Monday, December 31, 2012

விஜய் டிவி நீயா நானா சர்ச்சை - ஒரு தன்னிலை விளக்கம்

நேற்று நடைபெற்ற விஜய் டி.வி நீயா நானா நிகழ்ச்சி குறித்து
வெளியிடப்பட்ட விளம்பரத்தைப் பார்த்து அந்த நிகழ்ச்சியை
புறக்கணியுங்கள் என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன்.

புறக்கணியுங்கள் என்று சொல்லி விட்டு நானே பார்ப்பது
தார்மீக நெறி இல்லை என்பதால் நான் அந்த நிகழ்ச்சியை
பார்க்கவில்லை.

என் மனைவி பார்த்து விட்டு 'அலசப்பட்ட விஷயங்கள் 
என்னவோ நன்றாகத்தான் இருந்தது " என்று சொல்லி
அவர்களே ஒரு பின்னூட்டம் போட்டார்கள். இது வரை
அவர் செய்யாத ஒன்று.

மூத்த தோழர் காஷ்யபன் அவர்களும் அந்த நிகழ்ச்சி
பெண்ணடிமைத்தனத்தை சாடியது, நான் அவசரப்
பட்டுவிட்டேன் என்று பின்னூட்டம் கொடுத்திருந்தார்.

அலுவலகத்திலும் சில தோழர்கள் அந்த நிகழ்ச்சியின்
பெரும்பாலான பகுதிகள் நன்றாக இருந்தது என்றும்
சமையல் வேலைக்கு மனைவிக்கு சம்பளம் கொடுப்பேன்
என்று சொன்ன ஒருவரை கோபிநாத் கடித்து குதறி
விட்டதாகவும் சொன்னார்கள்.

அந்த நிகழ்ச்சியை புறக்கணியுங்கள் என்று நான்
எழுதியதில் தவறு இருப்பதாக தோன்றவில்லை.

நான் எழுதியது விளம்பரத்தைப் பார்த்து விட்டு.

அந்த விளம்பரம் அந்தரங்கத்தை அம்பலத்தில்
வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகத்தான் இருந்தது.

நல்ல நிகழ்ச்சி என்றாலும் அதனை விளம்பரப்படுத்த,
பரபரப்பாக்க கையாண்ட உத்தி மிகவும் மோசமானது.
குடம் பாலில் கலக்கப்பட்ட குவளை விஷம்.

இது நிச்சயம் சரியான அணுகுமுறை அல்ல.

சரக்கின் மீது நம்பிக்கை இருந்தால் இப்படிப்பட்ட
வழிமுறைகளை கையாள வேண்டாமே

Sunday, December 30, 2012

அவசியம் படியுங்கள் - சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

தீக்கதிர் நாளிதழில் வந்த இந்த செய்தியை அவசியம்
படியுங்கள். 

கடந்த 24 அன்று இரவு வெண்மணி தியாகிகள் அஞ்சலிக்காக
திருவாரூக்கு நாங்கள் வேலூரிலிருந்து சென்ற போது
இரவு பத்தரை மணி இருக்கும். நாங்கள் சென்று பத்து
நிமிடங்கள் கழித்தே தோழர் குருமூர்த்தி வந்தார்.

காலையில் அவரைப் பார்க்க முடியவில்லை. அப்போதுதான்
அந்த துயர செய்தியை அறிய முடிந்தது. அந்த துயரம்
வேறு ஒருவருக்கு வாழ்வில் வெளிச்சம் அளித்துள்ளது
என்பது நெகிழ்ச்சியான செய்தி.

தோழர் குருமூர்த்தி அவர்களுக்கும் அவர்களின் 
குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை
தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த
தாயை சிரம் தாழ்த்தி வணங்கிறேன்.



