Thursday, January 2, 2014

பாமக சமூக ஜனநாயகக் கட்சியாம்.... காமெடி சார் இது

பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு நடக்கும் அரங்கிற்கு வெளியே
அதன் பொறுப்பாளர்களில் ஒருவரான திரு வடிவேல் ராவணன்
(அப்படித்தான் நினைக்கிறேன்) பாட்டாளி மக்கள் கட்சியை 
ஐரோப்பாவில் பல நாடுகளில் உள்ள சமூக ஜனநாயகக் கட்சியைப்
போல ஒரு கட்சிதான் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

பாவமாகவும் சிரிப்பாகவும் இருக்கிறது.

ஐரோப்பாவில் உள்ள சமூக ஜனநாயகக் கட்சிகளின் நோக்கமாக
சொல்லப்படுவது மக்களின் ஆதரவோடு தேர்தல் மூலமாக 
சோஷலிச அரசை அமைப்பது,. முதலாளித்துவப் பொருளாதார அமைப்பில் தொழிலாளிகளின் மீது நிகழ்த்தப்படும் சுரண்டலை 
தடுப்பது  ஆகியவையாகும்.

புரட்சி என்பது சமூக ஜனநாயகக் கட்சிகளுக்கு எந்த மொழியிலும்
பிடிக்காத ஒரு வார்த்தை. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் 
சோஷலிச அரசுகளுக்கு பின்னடைவு ஏற்பட்டதும் பெரும்பாலான
நாடுகளில் இருந்த கட்சிகள் தங்கள் பெயரை சமூக ஜனநாயகக்
கட்சி என்று பெயர் மாற்றிக் கொண்டது.

சொல்லப்போனால் விளக்கெண்ணெய், வெண்டைக்காய் போலவே
ஐரோப்பாவின் சமூக ஜனநாயகக் கட்சிகளின் கொள்கைகள்
உள்ளது.

இதற்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது?

தலித் அமைப்புக்கள் நீங்கலாக மற்ற ஜாதிய  அமைப்புக்களை
இணைத்துக் கொண்டு ஒடுக்கு முறையை நீட்டிக்க வைக்க பாமக
முயல்கிறது.

காரல் மார்க்ஸ், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் படங்களை,
சிலைகளை வைத்துக் கொண்டு  அவர்களது கொள்கைகளுக்கு
எதிராக பிற்போக்குத்தனமாக நடந்து கொள்ளும் பாமக தங்களுக்கு
ஒரு நவீன வடிவம் கிடைக்க இப்படி சொல்கிறது போலும்....

 

 

6 comments:

  1. நல்லாதான் பேசுறீரு. ஆனால் காரைக்காலில் நடந்த வன்புணர்வுக்கு மட்டும் கள்ள மவுனம் 'சாதீ'க்கிறீரு. சரியான கொள்கைதான். வெண்டைக்கய் வெளக்கெண்ணெய் கொள்கை பத்தி நீரெல்லாம் பேசி நாங்க எல்லாம் கேட்க வேண்டி இருக்கு. கர்மம் !

    ReplyDelete
  2. பாட்டாளி மக்கள் கட்சி- இந்த பெயரே இவர்களுக்கு பொருந்தாதே: பசுமை கட்சி என்று ஒரு பெயரும் உண்டாம்!!!

    ReplyDelete
  3. யோவ் அனானி ! சுனாமி வந்தப்ப எங்கள் தோழர் எத்தனை நாள் தூங்காம கொள்ளாம ஓடியாடி உழைத்தார் என்பது அருகில் இருந்து பார்த்த எனக்கு தெரியும் ! உனக்கு என்ன தெரியும் ? அவரின் கால் விபத்தில் அடி பட்டதால் கொஞ்சம் சாய்ந்து நடப்பதை கேலி செய்யும் நீ காரைக்கால் பெண்ணுக்காக வருந்துகிறாயா ? நீ இருக்கும் இடத்தை போன்றே உன் புத்தியும் தள்ளாட்டமாக இருப்பதில் வியப்பில்லை ! புகழை தேடி அவர் செல்லவில்லை ! தானாக வந்தால்தான் புகழ் ! உன் போன்று கேடு கெட்ட வழியில் புகழை தேடுபவர் அல்ல ! நானும் தொடர்ந்து உன்னை கவனித்து வருகிறேன் ! உன் முகத்திரையை கிழிக்கவே உன் பதிவை வெளியிடுகிறார் என்பதே உனக்கு புரியவில்லை ? அவர் நினைத்தால் உன் பதிவை வெளியிடாமல் இருக்கலாம் அல்லவா ? இதைக் கூட புரிந்து கொள்ளாத நீ அவரை பற்றி அடிக்கடி தப்பாக சொல்கிறாயே உனக்கு வெட்கமாக, அசிங்கமாக தெரியவில்லையா ? நீயும் உன் பதிவும் ! நாய் கூட உன்னை சீண்டாது !நீயெல்லாம் .................................................................. ! கோடிட்ட இடத்தை நீயே உனக்கு பிடித்த கெட்ட வார்த்தையில் நிரப்பி கொள். சபை நாகரீகம் கருதி நான் சொல்ல விரும்பவில்லை ! சீ நாயே ! ஓடிப்போ !

    ReplyDelete
  4. கோபி உங்கள் வார்த்தைகள் கொஞ்சம் கடுமையாக உள்ளது. நாமாவது நாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தலாமே.

    இது ஏதோ நான் எழுதச் சொல்லி நீங்கள் எழுதியதாக உங்களை திட்டி அடுத்து ஒரு பின்னூட்டம் வரும் பாருங்கள் .

    ReplyDelete
  5. இந்த அனானி யாரென்று எனக்கு தெரியவில்லை. காரைக்கால் சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதிலே குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். குற்றவாளிகளை காப்பாற்ற முயல்பவர்கள் கேவலமான பிறவிகள். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதை மூடி மறைத்து எல்லோரும் கள்ள மவுனம் சாதிக்கிறார்கள் என்று மருத்துவர் சொன்னதை அந்த அனானியும் வாந்தியெடுத்துள்ளார். மூன்று நாட்கள் நான் ஊரில் இல்லாததாலும் அதனால் இந்த சம்பவம் குறித்து முழுமையாக படிக்காததாலும் என்னால் எழுத முடியவில்லை. அவ்வளவுதான்.

    ReplyDelete
  6. //காரைக்கால் சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதிலே குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். குற்றவாளிகளை காப்பாற்ற முயல்பவர்கள் கேவலமான பிறவிகள்.//
    தோழர் இங்கே செல்லியிருக்காவிட்டாலும் அவர் கண்டிப்பார் என்று நம்பினேன்.
    இலங்கை நாட்டு ராணுவத்தின் கொடுமைக்குள்ளான எல்டிடிஈ உறுப்பினர் இசைப் பிரியாவுக்காக பல தடவைகள் கண்டிக்கும் கலைஞர்,வைகோ,காங்கிரஸ் மத்திய நிதி அமைச்சர் காரைக்காலில் ஒரு பெண் கொடுமைக்குள்ளான கொடுமையை ஏன் கண்டிக்கவில்லை?
    அல்லது அவர்கள் கண்டித்தார்கள் எனக்கு தான் செய்தி கிடைக்கவில்லையோ?

    ReplyDelete