பிரிக்க
முடியாதது எதுவோ என்று தருமி இப்போது கேள்வி கேட்டால் “சாகித்ய அகாடமி விருதும் சர்ச்சையும்”
என்று சிவனிடமிருந்து பதில் வந்திருக்கும்.
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
பிரிக்க
முடியாதது எதுவோ என்று தருமி இப்போது கேள்வி கேட்டால் “சாகித்ய அகாடமி விருதும் சர்ச்சையும்”
என்று சிவனிடமிருந்து பதில் வந்திருக்கும்.
சைக்கிள் சாரங்கியை கீழே தள்ளி விட்டு மண்டைய உடைத்த காதை மட்டும் போதாது என்பதால் ராகுல் காந்தியை பழி வாங்க அல்லது அவர் மீது அவதூறு பரப்ப மோடி இன்னொரு ஆயுதத்தையும் கையிலெடுத்துள்ளார். அது கேவலமான, கீழ்த்தரமான உத்தி. ஜெயலலிதா பயன்படுத்திய அதே உத்தி.
ஆளுனர் சென்னாரெட்டி என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று சட்டசபையில் ஜெ சொன்னது நினைவில் உள்ளதல்லவா! அதே உத்தியை மோடியும் பயன்படுத்தி விட்டார்.
நாகாலாந்து மாநிலத்தின் பெண் எம்.பி யின் மூலமாக ராகுல் காந்தி மீது ஒரு புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.
ராகுல் காந்தி தனக்கு அருகாமையில் நின்று சத்தமாக ஏதோ பேசினார். அதனால் எனக்கு வசதிக்குறைவாக (Uncomfortable) இருந்தது என்பது அவர் குற்றச்சாட்டாக நாடாளுமன்றத்தில் சொன்னதாக முதலில் செய்திகள் வந்தது.
அதன் பிறகு பார்த்தால் ராகுல் காந்தி ஏதோ அந்த பெண்மணியை பாலியல் சீண்டல் / கொடுமைக்கு உள்ளாக்கியது போல சங்கிகள் ராகுல் காந்தியை ஒரு காமக் கொடூரன் ரேஞ்சில் அவதூறு செய்யத் தொடங்கி விட்டனர். ட்விட்டர் தளம் முழுதும் ராகுல் காந்தியை ஒரு பெண் வெறியனாக சித்தரிக்கும் பதிவுகள்தான்.
“பழங்குடி பெண் எம்.பி யை இழிவு படுத்திய ராகுல் காந்தி” என்ற இந்த அவதூறுப் பிரச்சாரத்தை பார்க்கையில் அது பொய்யானதாகவே தோன்றுகிறது.
எப்போது அர்ஜூனன் போல மோடியும் சிகண்டியை முன்வைத்து ராகுல் காந்தியோடு மோத வந்தாரோ, அப்போது அவர் தரப்பில் நியாயம், தர்மம், நேர்மை, நாணயம் என்று எதுவுமே இல்லை என்பது அம்பலமாகி விட்டது.
கோவையில் உள்ள பிரியாணி கடைக்காரர்கள் எல்லாம் பதற்றத்தில் உள்ளனர். அவர்களுக்கெல்லாம் ஆறு வருடங்களுக்கு முன்பு செப்டம்பர் 22ம் தேதி நடைபெற்ற நிகழ்வு இன்னும் மறக்க முடியாத அச்சத்தை தந்துள்ளது.
சசிக்குமார் என்ற சங்கி, சொந்த காரணங்களுக்காக (காரணத்தை சொல்ல நான் விரும்பவில்லை) கொலை செய்யப்பட்டபோது சங்கிகள் ஊர்வலம் என்ற பெயரில் ரௌடித்தனம் செய்து கடைகளை உடைத்து பொருட்களை திருடிப் போனார்கள். அதிலே பிரியாணியை அண்டாவோடு திருடிப் போனார்கள்.
அதற்கென்ன இப்போது என்று கேட்கிறீர்களா?
ஆமாம், ஆட்டுக்காரா, இந்த ஊர்வலத்துக்கு தலைமை அர்ஜுன் சம்பத்தானே? கோவைக் கலவரத்தின் போது மருத்துவமனையில் நான்கு பேரை கொலை செய்தமைக்காக சிறைக்கு போய் இன்னமும் பெயிலில் இருக்கும் பயங்கரவாதிதானே அவரு!
இன்று
மக்களவையில் தள்ளு முள்ளு நடந்துள்ளது.
