Sunday, February 16, 2014

ஒரு ஆணின் சமையல் குறிப்பு - இப்படியும் செய்யலாம் இட்லி ஃப்ரை




சனிக்கிழமை என் மகனுக்கு கல்லூரி இருந்தது. காலேஜ் கேண்டீன்
போரடிக்கிறது. கொஞ்சம் வித்தியாசமாக நீயே லஞ்ச் தயார் செய்து
கொடு என்று அவன் கேட்க, மீண்டும் சமையலறைப் பிரவேசம்.

வழக்கமாக இட்லி ஃப்ரை செய்யும் முறையில் ஒரு மாற்றம் ஒன்று
முயற்சித்தேன்.

பொதுவாக வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை வதக்கிக்
கொண்டு, விருப்பமுள்ளவர்கள் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து
அந்த கலவையில் இட்லி துண்டுகளை சேர்த்து செய்வார்கள்.

மாறுதலாக நறுக்கி வைத்த தக்காளி, வெங்காயத்தில் பாதியை
மிக்ஸியில் போட்டு நன்றாக சாறாக எடுத்துக் கொண்டேன்.
வாணலியில் எண்ணெய் வைத்து, கடுகு வெடித்த பின்பு, கொஞ்சம்
கடலைப் பருப்பை பொன்னிறமாக வறுத்த பின்பு வெங்காயம், பிறகு
தக்காளியை வதக்கிய பின்பு ஏற்கனவே தயார் செய்த சாறையும்
சேர்த்து மிளகாய் தூள், உப்பு, மசாலா பொடி சேர்த்து நன்றாக
கொதித்து கொஞ்சம் செமி சாலிடாக வந்த பின்பு அதிலே 
நான்கு துண்டங்களாக வெட்டப்பட்ட இட்லிகளையும் சேர்த்து
கொஞ்சமாக கிளறினால் இட்லி ஃப்ரை தயார்.

தக்காளியின் சுவை  இட்லியில் நன்றாக ஊடுறுவும் என்பது
இந்த முறையின் ஸ்பெஷல்.

சமைத்து விட்டு எப்படி உள்ளது என்று சொல்லுங்கள்
 

3 comments:

  1. ஆஹா! ஆண்கள் ச்மையலுக்குன்னு தனி ருசி இருக்கு. வேலூர் பக்கத்துலதான் ஆரணி இருக்கு. 18ரூபா பஸ் சார்ஜ் செலவு பண்ணி வீட்டுக்கு கொண்டு வந்து கொடுங்க.

    ReplyDelete
  2. நீங்க வழக்கம் போல சமையலில் அசத்துறீங்க.ஆனா இட்லி ப்ரை செய்வதில் நமக்குள்ள பிரச்சனை என்னான்னா இட்லி செய்வது தான் சிரமம்.

    ReplyDelete