Friday, January 22, 2016

குற்ற உணர்வை உருவாக்கிய அறிமுகம்



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதி தீக்கதிர் நாளிதழில் வெளியான இந்த நூல் அறிமுகம் “புத்தகத்தை வாங்கி பத்து நாட்களாகியும் இன்னும் படிக்காமல் வைத்துள்ளோமே” என்ற குற்ற உணர்வை உருவாக்கியது.

நீங்கள் நூல் அறிமுகத்தையும் படியுங்கள், அதை விட முக்கியமாக நூலையும்.

இன்னும் ஓரிரு நாட்களில் முடித்து விட முடியும் என்ற நம்பிக்கையோடு.

 நம்பிக்கையூட்டும் ஒரு நன்னூல் ஜி.ராமகிருஷ்ணன்


இடதுதிருப்பம் எளிதல்ல - இந்திய கம்யூனிசத்தின் எதிர்காலம் என்ற ஆங்கில நூல் 2015 மே மாதம் வெளியானது . இந்தநூல் வெளியான காலத்திற்கு முக்கியத் துவம் இருக்கிறது. காரணம் 2014ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள் பெரிய பின்னடைவைச் சந்தித்தன. இந்த பின்னடைவுக்கு என்ன காரணம்? இடதுசாரிகள் குறிப்பாக மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது.?
என்னசெய்ய வேண்டும்? என்பது பற்றி விரிவாக ஆய்வுசெய்து 351 பக்கங்களைக் கொண்ட இந்த நூலைஅமெரிக்காவில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜய் பிரசாத் எழுதியுள்ளார். ஆங்கிலத் தில் வெளியான இந்நூலை ச.சுப்பாராவ் சிறப்பாக தமிழாக்கம் செய் துள்ளார். தமிழில் எழுதப்பட்ட நூலை படிப்பது போன்றுஇவரது மொழி பெயர்ப்பு அமைந்துள்ளது பாராட்டத்தக்கது. பல அரிய நூல்களை வெளியிட்டு வரும் பாரதி புத்தகாலயம் இந்த நூலையும் வெளியிட்டுள்ளது.

நான் இருபத்தைந்து ஆண்டுகளாக இந்தியாவின் கம்யூனிச இயக்கத்தோடு தொடர்புடை யவன். இக்காலகட்டத்தில் நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்டுகளை பேட்டி கண்டுள்ளேன். கட்சி ஆவணங்களை ஆயிரக்கணக்கான பக்கங்களில்படித்தவன். கம்யூனிச நடவடிக்கை களில் பங்கேற்கவும், பார்வையிடவும் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணித் தவன். இத்தனை ஆண்டுகளில் கம்யூனிச இயக்கத்தோடு எனது நெருங்கிய தொடர்பு ஆகியவற்றின் விளைவே இந்நூல் என தனது முன்னுரையில் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.கேரளா, திரிபுரா, மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களில் ஆட்சி செய்தது இடதுசாரிகளுக்கு மிக அற்புதமான வாய்ப்புகள். மேற்குவங்கத்தில் 34 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இடதுமுன்னணி ஆட்சியில் இருந்தது. இந்த மூன்று மாநிலங்களிலும் நிலச்சீர்திருத்தம், குத்தகைதாரர் உரிமைகள், உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரப் பரவலாக்கம், மதச்சார்பின்மையைப் பாதுகாத்தல், சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாத்தல் என பல்வேறு அம்சங்களில் மிக முக்கியமான மாற்றுக் கொள்கைகளை இடதுசாரி அரசாங்கம் அமலாக்கியுள்ளது. தலித் மக்களுக்கும், பழங்குடி மக்களுக் கும் இந்த அரசுகள் ஆதரவாக இருந் தன. இருப்பினும் மேற்குவங்கத்தில் 2011ல் இடதுமுன்னணி ஆட்சியை இழந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணியின் பலமும் குறைந்தது. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 1952 தேர்தலுக்குப் பிறகு குறைவான எண்ணிக்கையிலேயே இடதுசாரிகள் வெற்றி பெற முடிந்தது. (திரிபுரா இதற்கு விதிவிலக்கு)இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்று விஜய் பிரசாத் நூலின் பல பகுதி களில் விளக்கியுள்ளார். 

