பீஷ்மரைக்
கொண்ட சிகண்டி யார் என்ற பதிவின் இணைப்பு இங்கே உள்ளது . . . அதனை முதலில் படித்து விடுங்கள்.
பிறகு இரண்டாம் பாகத்தை தொடர்வோம்.
பீஷ்மரைக்
கொல்ல முருகனிடம் தவமிருந்து பெற்ற மாலை இருந்தும் யாரும் உதவ முன் வராத காரணத்தால்
அம்பை துருபதன் அரண்மனை கதவின் மீது மாலையை மாட்டி விட்டு தீக்குளித்து இறந்து போனது
வரை கடந்த பாகத்தில் பார்த்தோம்.
அம்பை
துருபத மன்னனின் மகளாக மீண்டும் பிறக்கிறாள். சிகண்டி என்று பெயர் சூட்டப்படுகிறாள். பருவ வயது வந்தவுடன் அரண்மனையின் வாயிலில் இருந்த
மாலையை தன் கழுத்தில் போட்டுக் கொள்கிறாள். இந்த செய்தி அறிந்ததும் துருபதன் நடுங்கிப் போகிறான். பீஷ்மருடைய பகைக்கு
ஆளாகி விட்டோமே என்று பதற்றம் ஆட்டி வைக்க, சிகண்டியை காட்டுக்கு துரத்தி விடுகிறான்.
காட்டுக்கு
போன சிகண்டி என்ன ஆனாள் என்பது தெரியவில்லை. இதற்கிடையில் இன்னொரு சம்பவம் நடக்கிறது.
துருபதன் முன்பொரு முறை துரோணரை அவமதித்தமைக்கு பழி வாங்க, அவன் மீது படை எடுக்க வேண்டும்
என்று துரோணர் குரு தட்சணை கேட்க (அர்ஜுனனிடம் துரோணர் கட்டை விரல் கேட்கவில்லை என்பது
கவனிக்கத்தக்கது) அர்ஜூனன், துருபதனை தோற்கடித்து
தேரில் கட்டி இழுத்து வருகிறான்.
இதனால்
கடுப்பான துருபதன், துரோணரை கொல்லக்கூடிய ஒரு மகனும் அர்ஜூனனை மணந்து கொள்ள ஒரு மகளும் வேண்டும் என்றும் ஒரு தீவிர யாகம் வளர்க்க, யாகத்தீயிலிருந்து ஒரு
மகனும் மகளும் வெளி வருகின்றனர். அந்த மகன்
திருஷ்டத்யுமன், மகள் திரௌபதி.
இந்த
காலகட்டத்தில் பெண்ணாக காட்டுக்கு துரத்தப்பட்ட சிகண்டி ஆணாக மாறி மீண்டும் துருபதன்
அரண்மனைக்கு வருகிறான். தான் செய்த தவத்தின் பலனாக ஆணாக மாறியதாக சொன்ன சிகண்டியை அனைவரும்
ஏற்றுக் கொள்கிறார்கள்.
காலம்
ஓடிக் கொண்டே இருக்க மகாபாரத போரும் வந்து விடுகிறது.
பாண்டவர்களின்
தளபதியாக சிகண்டியை நியமிக்கலாம் என்பது தர்மனின் யோசனை. தன்னுடைய மைத்துனன் திருஷ்டத்யுமனன்தான் தளபதியாக இருக்க வேண்டும் என்ற அர்ஜூனனின் கருத்துதான்
எடுபடுகிறது.
போர்
தொடங்கி விட்டது. பாண்டவர்கள் தரப்பில் பெரும் சேதம் கௌரவர்கள் தளபதி பீஷ்மரை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அதிலும்
ஒன்பதாம் நாளன்று நிலைமை படு மோசம்.
அதனால்
அன்று நள்ளிரவு சதியாலோசனை நடக்கிறது. கிருஷ்ணன்
கொடுத்த யோசனையை அமலாக்க முடிவு செய்கிறார்கள்.
மறுநாள்
அர்ஜூனன் தேரிலே சிகண்டியும் ஏறிக் கொண்டு பீஷ்மர் மீது அம்பு எய்கிறான். பெண்கள் மீது
தாக்குதல் நடத்தக்கூடாது என்பது பீஷ்மரின் கொள்கை. சிகண்டி முந்தைய பிறப்பில் அம்பையாக
பிறந்தவள், இந்த பிறப்பிலும் முதலில் பெண்ணாக பிறந்தவள் என்பதால் சிகண்டி மீது அம்புகள்
எய்யாமல் அமைதியாக இருக்கிறார். சிகண்டியின் அம்புகளால் பலவீனமான, எதிர் தாக்குதலும் நடத்தாத பீஷ்மர் மீது அர்ஜூனனும் சரமாரியாக சரம்
தொடுக்க பீஷ்மர் இறந்து போகிறார்.
பெண்ணாக பிறந்த சிகண்டியை கவசமாக பயன்படுத்திக் கொண்டுதான்
அர்ஜூனன் பீஷ்மரை கொன்றான்.
கிருஷ்ணனின்
சதியைத்தான் சங்கிகளும் பயன்படுத்துகின்றனர். பெண்ணாக இருந்தால் எதிர் தாக்குதல் நடத்த
மாட்டார்கள் என்பதால் பெண்களின் பெயரில் பொய்ப்பிரச்சாரத்தை கூசாமல் செய்கிறார்கள்.
அப்படிப்பட்ட சிகண்டிகள் மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.
அவற்றில்
எத்தனை சிகண்டிகளை அதன் மாடரேட்டர்களே இயக்குகிறார்களோ!
No comments:
Post a Comment