Monday, September 16, 2024

ப்ளாக்மெயிலா மோடி?

 


ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மாநில அந்தஸ்தை மோடியால்தான் தர முடியும் என்று பில்லா ரங்கா கிரிமினல்களில் இளைய கூட்டாளியான அமித்ஷா முதலில் கூற, பிறகு முதல் கிரிமினலுமான மோடியும் சொல்லி விட்டார்.

ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை பறித்தவர்களே அவர்கள்தான். அந்த குற்ற உணர்வே இல்லாமல் இப்படி பேசுகிறார்கள் என்று எரிச்சல் படுவதோடு மட்டும் நிற்க முடியாது.

பாஜகவுக்கு வாக்களிக்கவில்லையென்றால் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை தர மாட்டோம் என்று மோடியும் அமித்ஷாவும் காஷ்மீர் மக்களுக்கு விடுக்கும் மிரட்டலாகத்தான் தெரிகிறது.

அதிகாரத்திற்காக எந்த அளவும் கீழிறங்கக் கூடிய கட்சி பாஜக.

காஷ்மீர் மக்கள் அவர்களை தோற்கடிக்க வேண்டும். 

Sunday, September 15, 2024

மத்யமர் சங்கிகளுடனான சண்டை ஓயவில்லை

 


கேவலமான, அயோக்கிய, அடி முட்டாள் சங்கிகள்

என்ற நேற்றைய பதிவின் தொடர்ச்சி இது.

படிக்காதவர்கள் மேலேயுள்ள  இணைப்பின் மூலம் படித்து விட்டு வரவும்.

சங்கிகளுக்கு ஆதரவாக "நீதி, நேர்மை, நியாயம்" என்று வஜனம் பேசும் மாடரேட்டரை காணவில்லை என்று எழுதியிருந்தேன்.

பிறகு அவர் வந்தார். தவறான பதிவை அனுமதித்தமைக்கான குற்ற உணர்ச்சி கொஞ்சமும் இல்லாமல் அந்த பதிவுக்கு முட்டு கொடுத்தார்.

"பதிவை விட  உங்கள் பதில் கேவலமாக உள்ளது" என்று நான் சொன்னதும் அவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.



என் பதில் நீக்கப்பட்டது என்று முதலில் ஒரு அறிவிப்பு.


அதற்கடுத்த நிமிடம் அடுத்த அறிவிப்பு



ஏழு நாட்களுக்கு குழுவிலிருந்து இடை நீக்கமாம்.

அந்த மாடரேட்டரின் அநியாயம் அதற்குப் பிறகும் தொடர்ந்தது. அயோக்கிய சங்கிகள் சித்தரித்த அதே பொய்யை இவரும் சொல்கிறார்.


எந்த தனி நபரையோ, தலைவரையோ அவதூறு செய்யக்கூடாது என்று அறிவுரை செய்து என் பதிலை நீக்கி, இடை நீக்கம் செய்த அந்த உத்தம மாடரேட்டர், மதங்களை கடந்து வாழ்ந்த ஒரு மகத்தான தலைவருக்கு பொய்யாக ஒரு மத முத்திரை கொடுத்து அசிங்கப்படுத்துகிறார்.

முதலில் நீக்கப்பட வேண்டியது இந்த உத்தம மாடரேட்டரைத்தான் . . .

22 ம் தேதிக்குப் பிறகு அந்த சண்டை நடக்கும். 

கேவலமான, அடிமுட்டாள் அயோக்கிய சங்கிகள் . . .

 


சங்கிகள் அனைவரும் அடி முட்டாள்கள் அல்லது அயோக்கியர்கள் என்ற என் மதிப்பீட்டை அவ்வப்போது அவர்கள் நிஜமாக்கிக் கொண்டே இருப்பார்கள்.

தோழர் சீத்தாராம் யெச்சூரி மறைந்ததற்கு தெய்வக்குழந்தை ட்விட்டரில் ஒரு பதிவு போட்டிருந்தது. இதெல்லாம் இரங்கல் தெரிவிக்கவில்லை என்று யார் அழுதார்கள்! அதிலே ஒரு படம் போட்டிருந்தது.


அந்த ட்விட்டர் பதிவில் பின்னூட்டமிட்டிருந்த சங்கிகள் அனைவருமே தோழர் யெச்சூரியை வசை பாடியிருந்தார்கள். மேலே உள்ள படத்தின் மூலம் தோழர் யெச்சூரியின் இறப்பினால் உருவான மகிழ்ச்சியை வெளிப்படுத்தியமைக்கு மோடியை பாராட்டவும் செய்திருந்தார்கள். யார் கண்டது இயற்கையாக பிறக்காத ஜந்துவிற்கும் கூட அப்படி ஒரு நோக்கம் இருந்திருக்கலாம். இந்தியாவின் மிகக் கேவலமான ஜந்துவல்லவா அது!

இதையெல்லாம் பதிவாக்க வேண்டுமா என்று இருந்த என்னை இன்று மத்யமர் ஆட்டுக்காரன் குழு கடுப்ப்பேற்றி விட்டது.

தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு அவர் பயின்ற, ஒரு மாபெரும் தலைவராக உருவான ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் அஞ்சலி செய்யப்பட்ட படத்தை போட்டு மூன்று பதிவுகள். 

ஸ்வப்பெட்டியை பார்த்த அயோக்கி சங்கிகள் அவரை கிறிஸ்துவராக மதம் மாற்றி விட்டார்கள்.  ஒரு பதிவு உடனே நீக்கப்பட்டு விட்டது. இன்னும் இரண்டு பதிவுகள் அப்படியே உள்ளது. ஒன்றில் மட்டும் அடிமுட்டாள் சங்கிகள், தங்களுக்கு புகட்டப்பட்ட நச்சை வாந்தியெடுத்துக் கொண்டு உள்ளார்கள்.



இதையெல்லாம் எப்படி அனுமதிக்கிறீர்கள் என்று நான் கேட்காமல் இல்லை.



சங்கிகளுக்கு எதிராக யாராவது எப்போதாவது பதிவு போட்டால் அதில் ஏதாவது சொத்தை எதிர்வாதத்தை சங்கிகள் வைத்தால் அவர்களுக்கு ஆதரவாக "நீதி, நேர்மை, நியாயம் என்றெல்லாம் வஜனம்" பேசிக்கொண்டு உடனே ஓடி வரும் மாடரேட்டரை ஏனோ காணவில்லை.

இன்னொன்றும் கூட நடந்தது. அதே குழுவில் ஒரு தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு அஞ்சலி செலுத்தியிருந்தது. அந்த பதிவுக்கு சிரித்து வைத்த ஒரு சங்கி "அடுத்து பிரகாஷ் காரத்" என்று பின்னூட்டம் போட கடுப்பில் "மோடி" என்று பதில் போட்டிருந்தேன். 

ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது.

எப்படி தந்தை பெரியார் மறைந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேலானாலும் சங்கிகளை அச்சுறுத்துகிறாரோ அவர் போலவே சங்கிகளை தோழர் யெச்சூரியும் அச்சுறுத்துகிறார். சங்கிகளின் வெறுப்பே தோழர் சீத்தாராம் யெச்சூரி ஒரு அர்த்தமிக்க, மக்களுக்கான, மக்கள் ஒற்றுமைக்கான வாழ்வை வாழ்ந்துள்ளார் என்பதன் அடையாளம். 

Saturday, September 14, 2024

ஆட்டுக்காரன் மன்னிப்பு, மன்னிப்புக்கு அல்ல .. .

 


கோவை அன்னபூர்ணா ஹோட்டல் முதலாளி- ஆணவம் தலைக்கேறிய நிர்மலா அம்மையார்- நிர்மலா அம்மையாருக்கு சற்றும் குறையாத ஆணவம் கொண்ட வானதி அம்மையார்- மிகப் பெரும் கேடி ஆட்டுக்காரன் ஆகியோரை பாத்திரங்களாகக் கொண்ட ஜி.எஸ்.டி நாடகத்தை ஆராய்ந்து பார்த்தால் "நடந்தது பங்காளிச் சண்டையே" என்ற முடிவுக்குத்தான் வர முடியும்.

ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டு பிரிமியத்தின் மீதான ஜி.எஸ்.டி அகற்றப்பட வேண்டும் என்ற அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் போராட்டம் பாலிசிதாரர்களின் நலனை அடிப்படையாகக் கொண்டது. அது அகற்றப்பட்டால் நிறுவனங்களும் பலனடையும் என்பது உபரிப் பலன்.

அன்னபூர்ணா சீனுவின் கோரிக்கையில் அப்படி நுகர்வோர் நலன் என்றெல்லாம் ஒன்றுமில்லை. வரியை அதிகம் வேண்டுமென்றால் போட்டுக்கோ, ஆனால் ஒரே சதவிகிதமாக போடு என்று கம்ப்யூட்டர் வசதிக்காக பேசியவர் அவர். வானதியம்மா சொன்னபடி பார்த்தால் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான அவர் ஏதோ உட்கட்சி பிரச்சினை காரணமாக  வானதியை கலாய்த்து விட்டார். அநேகமாக அவர் ஆட்டுக்காரன் கோஷ்டியாக இருக்கலாம்.

தான் கலாய்க்கப்பட்டது வைரலானதால் கடுப்பான வானதி அம்மையார் மன்னிப்பு கேட்க வைத்து அந்த காணொளி பரவுவதற்கும் ஏற்பாடு செய்து விட்டார்.

தன்னுடைய ஆளை மன்னிப்பு கேட்க வைத்து விட்டார்களே என்ற கடுப்பு இருந்தாலும் மன்னிப்பை ஏற்றுக் கொண்ட நிர்மலா அம்மையாருக்கு எதிராக வாய் திறக்கும் அளவிற்கு 56 இஞ்ச் மார்பனாக ஆட்டுக்காரன் இல்லாததால் வீடியோவை வெளியிட்டதற்கு மட்டும் மன்னிப்பு கேட்டு விட்டான். 



ஆக இந்த பிரச்சினையில் மன்னிப்பை ஏற்றுக் கொண்ட நிர்மலா, வானதி அம்மையார்களும் பின்பு அன்னபூர்ணா சீனுவும் மனிதனாகவும்  மன்னிப்பு கேட்டு தங்களை பெரிய மனுசன் என்று அன்ன்பூர்ணா சீனுவும் ஆட்டுக்காரனும் காண்பித்துக் கொண்டார்கள், அவர்கள் அத்தனை பேரும் ஒரே அழுக்குக் குட்டையில் ஊறிய அழுகிய மட்டைகள் என்பதையும் . . .

Thursday, September 12, 2024

அவர் துணிச்சல் யாருக்கு வரும்!!!

 அவசர நிலைக் காலம் முடிந்து தேர்தலில் இந்திரா அம்மையார் தோற்றுப் போகிறார்.

பிரதமர் பதவியை இழந்தாலும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வேந்தர் பதவியை துறக்க அவருக்கு மனம் வரவில்லை.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் தன் உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு இந்திரா அம்மையாரின் வீட்டிற்கு செல்கிறார்.

மாணவர்கள்தானே, இவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று அவர்களை பார்க்க இந்திரா வெளியில் வருகிறார்.

மாணவர் சங்கத் தலைவர், இந்திரா அம்மையார் பதவி விலக வேண்டும் என்று எழுதி எடுத்து வந்திருந்த கடிதத்தையும் அதில் சொல்லப்பட்ட காரணங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக அனைவர் முன்னிலையிலும் படிக்கிறார்.

கடிதத்தின் வெப்பம் தாங்க இயலாத இந்திரா அம்மையார் வீட்டிற்குள் சென்று விட்டார்.

அன்று மாலையே வேந்தர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை அனுப்பி விட்டார்.

சக்தி மிக்க முன்னாள் பிரதமர் என்றெல்லாம் பார்க்காமல் அவரது குறைகளை முகத்துக்கு நேராக உரக்கக் கூறிய அந்த மாணவர் தலைவர் . . .

தோழர் சீத்தாராம் யெச்சூரி.



செவ்வணக்கம் தோழர் சீத்தாராம் யெச்சூரி

 


உலக கம்யூனிஸ இயக்கங்களுக்கே இன்று ஒரு துயரமான நாள்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ன் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி இன்று மறைந்தார்.

மிகவும் இளைய வயதில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரானவர் அவர். 

இந்தியாவின் மிகச் சிறந்த அறிஞர் அவர். மார்க்சியம், வரலாறு, அரசியல், பொருளாதாரம், கலை, அறிவியல், இந்திய அரசியல் சாசனம்,  என்று அனைத்து துறைகளிலும் அவர் விற்பன்னர், 

மிகச் சிறந்த எழுத்தாளர், பேச்சாளர்,

தொழிலாளர் வர்க்கத்தின் நம்பிக்கை நட்சத்திரம்,

இன்சூரன்ஸ் ஊழியர்களின் நெருங்கிய தோழர். தன்னை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கௌரவ உறுப்பினர் என்று சொல்லியுள்ளார்.

எங்களுடைய ஊதிய உயர்வில் ஒரு முறை சிக்கல் ஏற்பட்ட போது அவரது தலையீடு, மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது.

அவருடைய உரையை பல முறை கேட்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவை அனைத்தும் புரிதலை அதிகரிக்கும் வாய்ப்பாகவே அமைந்தது.

வேலூருக்கு அவர் ஒரு முறை வந்த போது எங்கள் சங்கத்தின் சார்பில் அவருக்கு தோழர்களுடன் ஒரு வரவேற்பளித்தோம். அந்த நினைவு இன்று மனதில் ஓடிக் கொண்டே இருந்தது.

பாசிஸ சக்திகளுக்கு எதிரான போராட்டத்திற்கு தத்துவார்த்த பின்புலத்தை அமைத்துக் கொடுத்தவர் தோழர் சீத்தாராம் யெச்சூரி.

நேபாளத்தில் ஜனநாயகம் மலர்வதற்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளை அந்நாட்டு நாடாளுமன்றமே பதிவு செய்துள்ளது.

அவரது இழப்பு இந்தியாவிற்கும் உழைக்கும் மக்களுக்கும் முற்போக்கு இயக்கங்களுக்கும் பெரும் இழப்பு.

செவ்வணக்கம் தோழர் சீத்தாரம் யெச்சூரி. . .



வேலூரில் தோழர் யெச்சூரிக்கு இன்சூரன்ஸ் ஊழியர்கள் அளித்த வரவேற்பு கீழே . . .









Wednesday, September 11, 2024

குண்டர்கள் நீங்கள்தான் வாய்க்கொழுப்பு சூர்யா

 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் மீது அவதூறு செய்து கைதாகி இப்போதும் ஜாமீனில் உலவிக் கொண்டிருக்கும் எஸ்.ஜி.சூர்யா எனும் பாஜகவின் திமிர் பிடித்த ஆணவ சங்கி, கம்யூனிஸ்டுகள் மீது விஷம் கக்கியிருக்கிறான்.


தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்கிக் கொண்டிருக்கும் சாம்சங் நிறுவனத்துக்கு எதிராக அந்நிறுவன தொழிலாளர்கள், உழைக்கும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமான சி.ஐ.டி.யு தலைமையில் சங்கம் அமைத்து போராடி வருகிறார்கள்.

தொழிலாளர் நலத்துறை, காவல்துறை ஆகியோரோடு கூட்டணி வைத்துக் கொண்டு சாம்சங் நிர்வாகம் அடக்குமுறையை ஏவி விட்டுள்ளது.

முதலாளிகள் போடும் எலும்புத் துண்டுகளுக்காக வாலாட்டும் பாஜக கட்சியின் சூர்யா, போராடும் தொழிலாளர்களை கம்யூனிஸ்ட் குண்டர்கள் என்று கொச்சைப் படுத்தியுள்ளான்.

அந்த நாலு கால் பிராணிக்கு குண்டர்கள் யாரென்று சொல்ல வேண்டியுள்ளது.

குஜராத்திலும் மும்பையிலும் கோவையிலும் முசாபர் நகரிலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறியாட்டம் ஆடி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று  அவர்களின் உடமைகளை அழித்த காவிக் கயவர்கள்தான் குண்டர்கள்.

நாடோடி இனச்சிறுமி ஆசிபாவை கோயிலுக்குள் வைத்து கூட்டு  பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்த அயோக்கியர்களும் அவர்களை விடுதலை செய்ய தேசியக் கொடியோடு ஊர்வலம் சென்ற பாஜக எம்.எல்.ஏ க்களும் கட்சியினரும்தான் குண்டர்கள். 

மணிப்பூரில் சிறுபான்மை இன மக்களை கொன்று குவித்து பெண்களை அவமானப்படுத்திய உங்கள் ஆட்களும் முதலமைச்சரும்தான் குண்டர்கள். 

மாட்டின் பெயரில் தொடர்ந்து அப்பாவிகளை கொன்று கொண்டிருக்கும் பாஜக, சங் பரிவாரத்தை சேர்ந்தவர்கள்தான் குண்டர்கள்.

பிள்ளையார் ஊர்வலம் என்ற பெயரில் குடித்து கூத்தடித்து சென்று கொண்டிருக்கிறார்களே அவர்கள்தான் குண்டர்கள்.

திருமணம் மீறிய உறவுப் பிரச்சினைகளுக்காக பல சங்கிகள் கொல்லப் படும் சூழ்நிலையில் அதனை மதப் பிரச்சினையாக திசை திருப்புகிற ஆட்டுக்காரன், எச்.ராசா, எஸ்.ஆர்.சேகர், கரு,நாகராஜன், முருகானந்தங்கள், எஸ்.ஜி.சூர்யா போன்ற அயோக்கிய சங்கிகள்தான் குண்டர்கள்.

இந்த குண்டர்கள் கூட்டத்தின் தலைவர்கள்தான் மோடியும் அமித்ஷாவும்.

தொழிலாளர்களின் உரிமைகளை மட்டுமல்ல, தொழில் நிறுவனத்தையும் பாதுகாக்கும் காவல் அரணாக திகழ்வது இடதுசாரி தொழிற்சங்க இயக்கங்களே. 

எல்.ஐ.சி யை பாதுகாக்கும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஒரு சின்ன உதாரணம்.

தொழிற்சங்க இயக்கத்தை கொச்சைப்படுத்தும் கேவலமான ஜந்து சூர்யாவே உங்கள் காவிக்கூட்டம் சார்பில் பி.எம்.எஸ் என்று ஒரு சங்கம் வைத்துள்ளீர்களே, அந்த ஆணி தேவையற்றதுதானே! கலைத்து விடவும். 

நான் ரசித்தது உங்களுக்கும் . . .

 


முக நூலில் நான் பார்த்து ரசித்த ஒரு காணொளி உங்களுக்காகவும், நீங்களும் ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு . . .


அந்த குழந்தையின் முயற்சியையும் அதை விட அதன் உடல் மொழியையும் நான் வெகுவாக ரசித்தேன். எதிர்காலத்தில் மிகச் சிறந்த கலைஞனாக உருவெடுப்பான் என்று நம்புகிறேன். . .

Tuesday, September 10, 2024

பாலஸ்தீனம் என்ற அருவெறுப்பான சொல்

 


அரண்செய் Haseef Mohamed தோழரின் பதிவு..

❤
❤
இந்த மனிதருக்குள் எவ்வளவு அற்புதமான எழுத்தாற்றல் இருக்கிறது பாருங்களேன்..
'பாலஸ்தீனம் என்ற அருவெறுப்பான சொல்
---------------------------------------------------------
ஆம்ஸ்டர்டாமிலும், ஆண்ட்வெர்ப்பனிலும் பாலஸ்தீன ஆதரவு சுவரொட்டிகளை பார்த்தபிறகு பாரிசிலும் அதைத் தேடினேன். தர்பூசணிக் கொடிகளுடன் மிகப்பெரிய போராட்டத்தை பார்க்க ஆவலாக இருந்தேன். ஒருவேளை, ஈஃபிள் டவருக்கும், லூவார் மியூசியத்திற்கும் மெட்ரோவில் இல்லாமல் சாலையில் சென்றிருந்தால் சில சுவரொட்டிகளையாவது பார்த்திருக்கலாம்.

இந்தியாவிலிருந்து நான் புறப்பட்ட சமயம், காங்கிரஸ் ஒப்புதல் இல்லாமலேயே இஸ்ரேலுக்கு 147 மில்லியன் டாலர் ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவெடுத்திருந்தது. அன்றைய தினம், நுசேய்ரட் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து அல்ஜெசீரா செய்தி வழங்கிக்கொண்டிருக்க, மேற்கு ஊடகங்கள் வழக்கம்போல் இஸ்ரேல் அரசுக்கு மக்கள் தொடர்பு பணியை செய்தி கொண்டிருந்தன.

ஜெர்மனியின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள டிரையர், ரோம சாம்ராஜ்யத்தின் பழமையான நகரங்களில் ஒன்று. காரல் மார்க்ஸ் பிறந்த வீட்டை பார்க்க வேண்டும் என்பதைத் தவிர, அந்த நகரத்தில் எனக்கு வேறு எந்த திட்டமும் இல்லை. இதற்காகவே, பாரிசிலிருந்து 7 மணி நேரம் பயணித்து இங்கு வந்திருக்கிறேன். ஒரு நாள் முழுவதும் மார்க்ஸ் வீட்டில் கழித்துவிட்டு அன்று இரவே சுவிட்சர்லாந்து புறப்பட வேண்டும் என்பது திட்டம். ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சியினால் பராமரிக்கப்படும் அந்த வீடு, ஒரு அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது. 150 ஆண்டுகளுக்கு முன் இந்தக் கட்சி முன் வைத்த கோதா வேலை திட்டத்தை மார்க்ஸ் கடுமையாக விமர்சித்து எழுதியிருந்தார். மார்க்சியத்தின் அடிப்படையை புரிந்துகொள்ள உதவும் நூல்களில் அதுவும் முக்கியமானது.

பெரிய எதிர்பார்ப்புகளுடன் உள்ளே நுழைந்த எனக்கு தொடக்கத்திலேயே ஏமாற்றம் காத்திருந்தது. வரவேற்பு புத்தகத்தில் சிலர் கம்யூனிச வெறுப்பைக் கக்கியிருந்தார்கள். அதில் பெரும்பாலும் சீனர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களில் ஸ்டாலின், மாவோ மீதான வெறுப்பு இழையோடியிருந்தது. சேவும், ஃபிடிலும் கூட அதற்குத் தப்பவில்லை. ஒட்டுமொத்தில் இந்திய சுதந்திரப் போராட்டம் குறித்து ஆர்எஸ்எஸ் ஒரு அருங்காட்சியம் நடத்தினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது மார்க்சின் வீடு.

மார்க்ஸ் அமர்ந்திருந்த நாட்காலி, பயன்படுதிய பொருட்கள், அவர் கைப்பட எழுதிய சில பிரதிகள் ஆகியவற்றை பார்த்த திருப்தியுடன், மார்க்ஸ் முகமூடி அணிந்து ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டு மதியமே அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

மட்ட மத்தியானத்திலும் குளிர்ந்து கிடந்த அந்த நகரத்தின் குறுகிய வீதிகளில், புகைத்துத் தள்ளியபடியும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும், கடை கடையாக ஏறி இறங்கி, அலைந்து திரிந்து கடைசியாக கோல்பிங் ஹாஸ்டலை அடையும்போது மாலை 5 மணி. வரவேற்பரை லாக்கரில் வைக்கப்பட்டிருந்த பேக்பேக்கை எடுத்துக்கொண்டு, ரிசப்ஷனிஸ்டுக்கு ஒரு வணக்கத்தையும் வைத்துவிட்டு ரயில் நிலையத்திற்கு புறப்பட்டேன்.

பாரிசிலிருந்து கிளம்பும்போதே, சூரிக்கிற்கு டிக்கெட் போட்டுவிட்டேன். டிரையரிலிருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 6 மணிக்கு சூரிக்கை அடையும். டிக்கெட் போடும் அவசரத்தில், புறப்படும் மற்றும் சேரும் நேரங்களை மட்டும் கவனித்த நான், இடையில் இரண்டு ரயில்கள் மாற வேண்டும் என்பதையோ, உயிரை உருக்கும் பனியில், ஒரு இரவு முழுவதும் காத்திருக்க வேண்டும் என்பதையோ கவனிக்கத் தவறிவிட்டேன்.
ரயில் பெட்டிகள், காற்று நுழையாதபடி சீல் வைத்ததைப்போல் அடைக்கப்பட்டிருந்தால் உள்ளே கதகதப்பாக இருந்தது. இரண்டு பெட்டிகள் கடந்து ஒரு இடத்தை கண்டுபிடித்து அமர்ந்தேன். இடையில் இருந்த மேசையைக் கடந்து எதிரே ஒரு இளைஞன் அமர்ந்திருந்தான். களைந்துபோன தலைமுடி, காதில் கடுக்கன், முகத்தை தவிர வெளியில் தெரிந்த பாகங்கள் அனைத்திலும் பச்சை குத்தியிருந்தவன் திடீரென்று கையை நீட்டி தன்னை அறிமுகப்படுத்தினான். அவன் கையை முந்திக்கொண்டு வாயிலிருந்து புறப்பட்ட சாராய வாடை என் மூக்கை அடைந்துவிட்டது. தயங்கியபடி நான் கையைக் கொடுக்க ஜெர்மனில் இடைவிடாது பேசத் தொடங்கினான். என் பதிலுக்காக காத்திருக்காமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தான். மொழி புரியாவிட்டாலும் அவன் வார்த்தையில் வன்மம் இருப்பதை முகபாவத்தினால் அறிந்துகொண்டேன். ஐரோப்பிய திரைப்படங்களில் பார்த்த நியோ-நாஜிக்கள் நினைவுக்கு வந்தனர். நான் சுற்றுலாபயணியா அல்லது தஞ்சம் கோரி வந்த அகதியா என்பது அவனுக்கு தெரிய நியாயம் இல்லை. என்னை பிந்தையதாக கருதினால், இவன் பேச்சோடு நிற்கப்போவதில்லை என்பது என் அச்சம். தூர தேசத்தில், தனிமையாக மேற்கொள்ளும் பயணத்தில், தவிர்க்க முடிந்த பிரச்னைகளை தவிர்ப்பதே புத்திசாலித்தனம். சட்டென்று எழுந்து பேக்பேக்கை அள்ளிக்கொண்டு அடுத்த பெட்டியை நோக்கி நடக்கத் தொடங்கினேன். அவன் அப்போதும் பேசுவதை நிறுத்துவதாக தெரியவில்லை.

பேசெல் ரயில் நிலையத்தை அடைந்தபோது நள்ளிரவு 12 மணி. அடுத்த ரயில் காலை 4.30 மணிக்கு என்பதால், இரவு முழுவதுதையும் அங்கேயே கழிக்க வேண்டும். வெளியில் கொஞ்சமும் இரக்கமின்றி பனி கொட்டிக்கொண்டிருந்தது. இதை அனுபவிக்கத்தான் இந்த சயமத்தில் என் பயணத்தை திட்டமிட்டேன் என்பதால், யாரையும் கடிந்துகொண்டு என்னை நானே சமாதானம் செய்துகொள்ளவும் வழியில்லை.

சூடாக ஒரு ஃகாபி கிடைத்தால் சொர்க்கத்தையே பார்த்துவிடலாம். ஆனால், நரகத்தை கண்முன் காட்டியதுபோல் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

தெர்மல் உடை, அதற்குமேல் ஒரு டீ ஷர்ட், அதற்கும் மேல் ஒரு ஸ்வெட்டர், தடித்த ஜாக்கெட், கழுத்தை சுற்றி மப்ளர், கையில் குளோஸ், காலில் உள்ளன் சாக்ஸ், அதற்கு மேல் ஷூ, காதை மறைத்தபடி பியனி என சிறு ஓட்டை கூட இல்லாமல் ஒட்டுமொத்தமாக மறைத்திருந்தாலும் ஊசியைப் போல் ஊடுருவி உடம்பை குத்திக்கொண்டிருந்தது பனி.

அந்த இரவைக் கழிக்க, ஓர் கதகதப்பான இடத்தை தேடி அலைந்து கொண்டிருந்தேன். ஸ்டேஷனின் நீள அகலங்களை அளந்தும் எதுவும் அகப்படவில்லை. நேரம் செல்லச் செல்ல கூட்டம் குறையத் தொடங்கியது. நள்ளிரவு நெருங்கியதும் அனைத்தும் அடங்கின. ஸ்டேஷனின் மைய மண்டபத்தை கடந்து வாசலுக்கு வந்து வெளியில் எட்டிப்பார்த்தேன். வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழ் சரிந்துகொண்டிருப்பதை உணர்ந்தேன். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் என்று எனக்குள் கூறிக்கொண்டு ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்தேன்.

ஒரு பழைய கத்தீட்ரலைப்போல் காட்சியளித்த அந்த ரயில் நிலையத்தின் கூரைகளை ராட்சத தூண்கள் தாங்கிப்பிடித்திருந்தன. அடுத்த ரயிலைப் பிடிக்க, அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் மட்டும் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு கிடையில் அந்தப் பெண் தனியாக அமர்ந்திருந்தாள்.
தோற்றத்தையும் ஹிஜாப்பையும் வைத்துப் பார்த்தபோது அவள் மத்திய கிழக்கு அல்லது வடக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவள் எனத் தோன்றியது. திடீரென்று வாசலைக் கடந்து ஒருவன் உள்ளே நுழைந்தான். அவன் தள்ளிக்கொண்டு வந்த டிராலியில் ஒரு கைக் குழந்தையும் அதை விட கொஞ்சம் பெரிய குழந்தையும் இடுக்கத்தில் படுத்திருந்தன. எந்த மறைப்பும் இல்லாத அந்த டிராலி பனியில் முழுவதும் நனைந்திருந்தது. கைக் குழந்தை ஆழ்ந்த உரக்கத்தில் இருக்க மற்றொரு குழந்தை கண்களை உருட்டிக்கொண்டிருந்தது.
அவன் நேராக அந்தப் பெண்ணின் அருகே சென்றான். நான் சிகரெட்டை அனைத்துவிட்டு அவன் பின்னே நடந்தேன். டிராலியை அவள் அருகே நிறுத்தியவன் சத்தமாக பேசத் தொடங்கினான். மொழி புரியாவிட்டாலும் அது குடும்பச் சண்டை என்று புரிந்தது. குழந்தைகளை சுட்டிக்காட்டி அவன் பேசினான். அதை கவனிக்காமல் உணர்வற்று இருந்தாள் அவள். இவை அனைத்தையும் அந்தக் குழந்தை மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தது. திடீரென்று சைக்கிளை ஓட்டிக்கொண்டு ஒரு சிறுவன் ஸ்டேஷனுக்குள் நுழைந்தான். அந்தப் பெண்ணை நோக்கி வேகமாக வந்தவன், அவள் அருகே வட்டமடித்து நிறுத்தினான். அதுவரை அமைதியாக இருந்தவள், எழுந்துபோய் அவன் முதுகில் ஒன்று வைத்தாள். அந்த ஆண் அவளைத் தடுக்கப்போக அவனுக்கும் ஒன்று விழுந்தது. சட்டென்று அவர்களை விட்டு இரண்டு அடி பின்னோக்கிச் சென்ற அவள் சத்தமாக பேசினாள். தூங்கிக்கொண்டிருந்த குழந்தை சிணுங்கத் தொடங்கியது. விருட்டென்று டிராலியை தன் பக்கம் இழுத்து சுருண்டு கிடந்த துணியை குழந்தைகள் மீது போர்த்தினாள். அசட்டுச் சிரிப்புடன் அந்த ஆண் டிராலியை தள்ளுவற்கு முன்னே வந்தான். சைக்கிளிலிருந்து இறங்கிய சிறுவன் அதைத் தள்ளிக்கொண்டு நடக்கத் தயாரானான். அவன் காதிலிருந்து விலகியிருந்த பனிக்குல்லாவை சரி செய்து விட்டு வாசலை நோக்கி அவள் நடக்கத் தொடங்கினாள். அவள் பின்னால் அவர்களும் நடக்கத் தொடங்கினர். அந்தக் குடும்பம் வாசலைக் கடந்து செல்வதை ஒரு சிறுகதையைப் படித்து முடித்த திளைப்போடு நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒரு அரபு வசந்தம் அவர்களை இங்கு அடித்து வந்திருக்கலாம். கொந்தளிக்கும் கடல் பயணத்தில் அவர்கள் மட்டும் உயிரோடு கரை ஒதுங்கியிருக்கலாம். தீவிரவாதத்திற்கு எதிரான போரில் அவர்கள் வாழ்க்கையே திசைமாறியிருக்கலாம். ஜனநாயகத்தை நிலைநாட்டும் சண்டையில் அகதிகளாக்கப்பட்டிருக்கலாம்.

எது எப்படியோ, குறைந்தபட்சம் அவர்கள் தங்கியிருக்கும் வீடு, இந்தப் பனியை தாங்க போதுமானதாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது.

சார்பியல் கொள்கையையின் படி அந்த இரவின் ஒவ்வொரு நொடியும் யுகங்களாகவே நகர்ந்தன. தத்தித் தவழ்ந்து மணி இரண்டைத் தொட்டது. செய்வதறியாது அலைந்துகொண்டிருந்தவன் எதேச்சையாக நடைமேடை பக்கம் எட்டிப்பார்த்தேன். நான் பயணிக்க வேண்டிய ரயில் நின்றுகொண்டிருந்தது. அடுத்த நொடியே அட்ரினல் சுரந்து உடலெங்கும் வெப்பம் பரவியது. உறைந்துபோயிருந்த என் உறுப்புகள் பனியை உதிர்த்து விழித்துக்கொண்டன. உற்சாகமிகுதியில் ரயிலை நோக்கி ஓடினேன்.

பட்டனை தொட்டதும் கதவு திறந்தது. அது எழுப்பிய சத்ததில் தூங்கிக்கொண்டிருந்த சிலர் தலையைத் தூக்கிப் பார்த்தனர். பின் அதேவேகத்தில் படுத்துக்கொண்டனர். பேக்பேக்கை ஒரு சீட்டின் ஓரத்தில் தூக்கி எறிந்துவிட்டு அதன் மேல் என்னையும் எறிந்துகொண்டேன். குளிருக்கு இதமாக கைகளை அக்கத்தில் கொடுத்துவிட்டு கண்களை மூடினேன். காய்ந்த விறகைப் பற்றிக்கொண்ட நெருப்பைப் போல் தூக்கம் கவ்விக்கொண்டது.

ரயில் எஞ்சினின் அதிர்வும், டிக்கெட் பரிசோதகரின் குரலும் என் தூக்கத்தை கெடுத்தன. ஏறக்குறைய ஓய்வு பெரும் வயதைத் தொட்ட அந்த வெள்ளை மனிதர், வரிசையாக ஒவ்வொருவரிடமும் டிக்கெட்டை கேட்டுக்கொண்டிருந்தார். தூக்கம் கலைந்தாலும், எழுந்திருக்க மனமில்லாமல் அவரையே கவனித்துக்கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் இருந்த நான்கு இளைஞர்களை அவர் நெருங்கியபோது, எழுந்து அமர்ந்துகொண்டேன். மங்களான வெளிச்சத்தில் அவர்களின் முகம் சரியாகத் தெரியவில்லை. அவர்கள் அருகே வந்த பரிசோதகர் “டிக்கெட்” என்று கேட்டார். தலையை தொங்கப்போட்டிருந்த அவர்கள் சலனமின்றி அமர்ந்திருந்தனர். அவர் மறுபடியும் “டிக்கெட்” என்று கேட்டதும் ஒரு இளைஞன் மட்டும் தலையைத்தூக்கி அவர் முகத்தை பார்த்தான். யாருக்கும் கேட்டுவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன் “பாலஸ்தீன்” என்று பதில் அளித்தான்.

அந்த வார்த்தை நிச்சயம் அவரை கோபமடையச் செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவ்வளவு சத்தமா அவர் பேசியிருக்க மட்டார். நொடிக்கு நான்கு வார்த்தைகள் என்ற வேகத்தில் அவர் வாயில் ஜெர்மன் விளையாடியது. விட்டிருந்தால் அவர்களைப் பாய்ந்து கடிப்பது போல் இருந்தது அவர் பார்வை.

எந்த சலனமுமின்றி இருக்கையை விட்டு எழுந்த அந்த இளைஞர்கள் அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு வாசலை நோக்கி நடந்தனர். வெறிபிடித்த நாயைய்போல் குரைத்துக் கொண்டிருந்த அந்த பரிசோதகரின் வார்த்தைகளை விட, மொழி பெயர்க்கப்படாத அவர்களின் பார்வை அத்தனை அர்த்தம் பொதிந்ததாகத் தோன்றியது. மெதுவாக தலையைத் திருப்பி ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன். கொட்டும் பனி அனைத்தையும் நனைத்துக்கொண்டிருந்தது. ஈரமற்ற இதயங்கள் உள்ளே உறங்கிக்கொண்டிருந்தன.'

எழுத்தாளர் தோழர் சம்சுதீன் ஹீரா அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து
நகலெடுத்தது.



முடிவெடுக்க தாமதமேன் நிர்மலா மேடம் ???

 


ஜி,எஸ்.டி கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆயுள் இன்சூரன்ஸ் மற்றும்  மருத்துவக் காப்பீட்டு பிரிமியத்திற்கான 18 % ஜி.எஸ்.டி அகற்றப் படும் அல்லது குறைக்கப்படும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

ஆனால் நேற்றைய கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அமைச்சர்களின் குழு ஒன்று விவாதித்து 50 நாளில் ( 50 நாளுக்குள் முன்னேற்றம் இல்லையென்றால் என்னை உயிரோடு கொளுத்துங்கள் என்று செல்லா நோட்டு சமயத்தில் நான்-பயாலாஜிகல் குழந்தை சொன்ன வஜனம்தான் 50 நாள் என்றாலே நினைவுக்கு  வந்து தொலைக்கிறது) பரிந்துரை அளிக்க வேண்டும் என்றுதான் முடிவெடுத்துள்ளது.

ஆயுள் இன்சூரன்ஸ் மற்றும்  மருத்துவக் காப்பீட்டு பிரிமியத்திற்கான 18 % ஜி.எஸ்.டி  நியாயமா இல்லையா என்று முடிவெடுக்க எதற்கு ஒரு குழு?

ஆளும் கட்சி மந்திரி உட்பட பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜி.எஸ்.டி கூடாதென்ற ஒருமித்த கருத்து உடையவர்கள்தான். 

பிறகு எதற்கு ஆய்வு, மண்ணாங்கட்டி எல்லாம்?

மோடி, நிர்மலா அம்மையார் கூட்டணியை போல் மக்கள் விரோதிகள் யாரும் கிடையாது. எந்த பலனாக இருந்தாலும் முதலாளிகளுக்கு மட்டுமே செல்ல வேண்டுமென்ற சிந்தனை கொண்ட தரகர்கள்.

அகற்றவோ அல்லது குறைக்கவோ முடியாதென்று சொன்னால் அதுவே ஹரியானா, காஷ்மீர், மஹாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகளை பாதிக்கும் என்பதால் ஒரு குழு அமைத்து சமாளித்துள்ளார்கள்.

ஒரு பிரச்சினைக்கு தீர்வு கண்டு பிடிக்காமல் அதை கிடப்பில் போட செய்யும் முயற்சிக்கு பெயர்தானே குழு அமைப்பது!

என்ன! ஜி.எஸ்.டி அகற்றல் கோரிக்கையை வலியுறுத்தும் எங்கள் சங்கத்தின் போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். 


Monday, September 9, 2024

மடை மாற்றி மாலன்

 


மூட நம்பிக்கை பேச்சாளர் மஹாவிஷ்ணு குறித்து எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான தோழர் அ.முத்துகிருஷ்ணன், முகநூலில் பல பதிவுகள் எழுதியிருந்தார். அதில் ஒரு பதிவில் மஹாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தோழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தையும் அமைச்சரிடம் பேசியதையும் பாராட்டி  இருந்தார்.

வழக்கம் போல அங்கே வந்த மூத்த்த்த்த்த்த்த்த்த எழுத்து வியாபாரி, அவரது வழக்கமான மடை மாற்றும் உத்தியாக "கலைஞர் யோகா செய்வார், கலைஞர் அசைவம் சாப்பிடுவதை விட்டு விட்டார்" என்று சம்பந்தமில்லாமல் பிதற்றியிருந்தார்.



இப்படி மடை மாற்றுவதே அவர்கள் தரப்பு பலவீனமாக உள்ளது என்பதன் அர்த்தம். 

வயதான காலத்தில் இப்படி வாங்கிய காசுக்கு வாலாட்டுவதை நிறுத்திக் கொண்டால் மாலன் அசிங்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம். 

Sunday, September 8, 2024

மணிப்பூர் மாறாதா?

 


மணிப்பூர் மீண்டும் பற்றி எரிகிறது. நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரிக்கிறது. குகி இனத்தவர் உள்ளே நுழைய வாய்ப்பில்லாத பகுதிகளில் மெய்தி இனத்தவர்களே தாக்குதல்கள் நடத்தி குகி இனத்தவர்கள் மேல் பழி போடுகின்றனர் என்று சொல்கின்றனர்.

பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவோ, அமைதியை உருவாக்கவோ பாஜக கட்சியோ, முதல்வரோ, மோடியோ விரும்பவில்லை.

மெய்தி இனத்தவரின் வோட்டுக்களை தக்க வைக்க கலவரம் நீடிக்க வேண்டும் என்றுதான்  பாஜக விரும்புகின்றனர் போல . . .

வந்துட்டாங்கய்யா, முட்டர்கள் வந்துட்டாங்க . . .

 


மூட நம்பிக்கை பேச்சாளர் மஹாவிஷ்ணுவிற்கு முட்டு கொடுத்து சங்கிகள் வரிசையாக பதிவாக எழுதி தள்ளி விட்டார்கள். எங்கே ? அதான் மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் . . 

என்னைப் போல் நீங்களும் அவர்களை எள்ளி நகையாட . . .















இதிலே மூத்த்த்த்த்த மாலன் வேறு வந்து சிக்கியுள்ளார். அவருக்கு தனியாக பாயசம் தயாரிக்க வேண்டும்.