Friday, July 9, 2010

ஆக்டபஸ் ஜோசியம் பார்க்கும் அறிவியல் தேசங்கள்

நம்ம ஊர் கிளி ஜோசியமே மேல் என்று சொல்லக்கூடிய
விதத்தில் ஐரோப்பிய மக்கள் பைத்தியம் பிடித்து
அலைகின்றனர். உலகக் கோப்பை கால் பந்து
ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெரும் என ஆரகிள்
என பெயரிடப்பட்ட ஆக்டபஸ் சொல்லுகிறதோ அந்த
அணிதான் வெற்றி பெறுகிறது என பரபரப்பாய்
பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.

நம்ம ஊர் கிளி ஜோசியத்தில் கூண்டை விட்டு
வெளியே வரும். அடுக்கி வைத்த சீட்டுக்களில்
ஏதேனும் ஒன்றை எடுத்துத் தரும். இந்த வேலை
கூட ஆக்டபச்சிற்கு கிடையாது. இரண்டு நாடுகளின்
கொடிகள் வைக்கப்பட்ட பெட்டிகளில் எதைத்
தொடுகிறதோ அந்த அணிதான் வெற்றி பெறுமாம்.

ஜெர்மனி தோற்றுப் போகும் என்ற ஜோசியம்
பலித்து விட்டதால் அதை சுட்டு தின்று விடப்
போகிறார்கள் என ஸ்பெயின் அரசே பதறுகிறது.

அறிவியலில் வளர்ந்த நாடுகள் என்று
 சொல்லப்படுபவையும்   இப்படி மூட
நம்பிக்கையை வளர்ப்பவர்களாகவே உள்ளது
நகைச்சுவையாகவும் உள்ளது, வேதனையும் 
அளிக்கிறது. 

இப்படி ஆக்டபசை ஜோசியத்திற்கு
பயன்படுத்துவது   மிருக வதையின் கீழ்
வராதா என்பதை மேனகா காந்திதான்
விளக்க வேண்டும்.

பின் குறிப்பு

இந்த பதிவை எழுதி முடிப்பதற்குள் இரண்டு  
குறுஞ்செய்திகள் வந்து விட்டன.

ஸ்பெய்ன்தான் வெற்றி பெறும் என
ஆக்டபஸ் கூறி விட்டதாம். இதற்காகவாவது
நெதர்லாந்து வெற்றி பெற வேண்டும்.
இல்லையென்றால் நம் கிரிக்கெட் சூதாடிகள்
ஆக்டபஸ் பண்ணை வளர்க்கத் தொடங்கி விடுவார்கள்

2 comments:

  1. Not just sms, It is the Flash News in all tv channels. There is no difference between
    literates & illeterates in these matters.
    another 1000 periyars are needed

    ReplyDelete
  2. பெரியார் வீரமணி கருத்துக்கள் எல்லாம் சென்னை எல்லை யை தாண்டினாலே விலை போகாது, திருப்பதி, சபரிமலை,மெக்கா பயணம் போகும் பயண கூட்டத்தை நீங்கள் பார்த்தது இல்லையா

    ReplyDelete