Tuesday, December 31, 2024

ஒலிம்பிக்கில் வென்றாலும் NO விருது

 


பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய பதக்கப்பட்டியலை போணி செய்தவர் ஹரியானாவைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர் மனு பாக்கர். அவர் பெற்ற வெண்கல பதக்கமே இந்தியாவுக்குக் கிடைத்த முதல் பதக்கம். அவர் இன்னொரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

அப்போது மோடி அந்த இளம் பெண்ணோடு வீடியோ காலெல்லாம் பேசி அதை ட்விட்டரில் எல்லாம் பகிர்ந்து கொண்டு சீன் போட்டார். அவர் பகவத் கீதை பற்றி குறிப்பிட்டார். அதனால் இந்துத்தவ பெண் என்று சங்கிகளும் சீன் போட்டார்கள்.

இந்திய அரசின் இளைஞர் நலத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் அந்த குறிப்பிட்ட ஆண்டில் விளையாட்டுத்துறையில் சாதனை செய்த இளைஞர்களுக்கு கேல்ரத்னா விருது கொடுக்கும். 25 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசும் அடங்கியது இந்த விருது.

1991ல் நரசிம்மராவ் அரசால் ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது என்று அறிவிக்கப்பட்டு கொடுக்கப்பட்ட விருதின் பெயரில் மோடி அரசு ராஜீவ்காந்தியின் பெயரை அகற்றி தயான்சந்த் கேல்ரத்னா விருது என்று மாற்றி விட்டார்கள் என்பது தனிக்கதை.

இப்போதைய பிரச்சினைக்கு வருகிறேன்.

இந்த வருட கேல் ரத்னா விருதுப் பட்டியலில் மனு பாக்கரின் பெயர் இடம் பெறவில்லை. அவர் விண்ணப்பிக்கவில்லை என்று அமைச்சகம் காரணம் சொன்னது. “நான் உரிய முறையில்தான் விண்ணப்பித்தேன். பிச்சை எடுத்தால்தான் விருது கிடைக்கும் என்றால் எதற்கு பதக்கங்களை வெல்ல வேண்டும்” என்று அவரின் அப்பா கோபமாக கேட்டுள்ளார்,

பின் என்ன காரணம்?

ஒலிம்பிக் வெற்றிக்குப் பிறகு அவர் சோனியா காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது ஒன்று போதாதா? அற்பர்கள் அரசு அற்பத்தனமாக முடிவெடுத்து விட்டது.

கடைசிச் செய்தி

நான் விண்ணப்பித்த முறையில் ஏதாவது தவறு இருக்கலாம். அதனை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்று மனு பாக்கர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த அரசினை முறைத்துக் கொண்டால் தன் எதிர்காலம் என்னவாகும் என்பதை அறியாதவரா அவர்! வினேஷ் போகத் பதக்கம் வெல்ல முடியாமல் நடந்த சதி பற்றி அவருக்கும் தெரிந்திருக்குமல்லவா!

ஒரு கேள்வி

ஒரு சாதனையாளர் தனக்கு விருது வேண்டுமென்று அவர்தான் விண்ணப்பிக்க வேண்டுமா? அந்த வேலையைக்கூட தானாக செய்ய முடியவில்லை என்றால் பின் என்ன எழவுக்கு ஒரு அமைச்சகம், அமைச்சர் மற்றும் அரசு?

மோடியைப் போலவே துணை ஜனாதிபதியும் . . .

 


ரௌடி கவர்னராக இருந்து அதே குணாம்சத்தை துணை ஜனாதிபதி ஆன பின்பும் தொடர்கின்ற ஜகதீப் தன்கர்  தன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு மோடியைப் போலவே ஒரு காரணம் சொல்லியுள்ளார்.

மோடி தன் மீதான விமர்சனங்களுக்கு தான் ஏழைத்தாயின் மகன் என்பதால்தான் என்னை தாக்குகிறார்கள் என்று அனுதாபம் தேட முயற்சிப்பார்.

அதே பாணியில் துணை ஜனாதிபதியும் தான் ஏழை விவசாயின் மகன் என்பதால்தான் தன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப் பட்டுள்ளதாக ஒரு கண்ணீர்க் கதை எழுத முயன்றுள்ளார்.

தன்னுடைய ஜனநாயக விரோத நடவடிக்கைகள், பாரபட்சமான செயல்பாடுகள், அமைச்சர்கள் சொல்ல வேண்டிய பதில்களை அவரே சொல்வது, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உரைகளை அவைக் குறிப்புகளில் இருந்து நீக்குவது போன்ற செயல்களுக்காகத்தான் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை திசை திருப்புகிறார் அவர்.

சிங்கத்தில் இறுதியில் பிரகாஷ்ராஜை சுடுவதற்கு முன்பாக “திருந்தலை இல்ல நீ! செஞ்ச தப்புக்கு வருந்தலை இல்ல” என் வசனம் பேசுவார்.

அது போல திருந்தாத, தவறுக்கு வருந்தாத துணை ஜனாதிபதி யை பதவி நீக்கம் செய்திட வேண்டும்.


Monday, December 30, 2024

பனையூருக்கு இனிமே யாரும் போகாதீங்க. . .

 


பனையூர் –  A1 ஜெயலலிதா  கங்கை அமரனிடமிருந்து ஆட்டைய போட்ட வீட்டில் அமர்ந்து  A 2 சசிகலா இப்போது பனையூரிலிருந்துதான் அரசியல் செய்கிறாராம். அந்த மாளிகையை திரும்பப் பெற கங்கை அமரன் பாஜக சென்றாலும் இதுவரை எதுவும் நடக்கவில்லை என்பது கிளைக்கதை.

WORK FROM HOME அரசியல் என்ற புதிய பாணி அரசியலை கண்டுபிடித்து அமலாக்கிக் கொண்டிருக்கும் தவெக விஜய் தற்போது அரசியல் செய்வதும் பனையூரிலிருந்துதான்.

ஞானப்பழம் கிடைக்காத முருகன் கோபித்துக் கொண்டு பழனி சென்றது போல, பெரிய டாக்டர் அப்பாவிடம் கோபித்துக் கொண்ட சின்ன டாக்டர் மகன் தனிக்கடை போட்டுள்ளதும் பனையூரில்தான்.

அரசியல்வாதிகளின் நெரிசலால் பனையூர் திணறுகிறதாம். ஆகவே இனி புதிதாக அரசியல் கடை திறக்க விழைபவர்கள் வேறு இடத்துக்கு சென்று விடுங்கள்.

 

Sunday, December 29, 2024

விசு படம் போல அந்த கட்சியிலும் . . .

 


மின்சாரப்படத்தில் விசுவுக்கும் ரகுவரணுக்கும் இடையில் நடந்த காரசார விவாதம் அந்த அப்பா மகன் கட்சிக்கும் பொருந்துதே . . .

மகன் : மாம்பழத்தை இன்னொரு வாரிசுக்கு தரக்கூடாது.

அப்பா : இதை யாரைப் பாத்து சொல்றேன்னு தெரியுதா?

மகன் : தெரியாது.

அப்பா : என் குடும்பத்தில இருந்து யாருக்காவது மாம்பழம் கொடுத்தா முச்சந்தியில நிறுத்தி சாட்டையால அடிங்கன்னு சொன்னாலும் உனக்கு மாம்பழம் கொடுத்த இந்த  அப்பாவை தெரியாதா?

மகன்: தெரியாது.

