Friday, April 4, 2025

ஒரே நாடு – ரெண்டு நவராத்திரி

 


நவராத்திரி காலம் தொடங்கி விட்டதால் ஆட்டுக்கறி, கோழிக்கறி விற்க மத்தியப் பிரதேச அரசு தடைபோட்டுள்ளது ரம்ஜான் கொண்டாடும் இஸ்லாமியர்களை கடுமையாக பாதித்துள்ளதென்று ஒரு செய்தி படித்தேன்.

 நம்ம ஊர்ல செப்டம்பர், அக்டோபர்லதான நவராத்திரி வரும், இது என்ன புதுசா இருக்கு என்ற சந்தேகத்தோடு கூகிளாரை அணுகினேன். மார்ச் 30 முதல் ஏப்ரல் ஏழு வரை நவராத்திரி என்று பதில் சொன்னது. அதற்கு சைத்ர நவராத்திரி என்று பெயராம்.

 


தமிழ்நாட்டில் எப்போது?

 01.10.2025 ஆயுத பூஜைக்கு விடுமுறை என்று தமிழக அரசு சுற்றறிக்கை போட்டுள்ளது. அப்படியென்றால் 23.09.2025 முதல் 01.10.2025 வரை இங்கே நவராத்திரி.

 கர்னாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் இந்த காலம்தான் நவராத்திரி, தஸரா, துர்கா பூஜா என்ற பெயர்களில் கொண்டாடப்படும்.

 ஏம்பா மோடி, உங்களால உங்க மதத்திற்குள்ளேயே

ஒரே நாடு, ஒரே நவராத்திரியே

முடியாத போது, என்ன எழவுக்கு

 ஒரே நாடு   ஒரே மொழி
ஒரே நாடு -  ஒரே மதம்
 ஒரே நாடு-   ஒரே கலாச்சாரம்
ஒரே நாடு – ஒரே தேர்தல்
 

என்று வெட்டித்தனமா வெறி பிடிச்சி அலையறீங்க ?

 

No comments:

Post a Comment