இப்போது பத்திரிக்கைச் செய்தி


ஜே.குருமூர்த்தியின் மாமியார் உடல் தானம் 

 

 
சென்னை, டிச.29-நீண்ட கால தீக்கதிர் வாசகரும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழி யர் சங்க செயலாளர் ஜே. குரு மூர்த்தியின் மாமியாருமான ஏ. ருக்மணி அம்மாள் (87) கடந்த செவ் வாயன்று (டிச. 25) அதிகாலையில் காலமானார். 

அவர் ஏற்கெனவே தெரிவித்திருந்த விருப்பத்தின்படி அவரது உடல் மருத்துவ ஆய்வுக் காகஅரசிடம்ஒப்படைக்கப்பட்டது. அவரது கண்கள் அரசு கண் மருத்துவ மனைக்கு வழங்கப்பட்டன.குருமூர்த்தியின் பணி ஓய்வு விழாவின்போது அவரும் அவரது மனைவி ரமாவும் தங்களது உடல்களை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானமாக வழங்கப் பதிவு செய்வதாக அறி வித்தனர். 

அதன் தாக்கத்தில் பின்னர் ருக்மணி அம்மாள் தமது கண்களையும், உடலையும் தானம் செய்ய முன்வந்து, எழுத்துப்பூர்வமாகவும் ஒப்புதல் தெரிவித்திருந்தார். அதன்படி அவரது மறைவை அடுத்து உடன் தகவல் கொடுக்கப்பட்டு மருத்துவ ஆராய்ச்சிக்காக அவரது உடலை அரசு பொது மருத்துவமனைக்கு வழங்க ஏற்பாடு கள் செய்யப்பட்டன.சென்னை மருத்துவக் கல்லூரியின் உடற்கூறுவியல் பிரிவு தலைமை இயக்குனர் சுதா சேஷய்யன் உரிய நடவ டிக்கைகளை மேற்கொள்ள, அன்று மதியம் 12 மணிக்கு சென்னை மருத்துவக் கல்லூரிக்கு ருக்மணி அம்மாள் உடல் ஒப்படைக்கப்பட்டது. 

அன்று கிறிஸ்துமஸ் விடுப் பில் இருந்தபோதிலும், ஆய்வகப் பொறுப்பாளர் மேத்யூஸ் நேரடியாகத் துறைக்கு வந்து இந்த உடல்தானம் நடை முறைகளுக்கு ஒத்துழைத்தது குறிப்பிடத் தக்கது.

ஒரு வைதீகக் குடும்பத்தில் பிறந்தவரான ருக்மணி அம் மாள் தீக்கதிர் வாசகராக, முற்போக்குச் சிந்தனைகளின் ஆதர வாளராக இருந்துவந்தார். அவருக்கு கோவிந்த ராஜன், ராம சுந்தர் ஆகிய மகன்களும் ரமா என்ற மகளும் உள்ளனர்.

நன்றி - தீக்திர் 30.12.2012

யப்பா ரஜனி, நீ அரசியலுக்கு வரவே வராதே...


 

என்   மகன்  மிகவும்  வற்புறுத்தி  ரஜனிகாந்த் பிறந்தநாள்
விழா வீடியோவை முகநூலில் பார்க்க வைத்தான்.

என்ன கொடுமை சார் இது?

அரசியல் குறித்து அவர் அள்ளித்தந்துள்ளது கேட்டால்
சிரிப்பு சிரிப்பாக வந்தது.

1996 ல் வாய்ஸ் கொடுக்காவிட்டால் அவர் கோழை என்று
சொல்லி விடுவார்கள் என்பதால் அவர் வாய்ஸ் கொடுத்தாராம்.

உசுப்பேத்தி விட்டதக்கு பயந்து போய் வாய்ஸ் கொடுத்தேன்
என்பதையே என்ன வீரமா சொல்றாரு!

அரசியல் கட்சி தலைவர்கள் நல்லவர்களாம். இது 
உண்மை. இடதுசாரிக் கட்சிகளைப் பொறுத்தவரைக்கும்
உண்மை (தா.பா நீங்கலாக). மற்ற கட்சிகளுக்கு இது
பொருந்தவே பொருந்தாது. ஆனால் ரஜனி சொல்கிறார்.
எல்லா தலைவர்களும் நல்லவர்களாம்.