அப்பா : யாரோட கூட்டணி வச்சாலும் கட்சி தோத்தாலும் நீ டெல்லிக்கு போகனும்னு ராஜ்யசபா சீட் கேட்டு வாங்கின அப்பாவை ஞாபகம் இருக்கா?

மகன் : இல்லை

அப்பா : தர்மபுரியில நீ ஜெயிக்கனும்னு கலவரம் நடத்தி ஜாதிக் கூட்டணி உருவாக்கின இந்த அப்பா யாருன்னு புரியுதா உனக்கு?

மகன் : இல்லை.

அப்பா : அப்படின்னா கட்சியை விட்டு வெளியே போ!

மகன்: ஹலோ, அப்படி நான் கட்சியை விட்டு வெளியே போகனும்னா, நான் மந்திரியா இருக்கற போது வாங்கிக் கொடுத்த கோடிகளை திருப்பிக் கொடுங்க. . . .

அப்பா: மணி, கட்சி ஆபீசுக்கு நடுவுல ஒரு கோடு போடுங்க . . .

பிகு: இந்த கண்டெண்ட் இன்னொரு மீமும் கொடுத்துள்ளது. அது மாலை 

இது பாமக திருவிளையாடல்

 


இது கைலாயக் காட்சிகள்

சிவன் :  நாரதர் புதிதாக ஒரு ஞானப்பழத்தை கொண்டு வந்துள்ளார். முந்தைய ஞானப்பழம் முருகனுக்கு போனதால் இந்த புதிய மாம்பழத்தை கணபதியின் மகனுக்கு தரப் போகிறேன்.

முருகன் : தந்தையே இது என்ன அநியாயம்?

சிவன் : இதில் என்ன அநியாயத்தை கண்டாய்?

முருகன் : புதிய ஞானப்பழத்தை பழைய மாம்பழத்தை பெற்ற என்னுடைய வாரிசுக்குத்தான் தர வேண்டுமே தவிர, கணபதியின் வாரிசுக்கு அல்ல.

கணபதி : மறுபடியும் மறுபடியும் உனக்கும் உன் வாரிசுக்கும்தான் ஞானப்பழம் என்றால் நாங்கள் எல்லாம் மாம்பழத்தின் கொட்டையை வேடிக்கை மட்டும்தான் பார்க்க வேண்டுமா?

சிவன் : எதற்கு வீண் பேச்சு! நாந்தான் கைலாசத்தை உருவாக்கினேன். யாருக்கு எதை தர வேண்டும் என்பதை நாந்தான் முடிவு செய்வேன். இருக்க இஷ்டம் இருக்கறவங்க மட்டும் இங்க இருங்க . ..

முருகன் : என் வாரிசுக்கு மாம்பழம் தராத இந்த கைலாயத்தில் எனக்கு இனிமேல் என்ன வேலை? நான் பனையூருக்கு சென்று புதிய கைலாயத்தை உருவாக்குகிறேன்.  என்னை ஆதரிப்பவர்கள் அங்கே வாருங்கள்.

பிகு 1 : என்ன விஷயம் என்று நிஜமாகவே தெரியாதவர்கள், கீழே உள்ளதை பாருங்கள்.



பிகு 2 : இதை வைத்து இன்னொரு காட்சி கூட மனதில் உருவாகியுள்ளது. அதுதான் அடுத்த பதிவு. 

Saturday, December 28, 2024

ஜெயமோகன் சிஷ்யன் கேரளா போனால்????

 ஜெயமோகனுக்கு முன்னாள் தான் இறந்து போகக்கூடாது என்பதுதான் தமிழ் இலக்கியவாதிகளின் முக்கியமான பிரார்த்தனையாக இருக்கும். இறந்த பின்பு அவர்களை சிறுமைப்படுத்துவது என்பது புளிச்ச மாவு ஆஜானுக்கு அல்வா சாப்பிடுவது போல.

ஜெயமோகனுடனான சகவாசம் இன்னொரு எழுத்தாளரையும் அதே பாணியில் மறைந்த மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரையும் சிறுமைப்படுத்த வைத்துள்ளது. 

ஒட்டு மொத்தமாக எம்.டி.வாசுதேவன் நாயரை சராசரி என்றால் சிக்கலாகும் என்ற அச்சத்தில் இலக்கியத்தில் சராசரி, திரைக்கதையில் உச்சம் என்று சமாளிக்கப்பார்க்கிறார்.

யார் எந்த ஜெமோ சிஷ்யன்?

நவீன கதை சொல்லி என்று அழைக்கப்படுகிறவர் அவர். 

பதிவை படித்தால் உங்களுக்கே புரியும்.

இல்லையென்றாலும் கடைசியில் சொல்கிறேன்.

தன் புத்தகத்தின் தமிழ் மொழி, மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழாவிற்காகத் திருவண்ணாமலைக்கு வந்திருந்த மனோஜ் குருர் (நிலம் பூத்து மலர்ந்த நாள்), சந்தோஷ் எச்சிகானும், நா. முருகேச பாண்டியன் ஆகியோரோடு ஒரு பின்னிரவில் பத்தாயத்துக் களத்து மேட்டில் கொஞ்சம் கலங்கிய நிலையில் உட்கார்ந்து இருந்தபோது, நான் தான் அந்த காட்டமான உரையாடலை ஆரம்பித்தேன். “உண்மையிலேயே எம். டி. வாசுதேவ நாயர் மலையாளத்தில் ஒரு காத்தரமான புனை எழுத்துக்காரர் என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா?” மூவருமே மௌனம் காத்தார்கள். கொஞ்ச நேரத்தில் நானே அந்த மௌனத்தைக் கலைத்தேன் .“இரண்டாம் இடத்திற்குப் பின் இப்பொழுது இறுதி யாத்திரை (விலாபயத்ரா) வாசித்தேன். இரண்டுமே என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. என் குறைந்தபட்ச வாசிப்பில் அவரை விட 10க்கும் மேற்பட்ட மிகச் சிறந்த புனைவு எழுத்துக்காரர்கள் தமிழில் உண்டு,” என்றேன்.

மனோஜ் குருர், சந்தோஷ் எச்சிகானும் என்னை எழ வைத்து கட்டிப்பிடித்துக்கொண்டார்கள். அந்த நெருக்கத்திற்கு அனுமதிக்காமல், “ஆனால் அவர் மிகச் சிறந்த திரைக்கதை ஆசிரியர் இல்லையா?” எனக் கேட்டேன். மூன்று பேருமே அதை 100% ஒத்துக்கொண்டார்கள்.


ஏழெட்டு வருடங்களுக்கு முன் என் மலையாள மொழிபெயர்ப்பாளர் கே. எஸ். வெங்கடாசலம் அவர்களின் கோரிக்கையை ஏற்று, நான் சைலஜா நஜீப் ஆகியோர் இரவு 8 மணி அளவில் கோழிக்கோட்டில் உள்ள எம். டி. வீட்டில் அவரை சந்திக்க அனுமதி கேட்டபோது, உடனடியாக அந்த அனுமதி மறுக்கப்பட்டது. அப்போதுதான் கண் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருந்தார். ஆனால் ஏதோ ஒரு புள்ளியில், நாங்கள் நான்கு பேரும் அவர் முன் அடுத்த சில நொடிகளில் அமர வைக்கப்பட்டிருந்தோம். ஒரு மணி நேரம் நீடித்த உரையாடல் எவ்வகையிலும் சுவாரஸ்யமானது அல்ல; கேரள பஞ்சாயத்துக்குக் கட்டுப்பட்டதாக இருந்தது.

