நாடாளுமன்ற நடவடிக்கைகளை அவ்வப்போது
முடக்கி வைக்கின்றனர், மகளிர் மசோதாவை
நிறைவேற்ற முடியாமல் தடுத்துக் கொண்டுள்ளனர்.
முக்கியமான பிரச்சினைகளில் அரசுக்கு எதிராக
உறுதியாக செயல்பட வேண்டிய நேரத்தில் பேரம்
பேசி சமரசம் செய்து கொண்டு வருகின்றனர்.
லாலுவிற்கும், முலாயத்திற்கும், பாரதீய ஜனதா
கட்சிக்கும் ஊதிய உயர்வு கேட்க என்ன அருகதை
உள்ளது? முன்னூறு கோடீஸ்வரர்கள் கொண்ட இந்த
அவையின் உறுப்பினர்களில் இடதுசாரி கட்சி
உறுப்பினர்களைத் தவிர வேறு யாருக்கும் ஊதிய
உயர்விற்கான அவசியம் உள்ளது? வலது கையாலும்
இடது கையாலும் மாறி மாறி வாங்குகிற பணம்
பல தலைமுறைகளுக்கே வரும் என்கிற போது
மக்களின் வரிப்பணத்தை வேறு ஏன் விரயம்
செய்ய வேண்டும்?
அதே நேரம் இவர்கள் எல்லாமே மத்திய, மாநில
ஆட்சிப்பொறுப்பில் இருந்த போது எத்தனை
ஊதிய உயர்வுகே கோரிக்கைகளை நிராகரித்து
போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு
அடக்கியுள்ளார்கள்?
குறைந்தபட்சம் வாங்குகிற ஊதியத்திற்கு
மக்களுக்கான கடைமையை செய்யப்போவதில்லை.
நாடாளுமன்றத்திற்கு ஒழுங்காக செல்லபபோவதும்
இல்லை, பிரச்சினைகள் குறித்து பேசப்போவதும்
இல்லை, பின் ஏன் ஐநூறு சதவிகித உயர்வு?
இந்திய மக்கள் ஒரு கூமூட்டை கூட்டம் அது என்றும் தன் இயல்பாய் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து போராடியதில்லை...மதம்,மொழி..மிக பிரமாதமாக இந்த ஆளும் பன்னாடைகளை எதிர்த்து போராடாமல் பிரித்து வைத்திருப்பது.. இன்னொரு தூரதிர்ஷ்டம்...சுண்டுவிரலை நீட்டி சொல்லுங்கள் இந்த இந்திய கூமூட்டைகள் ஒருமுறையவாது எந்த விஷயத்திற்கு போராடியிருக்கிறது.. என்று. வேறு எந்த அந்நிய நாட்டிலும் இத்தகைய பொறம்போக்குகளை பார்க்கமுடியாது.. பாகிஸ்தான் உட்பட...காஷ்மீரில் என்ன நடக்கிறது... ராமேஸ்வர மீனவனுக்கு என்ன நடக்கிறது.. எந்த இந்தியனுக்கும் கவலை இல்லை.. அவர்களுக்கு இருக்கிறது.. எந்திரன்...இந்திய இலங்கை கிரிக்கெட்..வடஇந்தியகவர்ச்சி படங்கள். விடுங்க ஸார்.. இந்த நாடு எக்கெடு கெட்டு போன என்ன..? ஈழத்தமிழ் குழந்தைகள் மீது குண்டு போட்ட நாடு தான இது...
ReplyDelete