அரசியல் தலைவர்கள் வேதனையாக உள்ளார்களாம்.
அவர்களை கெடுப்பது தொண்டர்கள்தானாம். 
தொண்டர்களின் பேராசையால்தான் தலைவர்களுக்கு
பிரச்சினையாம். 

என்ன ஒரு காமெடி?

யதார்த்த நிலைமை கொஞ்சமும் தெரியாத ரஜனி
போன்றவர்கள் அரசியலுக்கு வராமல் இருப்பதே
மேல்.

இதிலே  அவரது ரசிகர்கள்தான் பாவம்.

அரசியல் தொண்டர்களைப் பற்றி சொல்லியது
அவரது ரசிகர்களுக்கும் பொருந்தும் என்பது
புரியாமலே ஆரவாரம் செய்கின்றனர்.

அவர்களை வெறியர்கள் என்று சொன்னதற்கும்
உற்சாகக் கூச்சலிடுகிறார்கள்.

இவரைப் போன்றவர்கள் அரசியலுக்கு வந்தால்
தமிழ்நாட்டை அந்த ஆண்டவனாலும் 
காப்பாற்ற முடியாது. 

( 1996 டயலாக் ரிபீட்டு)

சிதம்பரம் அண்ணாச்சி, ராகுல் காந்தி பிரதமர் கிடையாதா?

 

ப.சிதம்பரம் இந்தியப் பிரதமராக வேண்டும் என்று 
ஏராளமானவர்கள் அவரது புத்தக வெளியீட்டு 
விழாவில் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக மூன்றே மூன்று கேள்விகள்.

வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக வேண்டும் 
என்று கலைஞர் சொன்னது நிச்சயமாக உங்களை
இல்லை என்பது அவருக்கும் தெரியும், உங்களுக்கும்
தெரியும். அவர் சொன்னது அவரையா இல்லை
மு.க.ஸ்டாலினையா?

நீங்கள் அடுத்த பிரதமராக வேண்டும் என்றால்
சொக்கத்தங்கம் சோனியாவின் தெய்வத் திருமகன்
ராகுல் காந்திக்கு அல்வா கொடுப்பது  என்று
முடிவெடுத்து விட்டீர்களா?

அடுத்த முறையும் சிவகங்கையில் வெற்றி பெற்றதாக
அறிவிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் முடிந்து
விட்டதா? முறைகேடுகளை முடிவு செய்தாகி 
விட்டதா? இப்போது திமுக ஆட்சியில் இல்லையே?
இப்போதும் உங்கள் ஆள்தான்  சிவகங்கை
கலெக்ட்ரா?

இந்தியாவின் நிலைமை??? இன்னும் மோசமாகுமா??????????

மெக்சிகோவின் இன்றைய கதி
                                                         அருண் குமார்


மெக்சிகோ நகரில் உள்ள ஓட்டலுக்கு மெக்சிகோ விமானநிலையத்திலிருந்து டாக் சியில் என்னை ஏற்றிச்சென்ற ஓட்டுநர் ஒரு கணினி பகுத்தாய்நர் ஆவார். என்னை விமான நிலையத்திலிருந்து ஓட்டலுக்குக் கொண்டு செல்வதற்கு இடையிலான 30 கிலோ மீட்டர் தூரத்தில் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தின் அவலநிலை குறித்தும் சரளமான ஆங்கிலத்தில் அவர் என்னிடம் தெரிவித்துவிட்டார். உலகப் பொருளாதார நெருக்கடி குறித்து அவர் என்னிடம் தெரிந்து கொள்ள விரும்பினார். ஏனெனில், தானும் தன்னைப்போன்றவர்களும் மெக்சிகோவில் படும் துன்பங்கள் குறித்து அப்போதுதான் தன்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடி யும் என்று அவர் நினைத்தார். வேலையில் லாத் திண்டாட்டம் குறித்தும், தனக்கு ஒரு சரியான வேலை கிடைக்காதது குறித்தும் அவர் என்னிடம் முறையிட்டார். தன் குழந் தைகளுக்கும் இதுவே கதி என்று அவர் கூறி னார். அமெரிக்காவையும் அதன் கொள்கை களையும் சமூகத்தில் நிலவும் லஞ்ச ஊழல் களையும் அவர் சாடினார். அதன்பின் மெக்சி கோவில் நான் தங்கியிருந்த ஒரு வார காலத் திலும் எனக்கு இதுபோன்று எண்ணற்ற அனுபவங்கள் ஏற்பட்டன.