கண் அறுவை சிகிச்சை அவருக்கு வலியையும் சலிப்பையும் தந்திருந்தது. நாம் போன நேரம் அப்படிப்பட்டது. பின் ஒரு சுவாரசியமான சந்திப்பில் எம். டி. உடனான சந்திப்பை என் நண்பர் மம்முட்டி இடம் சொன்னபோது, “கிழவன் என்ன சொன்னார் பவா?” என மிகச் செல்லமாக ஆர்வப்பட்டார். அது அவர்களுக்குள்ளே இருந்த நட்பைப் பிரதிபலிப்பதாயிருந்தது. மலையாள இலக்கியத்தில் சராசரியாகவும் திரைக்கதையில் உச்சமாகவும் சாதித்த ஒரு நல்ல கலைஞனை, ஒரு நல்ல கலைஞனின் விலாபயத்ரா இன்று தொடங்குகிறது. என் ஆழ்ந்த அஞ்சலிகள்.

இந்த பதிவை எழுதிய ஜெயமோகன் சிஷ்யன் பவா.செல்லத்துரை. தன் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்திட்ட த.மு.எ.க.ச வை தன்னை முன் வைத்து ஜெயமோகன் சிறுமைப்படுத்திய போதே கள்ள மவுனம் சாதித்து வேடிக்கை பார்த்த மனிதனுக்கு எம்.டி.வாசுதேவன் நாயரெல்லாம் எம்மாத்திரம்! என்ன இவர் எழுதியது கேரளாக்காரர்களுக்கு தெரிந்தால் இவர் கேரளாவிற்குள் நுழைவதுதான் சிரமம். 

பிகு: அதென்ன கலங்கிய நிலை? சரக்கடிப்பதை எழுத்தாளர்கள் இப்படி ரொமாண்டிஸைஸ் செய்தால் டாஸ்மாக் விற்பனை அதிகமாகாதா? குற்றங்கள்தான் பெருகாதா?

Friday, December 27, 2024

சவுக்கடின்னா இப்படி இருக்கனும் ஆட்டுக்காரா?

 


சவுக்கடி நாடகம் நடத்திய ஆட்டுக்காரனுக்கு "சவுக்கடி என்றால் எப்படி இருக்க வேண்டும்?" என்று வடிவேலு பாடம் நடத்துவதை பாருங்கள்.




சவுக்கடி என்பது ஒரு கோமாளித்தனம் என்றால் அதை அமலாக்கிய முறை அதை விட பெரிய கோமாளித்தனம்.

காமெடியனாக இருக்கக்கூட ஆட்டுக்காரன் லாயக்கில்லை . . .

Thursday, December 26, 2024

"தில்லானா" கெட்டப் உண்டா ஆட்டுக்காரா?

 



பைத்தியக்காரத்தனம் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல!

"விடுதலை" பார்க்க வச்சுடுவாங்க போலிருக்கே

 


வெற்றிமாறன் இயக்கமாக இருந்தும் பு.மா ஆஜான் ஜெமோவின் கதை வஜனம் என்பதால் விடுதலை முதல் பாகம் கூட பார்க்கவில்லை.

ஆனால் இப்போது சங்கிகள் இரண்டாம் பாகத்தை பார்க்க வைத்து விடுவார்கள் போல . . .

கீழே இருக்கிறது தகவல்



Wednesday, December 25, 2024

கொல்கத்தா மாநகரம் போல . . .

 


ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் பகிர்ந்து கொண்ட முகநூல் பதிவை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.


கிறிஸ்துவர்களின் பண்டிகையான கிறிஸ்துமஸை கொண்டாட முஸ்லீம் சமையல்காரர்  தயாரித்த கேக்கை வாங்க யூதர் ஒருவரின் பேக்கரியில் இந்துக்கள் காத்திருக்கும் ஒரே நகரம் கொல்கத்தா. 

கொல்கத்தா மக்கள் போல இந்தியர்கள் ஒவ்வொருவரும் மாறினால் இந்தியாவில் பாஜகவிற்கு இடமே இருக்காது. 

Tuesday, December 24, 2024

ஒரு எஜமானனும் மூன்று ....

 


மேலே உள்ள படத்தைப் பார்த்ததும் ஒரு தலைப்பு தோன்றியது. இந்தியாவின் முதல் குடிமகளும் இருப்பதால் அதை பூர்த்தி செய்யவில்லை. 

ஜகதீப் தான்கருக்கோ ஓம் பிர்லாவுக்கோ பெரிய மரியாதை அவசியம் இல்லை. தாங்கள் வகிக்கும் பதவியை அசிங்கப்படுத்திக் கொண்டிருப்பவர்கள்.

மோடியின் ஆணவ உடல் மொழியும் மூவரின் அளவு கடந்த பணிவும் அசிங்கமாக இருக்கிறது. 

Monday, December 23, 2024

பாப்கார்ன், பிரியாணி, ஆம்லெட் மற்றும் இன்சூரன்ஸ்

 


புதிதாக வரி போடுவதென்றால் நிர்மலா அம்மையாருக்கு ஒரே குஷி. குறைவாக இருந்த வரியை உயர்த்துவதிலும் கூட. அவருக்கு மூளை என்ற வஸ்து இருப்பது தெரிவதே இது போன்ற சந்தர்ப்பங்களில்தான்.

சாதா ஆம்லேட்டிற்கு ஒரு வரி, பெரெட் ஆம்லட்டிற்கு ஒரு வரி, தொட்டுக் கொள்ள ஸாஸ் கொடுத்தால் ஒரு வரி.

அதே போலத்தான் பாப்கார்னிற்கும் பிரியாணிக்கும் . . .

வெங்காயமே சாப்பிடாத அம்மையாருக்கு ஆம்லெட்டைப் பற்றியோ பிரியாணியைப் பற்றி என்ன தெரியப் போகிறது!  வீட்டில் தயாரித்து சாப்பிடுங்கள் என்ற இலவச உபதேசம்  வேண்டுமானால் செய்வார்!

வரிகளை உயர்த்துவதில் காண்பிக்கிற வேகத்தை குறைப்பதில் மட்டும் காண்பிப்பதில்லை.

ஆயுள் இன்சூரன்ஸ் பிரிமியம் மற்றும் மற்றும் மருத்துவக் காப்பீட்டுக்கான பிரிமியத்தின் மீதான ஜி.எஸ்.டி அகற்றப்பட வேண்டும் என்ற குரல் இப்போது வலிமையாக கேட்டுக் கொண்டிருக்கிறது. எங்கள் சங்கத்தின் சார்பில் 400 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தோம். அவர்களும் நிதியமைச்சருக்கு கடிதங்கள் அனுப்பினார்.

மோடியின் மந்திரி நிதின் கட்காரியும் கடிதம் எழுதினார். பலரும் மக்களவை, மாநிலங்களவையில் இப்பிரச்சினையை எழுப்பினார்கள். இந்தியா கூட்டணி எம்.பி க்கள் நாடாளுமன்றத்திலேயே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இத்தனைக்கும் பிறகே இன்சூரன்ஸ் பிரிமியம் மீதான ஜி.எஸ்.டி பிரச்சினை ஜி.எஸ்.டி கவுன்டிலில் இப்பிரச்சினை முன்வைக்கப்பட்டது. அது பற்றி ஆராய கமிட்டியெல்லாம் போடப்பட்டது.

ஆனால் இன்ற வரை முடிவெடுக்கப்படவில்லை. ஆயு, மறு ஆய்வு, மேலும் ஆய்வு என்று நடந்து கொண்டிருக்கிறது.

