Wednesday, January 1, 2014

புத்தாண்டில் விஸ்வரூபம்

முடிந்த ஆண்டின்
முக்கிய நிகழ்வுகளை
காலச்சக்கரம்
கணக்கு  போட்டு
முன்னால் வைத்தது.

தென்றலின் வருடலாய்
நேசம் கிடைத்திருக்கிறது,
அருவியின்  வேகத்தோடு
பாசமும் வந்துள்ளது.
ஆழ்கடலின் அமைதியாய்
உண்மையான தோழமையும் கூட.

நினைவில் நிற்கும்படி
வேலைகள், வெற்றிகள்.
நல்லவர் பலரின்
நெஞ்சு நிறைந்த
பாராட்டுக்களும்
ஆறுதல் அளிக்கும்
அன்பான வார்த்தைகளும்
 சாதனைகளும் கூட
வரிசையாய் நிற்கிறது.

இருந்தாலும் கூட
முதுகுக்குப் பின்னே
துரோகங்கள் பல
கைகோர்த்து
கத்தியால் குத்திய
சோகமும் நிகழ
வாய் விட்டு அலறினாலும்
குறையாத  வலியும் உண்டு.

ஆனாலும் உறுதியோடு
சொல்கிறேன்.

எதுவுமே  செய்ய இயலாத
வெற்றுக் குடங்களின்
வெட்டிக் கூச்சலால்
இனியும் என் மனம்
கலைந்து போகாது.


தகுதியற்றவர்களின்
தரம் கெட்ட வார்த்தைகள்
என்றும் என்னை
தாழ்த்தி விடாது.

நல்லதை  நினைக்கும்
நண்பர்கள்  
துணை கொண்டு
தொடங்கும் என்
புதிய பயணம்.

வெறுப்பை விதைத்து
வீணர்களாய் மாறியவர்கள்
விலகிச் செல்லுங்கள்.
உண்மையின் நெருப்பில்
கருகிப் போகாமல்
தப்பிச் செல்லுங்கள்.

புத்தாண்டில் என் பயணம்
புதிதாய் அமையும்.
முதுகுக்குப் பின்னே
புறம் பேசி திரிபவரை
புயலாய் தாக்கும்.




 






4 comments:

  1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  2. இப்போதும் கூட அடுத்தவர்களை பார்த்து
    தான் புலம்பித் தீர்க்கிறாய்.
    சின்னவனாய் சாபமிடுகிறாய்.
    நீயே உன்னை அடுத்த்கவர்களுக்கு
    அடையாளம் காட்டிக்கொள்கிறாய்.
    உன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்.
    இந்த புதிய ஆண்டிலாவது உன்னை
    திருத்திக்கொள்ள முயற்சி செய்.
    உன் பதவியை கெட்டியாய் பிடித்துக்கொள்.
    அதை இழந்து வெளியே வந்தால்
    உன்னை சீண்டுவோர் யாருமில்லை.
    அப்போதும் நீ புலம்பிப் புலம்பித்தான்
    வெடிக்கப்போகிறாய்.
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  3. புத்தாண்டு வாழ்த்துக்கள் திரு திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  4. துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்று ஒதுங்கி நின்றாலும் நான் என்ன எழுதுகிறேன் என்பதையே எப்போது வேவு பார்த்துக் கொண்டு இருக்கிற சிலரை என்ன செய்வது? பதவியில் இல்லாதவர்களின் புலம்பல் எப்படி இருக்கும் என்பதை அடையாளம் காட்டி விட்டார் அந்த நல்ல மனிதர். . நாகரீகமற்ற முறையில் ஒருமையில் பேசி அவர்களே தங்களது தரத்தை மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்திக் கொள்கிறார்கள். பதவியை அதிகாரமாக பார்ப்பவர்களுக்குத்தான் அது இல்லையென்றால் பைத்தியம் பிடிக்கும். பொறுப்பு என்று கருதுபவர்களுக்கு அல்ல. எவ்வித தொடர்பும் அவசியமில்லை என்று சொன்ன பின்பும் மீண்டும் மீண்டும் எனக்கு குறுஞ்செய்தி அனுப்புவதும் பின்னூட்டம் அனுப்புவதும் அநாகரீகமான செயல். இனியாவது நாகரீகமாக நடந்து கொண்டால் நல்லது

    ReplyDelete