பெரும் மால்கள்

டாக்சி பல வர்த்தக நிறுவனங்களையும், மக்கள் குடியிருப்புப் பகுதிகளையும் கடந்து சென்றது. ஆயினும் சிறிய கடைகள் எதை யும் என்னால் பார்க்க முடியவில்லை. மிகப் பெரிய மால்கள், ஆட்டோமொபைல் டீலர்கள், பெட்ரோல் நிலையங்கள், ரெஸ்டாரண்டுகள், மருந்துக்கடைகள், கார் ரிப்பேர் கடைகள் இருந்தன. குடியிருப்பு காலனிகளிலாவது சிறிய கடைகள் இருக்குமா என்று தெரிய வில்லை. 1980 மத்திய வாக்கில் இந்தியத் தூதரகத்தில் வேலைக்குச் சேர்ந்த என் நண் பர் ஒருவர், என்னிடம் கூறியபோது, தான் வேலைக்குச் சேர்ந்த சமயத்தில் எங்கு பார்த் தாலும் பழக் கடைகள் இருந்ததாகவும், மாலையில் ஒருவர் தனக்கு வேண்டிய பழங் களை வாங்கிச் சாப்பிட முடியும் என்றும், ஆனால் இப்போது அத்தகைய கடைகளை எங்கேயுமே பார்க்க முடிய வில்லை என்றும் கூறினார். இந்தியப் பெருநகரங்களின் கதியும் எதிர்காலத்தில் இதுதானோ என்று நான் அஞ்சினேன். சிறிய கடைகள் இல்லாதது என்னை மிகவும் வியக்க வைத்ததெனில், மிகவும் ஆழ மான முறையில் ஏற்பட்டுள்ள வேலையில் லாத் திண்டாட்டம்தான் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மெக்சிகோவும் 1994 இலிருந்தே நாஃப்டா எனப்படும் வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் ஓர் அங்கமாக இருந்து, அந்நிய முதலீட்டை இறக்கிய நாடாகும். 


அமெரிக்காவிலிருந்து பல தொழிற்சாலைகள் வட மெக்சிகோ விற்கு மாற்றப்பட்டு, அங்கிருந்துதான் அமெ ரிக்கா மற்றும் கனடிய சந்தைகளுக்குப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டன. மெக்சிகோ நகரம் கார்களின் வருகையால் பரபரப்பாகி யது. இந்தியாவுடன் ஒப்பிடுகையில், தனி நபர் வருமானத்தில், நம்மைவிட பத்து மடங்கு அதிகமான அளவில் இருந்தது. ஒன் றன் மீது ஒன்றாக மேம்பாலங்கள் நிறைய கட் டப்பட்ட போதிலும் போக்குவரத்து நெருக்கடி யும் மிகுந்திருந்தது. அதிகாலை நேரத்தில் 25 நிமிடங்களில் கடக்கும் தூரத்தை, பகல் நேரங்களில் கடக்க வேண்டுமானால், இரண்டிலிருந்து மூன்று மணி நேரமாகும். நிலப்பரப்பின் பெரும்பகுதி தண்ணீருக்கு மேலே இருந்ததால், வானுயர் கட்டடங் களைக் கட்டவேண்டுமானால் மிகவும் செலவு செய்து அஸ்திவாரங்களை அமைக்க வேண்டியிருந்ததால், நிறைய கட்டடங்கள் ஒன்று அல்லது இரண்டு மாடிக் கட்டடங் களாகவே கட்டப்பட்டன. எனவே நகரத்தின் பரப்பளவு விரிவானதாக மாறியது. மெக்சிகோ நகரத்திற்கு 1980களின் மத் தியவாக்கில் சென்றவர்கள் நிறைய சிறிய ஸ்டோர்கள் இருந்ததை நினைவு கூர்கிறார் கள். 