முதல்
தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அநேகமாக ராகுல் காந்தியை கைது செய்யலாம். அதை
வைத்து எம்.பி பதவியிலிருந்து நீக்கும் முயற்சியைக் கூட மோடி செய்யலாம்.
ஆக
மிகப் பெரிய கிரிமினல் மூலம் மோடியின் புது நாடகம் அரங்கேறியுள்ளது. அண்ணல் அம்பேத்கரை
இழிவு படுத்திய அமித்ஷாவை பாதுகாக்க நடத்திய திசை திருப்பும் நாடகம். அமித்ஷாவை பாதுகாப்பது
மோடியின் கடமை அல்லவா! மோடிக்காக இளம் பெண் பொறியாளரை உளவு பார்த்த உத்தமனல்லவா!
பிகு:
ஆமாம், எந்த மருத்துவமனையில் ஐ.சி.யு வில் ஒரு நோயாளியை எந்த மானிட்டர் இணைப்போ, குளுக்கோஸ்
கூட ஏற்றாமல், தொலைக்காட்சி கேமராக்கள் புடை சூழ மந்திரிகள் வருவதை அனுமதிக்கிறார்கள்.
போடும் நாடகத்தையாவது ஒழுங்கா போடுங்கடா . . .
அரசியல் சாசனத்தை திருத்த மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும் என்பதும் அப்படி நிறைவேற்ற வாய்ப்பில்லை என்பதும் தெரிந்தும் ஏனய்யா மோடி, "ஒரே நாடு, ஒரே தேர்தல் " மசோதாவை கொண்டு வந்தீர்?
உங்க ஆட்களிலேயே எத்தனை பேர் ஓடிப் போவார்கள் என்பதை அறிந்து கொள்ளவா?
பிகு: இது ஒற்றை மீமோடு முடிக்கிற விஷயமில்லை. விரிவான பதிவு விரைவில் . . .
அசுத்தத்தை நீண்ட நாட்கள் ஒளித்து வைக்க முடியாது. நாற்றம் ஒரு நாள் வெளியே வந்து காட்டிக் கொடுத்து விடும். அண்ணல் அம்பேத்கரையும் தங்களவராக கைப்பற்றிக் கொள்ள சங்கிகள் நாடகமாடினாலும் அவர் மீது அவர்களுக்கு மரியாதை கிடையாது என்பது உலகறிந்த உண்மை.
பாபர் மசூதியை இடிக்க அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளான டிசம்பர் ஆறை தேர்ந்தெடுத்தது,
அண்ணல் அம்பேத்கர் புத்த மத்திற்கு தழுவுகையில் அறிவித்த 22 பிரகடனங்களை அவர்கள் ஆட்சி செய்த மாநிலங்களின் பாடப்புத்தகங்ககளில் இருந்து நீக்கியது.
“பொய்யான கடவுள்களை வழிபடுவது” (Worshipping of false gods) என்று அண்ணல் அம்பேத்கரை இழிவு படுத்தி அருண் ஷோரி எழுதிய நூலை வெளியிட்டது, பின் அவரையே மத்திய மந்திரியாக்கியது.
ஆகியவை அவர் மீதான வெறுப்பிற்கு உதாரணம்.
உள்ளுக்குள் ஒளித்து வைத்திருந்த வெறுப்பை அமித்ஷா இப்போது வெளிப்படுத்தி விட்டார். அண்ணல் அம்பேத்கர் மீதான வெறுப்பும் எரிச்சலும்தான் அவரை அப்படி பேச வைத்துள்ளது.
சங்கிகள் அண்ணல் அம்பேகரை மதிக்கிறார்கள் என்று சொல்லி வந்த கட்டுக்கதை அம்பலமானது நல்லதுதான்.
அது சரி அமித்து, அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வதற்கு பதிலாக கடவுள் பெயரை உச்சரித்தால் ஏழு ஜன்மத்துக்கு சொர்க்கத்திற்கு போகலாம் என்று சொன்னீர்களே, கடவுளுக்கு பதிலாக மோடி, மோடி என்று உச்சரித்தால் இந்த ஜென்மத்தில் எங்கே போகலாம்?
அதற்கான பதிலை நானே சொல்கிறேன்.
மோடி, மோடி என ஜால்ரா அடித்தால் நீங்கள் ஆட்சியில் இருக்கும் வரை நாடாளுமன்றம், சட்டமன்றம், ராஜ்பவன் என இப்படி இங்கே வேண்டுமானாலும் செல்லலாம்.
