Friday, June 25, 2010

ஆற்காட்டாரை காணவில்லை.

காலை மிகச்சரியாக ஆறு மணிக்கு வருகை தந்திருந்த ஆற்காட்டாரை இரண்டு நாட்களாக காணவில்லை. இரண்டு
 மணி நேர அதிகாரபூர்வ மின்வெட்டும் அதிகாரபூர்வமற்ற அவ்வப்போது  நிகழும்  மின்சார வெட்டும் இரண்டு நாட்களாக இல்லை. காற்றாடி மின்சாரம் கூடுதலாய்   கிடைத்தது என்று
சொல்ல எந்த புயலும் அடிக்கவில்லை. நான் சொல்வது
வேலூர் நிலவரம் மட்டுமே. மற்ற ஊர்கள் பற்றி தெரியாது.
இதுவும் எத்தனை நாள் நீடிக்குமோ என்ற அச்சமும் உள்ளது.
 செம்மொழி மாநாடு நடக்கும்வரை தமிழின் ஆட்சி.
மாநாட்டிற்குப் பின்பு மீண்டும்   ஆற்காட்டார் அராஜகம்
 தொடங்கி விடும் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.

தமிழக அரசு நினைத்தால் பன்னாட்டு கம்பெனிகள் போல மக்களுக்கும்    தடையில்லா மின்சாரம்     வழங்க  முடியும் என்பது தெளிவாகி விட்டது. 
லாவணி பாடுவதை விட்டுவிட்டு  இப்போது 
செய்வதை எப்போதும்   செய்யலாமே !

2 comments:

  1. சாமானியன் நமக்கே பல நல்லது கெட்டது தெரியும் போது ஆட்சியில் உள்ளவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை எங்கிற போது அவர்கள் எவ்வளவு அப்பாவிகள் என்பதை மக்களாகிய நாம்தான் புரிந்துகொள்ள வேண்டும். இந்த 60 ஆண்டுகளாக நம்மை அப்பாவிகள் தான் ஆண்டுவருகிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

    ReplyDelete
  2. ஆற்காட்டார் இப்போ சண்டிகர் ஸ்டேட்டுக்கு வந்துட்டார்:(


    வேர்டு வெரிஃப்கெஷனைத் தூக்கிருங்க.
    பின்னூட்ட நந்தி அது:(

    ReplyDelete