ஆனால் இப்போது உலகின் மிகப்பெரிய பணக்காரரான கார்லோஸ் ஸ்லிம் என்ப வருக்குச் சொந்தமான சன்பார்ன் தொடர் ஸ்டோர்கள்தான் அங்கே காணப்படுகின் றன. சன்பார்ன் ஸ்டோர்களில் முதல் தளத் தில் உணவுவிடுதி, ஒரு பொருள் அன் பளிப்பு கடை, ஒரு மருந்துக்கடை இருக் கின்றன. மற்ற கடைகள் தரைத் தளத்தில் இருக்கின்றன. நான் ஒரு இளைஞனிடம் பேசிக் கொண்டிருந்தபோது, குடியி ருப்புப் பகுதிகளின் முனைகளில் இத்தகைய ஸ்டோர்கள் இருந்ததைத்தான் பார்த்த தில்லை என்று கூறினார்.நான் தங்கியிருந்த ஓட்டலின் சன்னலி லிருந்து பார்த்தபோது பெரிய பெரிய மால் களைத்தான் பார்க்க முடிந்ததே தவிர, என் னால் சிறிய ஸ்டோர்கள் எதையும் பார்க்க முடியவில்லை. அமெரிக்காவில் காணப்படு வதைப் போலவே சியர்ஸ், வால்மார்ட், மெக் டொனால்டுகள்தான் எந்தப் பக்கம் பார்த் தாலும் காணப்பட்டன. குடியிருப்புப் பகுதி களிலும் சிறிய ஸ்டோர்கள் எதையும் என் னால் பார்க்க முடியவில்லை. அங்கும் வட அமெரிக்காவின் செவன் லெவன்ஸ் என்னும் நிறுவனத்தின் கடைகள்தான் காணப்பட் டன. ஏழைகள் வாங்குவதற்காக அங்குள்ள நடைபாதைகள் மற்றும் சந்தைகளின் அருகே சிறு சிறு கடைகள் இருந்ததைப் பார்த்தேன். மால்களில் பணிபுரியும் தொழி லாளர்கள் நடைபாதைகளில் உள்ள இக் கடைகளுக்கு வந்து உணவுப் பொருள்களை வாங்கி உண்பதையும் பார்த்தேன். ஏனெனில் மால்களில் உள்ள விலைகள் அவர்களின் சம்பளத்திற்குள் வாங்கி உண்ணக்கூடிய அளவிற்கு இல்லாத நிலை. 


கிராமக் குடியரசு

அடுத்த நாள், மொலிலோஸ் என்னுமிடத் தில் இருந்த தால்னேபாண்ட்லா என்னும் கிராமத்தைப் பார்ப்பதற்காகச் சென்றிருந் தேன். இது ஒரு புரட்சிகர கிராமமாகும். என்னை விருந்தோம்பி உபசரித்த அல் வாரோ என்பவர் ஒரு பொருளாதாரப் பட்ட தாரியாவார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இங்கே வந்து குடியேறிவிட்டார். அங்கிருந்த விவசாயிகளுடன் இணைந்து 4000 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த அம் மலைக்கிராமத்தில் பழவகைகளைப் பயிர் செய்துவந்தார். இக்கிராமம் லஞ்சஊழல் அரசியல் கட்சி களை நிராகரித்துவிட்டது. கிராமவாசிகள் தங்கள் சொந்தத் தலைவரைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொண்டனர். ஓர் அரசியல் கட்சியின் பிரமுகரான அந்நகராட்சியின் தலைவரை அவர்கள் அங்கீகரிக்கவில்லை. அல்வாரோவும் மற்றும் சிலரையும் பயங்கர வாதிகள் என்று பிரகடனம் செய்து, அரசாங் கம் அவர்களைக் கைது செய்திட துருப்புக் களை அனுப்பி வைத்தது. எனவே அவர்கள் தலைமறைவாகச் செல்ல வேண்டிய தாயிற்று. மெக்சிகோ நகரம் முழுவதும் எதிர்ப் புக் கிளர்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக பல்கலைக் கழகங்களில் இவை நடந்தன. 