ஆனால் ஆட்சி போன பின் அத்தனை பேருக்குமான இடம் சிறைச்சாலைதான்.
ஆமாம். நீங்கள் அத்தனை பேரும் அவ்வளவு பெரிய கிரிமினல்கள்.
பிகு: நாங்கள் அம்பேத்கரை மதிக்கிறோம் என்று சொன்ன மோடி, அண்ணல் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவும் போது அறிவித்த 22 பிரகடனங்களில் எத்தனை பிரகடனங்களை ஏற்றுக் கொள்கிறார் என்பதை வெளிப்படையாக அறிவிப்பாரா?
மேலே உள்ளவைதான் அந்த பிரகடனங்கள்.
சி.ஏ.ஏ சட்டத்தை ஆதரித்து இஸ்லாமியர்களுக்கு துரோகம் இழைத்த அதிமுக, ஒரு நாடு, ஒரே தேர்தல் மசோதாவை ஆதரித்து இந்திய ஜனநாயகத்திற்கே துரோகம் இழைத்துள்ளது.
என்ன எடப்பாடி ரெண்டு நாள் முன்னாடி பொதுக்குழுவில பாஜகவை தாக்கினீங்களாம், அதெல்லாம் செட்டப்பா?
இந்த கேவலமான வேலைக்கு என்ன டீலிங் போட்டிருக்கீங்க?
யானை மாலை போட்டு பிச்சைக்காரன் ராஜாவானது மாதிரி தவழ்ந்து போய் முதலமைச்சரான உங்க கிட்ட எல்லாம் அரசியல் நாணயம் எல்லாம் எதிர்பார்க்க முடியுமா?
நீங்களும் ஒரு அமைதிப்படை அமாவாசைதானே!
சனாதனக் கூட்டம் டி.எம்.கிருஷ்ணாவிற்கு சங்கீத கலாநிதி விருது வழங்கப் படக் கூடாது என்று எத்தனையோ சதிகள் செய்து பார்த்தது. கர்னாடக சங்கீத உலகைத் தாண்டி யாருமே அறியாத ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள் முகநூல் மூலம் கலகம் செய்து மூக்குடைபட்டார்கள். மீ டூ குற்றச்சாட்டு காரணமாக மியூசிக் அகாடமியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட சித்ர வீணா ரவி கிரண் தான் முன்பு பெற்றிருந்த சங்கீத கலாநிதி விருதை திரும்பக் கொடுத்து சர்ச்சையாக்க முனைந்தார். அவருடைய லீலைகள்தான் வெளியாகி அசிங்கப்பட்டார்.
அடுத்து உயர் நீதிமன்றத்தில் திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் முறையில் உள்ள ஒருவரை பிடித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட வைத்து தடை உத்தரவு வாங்கினார்கள்.
ஆனால் உயர் நீதிமன்ற பெஞ்ச் அந்த தடையை நீக்கி விட்டது. எம்.எஸ்.சுப்புலட்சுமி, தன் பெயரில் விருதோ அல்லது பண முடிப்போ கொடுக்கக் கூடாது என்று தன் உயிலில் எதுவும் சொல்லவில்லை என்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் பெயரில் சங்கீத கலாநிதி விருது பெறுபவருக்கு 2005 ம் ஆண்டு முதல் ஒரு லட்ச ரூபாய் பண முடிப்பு தரப்படுகிறது. இத்தனை நாள் தூங்கிக் கொண்டிருந்தாயா என்று கேட்டு அந்த பேரன் வகையறாவை துரத்தி விட்டார்கள். இத்தீர்ப்பு வந்தது வெள்ளிக்கிழமை காலை.
மத்தியரசின் தலைமை வழக்கறிஞரே வழக்கு நடத்தப் போகிறார். அதனால் அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வெள்ளிக்கிழமை மதியமே உச்ச நீதிமன்றத்தில் முறையிட அப்படி ஒன்றும் இது தலை போகிற அவசர வழக்காக எடுக்கும் அளவிற்கு வொர்த்தில்லை என்று அங்கேயும் துரத்தி விட்டார்கள்.
சனாதனக்
கூட்டம் முட்டுச்சந்தில் முழித்துக் கொண்டிருக்க டி.எம்.கிருஷ்ணா, கம்பீரமாக சங்கீத
கலாநிதி விருதை ஞாயிறு அன்று பெற்றுக் கொண்டார். இதற்கு முன்பாக சங்கீத கலாநிதி விருது
பெற்ற திருமதி பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் திருமதி சௌம்யா ஆகியோர் மேடையில் இருந்ததே சங்கீத
உலகின் ஆதரவுக்கான சான்று.