சர்வதேசஅளவில் சோவியத் பின்ன டைவுக்குப் பிறகு அமெரிக்க ஆதிக்கத்திலான ஒரு துருவஉலக நிலைமை உருவானதும், இந்தி யாவில் 90களில் இருந்து நவீன தாராள மயப் பொருளாதாரக் கொள்கை அமலாக்கப்பட்டதும், இந்துத்வ வகுப்புவாத சக்திகள் தலைதூக்கியதும் ஒரே காலத்தில் நடந்தன. மேலும் மேற்கு வங்கத்தில் சிங்கூர், நந்திகிராமம் பிரச்சனைகளில் இடதுமுன்னணி அரசினுடைய தவறான அணுகுமுறை ஆகிய பல அம்சங்கள்மேற்குவங்கத்தில் இடதுமுன்னணி யினுடைய பின்னடைவுக்கு அடிப்படைக் காரணங்களாக அமைந்தன எனலாம்.

குறிப்பாக, நவீன தாராளமயக் கொள்கை மக்கள் மத்தியில் உருவாக்கிய தாக்கமும், இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு ஒரு காரணம். நவீன தாராளமயக் கொள்கை அசமத் துவத்தை நோக்கி மட்டும் இட்டுச் செல்ல வில்லை. அது ஆசைகளையும் உருவாக்கியது. நகரங்களில் சில ஊர்களில் கட்டப்பட்ட மால்களில் பளபளப்பான புதிய பொருட் கள் நிறைந்திருந்தன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், திரைப் படங்களும் நுகர்வுக்கலாச்சாரத்தை உருவாக்கின. பளபளப்பான வீடுகள், வங்கிக்கணக்கில் பணத்தைக்கொட்டும் வேலைவாய்ப்பு கள். இந்த வங்கிக் கணக்குகள் இந்த மால்களில் பார்க்கும் எந்தப்பொருளையும் வாங்குவதற்கு கிரெடிட் கார்டைத் தந்தன. சில குறிப் பிட்ட பொருட்களை வாங்கு வதுதான் சமூகஅந்தஸ்தை காட்டும் குறி யீடு என்று இன்றும் தொழிலாளர்கள் நம்புவதை சமூகவியலாளர்கள் ஆய்வுகள் காட்டுகின்றன. இந்திய ஆளும் வர்க்கம் தனது இந்த கருத்துக்களை இந்தியாவின் கருத்து என்பதாகக் கூறி ஏமாற்றி வருகிறது. எனநவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் மீது உழைக்கும் மக்கள்உள்ளிட்டு அனைத்துப் பகுதி மக்களுக் கும் மாயை ஏற்பட்டுள்ளதை நூலாசிரியர் கோடிட்டுக் காட்டுகிறார்.

காங்கிரசும், பாஜகவும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கையை ஆதரித்து அமலாக்கியதுபோல், மற்ற மாநில முத லாளித்துவ கட்சிகளும் இதே பாதையில் சென்றன. பெரியாரும், ராம் மனோகர் லோகியாவும் கூறிய கருத்துக்களை இக்கட்சிகளுடைய பிற்கால வாரிசுகள் கைவிட்டுவிட்டனர். நாடு முழுவதும் பொருளாதாரக் கொள்கையில் பெரும் வலதுபுற சாய்மானம் ஏற்பட்ட நிலையில், இடதுசாரிகளுக்கு இது மிகப்பெரிய சவாலாக மாறியது.இந்திய சோசலிசத்தின் வீழ்ச்சி என்ற தலைப்பில் மூன்றாவது அத்தியாயத்தில் சுதந்திரப் போராட்ட காலத்திலும், அதற்குப் பிறகும் இடதுசாரி இயக்கம் ஏன் பிரதான இயக்கமாக மலரவில்லை என்பதை ஆய்வு செய்கிறார். 1917ல் நடைபெற்ற ரஷ்ய புரட்சியால் ஈர்க்கப்பட்டு காந்திய பாரம்பரியத் திற்கு ஒரு மாற்றுப் பாதையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன் வைத்தது, 1921ஆம் ஆண்டு சிங்காரவேலர் இந்து நாளேட்டின் மூலமாக காந்திஜிக்கு ஒரு திறந்த மடல் எழுதினார். “தற்போதைய நிலைமை பற்றி எனது கருத்துக்களைச் சொல்லி நான்உங்களை தொந்தரவு செய்ய விரும்ப வில்லை. சுயராஜ்ஜியத்திற்கான உங்கள் போராட்டத்தில் நான் ஒரு எளிய தொண்டன்... தற்போதைய அந்நிய அதிகாரவர்க்கத்திடம் வெற்றி பெறுவது மட்டுமின்றி, நமது சொந்த மக்களால் ஆன எதிர்கால அதிகாரவர்க்த்திடமும் வெற்றி பெற்றால் அன்றி நமது துரதிர்ஷ்டவசமான மக்கள் சுதந்திரமாக, மகிழ்ச்சியாக இருக்கமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். 

