Friday, March 14, 2025

எழுத்தாளர்களும் தோசை மாவும் . . .

 


கடையில் வாங்கும் மாவு என்றாலே எழுத்தாளர்களுக்கு  அலர்ஜியாகி விடும் போல.

புளிச்ச மாவை திருப்பி கொடுக்கும் போது நடைபெற்ற சண்டையும் ஆஜான் மருத்துவ மனையில் சேர்ந்து பொய் வழக்கு போட்டு புளிச்ச மாவு என்று அதன் பின் அழைக்கப்பட்டதெல்லாம் இலக்கிய உலகின் அசிங்க வரலாறு.

 இப்போது இன்னொரு எழுத்தாளரும் மாவு தொடர்பான பதிவொன்றின் மூலம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.

 ஒரே டெம்ப்ளேட்டில் கிரைம் நாவல்கள் எழுதி குவித்து வரும் ராஜேஷ் குமார்தான் அவர்.

 எப்படி ஆஜான் தானே புனைப்பெயரில் கேள்வி கேட்டு பதில் எழுதுவாரோ, அது போல இவரும் தன்னிடம் யாரோ ஒரு மளிகைக்கடை செட்டியார் புலம்பிச் சொன்னதாக எழுதியுள்ளார்.      

 கடையில் வாங்கும் மாவு கலப்படமானது, ஆரோக்கியமற்றது , உடல் நலனுக்கு ஊறு விளைவிக்கும் என்ற ரீதியில் அந்த   புலம்பல் அமைந்திருந்தால் அதிலே கொஞ்சம் நியாயம் இருக்கிறது என்று ஏற்றுக் கொள்ளலாம்.

 ஆனால் அந்த புலம்பலோ, பெண்களுக்கு இப்போது கொஞ்சமும் பொறுப்பில்லை, வீட்டில் மாவு அரைப்பதில்லை, கணவனை கடைக்கு அனுப்பி மாவு வாங்கித் தரச் சொல்கிறார்கள் என்ற ரீதியில் பெண்களை வசை பாடுவதாகவே அமைந்திருந்தது.

 இனியாவது திருந்துங்கள் பெண்களே, பொறுப்பாக குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள் என்று எழுத்தாளரும் உபதேசம் செய்திருந்தார்.

 இட்லி, தோசை மாவு கடையில் கிடைப்பது என்பது பெண்களுக்கு பெரிய விடுதலைதான். ஞாயிற்றுக் கிழமைகளின் பெரும் பகுதியை மாவு அரைப்பதே கபளீகரம் செய்து விடும். அதிலும் கிரைண்டரின் கல்லை தூக்குவது, கழுவுவது எல்லாம் அத்தனை அசதி தரும், அது டில்டிங் கிரைண்டராக இருந்தாலும் கூட.

 மாவு அரைக்க உதவி செய்யுங்கள் என்று ஆண்களுக்கு உபதேசம் செய்திருந்தாலோ, சுத்தமான தண்ணீரில் எந்த கலப்படமும் இல்லாமல் மாவு அரையுங்கள் என்று சொல்லி இருந்தாலோ எழுத்தாளரை பாராட்டி இருக்கலாம்.

 ஆனால் இவரோ பெண்களை சமையலறைக்குள்ளேயே கைது செய்து அடைக்கப்பார்க்கிறார். 

 மனைவிக்கு மாவு வாங்கிக் கொடுத்த ஆஜான் ராஜேஷ்குமாருக்கு   மேல்.   

 பிகு: எழுதி நாளான பதிவுதான்.                                                               

 

No comments:

Post a Comment