சனாதனக்
கூட்டம் ஏன் டி.எம்.கிருஷ்ணாவை எதிர்க்கிறது?
முன்பு
எழுதிய “ஒரு விருதும் போலிப் புனிதங்களும்ன்”
என்ற பதிவை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.
சங்கீத
கலாநிதி டி.எம்.கிருஷ்ணாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உலகெங்கும் இந்திய இசையின் அடையாளமாக திகழ்ந்த தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகீர் உசேன் காலமாகி விட்டார்.
ஒரே
ஒரு முறைதான் அவரது நிகழ்ச்சியை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஒரு
குழந்தை தன் தந்தையின் தலையில் தபேலா வாசிக்கும். அதுதான் ஜாகீர் உசேன் ஏற்படுத்திய
தாக்கம்.
தந்தையை
மிஞ்சிய தனயானாக, சர்வதேச அளவில் முத்திரை பதித்தவர் ஜாகீர் உசேன். தபேலா என்றால் முதலில்
நினைவுக்கு வருபவரும் அவர்தான்.
ஸ்ரீவில்லிப்பூத்தூர் கோயிலில் இளையராஜாவுக்கு அவமதிப்பு நடந்துள்ளது.
இளையராஜா இசை ஞானியாக இருக்கலாம், திருவாசகம், நாலாயிரத் திவ்வியப் பிரப்பந்தத்திற்கு இசை வடிவம் கொடுத்திருக்கலாம். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் எழுதிய திருப்பாவையின் முதல் பாடலுக்கு உள்ளத்தை உருக்கும்படி மெட்டமைத்திருக்கலாம். ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தின் ஒரு நிலையை கட்ட பணம் வசூலித்துக் கொடுத்திருக்கலாம். இன்னும் சில தினங்களில் முதல் ஆசியராக தன் சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றலாம். மோடியை அண்ணல் அம்பேத்கரோடு ஒப்பிட்டிருக்கலாம். அதனால் மாநிலங்களவை நியமன உறுப்பினராகவும் இருக்கலாம்.
எதுவாக இருப்பினும் கருவறை கூட அல்ல, அதற்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்திற்குள்ளே கூட நுழைய அவர் அனுமதிக்கப்படவில்லை.
தனக்கு நிகழ்ந்ததை அவமதிப்பு என்று கருதாமல் அர்த்த மண்டபத்திற்கு வெளியே அளிக்கப்பட்ட மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். நடந்தது பற்றிய செய்தி வதந்தி என்றும் தன் சுய மரியாதை பாதிக்கப்படவில்லை என்றும் அவரை சொல்ல வைத்துள்ளது.
அப்படி அவரது மனதை ட்யூன் செய்து வைத்துள்ளதுதான் சனாதனத்தின் வெ(ற்)றி.
அதனால்தான் அதனை எதிர்க்க வேண்டும்.
ஊழலை ஒழிக்க அவதாரமெடுத்ததாக வெட்டிப் பெருமை பேசும் ஆட்டுக்காரன் (வாழ்க்கை நடத்த நண்பர்களிடம் மாதாமாதம் லட்சக்கணக்கில் பணம் வாங்குவதாக சொல்கிற, மணல் மாபியாவிடமிருந்து மாதாமாதம் பணம் வாங்குவதாக திருச்சி சூர்யாவால் குற்றம் சுமத்தப்பட்ட ஆட்டுக்காரனே மிகப் பெரிய ஊழல் பேர்வழி என்பது வேறு விஷயம்) A2 சசிகலாவின் வாரிசு டி.டி.வி.தினகரனுக்கு பாசம் பொழிய பொழிய சொல்லியுள்ள பிறந்த நாள் வாழ்த்தை பாருங்கள்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒன்று சொல்லும் தினகரனின் ஊழல் சரிதத்தை.
இவ்வளவு பாசத்தை பொழிகிறாயே ஆட்டுக்காரா, இந்த கூட்டம் என்ன ஊழலுக்கு அப்பாற்பட்ட உத்தமர்களா என்ன?
இவர்களோடு 2026 ல் ஏதேனும் டீலிங்கா? அதற்கான அச்சாரமா இது? இல்லை ஏற்கனவே டீலிங் முடிந்து விட்டதா?
