Wednesday, July 12, 2017

அமர்நாத் - கோழைகளும் ஒரு வீரனும்




அமர்நாத் பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

ஓடும் பேருந்தில் உள்ளவர்களை இருளில் சூழ்ந்து சுடுவது என்பது அப்பட்டமான கோழைத்தனம். தாக்குதலை நடத்த  மத வெறி காரணமாக இருந்துள்ளது. மதத்தை அரசியலுக்காக பயன்படுத்துபவர்களால் மட்டுமே மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களை கொல்ல முடியும். அப்படிப்பட்ட அடிப்படைவாதிகளை மனிதர்கள் என்று சொல்வதே தவறு. 

லஷ்கர் இ தொய்பா, இத்தாக்குதலை நிகழ்த்தியது என்று சொல்லப் படுகிறது. இதனால் அவர்கள் என்ன சாதித்து விட்டார்கள். இவர்களின் வெறியாட்டத்திற்கு காஷ்மீர் இஸ்லாமியர்கள்  தொடர் வினையை  சந்திக்கும் அவல நிலையை உருவாக்கியதைத் தவிர?

தாக்குதல் நிகழ்த்தியவர்கள் வீரர்கள் என்றால் பட்டப்பகலில் ராணுவத்தோடு நேருக்கு நேர் மோதியிருக்கலாமே! அதை விடுத்து அப்பாவிகளை ஒளிந்திருந்து தாக்கியது என்பது கோழைத்தனம் தவிர வேறொன்றுமில்லை. 

துப்பாக்கித் தோட்டாக்கள்  துளைத்துக் கொண்டிருந்த போதும் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டி  நாற்பதுக்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய அந்த பேருந்தின் ஓட்டுனர் ஷேக் சலீம் கஃபூர் தான் உண்மையான வீரன். 

கோழைகளை வன்மையாக கண்டிக்கிற அதே நேரத்தில் இந்த வீரனுக்கு தலை வணங்குகிறேன்
 

2 comments:

  1. டிரைவருக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. நேரடியான போரில் வெல்ல இயலாத பாக்கிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதன் நமது பொருளாதாரத்தைச் சீர்குலைக்க எண்ணுகிறது! உண்மையில் ராணுவத்துக்கு ச்செலவழிப்பதன் மூலம் இரண்டு நாடுகளின் பொருளாதாரமுமே சீரழிகின்றன!

    ReplyDelete