிக்கப்பட்டு நடுத்தெருவில்
நிற்கும் அருந்ததிய ஆதி திராவிடக் குடும்பங்கள் உங்கள் கண்ணில் படவேயில்லையா?
ராசாவிற்கு ஆதரவாக மட்டும் போராட்டம் என்றால் சிரிப்பாத்தான் வருகிறது
அல்லது ஸ்பெக்ட்ரம் பணம் இங்கேயும் கசிந்துள்ளதோ என்ற சந்தேகம்தான்
வருகின்றது.
Wednesday, December 8, 2010
வெட்கம் கெட்ட ப.சிதம்பரம்
இரண்டு நாட்கள் முன்பு எதோ ஒரு வங்கிக் கிளையை திறந்து
வைத்து பேசிய சிவகங்கைச்சீமான் ப.சிதம்பரம் பின் வருமாறு
முழங்கினார்.
' ஆகஸ்ட் ௨௦௦௮ தொடங்கி அமெரிக்காவில் வங்கிகள் திவாலாகிக்
கொண்டிருக்கிறது. வங்கிகள் திவாலாவது இன்னமும் நிற்கவில்லை.
ஆனால் இந்தியாவிலோ ஒரு வங்கிகள் கூட திவாலாகவில்லை.
ஆனால் வங்கிக் கிளைகளை திறந்து கொண்டே இருக்கிறோம்.
எங்கள் அரசின் கொள்கைகள்தான் இதற்குக் காரணம்' என்று
அவர் தொடர்ந்து பேசிக் கொண்டே போனார்.
சிறிது கூட மனசாட்சியே இல்லாமல் பேசிய பேச்சல்லவா இது?
வங்கிகளை அழிக்க வேண்டும், பன்னாட்டு வங்கிகளை வளர்க்க
வேண்டும் என்பதல்லவா இவர்களின் கொள்கை? கடந்த ஆட்சிக்
காலத்தில் இடதுசாரிகளின் எதிர்ப்பு இல்லாமல் இருந்திருந்தால்
இந்திய வங்கிகளின் சமாதிகளில் இதனை நேரம் புல் முளைத்து
அதனையும் பன்னாட்டு வங்கிகளிடம் விற்பனை செய்திருப்பார்களே!
சமீபத்தில் கூட ஸ்டேட் வங்கியின் பங்குகளை விற்ற படுபாவிகள்
அல்லவா இவர்கள்!
ஆனால் கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாமல் பொய் பேசித்
திரியும் இந்த புனிதனுக்கு எதிராக செருப்பாயுதம் ஏந்திய அந்த
சர்தார்ஜி பத்திரிக்கையாளர் போல ஒவ்வொருவரும்
செய்தால்தால்தான் இந்த உத்தமர்களின் பொய் மூட்டைகள்
நின்று போகும் போல.
Subscribe to:
Posts (Atom)