பின்னர் அரசாங்கம் அவர்கள் மீது சுமத்தப் பட்ட குற்றச்சாட்டுகளைக் கைவிட்டு, ஓர் ஒப்பந்தத்திற்கு வந்தது. இங்குள்ள நிலம் முழுவதும் இங்குள்ளவர்களுக்கே சொந்தம் என்றும், வெளியாள் எவருக்கும் இவற்றை விற்க முடியாது என்றும் ஒப்பந்தம் செய்யப் பட்டது. இந்தியாவைச் சேர்ந்த பல்கலைக் கழகத்திலிருந்து ஒரு பேராசிரியர் தங்கள் கிராமத்திற்கு வந்திருக்கிறார் என்று கேள் விப்பட்டதும், கிராமத் தலைவர்கள் எனக்கு கிராமத்தில் விளைந்த பொருள்களைக் கொண்டு விருந்து படைத்து நன்கு உபசரித் தனர். அவர்களது உணவு வகைகளும் மிக வும் சுவையாக இருந்தது. அல்வாரோ, காந் திஜி குறித்தும் அவருடைய அஹிம்சை தத் துவம் குறித்தும் ஒரு நவீன சமுதாயத்தில் அதை எப்படிப் பிரயோகிக்க முடியும் என் றும் என்னிடம் கேட்டார்.


கொள்ளைக்கும்பலின் ஆட்சி

அமெரிக்காவிலிருந்து முதலீடுகள் வந்து கொட்டப்படும் வட மெக்சிகோவில், கொள் ளைக் கும்பலின் ஆட்சியே நடைபெறு கிறது. சட்டமின்மையும் ஒழுங்கின்மையும் அங்கே தலைவிரித்தாடுகிறது. அரசாங்கம் என்ற ஒன்று அங்கு இருப்பதாகவே தெரிய வில்லை. வேலையில்லா இளைஞர்கள் கொள்ளைக் கும்பலில் இணைந்து கொண் டிருக்கிறார்கள். போதைப்பொருள்கள் கடத் தல், சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் புலம் பெயர்ந்து செல்லுதல் இளைஞர்கள் மத்தியில் காணப்படுகிறது. இவ்வாறு புலம் பெயர்ந்து செல்லுதலும் வேலைவாய்ப்பின் மையை மேலும் மோசமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. இவ்வாறு புலம் பெயர்ந்து சென்றவர்கள் அனுப்பி வைத்திடும் பணமும், பெட்ரோலியம் ஏற்றுமதி மற்றும் சுற் றுலாத்துறையும்தான் மெக்சிகோ பொருளாதா ரத்தை ஓரளவிற்குக் கட்டுக்குள் வைத்திருக் கிறது. பொருளாதார நெருக்கடி ஆழமாகாமல் ஓரளவிற்குத் தடுத்து நிறுத்தியிருக்கிறது.மெக்சிகோவின் பிரச்சனைகள் தீர்க்கப் படுவதற்குப் பதிலாக, அது அமெரிக்காவிற்கு மிகவும் அருகில் இருப்பது, அதனுடனான சுதந்திர வர்த்தகம், அங்கிருந்து வரும் முத லீடுகள் ஆழமான வேலையில்லாத் திண் டாட்டத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. பாரம் பரியமாக இருந்து வந்த விவசாயத்தை வீழ்ச் சியடையச் செய்துவிட்டது. மெட்ரோ நகரங் களில் இருந்த சில்லரை வர்த்தகர்களுக்கு முடிவு கட்டிவிட்டது. 