எனவே கம்யூனிசத்தால் மட்டுமே, அதாவது நாட்டின் அனைவரின் நலனுக்காகவும் நிலம் மற்றும் முக்கிய தொழில்களை பொதுப் பயன்பாட்டில் வைத்திருப்பது மட்டுமே, நமது மக்களுக்கு உண்மை யான சுதந்திரத்தை, நிம்மதியைத் தரும் என்று நம்புகிறேன்... அரசியல் அதிகாரத்திற்கு எதிராக அகிம்சை வழியில் ஒத்துழையாமையை நம்மால் கடைப்பிடிக்க முடியும் என்றால் ஏன் அதை முதலாளித் துவ அதிகாரத்திற்கு எதிராகப் பயன்படுத் தக்கூடாது என்பது எனக்கு புரிய வில்லை. 

ஒன்றை எதிர்த்துப் போராடாமல் நம்மால் மற்றதை எதிர்த்துப் போராட முடியாது” என குறிப்பிட்டார்.சிங்காரவேலருடைய கருத்துதான் பொது வாக சுதந்திர போராட்ட காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறையாக இருந்தது. இருப்பினும், பல காரணங் களினால் இந்தியாவில் காலனி ஆதிக்கத்திற்கெதிரான, சுதந்திரத்திற்கான போராட்டம் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையின் கீழ் அமையவில்லை. சுதந்திர போராட்டத் தின் தலைமையாக காங்கிரஸ் கட்சியே இருந்தது. ஆனால், வியட்நாம், சீனா போன்ற நாடுகளில் காலனி ஆதிக்கத்திற்கெதிரான தேச விடுதலைப்போராட்டம் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்திய சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. சீனாவிலும், வியட்நாமிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள்ஆட்சிக்கு வந்தன.நூலின் 5வது அத்தியாயம் இடதுசாரி கட்சிகளின் அணுகுமுறை பற்றியது. 