மக்களிடமிருந்து பிடுங்குவதில் இருக்கும் வேகமும் ஆர்வமும் கொடுப்பதற்கு மட்டும் அம்மையாருக்கு இருப்பதே இல்லை.

மக்கள் என்ன அதானியா இல்லை அம்பானியா?

 

Sunday, December 22, 2024

நாய் சேகர் -ஆட்டுக்காரன் செம பொருத்தம்

 


விளக்கம் வேண்டுமா என்ன? 

நல்லா மதிக்கிறீங்கடா அண்ணல் அம்பேத்கரை!

 


பில்லா ரங்கா இரிமினல் கூட்டாளிகளில் இளைய கூட்டாளி அமித்ஷா, அண்ணல் அம்பேத்கரை இழிவு படுத்தி பேசியதற்கு முட்டுக் கொடுக்கும் பெரிய கூட்டாளி மோடி, தாங்கள் அண்ணல் அம்பேத்கரை மிகவும் மதிப்பதாக கூவிக் கொண்டே இருக்கிறார்.

அவர்கள் மதிக்கிற லட்சணம் என்ன என்பதை மக்களவை சபாநாயகருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் எழுதிய கடிதம் அம்பலப் படுத்துகிறது.

இந்திய அரசியல் சாசனத்தின் 75 வது ஆண்டுக்காக வெளியிட்ட காலண்டரிலேயே அவர் படத்தை வெளியிடப் பிடிக்காத நீங்களா அவரை மதிக்கிறீர்கள்.

கடுப்படிக்கும் காமெடியை நிறுத்தவும் மோடி





இந்திய அரசமைப்பு சட்டத்தின் 75 ஆவது ஆண்டை கொண்டாடும் விதமாக மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள சிறப்பு காலண்டரில் காந்தி மற்றும் அம்பேத்கரின் படமோ பெயரோ இல்லை.
இது வரலாற்றைத் திரிக்கும் திட்டமிட்ட செயலாகும்.
இந்த காலண்டர்கள் திரும்பப்பெற வேண்டும்.
இந்த செயலுக்காக மக்களவை செயலகம் மன்னிப்பு கோர வேண்டும். இது குறித்து மக்களவை தலைவருக்கு நான் எழுதியுள்ள கடிதம்…

மாண்புமிகு ஓம் பிர்லா
மக்களவை சபாநாயகர் அவர்கள்.
வணக்கம்.
நேற்றைய தினம் மக்களவை செயலகத்திலிருந்து 2025 ஆம் ஆண்டுக்கான மாதாந்திர நாட்காட்டி உங்களின் கடிதத்துடன் எங்களுக்கு அனுப்பிவைக்கப் பட்டது.
இந்திய அரசமைப்பு சட்டத்தின் 75 ஆவது ஆண்டை கொண்டாடுவதன் வெளிப்பாடாகவும், அரசியல் சட்டத்தின் வரலாற்றுப் பயணத்தை நினைவு கூறும் விதமாகவும் இந்த மாதாந்திர நாட்காட்டி உருவாக்கப்பட்டுள்ளதாக நீங்கள் எழுதியுள்ளீர்கள்.
ஆனால் நீங்கள் அனுப்பிவைத்துள்ள மாதாந்திர நாட்காட்டி பெரும் அதிர்ச்சியை தருவதாக உள்ளது.
இந்திய அரசியல் சட்ட வரலாற்றுப் பயணத்தை நினைவு கூறும் இந்த நாட்காட்டியில் தேசத்தந்தை அண்ணல் காந்தியாரின் படமோ, அரசியல் சட்ட வரைவுக்குழுவின் தலைவர் அண்ணல் அம்பேத்கரின் படமோ இல்லை.
இந்த இருபெரும் ஆளுமைகளின் பங்களிப்பை மறைக்க ஒவ்வொரு நாளும் ஒன்றிய அரசு முயற்சி செய்து வருகிறது.
நாடாளுமன்ற கட்டிடத்தின் முன்புறமிருந்த அண்ணல் காந்தியார், அண்ணல் அம்பேத்கர் இருவரின் சிலையையும் அகற்றி நாடாளுமன்ற கட்டிடத்தின் பின் புறம் கொண்டுபோய் வைத்துள்ளீர்கள்.
இப்பொழுது இந்திய அரசியல் சட்டத்தின் 75 ஆவது ஆண்டை கொண்டாடுவதன் அடையாளமாக சிறப்பு மாதாந்திர நாட்காட்டியை வெளியிட்டு அதில் இரு பெரும்
தலைவர்களின் படங்களோ, பெயர்களோ இல்லாமல் அச்சிட்டுள்ளீர்கள்.
இந்த காலெண்டரில் அரசியல் சாசனத்தை வரைந்த ஓவியர்கள், கையெழுத்து பிரதியாளர்கள் படங்களும் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. அவர்களின் பங்களிப்பு போற்றத்தக்கது, அங்கீகரிக்கப்பட வேண்டியது. ஆனால் அரசியல் சாசனத்தின் வரைவு குழு தலைவராக இருந்து பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே அதற்கு வடிவம் தந்த அண்ணல் அம்பேத்கரின் பெயர், படம் எப்படி விடுபட முடியும்?
இந்திய விடுதலைப் போராட்டத்தை ஓர் வெகுமக்கள் இயக்கமாக மாற்றிய தேசத்தந்தை காந்தியாரின் பெயரும் படமும் எப்படி விடுபட முடியும்? இது வரலாற்றை திரிக்கும் திட்டமிட்ட செயலாகும்; நவீன இந்தியாவை உருவாக்குவதில் இவ்விரு பேராளுமைகள் நல்கிய அரும் பங்களிப்பை அவமதிக்கும் செயலாகும்.
ஏற்கனவே அண்ணல் அம்பேத்கர் பற்றி மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் கோடானு கோடி மக்களின் மனதை புண்படுத்தி உள்ளது. தற்போது இந்த காலண்டர் மேலும் மக்கள் உணர்வுகளை ரணமாக்க கூடியதாகும் என அஞ்சுகிறேன். பெரும் காயத்தை மக்கள் மனதில் இது உருவாக்கும்.
உங்களின் இந்த செயல் இந்திய அரசியல் சாசன வரலாற்றின் உருவாக்கத்தை மேன்மைப் படுத்துவதாக இல்லை. மாறாக உங்களின் எண்ணம் அதற்கு நேர் எதிராக செயல் பட்டிருக்கிறது.
ஆகவே இந்த காலண்டரை திரும்பப்பெற்று தேசத்தந்தை காந்தியார், அண்ணல் அம்பேத்கர் ஆகிய இரு ஆளுமைகளுக்கும் உரிய இடம் தருகிற புதிய காலண்டரை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
சு. வெங்கடேசன் எம் பி.

Saturday, December 21, 2024

சாகித்ய .அகாடமி விருது – சில சந்தேகங்கள்

 



பிரிக்க முடியாதது எதுவோ என்று தருமி இப்போது கேள்வி கேட்டால் “சாகித்ய அகாடமி விருதும் சர்ச்சையும்” என்று சிவனிடமிருந்து பதில் வந்திருக்கும்.

 இந்த வருடம் விருது அறிவிக்கப்பட்ட அ.ரா.வெங்கடாசலபதியின் 1907 நெல்லை எழுச்சியும் வ.உ.சி யும் நூலுக்கு எதிரான கருத்துக்கள் எதுவும் வரவில்லை என்றே முதலில் நினைத்தேன்.

