ரௌடி கவர்னராக இருந்து அதே குணாம்சத்தை துணை ஜனாதிபதி ஆன பின்பும் தொடர்கின்ற ஜகதீப் தன்கர் தன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு மோடியைப் போலவே ஒரு காரணம் சொல்லியுள்ளார்.
மோடி தன் மீதான விமர்சனங்களுக்கு தான் ஏழைத்தாயின் மகன் என்பதால்தான் என்னை தாக்குகிறார்கள் என்று அனுதாபம் தேட முயற்சிப்பார்.
அதே பாணியில் துணை ஜனாதிபதியும் தான் ஏழை விவசாயின் மகன் என்பதால்தான் தன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப் பட்டுள்ளதாக ஒரு கண்ணீர்க் கதை எழுத முயன்றுள்ளார்.
தன்னுடைய ஜனநாயக விரோத நடவடிக்கைகள், பாரபட்சமான செயல்பாடுகள், அமைச்சர்கள் சொல்ல வேண்டிய பதில்களை அவரே சொல்வது, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உரைகளை அவைக் குறிப்புகளில் இருந்து நீக்குவது போன்ற செயல்களுக்காகத்தான் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை திசை திருப்புகிறார் அவர்.
சிங்கத்தில் இறுதியில் பிரகாஷ்ராஜை சுடுவதற்கு முன்பாக “திருந்தலை இல்ல நீ! செஞ்ச தப்புக்கு வருந்தலை இல்ல” என் வசனம் பேசுவார்.
அது போல திருந்தாத, தவறுக்கு வருந்தாத துணை ஜனாதிபதி யை பதவி நீக்கம் செய்திட வேண்டும்.
No comments:
Post a Comment