Sunday, September 19, 2010

நீதி தேவதை கண் திறப்பாளா?

ரூ தினங்களுக்கு  இந்து நாளிதழில் பார்த்த செய்தி
அதிர்ச்சியளித்தது. உச்ச நீதி மன்ற முன்னாள் தலைமை
நீதிபதிகள் பதினாறு பேரில்  எட்டு பேர் ஊழல்  பேர்வழிகள்
என பிரபல வழக்கறிஞரும்  மொரார்ஜி தேசாய் காலத்திய
மத்திய சட்ட அமைச்சருமான திரு சாந்தி பூஷன் குற்றம்
சுமத்தியுள்ளார். அதுவும் ஏதோ தமிழக அரசியல் தலைவர்கள்
போல மேடை உதார் இல்லாமல் உச்ச நீதி மன்றத்திலேயே
பட்டியல் அளித்து அங்கே நடக்கும் அவமதிப்பு வழக்கு ஒன்றில்
தன்னையும் இணைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியுள்ளார்.
வலுவான ஆதாரங்களின் பின்னணியில்  மட்டுமே இவ்வாறு
செய்ய முடியும்.

இந்திய ஜனநாயகத்தை தாங்கிப் பிடிக்கும் தூண்களான
அரசும் நிர்வாகமும் ஊழல் கறை பிடிந்ததாய் மாறி பல காலம்
ஆகி விட்டது. நான்காவது தூணான ஊடகம் பெரும்பாலும்
சார்புத்தன்மை உடையதாகவே உள்ளது. ஒரே நம்பிக்கையாக
இருந்த நீதித்துறை மீதும் சீர்குலைவின் நிழல் படியத் துவங்கி
விட்டது. கீழ் மட்டத்தில் இது அதிகமாகவும் மேலே செல்லச்செல்ல
குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையும் தகர்ந்து போய் விட்டது.

நாங்கள் நீதிபதிகள், எங்கள் சொத்துக்கணக்குகளை  வெளியிட
முடியாது என்று எப்போது முரண்டு பிடிக்க ஆரம்பித்தார்களோ,
அப்போதே தெரிந்து விட்டது, இவர்கள் மடியில் கனம் இருக்கிறது
அதனால்தான் பயப்படுகின்றனர் என்று. தங்களைத் தாங்களே
தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறை வேறெங்கும் நாம் காண
முடியாது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக திரு சபர்வால் இருந்தபோது
அவரது  மகன்களின் வணிக நலன்களுக்காகவே  ஏழை மக்களின்
குடிசைகளை இடிக்க ஆணையிட்டார் என்ற குற்றச்ச்சாட்டு
எழுந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. ஆக்கிரமிப்பு புகழ்
தினகரன்,பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான  பல்வேறு
நீதிபதிகள் என்று பெரிய பட்டியலே உண்டு.

இப்போது  எட்டு தலைமை நீதிபதிகள் மீதே புகார் என்கிற போது
ஊழல் புரையோடிப்போயுள்ளது  என்பதைத்தான் காண்பிக்கிறது.
மத்தியரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்க முடியாது.
அவர்கள்தானே ஊழல்களின் பாதுகாவலர்கள்.

நீதி   தேவதை   கண் கட்டை  அவிழ்த்து  சுட்டேரிக்காவிட்டால்  இவர்கள்
தொடர்ந்து இப்படியேதான் இருப்பார்கள்
                                                                                                                           

2 comments:

  1. நீதியை பெண்ணாக ஏன் உருவகப் படுத்தினார்கள் என்பது தெரியவில்லை.அந்தப் பெண்ணின் உடலில் இருப்பது கண்ணைக் கட்டியிருக்கும் அந்தஒட்டுத்துணிதான். பாக்கியை இந்தப் பாவிகள் ஏற்கனவே களைந்து விட்டார்கள்--- காஸ்யபன்.

    ReplyDelete
  2. சிறந்த பதிவு, நீதித்துறையைப் பற்றியுள்ள மக்களின் பக்தி அளவற்றதாக உள்ளது, சர்வரோக நிவாரனி என்ற கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஊழல் நீதிபதிகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரவேண்டும்.

    நானும் இதுகுறித்த பதிவை இட்டுரிக்கிறேன். நீதித்டுஹ்றை ஊழல்கள் குறித்த பல் ஆதாரங்கள் http://www.judicialreforms.org/ என்ற இணையதளத்தில் உள்ளன. இவைகளை பதிவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வருமா? என தெரியவில்லை.
    என்னுடைய வலைத்தளம்http://bala-bharathi.blogspot.com

    உங்கள் பதிவுகள் அவசியமான ஒன்று..

    ReplyDelete