Wednesday, January 24, 2018

பரபரப்பான அந்த நாட்கள் . . .



இந்த நாள் இன்சூரன்ஸ் ஊழியர்களின் தொழிற்சங்க வரலாற்றில் முக்கியமான நாள்.

நாற்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில்தான் ஒரு மகத்தான வெற்றி கிடைத்தது. எல்.ஐ.சி நிறுவனத்தில் நடத்தப்பட்ட கதவடைப்புக்கு எதிரான போராட்டம் வெற்றி பெற்று பூட்டப்பட்ட கதவுகள் திறக்கப்பட்ட நாள் இன்று.

எல்.ஐ.சி நிறுவனத்தில் ஊதிய உயர்வுக்கான போராட்டம் தீவிரமாக நடக்கையில் கதவடைப்பு செய்யப்படுகிறது. தொழிற்சாலைகளில் கையாளப்படும் ஒரு நடைமுறை முதல் முறையாக ஒரு நிதி நிறுவனத்தில்  செய்யப்படுகிறது. அதுவும் நாடு முழுதும் உள்ள அனைத்து அலுவலகங்களிலும்  அல்ல, சில அலுவலகங்களில்  மட்டும்,

அதனால்

சில நூறு ஊழியர்களால் பணிக்கு வர முடியாது.

ஆனால் பல ஆயிரம் ஊழியர்களுக்கு பிரச்சினை கிடையாது



ஊழியர்களுக்குள் சிண்டு முடிக்கும் வேலையைச் செய்தது நிர்வாகமும் அன்றைய இந்திரா காந்தி அரசாங்கமும். போராட்டத்தின் இறுதியில் டெல்லி அலுவலகத்தின் கதவுகளை திறந்து வைத்தது அன்றைய அகில இந்தியப் பொதுச்செயலாளரும் மகத்தான தலைவருமான தோழர் சரோஜ் சவுத்ரி.



பரபரப்பான அந்த நாட்களைப் பற்றி அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாபெரும் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக, பீப்பிள்ஸ் டெமாக்ரஸி  இதழின் ஆசிரியராக செயலாற்றிய தோழர் சுனில் மைத்ரா அவர்கள் எழுதியதன் தமிழாக்கம் கீழே உள்ளது.



எவ்வளவு மோசமான ஆட்சியாளர்களாக இருந்தாலும் எவ்வளவு மோசமான அடக்குமுறையை ஏவி விட்டாலும் அவர்கள் ஒன்றும் முறியடிக்கப்பட முடியாதவர்கள் என்ற உண்மையை இக்கட்டுரையை படிக்கையில் நம்மால் உணர முடியும்.

சர்வ வல்லமை படைத்தவராக இருந்த இந்திரா அம்மையாரை பல ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தொழிற்சங்கத்தின் உறுதி மிக்க போராட்டத்தால் தோற்கடிக்க முடியும் என்றால்

மோடியை தேர்தல் களத்தில்  வீழ்த்த இந்திய உழைப்பாளி மக்களால் முடியாதா?


முடியும் என்ற நம்பிக்கையை இக்கட்டுரையை முழுமையாக படித்தால் நிச்சயம் கிடைக்கும். 





1 comment: