Tuesday, August 3, 2010

சதத்தை கடந்தது அமெரிக்கா!! ஆனாலும் சோகமாக! ஏன்?

எல்லோரும் ஜோராக ஒரு முறை கை தட்டுங்கள் பார்ப்போம்.
 உலகமயத்தின்    தோல்வி மிகத் தெளிவாக கண்ணுக்குத்
 தெரிகிறது. மறுக்க முடியாத சாட்சியாமாக அமெரிக்க
 வங்கித்துறையின் வீழ்ச்சி விளங்கிக்கொண்டிருக்கிறது, 
 ஜூலை மாதம்   முப்பதாம் தேதி வரையில் இவ்வாண்டு
திவாலான அமெரிக்க வங்கிகளின்  எண்ணிக்கை 111 .

 அமெரிக்க மக்களின் நெற்றியில் அமெரிக்க முதலாளிகள்
போட்ட நாமம் போல இந்த எண்ணிக்கை உள்ளதல்லவா?
சென்ற ஆண்டு   முழுவதும் திவாலான வங்கிகளின்
 எண்ணிக்கை 140  என்றால் இவ்வாண்டின்   எண்ணிக்கை
அதனை தாண்டி அதிகரிக்கும் என்பது நிச்சயம். ஜூலை
 மாதம்  மட்டும் திவாலான வங்கிகள் இருபத்தி இரண்டு.
அரசின் கட்டுப்பாடு இல்லாததுதான்  அத்தனை
 பிரச்சினைகளுக்கும் காரணம் என்று அமெரிக்க
 பொருளாதார நிபுணர்கள்  கூறத்தொடங்கியுள்ளனர்.

ஆனால் இது எல்லாம் இந்திய அரசின் பொருளாதார
மேதைகளுக்கு மட்டும் ஏன் புலப்படவில்லை என்பது
 புரியவில்லை. மன்மோகன், சிதம்பரம், அலுவாலியா,
பிரணாப் போன்றவர்கள் இந்தியாவின்
அவமானச்சின்னங்கள்.  அதானால்தான் அவர்கள்
 ஸ்டேட் வங்கியின் அரசு  பங்குவிகிதத்தை 55  % லிருந்து
  51 %  ஆக குறைத்து விட்டனர். இப்படிப்பட்ட 
துரோகிகள் ஆட்சி செய்யும் தேசம் உருப்படுமா? 

 

2 comments:

  1. Waii street உத்திரவின் பேரில் மன்மோகன் பிரதமராகவும்,சிதம்பரம் நிதி அமைச்சராகவும், அகூலி
    வாலியா அமைச்சர் அந்தஸ்த்தில் பதவியிலமரவும் சோனியா சம்மதித்தார்.அவர் மறுத்திருந்தால்,அத்வானி சம்மதித்திருப்பார்.வயத்தெரிச்சலை கிளப்பாதையும் ஐயா!..காஸ்யபன்.

    ReplyDelete
  2. அலுவலக அடிமாட்டு வேலை செய்துகொண்டே இருப்பதுதான் வாழ்க்கையா? தொழிலில் நீங்கள் நினைத்த நிலையை
    அடைந்துவிட்டீர்களா? இல்லை உலகம் எப்போதும் ஒரு பொழுதுபோக்கு கூடமா?. வாழ்கையும் பணம் சம்பாதிக்கும்
    வழியையும் நீங்கள் சமன்படுத்தி வாழ்ந்துகொண்டிருக்கிறீர்களா?. உங்கள் பயணம் எங்கே செல்கிறது?. ஜீஜிக்ஸ்.காம் www.jeejix.com இல் எழுதுங்கள். பரிசுகளை அள்ளுங்கள்.

    ReplyDelete