Thursday, February 7, 2013

என் கேள்விகளுக்கு கலைஞரும் சிதம்பரமும் கண்டிப்பாக பதில் அளிக்க மாட்டார்கள்





இந்த கேள்வி – ப.சி க்கு

ராணுவ சிறப்புச் சட்டத்தை மாற்றவோ அல்லது அந்த சட்டம் அமுலாகும் பகுதிகள் எதையும் நீக்கவோ ராணுவ தளபதிகள் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள். இதற்கு என்ன செய்ய முடியும் என்று சிவகங்கைச் சீமான் கேட்டிருக்கிறார். பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ராணுவத்தினரை குற்றவியல் சட்ட வரம்பிற்குள் கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் என்று வர்மா கமிட்டியின் ஆலோசனையை ஏற்க மறுத்த பின்னணி இப்போது தெளிவாகி விட்டது.

ஒரே ஒரு கேள்விதான்.

ராணுவம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா இல்லை அரசு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதா?

இந்த கேள்வி கலைஞருக்கு

ராஜபக்சே வருகையை இப்போது கடுமையாக கண்டிக்கின்ற நீங்கள் இதற்கு முன்பு பல முறை ராஜபக்சே இந்தியா வந்த போதெல்லாம் எங்கே போயிருந்தீர்கள்? அல்லது இப்போதுதான் புதிதாக ஒரு போதி மரத்தை அண்ணா அறிவாலயத்தில் நட்டு, அது வளர்ந்து “ ராஜபக்சே மோசமானவர் “ என்ற ஞானத்தை அளித்ததா?




2 comments:

  1. உங்கள் ஆட்சியில் உங்கள் கீழ் உள்ள ராணுவ தளபதிகள் பேச்சை கேட்கமாட்டேன் என்கிறார்கள் என்று சொல்ல ஒரு அமைச்சர் எதற்கு? அந்த அரசு தான் எதற்கு? அரசாள யோக்யதை இல்லை என்றால் பேசாமல் ராஜினாமா பண்ணிவிட்டு போகவேண்டியது தானே!

    ReplyDelete
  2. அய்யா மிக அருமையான கேள்வி எழுப்பி உள்ளீர்கள் பாராட்டுக்கள் .ஆனால் திரு .கருணாநிதி அவர்களை மு . கருணாநிதி என்று குறிப்பிடுங்கள் . இதுபோல் ஜெயலலிதாவை புரட்சி தலைவி என்றும் வைக்கோவை புரட்சி புயல் என்றோ எழுதுவீர்களா ?. ஜெர்னலிசத்தில் அவரவர் பெயர் குறிப்பிடுது நல்லது. மற்றபடி நீங்கள் தி மு க அனுதாபி என்றால் ,நான் விடும் இந்த வேண்டுகோளை நிராகரிக்கலாம் .
    -- R.SATHEESH MENON
    KOCHI-KERALA
    http://titansatheesh.blogspot.in

    ReplyDelete