மெக்சிகோவில் இன்று நான் பார்த்த காட்சி, இந்தியாவிற்கும் வர வெகு காலமாகாது.இன்னும் சரியாகச் சொல்வதென்றால், மெக்சிகோவைவிட நம் நாட்டில் நெருக்கடி நிலைமை மேலும் மோசமானதாக இருக்கும். ஏனெனில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து சென்றிட அண்டை நாடாக அமெரிக்கா இங்கே இல்லை. பெட்ரோல் உற்பத்தியோ அல்லது சுற்றுலாத்துறையோ மெக்சிகோ வில் இருப்பதுபோல் இங்கு கிடையாது. எனவே நிலைமைகள் இங்கே மெக்சி கோவைவிட மிகவும் மோசமானதாக இருந் திடும்.

(கட்டுரையாளர், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞானத்துறைத் தலைவர்)

தமிழில்: ச.வீரமணி

நன்றி
தீக்திர் 29.12.12 

Saturday, December 29, 2012

நாளைக்கு விஜய் டி.வி “ நீயா, நானா” பாக்காதீங்க





நாளை விஜய் டி.வி நீயா, நானா நிகழ்ச்சிக்கான முன்னோட்டம் பார்த்தேன்.

சமையலறை ரொமான்ஸ் என்பது தலைப்பு போல. விளம்பரத்தில் பலர் வழிகிற வழியல் தாங்க முடியவில்லை. கணவன் மனைவிக்கு இடையேயான அந்தரங்கத்தை ஏன் இப்படி பலரும் வெட்கம் இல்லாமல் சொல்லி அவர்களையே அசிங்கப்படுத்திக் கொள்கின்றனரோ?

ஏற்கனவே பாலியல் குற்றங்கள் பெருகி வரும் இக்காலத்தில் இப்படிப் பட்ட நிகழ்ச்சிகள் அவசியமா?

என்ன ஆகும் தமிழ்ச் சமூகம்?

இதைப் புறக்கணித்து டி.ஆர்.பி ரேட்டிங்கை குறையச் செய்யுங்கள். அப்போதாவது கொஞ்சம் பொறுப்பு வரும்

Friday, December 28, 2012

காந்தி,மார்க்ஸ் பெயருக்கு இப்படி ஒரு இழுக்கா?





புதுவைக்கு ஒரு பணியாக சென்று திரும்பி வருகையில் நாங்களாகவே தேடிக் கொண்ட வில்லங்கம் இது.

நாங்கள் வந்த வாகனத்தில் தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது. ஏதேனும் சி.டி உள்ளதா என்று ஓட்டுனரைக் கேட்க அவர் பேய்ப்படம் ஒன்று உள்ளது. பார்க்கிறீர்களா என்று கேட்டு அவர் அதைப் போட்டார். பாதியில்தான் அந்த சி.டி தொடங்கியது.

ஒரு அடர்ந்த காட்டில் ஒரு தம்பதியை நான்கு பேர் துரத்துகிறார்கள், துரத்திக் கொண்டே இருக்கிறார்கள். அப்படி என்னதான் பிரச்சினை என்று தொடர்ந்து பார்த்ததுதான் தவறாகி விட்டது.

ஆபாசம், வக்கிரம், வன்மம், அபத்தம்  என அத்தனையையும் கலக்கி அதை ஒரு படம் என தயாரித்துள்ளார்கள். இவ்வளவு கேவலமான அந்த படத்தின் பெயர் என்ன? இயக்கிய அதி மேதாவியின் பெயர் என்ன என்று டைட்டில் பார்க்க அந்த சி.டி யை மீண்டும் போட்ட போதுதான் அந்த அதிர்ச்சி கிடைத்தது.

