Wednesday, January 31, 2018

தமிழகத்தை பழிவாங்கவே . . .மோடி

ஆவடி ராணுவ சீருடை தொழிற்சாலைக்கும் பூட்டு





சென்னை, ஜன.30 -
தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்தியஅரசின் நிறுவனங்களை மூடும் வேலையில் மோடி அரசு இறங்கியிருப்பது, தொழிலாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

நாட்டு விடுதலைக்கு பின்பு தொழிற்சாலைகள் அனைத்தும் வடமாநிலங்களிலேயே அமைக்கப்பட்ட சூழலில், மிகப் பெரியபோராட்டங்களுக்குப் பின், சில தொழிற் சாலைகள் தமிழகத்திற்கும் வந்தன. திருச்சிபெல், சேலம் உருக்காலை, துப்பாக்கிச் தொழிற்சாலை, ரயில்பெட்டி தொழிற்சாலை, நெய்வேலி நிலக்கரிக் கழகம் என்று கடந்த 50 ஆண்டுகளில் அது வளர்ந்தது.

ஆனால், மத்திய பாஜக அரசு ஆட்சிக்குவந்ததில் இருந்து, தமிழகத்தில் உள்ள மத்தியஅரசின் நிறுவனங்களை ஒவ்வொன்றாக மூடிவருகிறது.ஏற்கெனவே, கோவை கரும்பு ஆராய்ச்சிநிலையம், திருச்சி வாழை ஆராய்ச்சி நிலையம், சென்னை உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றையும் மூடப்போவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த வரிசையில் சென்னையை அடுத்தஆவடியில் 56 ஆண்டுகாலம் இயங்கி வந்த ராணுவ சீருடை தயாரிப்பு ஆலையையும் தற்போது மூட முடிவெடுத்து இருக்கிறது. இதனால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.மத்திய அரசின் தொழிற்சாலைகளில் வடமாநிலத்தவரை நியமிப்பது அதிகரித்து வருவதாக ஏற்கெனவே குற்றச்சாட்டு உள்ளது.

குறிப்பாக நெய்வேலி நிலக்கரி கழகம், பொதுத்துறை வங்கிகளில் வட மாநிலத்தவர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகதொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.என்எல்சி நிறுவனம் தனது கிளைகளை வடமாநிலங்களில் நிறுவி அங்கிருப்பவர்களுக்கு வேலை அளிப்பதாகவும் புகார் உள்ளது. 

இவ்வாறு தமிழகத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் வேலையில் இறங்கியுள்ள மத்திய அரசின் அடுத்த நடவடிக்கையாகத்தான் ஆவடி ராணுவ சீருடை தயாரிக்கும் தொழிற்சாலையை மூடும் முடிவுஅமைந்திருக்கிறது.

நன்றி - தீக்கதிர் 31.01.2018

2 comments:

  1. modi oru kenappaya..

    ReplyDelete
  2. what you have expressed is 100 per cent true. all public sector undertakings have northindian
    people be it Railways Banks, and insurance companies. But this started during Lalu prasad's
    regime slowly and expanded to a greater proportions during BJP rule as Tamilnadu people
    preferred JAYALALITHA TO MODI.

    ReplyDelete