மேற்குவங்கம், கேரளா, திரிபுரா, தமிழ்நாடு, ஆந்திரா என நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய இயக்கங்களின் ஏற்ற,இறக்கம் பற்றியும். அதிகாரத்திலிருந்த மேற்குவங்கம், கேரளா, திரிபுரா மாநிலங் களில் அந்த அரசுகள் பின்பற்றிய அணுகு முறை குறித்தும் ஏராளமான விபரங்களை கொடுத்திருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு ஆவணங்களிருந்து நூலாசிரியர் மேற்கோள் காட்டியிருக்கிறார்.நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கை அமலான காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை யிலான மேற்குவங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மாநில அரசுகள் செயல்பட்ட விதம் பற்றியும், அவைகளுடைய கொள்கை பற்றியும் 6வது அத்தியாயத்தில் விளக்கியுள்ளார். நூலாசிரியர் அதோடு நிறுத்தவில்லை. 1957ல் இ.எம்.எஸ். தலைமை யிலான அரசு செய்த அடிப்படையான பணிகளையும் குறிப்பிடுகிறார். மேலும், தமிழ்நாடு, ஆந்திரா போன்ற இதர மாநிலங் களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், கட்சி தலைமையிலான வர்க்க, வெகுஜன அமைப்புகளும் நடத்திய இயக்கங்கள் பற்றியும் ஏராளமான விபரங்கள் கொடுக் கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் தீண்டாமை ஒழிப்பு முன்னணிநடத்திய போராட்டங்களை நூலாசிரி யர் விரிவாக விளக்கியுள்ளார். இத்தகையபோராட்டங்கள் தொடர வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.இந்தியாவில் 90 சதவிகிதம் உழைக்கும் வர்க்கம் முறைசாராத்துறைகளில் உள்ளது. இதில் நிறுவனத்தின் தொழிற்சாலையில் நேரடியாக வேலைபார்க்காது, உப ஒப்பந்தக்காரரிடம் வேலை பார்க்கும் ஏராளமான தொழிலாளர்களும் அடக்கம். தொழிற்சங்க அரசியல் நடத்துவது மிகவும் கடினமாக இருக்கும் வகையில்தொழில் துறை வடிவமைக்கப்பட்டுள் ளது, ஆனாலும், பல்வேறு கடினமான சூழல்களிலும் தொழிலாளர்கள் வீரத்தோடு போராடுகிறார்கள்.ஒட்டுமொத்த உழைக்கும் மக்களில் 90 சதவிகிதம் பேர் முறைசாரா தொழிலாளர்களாக இருப்பதை சுட்டிக்காட்டி இவர் களை திரட்டுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளையும் விளக்கியிருக்கிறார். 

மேலும், தொழிற்சாலைகளில் 90 சதவீதம் பேர் காண்ட்ராக்ட் தொழிலாளியாக வேலை செய்யும் புதிய சூழலில் இவர்களை திரட்டுவதற்கு சங்கம் அமைக்க ஆலை நிர்வாகங்கள் அனுமதிப்பதில்லை. அடக்கு முறைகளை ஏவி விடுகிறது. குறிப்பாக, ஹரியானாவில் மானேசர் மாருதி சுசுகி தொழிற்சாலையில் தொழிற்சங்கம் அமைக்க அனுமதி மறுத்து அங்கு ஏற்பட்டஅசம்பாவிதத்தையொட்டி 2012ல் கைதுசெய்யப்பட்ட 146 பேரில் கடந்த மூன் றாண்டு காலமாக இன்னும் 36 பேர் சிறையில் வாடுகின்றனர். மேலும் கோவை மாவட்டத்தில் பிரிக்கால் ஆலையில் இதைப்போன்று நடைபெற்ற அசம்பா விதத்திற்கு பிறகு 27 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு நீதிமன்றத் தீர்ப்பில் 8 தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் மம்தாவின் அடக்குமுறையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வரும் போராட்டத் தை மட்டுமல்ல நாடு முழுவதும் கட்சியும், வர்க்க, வெகுஜன அமைப்புகளும் நடத்தி வரும் ஏராளமான போராட்டங்களை ஆதாரத்தோடு விளக்கியிருக்கிறார். 

பல்வேறு மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நடத்திய இயக்கங்களை குறிப்பிட்டிருக்கிறார். உத்தப்புரத்தில் தீண்டாமைச் சுவரை தகர்க்க நடந்த போராட்டம் உள்ளிட்டு ஏராளமான விபரங்களை தருகிறார். இடது திருப்பம் எளிதல்ல என்று அவரு டைய நூலுக்கு தலைப்பு கொடுத்தது எதிர்காலத்தில் இடதுசாரிகள் எத்தகைய சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதைவிளக்குவதற்கே. சவால்களை எதிர்கொண்டு இடதுசாரிகளால் வெற்றி பெறமுடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட தோல்வி இடது தத்துவத்தின் நிராகரிப்பு அல்ல என வாதிடுகிறார். 

