Sunday, June 30, 2013

கல்கியா இது? நம்ப முடியவில்லை!

இந்த வார கல்கி கேள்வி பதில்களில்


நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஐந்து சதவிகித பங்குகள
தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து>

கலகி பதில் : தமிழக முதல்வர் கடுமையாக எதிர்த்து பிரதமருக்கு
மறுமுறையும் கடிதம் எழுதியுள்ளார். தமிழகக் கட்சிகளும்
என்.எல்.சி தொழிலாளர் அமைப்புக்களும் இதை வன்மையாக
எதிர்க்கின்றன. அரசின் தவறான நிதிக் கொள்கையே இது போன்ற
அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்க வழி கோலுகிறது.
அரசியல் லாபம் பெறவே தமிழகக் கட்சிகள் பங்கு விற்பனையை 
எதிர்க்கின்றன என்று அபத்தமாகப் பேசியிருக்கிறார் நாராயணசாமி.
லாபம் ஈட்டும் அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்கும்
"புத்திசாலித்தனம்" தனது ஊதாரி செலவினங்களுக்காக 
மனைவியின் நகைகளை விற்கும் கணவனின் நடத்தைக்கு
சமமாகும்.

கல்கியின் இந்த நிலைப்பாடு உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

உலகமயக் கொள்கைகளை ஆதரிக்கிற, தொழிலாளர்
போராட்டங்களை சாடுகின்ற, தனியார்மயத்தை உயர்த்திப்
பிடிக்கிற கல்கி பத்திரிக்கையின் மனமாற்றம் நிரந்தரமானதுதானா?
 

2 comments:

  1. நிகழ்ச்சிகளை அவற்றின் தனித்தன்மையை அடிப்படையாக வைத்து மட்டுமே ‘கல்கி’ விமர்சனம் செய்துவந்திருப்பதாக நம்புகிறேன். ஏன் இந்த வக்கிர புத்தி உங்களுக்கு?

    ReplyDelete
  2. ஐயா செல்லப்பா, மன்னிக்க வேண்டும். நான் முப்பத்தி ஐந்து வருடங்களாக கல்கி படித்து வருபவன். அதன் நிலைப்பாடு மாறியுள்ளதை வரவேற்றுள்ளேன். இதற்கு முன்பாக வேலை நிறுத்தங்களையும் தொழிலாளர்கள்
    போராட்டங்களையும் விமர்சித்துள்ளதையும் குறிப்ப்ட்டுள்ளேன். இதிலே எங்கே வக்கிர புத்தி வந்தது?
    இல்லை உமது கண்ணில் கோளாறா?

    ReplyDelete