அந்த படத்தின் பெயர் ‘ பொல்லாங்கு ‘.

இப்படி ஒரு படம் வந்ததோ, வந்து போனதோ யாருக்கும் தெரியவில்லை. கடைசியில் இயக்குனர் பெயர் வந்தபோது நொந்தே போய் விட்டேன்.

இப்படி ஒரு அபத்தக் களஞ்சியத்தை இயக்கிய அந்த மகானுபாவனின் பெயர் காந்திமார்க்ஸ்.

இரண்டு மகத்தான தலைவர்களை இதை விட வேறு யாராலும் இழிவு படுத்த முடியாது.

ஐயா காந்திமார்க்ஸ் அடுத்த படம் ஒன்னு ஒழுங்கா எடு
இல்லை உன் பெயரையாவது மாத்திக்க

வெல்டன் ஜெயலலிதா





தேசிய வளர்ச்சி கவுன்ஸில் கூட்டத்தில் நேற்று ஜெயலலிதா வெளி நடப்பு செய்தது பற்றி அங்கங்கே விவாதம் நடக்கிறது.

எந்த ஒரு கூட்டமாக இருந்தாலும் அதற்கு ஒரு நேர வரையறை இருக்க வேண்டும் என்பது சரி. ஆனால்  ஒதுக்கப்படும் நேரம் என்பது கொஞ்சம் பொருத்தமாக இருக்க வேண்டும். தேசத்தின் வளர்ச்சி, பிரச்சினைகள் பற்றி விவாதிக்கும் ஒரு கூட்டத்தில் ஒரு மாநிலத்திற்கு வெறும் பத்து நிமிடங்கள் மட்டும் என்பது மோசமான ஒன்று. வெறும் சடங்கிற்கான கூட்டத்தை நடத்த மட்டுமே மத்தியரசு விரும்பியுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.

இதிலே ஜெ பேசுகிற போது பத்து நிமிடம் ஆனதும் மணியடித்ததும் அடுத்தவரை பேச அழைத்ததும் நிச்சயமாக அசிங்கப்படுத்திய வேலைதான்.

இதற்கு அவர் வெளிநடப்பு செய்தது என்பது மிகவும் சரியான நடவடிக்கை. மத்தியரசை கண்டிக்கிறேன் என்பதை பதிவு செய்து விட்டு வெளிநடப்பு செய்திருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும்.

Thursday, December 27, 2012

எவ்வளவு பேர் வயிறெரிகிறார்களோ?





இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது தோழர் டி.செல்வராஜ் அவர்கள் எழுதிய “தோல்” நாவலுக்கு கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி. தோல் பதனிடும் தொழிலாளர்களின் வாழ்வை, வலியை, போராட்டங்களை செய்துள்ள இந்த நாவலுக்கு விருது கிடைத்துள்ளது மனதிற்கு இதமாக உள்ளது.

தோழருக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

இந்த ஆண்டு விருது தோழர் டி.செல்வராஜ் அவர்கள் பெறுகிறார்.

கடந்தாண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நாவலுக்கு கிடைத்தது.

அதற்கு இரு ஆண்டுகள் முன்பாக தமுஎகச வின் இன்னொரு முக்கிய பொறுப்பாளர் தோழர் மேலாண்மை பொன்னுசாமியின் மின்சாரப்பூ சிறுகதை தொகுப்பிற்கு கிடைத்தது.

நான்கு ஆண்டுகளில் மூன்று விருதுகள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்களுக்கு, இன்னும் தெளிவாக சொல்லப்போனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு கிடைத்துள்ளது.

இதைப் பார்த்து எத்தனை பேர் வயிறெரியப் போகின்றார்களோ? வசை பாடப் போகின்றார்களோ?  எத்தனை பேர் அபத்தத்தையும் நச்சையும் கக்கப் போகின்றார்களோ?  சண்டைகள், சர்ச்சைகள் இல்லாவிட்டால் அது  தமிழ் இலக்கிய உலகே கிடையாதே?