Monday, November 25, 2013

சிதம்பரம் அண்ணாச்சி, மக்களுக்கு உரிமை உண்டு, சரி உங்களுக்கு பொறுப்பு கிடையாதா?




இன்சூரன்ஸ் துறையில் அன்னிய மூலதன வரம்பை 49 % ஆக உயர்த்த வழி வகுக்கிற, பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்குகளை விற்க வழி ஏற்படுத்தித் தருகிற இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற ப.சி அண்ணாச்சி துடிக்கிறார்.

இதனை எங்களது தொடர்ந்த போராட்டங்கள் மூலமாக ஒன்பது வருடங்களாக தடுத்து வருகிறோம். இப்போதும் பல இயக்கங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் மீண்டும் சந்திக்கிறோம். சிலரை சந்திக்க முடிகிறது. சிலரை சந்திக்க முடிவதில்லை.

சிவகங்கை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை நேற்று எங்களது மதுரைக் கோட்டத் தோழர்கள் சந்தித்து மனு அளித்துள்ளனர். முப்பது தோழர்கள் கொண்ட குழு நேற்று அவரை காரைக்குடியில் சந்தித்துள்ளனர். சிங்கத்தையே அதன் கோட்டையில் சந்திக்கும் வலு உள்ள எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தைப் பொறுத்தவரை ப.சி சிறு நரிதான். பன்னாட்டு கம்பெனிகளுக்காக தந்திரங்கள் செய்யும் நரி.

மனுவைப் பெற்றுக் கொண்ட அவர் “ அன்னிய மூலதனத்தை உயர்த்துவது அரசின் கொள்கை. அதற்கு எதிராக போராட மக்களுக்கு உரிமை உண்டு “ என்று சொல்லி முடித்து விட்டார்.

மக்களுக்கு உரிமை உண்டு என்பது சரிதான். ஆனால் மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப கொள்கைகளை வகுக்க வேண்டிய, அவர்களின் நலனை பாதுகாக்க வேண்டிய  பொறுப்பு அரசுக்கு கிடையாதா? பின் ஜனநாயகத்தின் அர்த்தம் என்ன?

சொல்லுங்கண்ணே சொல்லுங்க

1 comment:

  1. LET HIM BE THROWN OUT OF THIS COUNTRY. WE WILL FIGHT AGAINST HIM IN THIS 2014 ELECTION.

    ReplyDelete