1984ல் பாஜக இரண்டே இடங்களில் வென்ற போது இந்திய வாக்காளர்கள் அதன் மொத்த தத்துவத்தையும் நிராகரித்தார்கள் என்று கொள்ளலாமா? அப்படிஇல்லை. ஏனெனில் பாஜக அமைப்புகள்(ஆர்.எஸ்.எஸ் விஸ்வ ஹிந்து பரிசத், பஜ்ரங்தள், வனவாசி கல்யாண் கேந்திரா) இந்திய சமூகத்தில் ஆழமாக ஊடுருவி இருப்பது நமக்குத் தெரியும். 1984ல் இந்துத்வா ஒழிந்துவிட்டது என்றுநம்பியது ஒரு வருக்குப் பிடித்ததாக இருந்திருக்கலாம். அதே போன்றுதான் மார்க்சியம் இப்போது வீழ்ந்துவிட்டது என்றுநினைத்துக் கொள்வதும்.மார்க்சியதத்துவம் வெல்லும்; இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் எதிர்காலத்தில் பலமான இயக்கமாக வளரும் என்பதே அவருடைய அழுத்தமான கருத்து.தம் கொள்கைகளில் உறுதியாய் நிற்க,எதார்த்த, நிலைமைகளை கவனமாக ஆய்வு செய்ய, ஒட்டுமொத்த அரசியலில் திறமையான ஒரே மாற்றாக உருவாக ஒரு திட்டம் தீட்ட அதற்கு (மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு) மிகப்பெரிய உள்வலிமை தேவை என தன்னுடைய முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.கம்யூனிசம் பலமுறை தோற்கடிக்கப் படலாம், பலமுறை தவறான வழியில்சென்றுவிடலாம்.
ஆனால் போராட்டத் தின் மூலமாக, சுய விமர் சனத்தின் மூலமாகமட்டுமே அது புதிய பலம் பெற்று விஸ்வ ரூபமாக மீண்டும் எழும் என மாமேதை காரல் மார்க்சினுடைய கூற்றை விஜய் பிர சாத் தன்னுடைய வாதத்திற்கு ஆதாரமாக மேற்கோள் காட்டியிருக்கிறார். 

இடதுசாரி இயக்கத்தில், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வளர்ச்சியில் ஏற்பட்ட தேக்கத்தை உடைப்பதற்கு, கட்சி எதிர்கொள்ள வேண்டிய சவால்களை பற்றிகீழ்கண்டவாறு சரியாக குறிப்பிடுகிறார். நம் காலத்தில் பெருமளவு அறிவுப்பூர்வமான நடைமுறை சார்ந்த முயற்சிகள் இல் லாமல் இடதுசாரிகள் முன்னேற முடியாது என்று முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். நூலுக்கு எழுதப்பட்டுள்ள முன்னுரையிலிருந்து ஒவ்வொரு அத்தியாயத்திற் கும் ஏராளமான நூல் களிலிருந்து பொருத்தமான மேற்கோள்களை எடுத்தாண்டுள் ளார் நூலாசிரியர். அவருடைய வாசிப்புப் பரப்பும், உழைப்பும் மெச்சத்தக்கவை. அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டே அவரால் இந்திய கம்யூனிச இயக்கம் குறித்து இவ்வளவு விரிவாக எழுத முடிந்துள்ளது வியப்பளிக்கும் ஒன்றாக உள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது கட்சி மாநாடு காங்கிரஸ் முடிவின் அடிப்படையில் கடந்த டிசம்பர் 27 முதல் 31ஆம் தேதி வரையில் கொல்கத்தாவில் ஸ்தாபன பிளீனம் நடந்தது. 

மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு கொண்ட புரட்சிகரமான கட்சியை உருவாக்குவது என்றும், இதற்காக எடுக்க வேண்டிய அரசியல், ஸ்தாபன நடவடிக்கைகள் பற்றியும் பிளீனம் முடிவெடுத்துள்ளது. கொல்கத்தா பிளீனம் காட்டியுள்ள திசைவழியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னேறும் என்பது திண்ணம். இடது திருப்பம் எளிதான ஒன்றல்ல தான் . ஆனால் அது தவிர்க்க முடியாதது.- இடது திருப்பம் எளிதல்ல (இந்திய கம்யூனிசத்தின் எதிர்காலம்)- விஜய் பிரசாத்,


No comments:

Post a Comment