கலைஞர் பதட்டத்தில் தவிக்கிறார் என்பதை அவரது செய்கைகளும்
வார்த்தைகளுமே காட்டிக்கொடுத்து விடும். ஆரியர் ,திராவிடர், சூத்திரர் என்றெல்லாம் பேசத் தொடங்கினால் அவர் மீது என்ன குற்றச்சாட்டு
வைக்கப்படுகின்றதோ, அதை சமாளிக்க உண்மை அவரிடம் இல்லை என்று அர்த்தம். ஜாதிய ரீதியாக பிரச்சினையை திசை திருப்புவதைத்
தவிர வேறு வழியில்லாமல் அவர் தவிக்கிறார் என்று அர்த்தம்.
ஸ்பெக்ட்ரம் பிரச்சினையின் போது கூட அவரால் வேறு ஆயுதம் எதையும் பிரயோக்கிக்க முடியவில்லை.
இப்போது அவரது காட்டம் தேர்தல் ஆணையத்தின் மீது திரும்பியுள்ளது.
ஜால்ரா அதிகாரிகள் மாற்றப்பட்டதை, பண விநியோகத்திற்கு உருவாகி
உள்ள முட்டுக்கட்டைகள், மாற்றலில் புதிதாக வந்த அதிகாரிகள் நேர்மையாக நடக்க முயற்சிப்பது ஆகியவற்றை அவரால் சகித்துக்
கொள்ள இயலவில்லை. ஆதலால்தான் தேர்தல் ஆணையத்தின் மீது
எரிந்து எரிந்து விழுகின்றார். மதுரை மாவட்ட ஆட்சியர் மீது மகன்
அழகிரி புகார் கொடுக்கின்றார்.
ராஜாஜி, காமராஜர், இந்திரா காந்தி, எம்ஜிஆர் ஆகியோருக்கு எதிராக
அரசியல் செய்த நான் ஜெயலலிதா விற்கு எதிராக அரசியல் செய்யும்
நிலை வந்து விட்டதே என்று முன்பு புலம்பியவர் பாவம் இப்போது
விஜயகாந்தைக் கூட கடுமையான எதிரியாக கருத வேண்டிய நிலை
ஏற்பட்டு விட்டது. தன்னந்தனியாக பிரச்சாரம் செய்த நிலை மாறி
குஷ்பூவையும் வடிவேலையும் நம்ப வேண்டியுள்ளது. அதனால்தான்
விரக்தியும் கோபமும் அவர் பேச்சில் கொப்பளிக்கிறது.
இப்போது அவர் பேசுவது பேச்சல்ல. தேர்தலில் தோல்வி பெறும்
போது " நன்றி கெட்டவர்கள், நம்பிக்கைத்துரோகிகள், ஆட்டு மந்தைக்
கூட்டங்கள், சோற்றால் அடித்த பிண்டங்கள், என்றெல்லாம் தமிழ் நாட்டு மக்களைத் திட்டப்போகின்றாரே அதைக் கேட்டுக் கொள்ள
தயாராகுங்கள் !
ஆக ஜெவும், தோல்வியின் பயத்தினால்தான் நடிகர் நடிகைகளை பிரச்சாரத்திற்கு அழைக்கிறார். நல்ல கண்டுபிடிப்பு.
ReplyDeleteஜெ. தோல்வி பயத்தில் அழைக்கவில்லை. இவருடைய மூவுக்கு பதில் மூவாகத்தான் காய்களை அவர் நகர்த்த வேண்டி இருக்கிறது. உதாரணம் இலவசத் திட்டங்கள். இவருடைய சீப்பான நடவடிக்கைகளுக்கு பதிலாக அவரும் சீப்பாக நடக்கத்தான் வேண்டியிருக்கிறது.
ReplyDeleteJAYA IS A PUCCA CHEAP POLITICIAN.DONT COMPARE HER WITH SEASONED POLITICIAN KALAIGNAR. IF D.M.K. WILLBE DEFEATED ,THERE WOULD BE NO FUTURE FOR TAMILNADU.
ReplyDeleteஜெயலலிதா, கருணாநிதி - இருவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். ஆனால் இத்தேர்தலில் திமுக வென்றால்தான் தமிழகம் அழியும். ஆயிரம் ஆயிரம் காரணங்கள் உண்டு. அடுத்தடுத்த பதிவுகளில் அவற்றை பார்ப்போம்.
ReplyDelete