 அதெப்படி இல்லாமல் போகும் என்று சர்ச்சை வந்து விட்டது.

 இந்த வருட விருதுக்கான இறுதிப்பட்டியலில் இருந்த “சுளுந்தீ” நாவலின் ஆசிரியர்  முத்து நாகு மூலம்தான் சர்ச்சை உருவாகியுள்ளது.

 “திராவிடக் கட்சிகளால் மறைத்து ஓரங்கட்டப்பட்ட திலகரை மீண்டும் உலவ விடுவதற்காக  சங் பரிவாரால் கொடுக்கப்பட்ட விருது என்றும் வ.உ.சி யை அவர்கள் கைப்பற்ற விரும்புகிறார்கள் என்றும் அவர் குற்றம் சுமத்துகிறார்.

 நான் இரண்டு நூல்களையும் இன்னும் படிக்காததால் எந்த கருத்தும் சொல்ல இயலவில்லை. ஒரு வேளை இந்த வருட புத்தக விழாவில் பட்ஜெட் அனுமதித்து இரண்டு புத்தகங்களையும் வாங்கி நேரம் அனுமதித்து படித்து முடித்தால் அப்போது எழுதுவேன்.

 என்னுடைய சந்தேகங்கள் வேறு.

 இறுதிப் பட்டியலும் தேர்வுக்குழுவும் பொது வெளியில் வைக்கப்படுகிறது.

 இறுதிப்பட்டியலை யார், எத்தனை நூல்களிலிருந்து எப்படி இறுதிப்படுத்துகின்றனர்?

 சுளுந்தீ மூன்று வருடங்களாக இறுதிப்பட்டியலில் இருக்கிறது.

 ஒரு நூல் எவ்வளவு முறை பரிசீலிக்கப்படும்? ஒரே நூலை ஒவ்வொரு வருடமும் பரிசீலனைக்கு உட்படுத்தினால் மற்ற புதிய நூல்களின் வாய்ப்பு பறி போகாதா?

 “சுளுந்தீ” மூன்று வருடங்களாக இறுதிப்பட்டியலுக்கு வந்தும் விருது கிடைக்காத விரக்தி அவரை குற்றம் சுமத்த வைத்துள்ளதா?








 மிக முக்கியமான கேள்வி

 போன வருடத்திற்கு முந்தைய வருடம் மூத்த்த்த்தவர் மாலன் மொழி பெயர்ப்புக்கான விருதை வாங்கினார்.

 போன வருட இறுதிப்பட்டியலில்  அவரது “ஜன்னலுக்கு வெளியே” கட்டுரைத் தொகுப்பு இடம் பெற்றிருந்தது. (கிட்டத்தட்ட 30 வருடங்களாக நான் வாங்கிக் கொண்டிருந்த குமுதம் (அது குப்பையாக மாறிய பிறகும்) இதழை இந்த கட்டுரைத்தொடர் உருவாக்கிய எரிச்சலால்தான் நிறுத்தினேன்.

 இந்த வருடம் புலி வேட்டை சிறுகதை தொகுப்பு இடம் பெற்றிருந்தது. இப்படி ஒரு நூல் வந்ததை நான் சத்தியமாக இப்போதுதான் கேள்விப்பட்டேன்,

 சாகித்ய அகாடமி நிவாகக்குழுவில் உள்ள மாலனின் பெயர் மட்டும் எப்படி ஒவ்வொரு வருடமும் இறுதிப் பட்டியலுக்கு வந்து விடுகிறது?

 

 

Friday, December 20, 2024

A 1 ஜெ பாணியா மோடி?

 


சைக்கிள் சாரங்கியை கீழே தள்ளி விட்டு மண்டைய உடைத்த காதை மட்டும் போதாது என்பதால்     ராகுல் காந்தியை பழி வாங்க அல்லது அவர் மீது அவதூறு பரப்ப மோடி இன்னொரு ஆயுதத்தையும் கையிலெடுத்துள்ளார். அது கேவலமான, கீழ்த்தரமான உத்தி. ஜெயலலிதா பயன்படுத்திய அதே உத்தி.

ஆளுனர் சென்னாரெட்டி என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று சட்டசபையில் ஜெ சொன்னது நினைவில் உள்ளதல்லவா! அதே உத்தியை மோடியும் பயன்படுத்தி விட்டார்.

நாகாலாந்து மாநிலத்தின் பெண் எம்.பி யின் மூலமாக ராகுல் காந்தி மீது ஒரு புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.

ராகுல் காந்தி தனக்கு அருகாமையில் நின்று சத்தமாக ஏதோ பேசினார். அதனால் எனக்கு வசதிக்குறைவாக (Uncomfortable) இருந்தது என்பது அவர் குற்றச்சாட்டாக நாடாளுமன்றத்தில் சொன்னதாக  முதலில் செய்திகள் வந்தது.

அதன் பிறகு பார்த்தால் ராகுல் காந்தி ஏதோ அந்த பெண்மணியை பாலியல் சீண்டல் / கொடுமைக்கு  உள்ளாக்கியது போல சங்கிகள் ராகுல் காந்தியை ஒரு காமக் கொடூரன் ரேஞ்சில் அவதூறு செய்யத் தொடங்கி விட்டனர். ட்விட்டர் தளம் முழுதும் ராகுல் காந்தியை ஒரு பெண் வெறியனாக சித்தரிக்கும் பதிவுகள்தான்.

 “பழங்குடி பெண் எம்.பி யை இழிவு படுத்திய ராகுல் காந்தி” என்ற  இந்த அவதூறுப் பிரச்சாரத்தை பார்க்கையில்  அது பொய்யானதாகவே தோன்றுகிறது.

எப்போது அர்ஜூனன் போல மோடியும் சிகண்டியை முன்வைத்து ராகுல் காந்தியோடு மோத வந்தாரோ, அப்போது அவர் தரப்பில் நியாயம், தர்மம், நேர்மை, நாணயம் என்று எதுவுமே இல்லை என்பது அம்பலமாகி விட்டது.

Thursday, December 19, 2024

கோவை - பிரியாணி அண்டாக்கள் ஜாக்கிரதை

 


கோவையில் உள்ள பிரியாணி கடைக்காரர்கள் எல்லாம் பதற்றத்தில் உள்ளனர். அவர்களுக்கெல்லாம் ஆறு வருடங்களுக்கு முன்பு செப்டம்பர் 22ம் தேதி நடைபெற்ற நிகழ்வு இன்னும் மறக்க முடியாத அச்சத்தை தந்துள்ளது.

சசிக்குமார் என்ற சங்கி, சொந்த காரணங்களுக்காக (காரணத்தை சொல்ல நான் விரும்பவில்லை)  கொலை செய்யப்பட்டபோது சங்கிகள் ஊர்வலம் என்ற பெயரில் ரௌடித்தனம் செய்து கடைகளை உடைத்து பொருட்களை திருடிப் போனார்கள். அதிலே பிரியாணியை அண்டாவோடு திருடிப் போனார்கள்.

அதற்கென்ன இப்போது என்று கேட்கிறீர்களா?


பாஜக நாளை ஊர்வலம் போனால் கோவைக்காரர்கள் பயப்படாமல் என்ன செய்வார்கள்? கடைகளை அடைத்து வைத்தால் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. 

ஆமாம், ஆட்டுக்காரா, இந்த ஊர்வலத்துக்கு தலைமை அர்ஜுன் சம்பத்தானே? கோவைக் கலவரத்தின் போது மருத்துவமனையில் நான்கு பேரை கொலை செய்தமைக்காக சிறைக்கு போய் இன்னமும் பெயிலில் இருக்கும் பயங்கரவாதிதானே அவரு!



