Thursday, January 11, 2018

வலைப்பக்க வெள்ளை அறிக்கை



2017 ம் ஆண்டில் எனது வலைப்பக்க செயல்பாடு எப்படி இருந்தது என்பது பற்றிய வெள்ளை அறிக்கை இது.

கடந்த ஆண்டு எழுதிய பதிவுகள்    527. 2016 ம் ஆண்டை விட ஐந்து பதிவுகள் அதிகம். எழுத வேண்டும் என்பதற்காக எல்லாம் எழுதவில்லை. எழுத வேண்டும் என்று நினைத்த ஏராளமான விஷயங்களை எழுதத்தான் நேரமில்லாமல் போனது.

2016ம் ஆண்டிற்கும் 2017 ம் ஆண்டிற்கும் இடையே பதிவுகளின் எண்ணிக்கையில் பெரிய வித்தியாசம் இல்லையென்றாலும் கூட பார்வைகளில் (Hits)   ல் கணிசமான முன்னேற்றம் உண்டு.

2016  - 243908

2017 – 259381

ஒரு நாளைக்கு வலைப்பக்கம் வருகிறவர்கள் எண்ணிக்கை 710 ஆக  இருந்ததென்றால் சராசரியாக ஒரு பதிவை 492 பேர் படிக்கிறார்கள்.

பத்து லட்சம் என்ற எண்ணிக்கையை எட்டியதும் கடந்த ஆண்டில்தான்.

பின்னூட்டங்களும் கூட அதிகரித்துத்தான் உள்ளது. ஆனால் அதிலே அனாமதேய ஆபாச பின்னூட்டங்களும் அடங்கும் என்பதுதான் கொஞ்சம் எரிச்சலான செய்தி.

வருந்துகிறேன் ராஜா

கௌசல்யா பெற்றோர்

ஆகிய இரு பதிவுகளுமே அதிகமாக படிக்கப்பட்ட பதிவுகள்.

ஊடகங்கள் உருவாக்கிய கலாச்சாரத்தின் விளைவாக நாம் எழுதிய பதிவுகளை படிக்கத் தூண்டுவது நான் வைக்கும் தலைப்புதான் என்பதே கடந்த வருட அனுபவமாகவும் உள்ளது.


பி.கு: தன்னைத் தவிர வேறு யாரும் எனது வலைப்பக்கத்தை படிப்பதில்லை என்று ஒரு அனாமதேயம் (அந்த ஆபாசப் பேர்வழிதான்) குறிப்பிட்டிருந்தது. அதனாலேயே இந்த பதிவு. 

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete