Saturday, July 8, 2017

க்ளவுஸ் கூட தர முடியாதா? ஆதார் எப்படி?




எங்கள் கோட்டத்தின் இருபதாவது மகளிர் மாநாட்டின் முதல் பகுதி இன்று வேலூரில் நடைபெற்றது. 

ஆம். எங்கள் கோட்டம் அளவில் பெரியது என்பதால் வேலூர், திருவண்ணாமலை மாவட்ட மகளிர் தோழர்களுக்காக ஒரு பகுதியும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுவை யூனியன் பிரதேச மகளிர் தோழர்களுக்காக  இன்னொரு பகுதியாகவும் நடக்கும்.

இன்று வேலூரில் நடைபெற்ற மாநாட்டை சி.ஐ.டி.யு அமைப்பின் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் தமிழ் மாநில அமைப்பாளர் தோழர் எம்.மகாலட்சுமி துவக்கி வைத்தார். முறைசாரா தொழிலாளர்கள் மத்தியில் செயல்பட்டு வரும் அவர் பேசுகையில் பல அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 

அதிலே இரண்டு செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

"எத்தனை சோப்புக்கள்  போட்டுக் கழுவினாலும் கைகளில் உள்ள வீச்சம் போக மறுக்கிறது. சாப்பிடவே முடிவதில்லை. நாங்கள் கைகளுக்கு க்ளவுஸ்தானே கேட்கிறோம். அதைக் கூட அரசாங்கத்தால் வாங்கித் தர முடியாதா"

என்று 

நகரசுத்தி தொழிலாளர்கள் கதறக்கூடிய நிலைமையில்தான் அவர்களை அரசு வைத்திருக்கிறது. 

உப்பளத்தில் வேலை பார்க்கக் கூடிய தொழிலாளர்களின் கைகளைப் பாருங்கள். உப்பு கீறி கீறி, ரத்தம் வடிந்து அவர்கள் கைகளில் ரேகையே அழிந்து போயிருக்கும். உங்களுக்கெல்லாம் எப்படி ஆதார் கார்டு கொடுத்தார்கள் என்று கேட்கும் அளவிற்கு ரேகை அழிந்திருக்கும்.

 காலை நான்கரை மணிக்கு உப்பள வயலில் இறங்குபவர்கள் பத்தரை மணிக்கு முன்பாக வெளியே வந்து விட வேண்டாம். இல்லையென்றால் அவர்கள் கால்களின் நிலை கடினமாகி விடும்.

இவ்வளவு சிரமபட்டு உழைப்பவர்களுக்கு இந்த வேலையும் ஆறு மாதம்தான். ஆறு மாத காலத்திற்கு உப்பளங்கள் செயல்பட முடியாது. 

இதுதான் இன்றைய தொழிலாளர்களின் நிலை. அவர்களை மேலும் மேலும் வஞ்சித்து வாழ்க்கையை பறிக்கிற அரசாக மோடி இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அவர் பகிர்ந்து கொண்ட இன்னொரு அனுபவம்  . . . .
அதை நாளை பகிர்கிறேன்
 

3 comments:

  1. நாய்கள் நாட்டாமை செய்யும் நா( )ளிது.

    அடைப்புக்குள் உரிய எழுத் தை நிரப்புக.

    ReplyDelete