சைக்கிள் சாரங்கியா? அப்ப சரி, அப்ப சரி

 


இன்று மக்களவையில் தள்ளு முள்ளு நடந்துள்ளது.

 ராகுல் காந்தி ஒரு காங்கிரஸ் எம்.பி யை தன் மேல் தள்ளி விட்டதால் கீழே விழுந்து மண்டை உடைந்துள்ளதாக ஒரு பாஜக எம்.பி ஐ.சி.யுவில் படுத்துக் கொண்டுள்ளதாக மத்யமர் ஆட்டுக்காரன் குழுவே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அநேகமாக ராகுல் காந்தியை கைது செய்யலாம். அதை வைத்து எம்.பி பதவியிலிருந்து நீக்கும் முயற்சியைக் கூட மோடி செய்யலாம்.

 யாரந்த எம்.பி என்று பார்த்தால் அது சைக்கிள் சாரங்கியாம்.

 யார் அந்த சைக்கிள் சாரங்கி?

 ஐந்து வருடத்திற்கு முன்பு எழுதிய பதிவு கீழே . . .

 

மோடி சைக்கிளில் மறைத்த ரத்தக்கறை





மூங்கில் குடிசையில் வசிக்கும் ஏழை,
சைக்கிளில் மட்டுமே பயணிக்கும் எளிய வேட்பாளர்,
ஒடிஷாவின் மோடி

இப்படியெல்லாம் காவிகளால் சமூக ஊடகங்களில் வர்ணிக்கப்பட்டவர் பிரதாப் சந்திர சாரங்கி.

ஒரு சாதாரண கதர் ஜிப்பா அணிந்த இந்த தாடி வைத்த மனிதர் நேற்று மோடியின் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

ஒரு எளிய மனிதரை அமைச்சராக்கி அழகு பார்த்துள்ளார் மோடி என்று சங்கிகளின் பெருமிதத்திற்கு அளவே இல்லை.

ஆனால்  அந்த எளிமைக்குப் பின்னே ஒளிந்திருப்பது மோசமான ஒரு மனிதர், மத வெறி பிடித்த ஒரு மிருகம் என்பதை பி.பி.சி அம்பலப்படுத்தி உள்ளது.

கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் நினைவில் உள்ளாரா?

அவரும் அவரது இரண்டு மகன்களும்  எரித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் நினைவில் உள்ளதா? பஜ்ரங் தள் என்ற ஆர்.எஸ்.எஸ் ஸின் அடியாள் பிரிவுதான் அந்த அராஜகக் கொலைகளை நிகழ்த்தியது என்பதும் நினைவில் உள்ளதா?

இந்தியாவை உலக அரங்கில் தலை குனிய வைத்த அந்த கொடூரக் கொலையை நிகழ்த்திய பஜ்ரங் தள் அமைப்பின் அன்றைய ஒரிஸா மாநிலத் தலைவராகவும் நேரடியாக அக்கொலையைச் செய்த தாராசிங்கின் வழிகாட்டியுமாக இருந்ததும் யார் தெரியுமா?

இதோ இப்போது
சைக்கிளில் பயணிக்கும் எளியவராகச் சொல்லப்படுகிற
மோடியின் புதிய மந்திரி
பிரதாப் சந்திர சாரங்கிதான்.

அந்த வழக்கில் முதன்மைக் குற்றவாளிகளில் ஒருவராக சேர்க்கப்பட்டதால் தலை மறைவாக இருந்தவர் அவர்.

அது மட்டுமல்ல, 2001 ல் ஒடிஷா மாநில சட்டப் பேரவையை தாக்கிய கலவர வழக்கிலும் பிரதான குற்றவாளி இந்த மனிதர்தான்.

சமூக ஊடகங்களால் ஒரு குற்றவாளியை ஒரு குற்றவாளியை புனிதன் போல சித்தரிக்க முடியும் என்பதற்கான சிறந்த உதாரணம் இந்த சாரங்கி.

வெடிகுண்டு சாமியாருக்கு மந்திரி பதவி கொடுக்கவில்லை என்று காலையில் மோடிக்கு நன்றி சொல்லியிருந்தேன். இப்போதுதான் தெரிகிறது சீனியாரிட்டி அடிப்படையில் சாமியாருக்குப் பதிலாக சாரங்கிக்கு கொடுத்திருக்கிறார் என்று.

ஆக மிகப் பெரிய கிரிமினல் மூலம் மோடியின் புது நாடகம் அரங்கேறியுள்ளது. அண்ணல் அம்பேத்கரை இழிவு படுத்திய அமித்ஷாவை பாதுகாக்க நடத்திய திசை திருப்பும் நாடகம். அமித்ஷாவை பாதுகாப்பது மோடியின் கடமை அல்லவா! மோடிக்காக இளம் பெண் பொறியாளரை உளவு பார்த்த உத்தமனல்லவா!

 


பிகு: ஆமாம், எந்த மருத்துவமனையில் ஐ.சி.யு வில் ஒரு நோயாளியை எந்த மானிட்டர் இணைப்போ, குளுக்கோஸ் கூட ஏற்றாமல், தொலைக்காட்சி கேமராக்கள் புடை சூழ மந்திரிகள் வருவதை அனுமதிக்கிறார்கள். போடும் நாடகத்தையாவது ஒழுங்கா போடுங்கடா . . .

 

 

Wednesday, December 18, 2024

ஆளில்லா கடையில், வாய்ப்பில்லா மசோதாவை மோடி???

 


அரசியல் சாசனத்தை திருத்த மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும் என்பதும் அப்படி நிறைவேற்ற வாய்ப்பில்லை என்பதும்  தெரிந்தும் ஏனய்யா மோடி, "ஒரே நாடு, ஒரே தேர்தல் " மசோதாவை கொண்டு வந்தீர்? 

உங்க ஆட்களிலேயே எத்தனை பேர் ஓடிப் போவார்கள் என்பதை அறிந்து கொள்ளவா?

பிகு: இது ஒற்றை மீமோடு முடிக்கிற விஷயமில்லை. விரிவான பதிவு விரைவில் . . .

மோடி, மோடி என்றால் எங்கே போவார்கள் அமித்து?



அசுத்தத்தை நீண்ட நாட்கள் ஒளித்து வைக்க முடியாது. நாற்றம் ஒரு நாள் வெளியே வந்து காட்டிக் கொடுத்து விடும். அண்ணல் அம்பேத்கரையும் தங்களவராக கைப்பற்றிக் கொள்ள சங்கிகள் நாடகமாடினாலும் அவர் மீது அவர்களுக்கு மரியாதை கிடையாது என்பது உலகறிந்த உண்மை.

பாபர் மசூதியை இடிக்க அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளான டிசம்பர் ஆறை தேர்ந்தெடுத்தது,

அண்ணல் அம்பேத்கர் புத்த மத்திற்கு தழுவுகையில் அறிவித்த 22 பிரகடனங்களை அவர்கள் ஆட்சி செய்த மாநிலங்களின் பாடப்புத்தகங்ககளில் இருந்து நீக்கியது.

“பொய்யான கடவுள்களை வழிபடுவது” (Worshipping of false gods) என்று அண்ணல் அம்பேத்கரை இழிவு படுத்தி அருண் ஷோரி எழுதிய நூலை வெளியிட்டது, பின் அவரையே மத்திய மந்திரியாக்கியது.

