Thursday, April 30, 2020

இதுக்கா அவ்வளவு அலட்டினீங்க???


மருந்து அனுப்பவில்லை என்றால் பதிலடி கிடைக்கும் என்று ட்ரம்ப் மிரட்டியதும் அதற்கு உடனே தலை வணங்கி மருந்து அனுப்பியதும் அதற்கு மனிதாபிமானம் என்று சொல்லி சமாளித்துக் கொண்டதும் பழைய கதை.

அந்த சம்பவம் முடிந்து இரண்டு மூன்று நாட்களிலேயே சங்கிகள் ஒரு செய்தியை உலக மகா சாதனை போல பரப்பிக் கொண்டிருந்தார்கள், இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி என அனைத்து துறைகளுக்குமான நோபல் பரிசுகளையும் மோடியே வென்றது போல அப்படி ஒரு பில்ட் அப். (மோடி சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற தகுதியானவர் என்பது வேறு விஷயம்)

அப்படி என்ன செய்தி அது?

மோடியின் ட்விட்டர் பக்கத்தை அமெரிக்க வெள்ளை மாளிகை பின் தொடர்கின்றது (FOLLOW) என்பதுதான் அந்த செய்தி. அதற்குத்தான் அவ்வளவு பீற்றல்.

இப்போதைய செய்தி கீழே உள்ளது. அதிலே காலச்சித்தனின் பின்னூட்டம் இருக்கிறதே, அது சங்கிகள் அனைவருக்கும் சமர்ப்பணம்.




3 comments:

  1. திருட்டு பயலுக மட்டுமல்ல மோசடி பயலுக சங்கிகள்

    ReplyDelete
  2. இது நமக்குள் மகிழ்ச்சியை உண்டாக்கினாலும்

    ஆனால் எதிலும் மெய்யறியவேண்டும் என கற்பிக்கபட்டதால் அறிந்தேன் , பகிர்கிறேன்

    https://www.google.com/amp/s/www.theweek.in/news/world/2020/04/30/why-did-trump-white-house-twitter-account-unfollow-pm-modi.amp.html

    நம் எதிரியே ஆனாலும் அறத்திற்க்கு உட்பட்டே தாக்குதல்களும் இருக்கவேண்டும் என்பதால் பகிர்ந்தேன்.



    மே தின வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வெள்ளை மாளிகை பின் தொடர்ந்ததை சாதனையாக பீற்றிக் கொண்டதை பகடி செய்யவே இப்பதிவு

      Delete