கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு எங்கள் கோட்டத்தில்
தொழிலுறவு மேலாளராக இருந்தவர், அதிகார கித்தாப்பில்
வந்த புதிதில் எங்களோடு அதிகம் மோதியவர், பின்பு சங்கம்
சொல்வது சரியாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டு
இணக்கமாகச் சென்றவர், தற்போது பணியிலிருந்து ஒய்வு
பெற்றவர், இரு தினங்களுக்கு முன்பு சொந்த வேலையாக வேலூர்
வந்தார். அலுவலகம் வந்து பார்த்தார். பழைய கதைகள்
பேசினோம். மற்றவர்களைப் பார்க்க முதல், இரண்டாவது
மாடிகளுக்குச் செல்லும் முன் என் மகனின் பெயர், என்ன
படிக்கிறான் என்றெல்லாம் கேட்டார். ரகுநந்தன் என்று
சொன்னதும் நல்ல பெயர் என்று சொல்லி விட்டு போய் விட்டார்.
அன்று மாலை வீடு வந்ததும், என்னுடைய அலுவலகத்திலேயே
பணியாற்றும் என் மனைவி வியப்பாக ஒரு தகவலை பகிர்ந்து
கொண்டார். அந்த மேலாளரின் பெயரைக் குறிப்பிட்டு அவருக்கு
நல்ல ஞாபக சக்தி, நம் மகனின் பெயரை பத்தாண்டுகளுக்கு
மேலானாலும் நன்றாக ஞாபகம் வைத்துக் கொண்டு
ரகுநந்தன் நன்றாக படிக்கிறானா? என்று கேட்டார் என
வியந்து போனார். அப்போது பக்கத்தில் இருந்தவர்களும்
அவரது ஞாபக சக்தியைக் கண்டு பிரமித்தே போனார்களாம்!
அவரும் எப்படி நான் மறக்க முடியும் என்று ஒரு சீன்
போட்டிருக்கிறார்.
என்னிடம் பெயரைக் கேட்டு விட்டு மாடிக்குச்சென்று தான்
எவ்வளவு தூரம் உங்களையெல்லாம் நினைவில் வைத்துள்ளேன்
என்று சொல்வதும் ஒரு சாமர்த்தியம்தான். ஆனால் கொடுமை
என்னவென்றால் இப்படிப்பட்ட சாமர்த்தியசாலிகள் உலகெங்கும்
நிறைந்துள்ளார்கள் என்பதும் மிகவும் சரியானவர்கள் என
நாம் நம்புகிற பலரும் கூட இப்படிப்பட்ட சாமர்த்தியசாலிகளின்
வசீகரப் பேச்சால் தடம் புரள்வதும்தான். உணமையாகவும்
நேரடியாகவும் பேசக்கூடியவர்கள், நடந்து கொள்ளக்கூடியவர்களை
இது போன்றவர்கள் சமயத்தில் போட்டுத்தள்ளி விட்டும்
முன்னே போய்க் கொண்டே இருப்பார்கள்!
நீண்ட நாட்களாக நான் என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி
இதுதான்.
இந்த சாமர்த்தியம் ஏன் எனக்கு வரவில்லை?
மதுரை கோட்டத்தில் ஈ.எம்.ஜொசப் என்ற செயலாளர் இருந்தார்.கிளை செயலாளர்கள்,செயல்வீரர்கள், முன்னாள் இன்னாள் பொறுப்பாளர்கள்,கிளை அதிகாரிகள்,என்று அத்துணை பெயர்களயும் மறக்காமல் இருப்பார்.தோழர்களுக்கு சந்தேகம் வந்தால் அவரிடம் கெட்டு தெரிந்து கொள்வோம்.---காஸ்யபன்
ReplyDeleteஇந்த சாமர்த்தியம் வரவழைச்சுக்கவே ஒரு தனி சாமர்த்தியம் வேணுங்க.
ReplyDeleteஎத்தனைநாள் பெயரை மறந்துட்டு, அசட்டுத்தனமா சமாளிச்சு இருக்கோமுன்னு நினைச்சால்...:-)))))
With all modesty, I would acknowledge what Kasyapan has said about my strong memory - the one that I had till a decade ago, and the loss of which I am lamenting over these days. However, the theme of Com. Raman is different. It is about the ingenuity of some people pretending to be of strong memory. Hence, Kasyapan,s dragging my name in this context is a bit mischievous. Anyway, Com. Raman, how is Raghunandan? - EM JOSEPH
ReplyDeleteThank you Comrade EMJ for visting my blog.
ReplyDeleteRaghunandhan is preparing for his 12th Exam
and the whole family is tense over it.
It seems you had not noticed a small mischief
by me in Com Kashyaban's blog. Kindly
see the Comments for his post Hey Ram 2