Sunday, July 7, 2013

இதை அவர்களிடம் ப.சிதம்பரத்தால் ஏன் சொல்ல முடியாது?





இது எல்.ஐ.சி நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரம். ஜெ வை மிஞ்சி ப.சி போய்க்கொண்டிருக்கிறார் என்பது இதைப் பார்த்தாலே தெரியும். ஒரே நாளில் முன்னூறு அலுவலகங்களை அண்ணன் ப.சி திறந்து வைத்துள்ளார். உத்தர்காண்ட் வெள்ளத்தில் சிக்கிய பதினைந்தாயிரம் பேரை ராம்போ நரேந்திர மோடி காப்பாற்றியது போல இவர் சூப்பர் ராம்போவாக ஒரே நாளில் முன்னூறு அலுவலகங்களை திறந்து வைத்துள்ளார்.

பிரச்சினை எப்படி இத்தனை அலுவலகங்களை திறக்க முடிந்தது என்பதல்ல. எல்.ஐ.சி நிறுவனம் ஒரே நாளில் முன்னூறு மினி அலுவலகங்களை திறந்தது என்பது வாஸ்தவம். ப.சி திறந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஏன் இந்த மினி அலுவலகங்கள்?

இந்த ஆண்டு பட்ஜெட் உரையில் ப.சி பேசும்போது பத்தாயிரம் பேர் மக்கட்தொகை உள்ள ஊர்களில் எல்.ஐ.சி அலுவலகம் திறக்கப்படும் என்று அறிவித்தார். இன்சூரன்ஸ் சேவையை விரிவுபடுத்துவதற்காக இந்த ஏற்பாடு என்றும் அறிவித்தார். அதே போல் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் அலுவலகங்களும் திறக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

அறிவிப்போடு நிற்காமல் ப.சி எல்.ஐ.சி மத்திய அலுவலகத்திற்கும் திக்விஜயம் செய்து தனது அறிவிப்பை உடனடியாக அமுலாக்க வேண்டும் என்று வலியுறுத்தி விட்டுச் சென்றார். அதன் பின்பு நிதியமைச்சக அதிகாரிகளும் வற்புறுத்த எல்.ஐ.சி நிர்வாகம் இப்போது ஒரு ஊழியர் அல்லது அதிகாரி மட்டும் பணியாற்றக் கூடிய மினி அலுவலகங்களை திறந்து கொண்டிருக்கிறது. இது வரை 414 மினி அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது. இன்னும் ஆயிரம் அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளது. ஊழியர் பற்றாக்குறை உள்ள நேரத்தில் எல்.ஐ.சி மீது அரசு சுமர்த்தியுள்ள சுமை இது.

ப.சிதம்பரத்தின் சொந்த ஊர் கண்டனூரில் முதல் மினி அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் வசதியை விரிவாக்க, கிராமப்புற மக்களுக்கும் எடுத்துச்செல்ல இது போன்ற மினி அலுவலகங்கள் அவசியம் என்றும் அவர் பேசியுள்ளார்.

ப.சிதம்பரத்தை நாங்கள் சில கேள்விகள் கேட்டாக வேண்டும்.

இன்சூரன்ஸ் சேவையை விரிவுபடுத்த அவசியம் என்று சொல்லித்தானே இன்சூரன்ஸ்துறையில் தனியாரை அனுமதித்தீர்கள், அந்த தனியார் கம்பெனிகளை ஏன் மினி அலுவலகம் துவக்கச் சொல்லி நிர்ப்பந்தம் அளிக்கவில்லை.

இன்சூரன்ஸ் சேவையை கிராமப்புறங்களுக்கு விரிவுபடுத்த அன்னிய நேரடி மூலதன வரம்பை உயர்த்த வேண்டும் என்று துடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். அந்த அன்னியக் கம்பெனிகளை நீங்கள் மினி அலுவலகம் தொடங்கச் சொல்லிக் கேட்கவில்லை.

உங்கள் சொந்த கிராமத்தில் ஒரு அலுவலகத்தை உருவாக்க நீங்கள் பொதுத்துறை எல்.ஐ.சி யைத்தான் நாடியுள்ளீர்கள், எந்த ஒரு தனியார் கம்பெனியும் உங்கள் சொந்த ஊரில் கூட அலுவலகம் துயக்க தயாராக இல்லாதபோது அவர்கள் எங்கே கிராமங்களுக்குச் சென்று இன்சூரன்ஸை பரவலாக்கப் போகிறார்கள்?

ப.சிதம்பரத்திற்கு கை கொடுப்பது பொதுத்துறை நிறுவனங்கள். கை கொடுத்த எல்.ஐசி யின் காலை வாருவது காங்கிரஸ் கலாச்சாரம், ப.சிதம்பர பண்பாடு.

எல்.ஐ.சி யிடம் சொன்னது போல தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளிடம் ப.சிதம்பரம் சொல்லியிருந்தால் இந்நேரம் அவர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டிருப்பார்  என்பதுதான் யதார்த்தம்.

இன்றைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிதியமைச்சரான போது “ இவர் நமக்கு அனுசரணையாக இருப்பாரா, அமெரிக்க கம்பெனிகளுக்கு ஆதரவாக இருப்பாரா என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளின்டன், இந்தியாவிற்கான அமெரிக்க தூதரை கேட்டதை விக்கி லீக்ஸ் அம்பலப் படுத்தியதை யாரும் மறந்திருக்க்க மாட்டீர்கள் என நம்புகிறேன்

4 comments:

  1. இவரைப்பற்றி இன்னமும் தெளிவாக முழுமையாக எழுத முடியுமா? இவரின் புழுத்த வாழ்க்கை 30 ஆண்டு கால சாதனை அல்லவா?

    ReplyDelete
  2. Insurance is definitely required for villagers including associated awareness. It is good thing for LIC as well as rural Indians because of this. We agree about employee crunch and PC do not have option to go to MNCs. But knowingly or unknowingly, this is good for India as long as end result benefits our rural Indians.

    - Karthikeyan Thirugnanasambandam

    ReplyDelete
  3. ராமன் அவர்களே! தோத்தான் என்று அறிவித்தார்கள்! பின்னர் இல்லை என்றார்கள் ! பின்னர் ஜெயித்ததாக அறிவித்தார்கள்! இதனை செய்து கொடுத்தவர் குடும்பம் கொழிக்கிறது! கேஸ் போட்டமாதிரி போடு ! உனக்கு தரவேண்டியதை தருகிறேன் என்றார்! கத்திருப்போம்! காலம் வரும் !----காஸ்யபன்.

    ReplyDelete
  4. இந்த மனிதன்?பற்றிசொல்வது..........என்ன???நல்லசெய்திஇருக்கிற்து. ஓன்று கலப்பு மணம் புரிந்தவர்...அதுமட்டும்தான்.

    ReplyDelete