ஆகியவை அவர் மீதான வெறுப்பிற்கு உதாரணம்.

உள்ளுக்குள் ஒளித்து வைத்திருந்த வெறுப்பை அமித்ஷா  இப்போது வெளிப்படுத்தி விட்டார்.  அண்ணல் அம்பேத்கர் மீதான வெறுப்பும் எரிச்சலும்தான் அவரை அப்படி பேச வைத்துள்ளது.

சங்கிகள் அண்ணல் அம்பேகரை மதிக்கிறார்கள் என்று சொல்லி வந்த கட்டுக்கதை அம்பலமானது நல்லதுதான்.

அது சரி அமித்து, அம்பேத்கர், அம்பேத்கர் என்று  சொல்வதற்கு பதிலாக கடவுள் பெயரை உச்சரித்தால் ஏழு ஜன்மத்துக்கு சொர்க்கத்திற்கு போகலாம் என்று சொன்னீர்களே, கடவுளுக்கு பதிலாக மோடி, மோடி என்று உச்சரித்தால் இந்த ஜென்மத்தில் எங்கே போகலாம்?

அதற்கான பதிலை நானே சொல்கிறேன்.

மோடி, மோடி என ஜால்ரா அடித்தால் நீங்கள் ஆட்சியில் இருக்கும் வரை நாடாளுமன்றம், சட்டமன்றம், ராஜ்பவன் என இப்படி இங்கே வேண்டுமானாலும் செல்லலாம்.

ஆனால் ஆட்சி போன பின் அத்தனை பேருக்குமான இடம் சிறைச்சாலைதான்.

ஆமாம். நீங்கள் அத்தனை பேரும் அவ்வளவு பெரிய கிரிமினல்கள்.

பிகு: நாங்கள் அம்பேத்கரை மதிக்கிறோம் என்று சொன்ன மோடி, அண்ணல் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவும் போது அறிவித்த 22 பிரகடனங்களில் எத்தனை பிரகடனங்களை ஏற்றுக் கொள்கிறார் என்பதை வெளிப்படையாக அறிவிப்பாரா?



மேலே உள்ளவைதான் அந்த பிரகடனங்கள்.


Tuesday, December 17, 2024

எடப்பாடி க்யாரே டீலிங்கா?

 


சி.ஏ.ஏ சட்டத்தை ஆதரித்து இஸ்லாமியர்களுக்கு துரோகம் இழைத்த அதிமுக, ஒரு நாடு, ஒரே தேர்தல் மசோதாவை ஆதரித்து இந்திய ஜனநாயகத்திற்கே துரோகம் இழைத்துள்ளது.

என்ன எடப்பாடி ரெண்டு நாள் முன்னாடி பொதுக்குழுவில பாஜகவை தாக்கினீங்களாம், அதெல்லாம் செட்டப்பா?

இந்த கேவலமான வேலைக்கு என்ன டீலிங் போட்டிருக்கீங்க?

யானை மாலை போட்டு பிச்சைக்காரன் ராஜாவானது மாதிரி தவழ்ந்து போய் முதலமைச்சரான உங்க கிட்ட எல்லாம் அரசியல் நாணயம் எல்லாம் எதிர்பார்க்க முடியுமா?

நீங்களும் ஒரு அமைதிப்படை அமாவாசைதானே!

தடைகளை தகர்த்து கிருஷ்ணாவுக்கு விருது

 


சனாதனக் கூட்டம் டி.எம்.கிருஷ்ணாவிற்கு சங்கீத கலாநிதி விருது வழங்கப் படக் கூடாது என்று எத்தனையோ சதிகள் செய்து பார்த்தது. கர்னாடக சங்கீத உலகைத் தாண்டி யாருமே அறியாத ரஞ்சனி-காயத்ரி  சகோதரிகள் முகநூல் மூலம் கலகம் செய்து மூக்குடைபட்டார்கள். மீ டூ குற்றச்சாட்டு காரணமாக மியூசிக் அகாடமியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட சித்ர வீணா ரவி கிரண் தான் முன்பு பெற்றிருந்த சங்கீத கலாநிதி விருதை திரும்பக் கொடுத்து சர்ச்சையாக்க முனைந்தார். அவருடைய லீலைகள்தான் வெளியாகி அசிங்கப்பட்டார்.

அடுத்து உயர் நீதிமன்றத்தில் திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் முறையில் உள்ள ஒருவரை பிடித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட வைத்து தடை உத்தரவு வாங்கினார்கள்.

ஆனால் உயர் நீதிமன்ற பெஞ்ச் அந்த தடையை நீக்கி விட்டது. எம்.எஸ்.சுப்புலட்சுமி, தன் பெயரில் விருதோ அல்லது பண முடிப்போ கொடுக்கக் கூடாது என்று தன் உயிலில் எதுவும் சொல்லவில்லை என்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் பெயரில் சங்கீத கலாநிதி விருது பெறுபவருக்கு 2005 ம் ஆண்டு முதல் ஒரு லட்ச ரூபாய் பண முடிப்பு தரப்படுகிறது. இத்தனை நாள் தூங்கிக் கொண்டிருந்தாயா என்று கேட்டு அந்த பேரன் வகையறாவை துரத்தி விட்டார்கள். இத்தீர்ப்பு வந்தது வெள்ளிக்கிழமை காலை.

மத்தியரசின் தலைமை வழக்கறிஞரே வழக்கு நடத்தப் போகிறார். அதனால் அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வெள்ளிக்கிழமை மதியமே உச்ச நீதிமன்றத்தில் முறையிட அப்படி ஒன்றும் இது தலை போகிற அவசர வழக்காக எடுக்கும் அளவிற்கு வொர்த்தில்லை என்று அங்கேயும் துரத்தி விட்டார்கள்.

 

சனாதனக் கூட்டம் முட்டுச்சந்தில் முழித்துக் கொண்டிருக்க டி.எம்.கிருஷ்ணா, கம்பீரமாக சங்கீத கலாநிதி விருதை ஞாயிறு அன்று பெற்றுக் கொண்டார். இதற்கு முன்பாக சங்கீத கலாநிதி விருது பெற்ற திருமதி பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் திருமதி சௌம்யா ஆகியோர் மேடையில் இருந்ததே சங்கீத உலகின் ஆதரவுக்கான சான்று.

 

சனாதனக் கூட்டம் ஏன் டி.எம்.கிருஷ்ணாவை எதிர்க்கிறது?

 

முன்பு எழுதிய  “ஒரு விருதும் போலிப் புனிதங்களும்ன்” என்ற பதிவை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

 

ஒரு விருதும் போலிப்புனிதங்களும்

 


கர்னாடக சங்கீத அளவில் ஒரு குட்டிக்கலகம் நடந்து கொண்டிருக்கிறது. STORM IN A CUP என்று ஆங்கிலத்தில் சொல்வது போல ஒரு கோப்பைக்குள் வீசும் சூறாவளி என்று கூட சொல்ல முடியாத அளவிற்கு ஒரு குட்டிக் கலகம்.

சங்கீத வித்வத் சபை என்று அழைக்கப்படுகிற மியூசிக் அகாடமி இந்த ஆண்டு அதன் சங்கீத கலாநிதி விருதை இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவிற்கு அறிவித்திருப்பதற்கு ஒரு கோஷ்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள் தாங்கள் மியூசிக் அகாடமியில் பாட மாட்டோம் என்று அறிவித்துள்ளார்கள். முகநூலிலும் பதிவிட்டுள்ளனர்.