ஆட்டுக்காரன் ஃபைல்ஸ் ஒன்று தயாரிக்க வேண்டும் போல...
ராணுவ தலைமையகத்தில் மோடியால் வைக்கப்பட்டுள்ள புதிய் மொக்கை ஓவியத்தை வரைந்தது யார் என்று தெரிந்தால் சங்கிகள், அதிலும் குறிப்பாக மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் உள்ள சங்கிகளுக்கு தெரிந்தால் எப்படி ஜாகீர் உசேன் ஸ்ரீரங்கம் கோயிலுக்குக் கொடுத்த வைரக்கற்கள் பதித்த மாணிக்கக் கிரீடத்திற்கு எதிராக பொங்கினார்களோ, அது போல பொங்கி எழுந்து எழுதித் தள்ளி விடுவார்கள்.
ஆம்
அதை வரைந்தவர்
சென்னை ரெஜிமெண்டைச் சேர்ந்த லெப்டிணன்ட் கர்னல் தாமஸ் ஜேக்கப்.
ஆமாம்,
சங்கிகளின் மொழியில் பாவாடை.
இந்த தகவல் மட்டும் தெரிந்தால் போதும் மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் உள்ள சிகண்டிகள் (பெண்களின் பெயரில் ஒளிந்து கொண்டுள்ள ஃபேக் ஐடிகள்) மோடியை விட்டு விட்டு இந்திய ராணுவத்தை ஒரு வழி செய்து விடுவார்கள்.
ஆமாம்.
அவர்கள் அவ்வளவு நேர்மையானவர்கள், மத வெறி விஷத்தை கக்குவதில் . .
மேலே
உள்ள படம் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முக்கியமான ஒரு தருணத்தை குறிக்கிறது.
இந்திய
ராணுவத் தலைமையகத்து வரும் வெளி நாட்டு ராணுவ அதிகாரிகள் பலரும் அந்த புகைப்படத்தின்
பின்புலத்தில் புகைப்ப்டம் எடுத்துக் கொள்வது வாடிக்கை.
இப்போது
அந்த ஓவியத்தை மோடி அரசு நீக்கி விட்டது. அதற்கு பதிலாக வைத்துள்ள புதிய ஓவியம் இது.
பாண்டவர்கள்
நடத்திய அதர்ம யுத்தத்தின் போது “கடமையைச் செய், பலனை எதிர்பாராதே” என்ற உபதேசக் காட்சி,
சாணக்கியர், கருடன், மற்றும் இந்திய ராணுவ ஆயுத உபகரணங்கள் (ஊழல் செய்து வாங்கிய ரபேல்
போர் விமானம் நீங்கலாக) உள்ளது. இந்த ஓவியம் வெறும் வண்ணத் தீற்றலாக உள்ளதே தவிர அழகும்
இல்லை, பொருளும் இல்லை.
பிகு
: யார் இந்த ஓவியத்தை வரைந்தது? அது நாளை தனி
பதிவாக …
தலைமை நீதிபதி உள்ளிட்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச், நேற்று ஒரு முக்கியமான ஆணையை கீழமை நீதிமன்றங்களுக்கு பிறப்பித்துள்ளது.
வேறு
ஒரு அச்சம் இருக்கிறது.
போராட்டப்பாதையில் சென்றால் இடதுசாரிகளை போல அழிவீர்கள் என்று காவித் தரகர் சுமந்து சொன்னதை வைத்து சில நாட்கள் முன்பாக ஒரு பதிவு எழுதியிருந்தேன்.
போராட்டத்தில் உண்மையாக இருந்தால் மக்கள் அப்போராட்டத்தை நடத்துபவர்களை ஆதரிப்பார்கள் என்பதற்கு வரலாறு முழுதிலும் உதாரணங்கள் உண்டு.
ஒரு
புதிய உதாரணம் நேற்று படைக்கப்பட்டுள்ளது.
தென்னக ரயில்வேயில் சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் இம்மாத துவக்கத்தில் நடைபெற்று நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
சி.ஐ.டி.யு சங்கத்தோடு இணைக்கப்பட்ட DREU சங்கம் 26,151 வாக்குகள் பெற்று அங்கீகாரத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.
முதலிடம்
பெற்ற SRMU சங்கத்திற்கும் இரண்டாம் இடம் பெற்ற DREU சங்கத்திற்கும் வாக்கு வித்தியாசம்
107 மட்டுமே.