Wednesday, January 31, 2018

மாண்டவர் மீண்டு வர, மோடி வகையறாக்கள் ....


உ.பி. மாநிலத்தில் ‘கொல்லப்பட்ட’ இளைஞர் உயிருடன் வந்தார்
ஆர்எஸ்எஸ் கும்பலின் திட்டமிட்ட சதியே காஸ்கன்ஞ் வன்முறை என்பது அம்பலமானது



லக்னோ, ஜன. 30 -

உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கன்ஞ் பகுதியில் ஹிந்துஇளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதாக கூறி, ஆர்எஸ்எஸ்பரிவாரங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக பெரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டன. இந்தவன்முறையால் பொதுமக்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வாகனங்கள் தீ வைத்துக்கொளுத்தப்பட்டன.

இந்நிலையில், கொல்லப்பட்டதாக கூறப்பட்ட ஹிந்து இளைஞர் ராகுல் உபாத்யாய் உயிரோடுவந்துள்ளார். ‘தான் ‘கொல்லப்பட்டது’ தனக்கே தெரியாது; என்றும், வாட்ஸ்-அப் செய்திகள் மூலம் தான் ‘கொல்லப்பட்டதை’ அறிந்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கன்ஞ் பகுதியில் குடியரசுத்தினத்தை முன்னிட்டு, ஆர்எஸ்எஸ்-ஸின் மாணவர் பிரிவான அகிலபாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஊர்வலம் என்ற பெயரில் 100-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் அணி வகுத்துச் சென்றனர். அப்போது இஸ்லாமியர்கள் மற்றும், பாகிஸ்தானிற்கு எதிராக அவர்கள்முழக்கங்களையும் எழுப்பினர்.

பின்னர் அவர்களாகவே, இஸ்லாமியர்கள் தங்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ராகுல் உபாத்யாய்என்ற ஹிந்து இளைஞர் ஒருவர் இறந்து விட்டதாகவும் செய்தி பரப்பினர்.அதற்கு பதிலடி என்ற பெயரில், காஸ்கன்ஞ் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இஸ்லாமியர்களின் வாகனங்கள், கடைகளை தீ வைத்துக் கொளுத்தினர். 

காஸ்கன்ஞ் நகரின் மிகப்பெரிய தொழிலதிபரான வாசிம் நஸீம்என்ற இஸ்லாமியரின் வீட்டைச்சூறையாடி, அங்கிருந்த பொருட்களையும் கொள்ளையடித்தனர்.மிகத் தாமதமாக அங்கு வந்தஆதித்யநாத் அரசின் காவல்துறையானது, வன்முறையை கையைக்கட்டி வேடிக்கை பார்க்கும் வகையிலேயே நடந்து கொண்டது. எனினும், ஏபிவிபி கும்பலானது, போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைத்ததால், நிலைமை மோசமாவதை அறிந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது. 

இதில், சந்தன் குப்தா (22) என்பவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். எனினும், ஏபிவிபி கூட்டம் நடத்திய வன்முறையால் காஸ்கன்ஞ் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் மட்டுமன்றி, அனைத்துத் தரப்பு பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்ட ஆர்எஸ்எஸ் பரிவாரங்களைச் சேர்ந்த நபர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.  

இந்நிலையில்தான் திடீர் திருப்பமாக, கலவரத்தில் கொல்லப்பட்டதாக ஏபிவிபி-யால் கூறப்பட்ட ராகுல் உபாத்யாய் உயிருடன் இருப்பது தெரிய வந்தது. போலீசாரும் இதனைத் தற்போது உறுதி செய்துள்ளனர். தான் கொல்லப்பட்டதாக வெளியான செய்தி பற்றி வாக்குமூலம் அளித்துள்ள ராகுல் உபாத்யாய், ஊர்வலம் நடந்த பகுதிக்கே தான் செல்லவில்லை என்று தெரிவித்துள்ளார். தான் கொல்லப்பட்டதாக தனக்கே செய்திகள் அனுப்பப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.இதையடுத்து, காஸ்கன்ஞ் வன்முறையானது, ஆர்எஸ்எஸ் பரிவாரக் கூட்டத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.


‘இஸ்லாமியர் பகுதிக்குள் சென்று பாகிஸ்தானுக்கு எதிராக கோஷமிடுவது டிரெண்ட் ஆகிவிட்டது’

பரேலி மாஜிஸ்திரேட் கண்டனம்

உத்தரப்பிரதேசத்தில் காஸ்கன்ஞ் பகுதியில் ஏபிவிபி கும்பல் நடத்திய வன்முறைக்கு பரேலி நீதிமன்ற மாஸ்திரேட் விக்ரம் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முகநூல் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் “இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் வேண்டுமென்ற பேரணியாக செல்வதும், அங்கு பாகிஸ்தானுக்கு எதிரான கோஷங்களை எழுப்புவதுமாக ஒரு புதிய டிரண்ட் உருவாகி இருக்கிறது” என்று கூறியுள்ள விக்ரம் சிங், 

“இது எதற்கு? இஸ்லாமியர்கள் என்ன பாகிஸ்தானியர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.“பரேலி மாவட்டம் காய்லாம் கிராமத்திலும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது. பின்னர் கற்கள் வீசப்பட்டது, வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது,” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி - தீக்கதிர் 31.01.2018

2 comments:

  1. பாகிஸ்தானுக்கு எதிராக கோஷமிடுவது டிரெண்ட் ஆகிவிட்டது**** what is wrong in this? only bloody communists and violent jihadis support and work for enemies of hindustan.

    ReplyDelete
    Replies
    1. உமக்கு அறிவு கிடையாது என்பதை நிரூபித்து விட்டீர்.
      ஒழுங்கா படி முட்டாளே

      Delete