ME TOO புகாருக்கு உள்ளானதால் கச்சேரி நிகழ்த்த அனுமதி மறுக்கப்பட்ட ரவிகிரண் அவருக்கு அளிக்கப்பட்ட சங்கீத கலாநிதி விருதை திரும்பக் கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

பிற்போக்குச் சிந்தனைகளை கதாகாலட்சேபம் வழியாக விதைக்கும் விசாகா ஹரி, துஷ்யந்த் ஸ்ரீதர் போன்றோரும் எதிர்த்துள்ளனர். அபஸ்வரம் ராம்ஜி நக்கலடித்து ஸ்லோ பாய்சன் கொடுக்கிறார்.

இத்தனை பேரும் எதிர்க்கும் அளவிற்கு டி.எம்.கிருஷ்ணா விருதுக்கு தகுதியற்ற மொக்கைப் பாடகரா? இசைத்திறன் கொஞ்சமும் இல்லாமல் ரெகமெண்டேஷனில் விருது பெறுகிறாரா?

இல்லை.
நிச்சயமாக இல்லை.

இவர்களின் எதிர்ப்பெல்லாம் இசையால் அல்ல, அதையும் தாண்டியது.

கர்னாடக சங்கீதத்தின் புனிதத்தை சிறுமைப்படுத்தியவராம். 
அதென்ன சிறுமைப்படுத்துதல்?
சபா மேடைகளைத் தாண்டி மீனவக் குப்பங்களில் இசை நிகழ்ச்சி நடத்தியது, மற்ற மதக் கடவுள்களைப் பற்றி பாடியது. 

ஐயப்பனைப் பற்றி கே.ஜே.யேசுதாஸ் பாடலாம், காசி விஸ்வநாதர் கோயிலில் பிஸ்மில்லாகான்  ஷெனாய் வாசிக்கலாம். ஆனால் டி.எம்.கிருஷ்ணா வேற்று மதக் கடவுளை பாடினால் தவறாம். 

கர்னாடக சங்கீதம் புனிதமானதா என்ற கேள்விக்கு கே.பாலச்சந்தர், அப்படி ஒரு புடலங்காயும் கிடையாது என்று முப்பத்தி ஐந்து வருடம் முன்பே உன்னால் முடியும் தம்பி படத்தில் சொல்லி விட்டார்.

"என்னமோ ராகம், என்னென்னமோ தாளம், தலையை ஆட்டும் புரியாத கூட்டம்"
என்ற வரியை நிலைக்க வைக்கும் முயல்பவர்கள் இவர்கள்.

"கவலை ஏதுமில்லை, ரசிக்கும் மேட்டுக்குடி, சேரிக்கும் சேர வேண்டும், அதுக்கும் பாட்டு படி"
என்பதற்கு பதற்றமாகி விடுகிறார்கள்.

புனிதத்தை சிறுமைப்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டின் பின்னணி இதுதான்.

தியாகராஜரை விமர்சித்தார். எம்.எஸ்.சுப்புலட்சுமியை விமர்சித்தார் என்பது அடுத்த குற்றச்சாட்டு.

தியாகராஜரைப் பற்றி என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது. ஆனால் தியாகராஜரைப் போல அன்றாட உணவுக்கு வீடு வீடாக உஞ்சவிருத்தி சென்று வசூலிக்கும் நிலையில் எந்த இசைக்கலைஞரும் இல்லை. "நிதி சால சுகமா?" என்ற பாடலை பாட கூசுபவர்கள்தான் இன்றைய வித்வான் சிரோண்மணிகள்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி அதிகமாக மார்க்கெட்டிங் உத்திகளால் முன்னிறுத்தப்பட்டவர் என்பதில் உண்மையில்லாமல் இல்லை. அதை அவர் செய்யவில்லை. செய்தவர் அவரது தந்திரக்கார கணவரான சதாசிவம். எங்கள் தோழர் ச.சுப்பாராவ் தமிழாக்கம் செய்த நூலை படியுங்கள் புரியும்.

ர,கா சகோதரிகளின் முகநூல் பதிவு அவர்களின் உண்மையான எரிச்சலை அம்பலப்படுத்தி விட்டது.

ஒரு சமுதாயத்தை அழித்தொழிப்பேன் என்று சொன்ன, அந்த சமுதாயப் பெண்களை இழிவு படுத்திய பெரியார் என்றழைக்கப்படும் ஈ.வெ.ரா வை இவர் பாராட்டுகிறார்.

பெரியார் மீது சொல்லப்பட்ட குறிப்பிட்ட இந்த இரண்டு குற்றச்சாட்டுக்களும் அபாண்டமானவை. அனந்தகிருஷ்ண்ன் பட்சிராஜன் என்ற நாஜிப் பெரியவர் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் அவதூறு இது. 

மீ டூ சமயத்தில் பட்ட அசிங்கத்திற்கு இப்போது எதிர்வினையாற்றுகிறார் சபலப் பேர்வழி ரவி கிரண். 

டி.எம்.கிருஷ்ணா மீது இவர்களுக்கெல்லாம் வேறென்ன பிரச்சினை?

கலை, கலைக்கு என்ற நிலைக்கு பதிலாக கலை யாவும் மக்களுக்கே என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்.

கர்னாடக இசை உலகில் நிலவிய பேதங்களை தன் நூல்கள் வாயிலாக அம்பலப்படுத்தியுள்ளார். அதிலே செபாஸ்டியனும் சகோதரர்களும் என்ற நூல் மிருதங்கம் உருவாக்கும் கலைஞர்களைப் பற்றியது. அது பல உண்மைகளை சொன்னது.

மத நல்லிணக்கம், மதச் சார்பின்மை ஆகியவற்றை தொடர்ந்து வலியுறுத்துபவர்.

மிக முக்கியமாக 

குடியுரைமைச் சட்டத்திற்கு எதிரான டெல்லி ஷாகின்பாத் போராட்டத்தில் கலந்து கொண்டவர். போராட்ட கீதம் என்றழைக்கப்பட்ட "ஹம் தேகேங்கே (நாம் காண்போமே" பாடலை பல மொழிகளில் பாடியவர், 

இது ஒன்று போதாதா? 

ரஞ்சனி காயத்ரி சகோதரிகளுக்கு மியுசிக் அகாடமி தலைவர் என்,முரளி கொடுத்த பதில் "உங்களுக்கு உள் நோக்கம் உள்ளது" என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆதிக்க சக்திகளின் குரல் இச்சகோதரிகள் வாயிலாக வெளிப்பட்டுள்ளது. அவர்களைப் பாராட்டுபவர்கள் எல்லோரும் அதே சிந்தனை கொண்டவர்கள்தான். 

இப்போது டி.எம்.கிருஷ்ணாவிற்கு எதிராக பொங்குகின்ற கர்னாடக இசை வித்வான் சிரோண்மணிகள் யாராவது மகள் ஆப்பிரிக்கரை திருமணம் செய்து கொண்டதற்காக  சுதா ரகுநாதன் ஆபாசமாக வசை பாடப்பட்ட போது, அவருக்கு மேடைகள் மறுக்கப்பட வேண்டும் என்று அழுத்தம் அளிக்கப்பட்டபோது அவருக்கு ஆதரவாக வாய் திறந்தார்களா?

மேட்டிமைச் சிந்தனைக்கு புனிதப் போர்வை போர்த்தும் போலிகள்தான் இவர்கள்.. . .

சங்கீத கலாநிதி டி.எம்.கிருஷ்ணாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.