Friday, October 25, 2013

வ.உ.சி யின் பணத்தை மகாத்மா காந்தி மோசடி செய்தாரா?





ஐயா நியாயமார்களே, இக்கேள்வியை நான் எழுப்பவில்லை. இது என் சந்தேகம் இல்லை. ஆனால் கேள்வியாக இல்லாமல் ஆம் அப்படித்தான் என்று பதிலாகவே ஒரு புத்தகம் எழுதப்பட்டுள்ளது உங்களுக்கு தெரியுமா?

கோவையைச் சேர்ந்த அனிதா. கு.கிருஷ்ணமூர்த்தி என்ற வழக்கறிஞர் “காந்தி கணக்கு” என்ற ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.  தேசத் தலைவராக நாம் போற்றும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரை ஜாதிய சிமிழுக்குள் அடைக்கும் முயற்சிகளில் ஒன்று இந்த நூல். வேலூரில் இந்த நூலை ஒரு ஜாதி சங்கம் வெளியிட்டதாகக் கூறி அதை எங்கள் ஊழியர் ஒருவர் கொடுத்தார்.

பல்வேறு முரண்பாடுகள் உள்ள அந்த நூலின் விபரங்களுக்கு நான் செல்லவில்லை. அந்த புத்தகத்தின் மையக் கருத்தாக சொல்லப்படுவது காந்தி ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்பதுதான்.

தென் ஆப்பிரிக்காவில் இருந்த வேதியன் பிள்ளை என்பவர் காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து புறப்படும்போது ஐயாயிரம் ரூபாயை அளித்து அதனை வ.உ.சி யிடம் சேர்க்கச் சொன்னதாகவும் காந்தி அதை வ.உ.சி யிடம் சேர்க்காமல் தானே வைத்துக் கொண்டு விட்டாராம். எட்டாண்டுகளுக்கு பின்பு அந்த வேதியன் பிள்ளை இந்தியா வந்த போது காந்தி மூலம் தான் அனுப்பிய ஐயாயிரம் ரூபாய் வ.உ.சி யை வந்து சேரவில்லை என்று அறிந்து சபர்மதி ஆசிரமம் போய் காந்தியோடு சண்டை போட்டாராம். காந்தி பம்பாயில் உள்ள ஒரு பணக்காரருக்கு கடிதம் கொடுத்தனுப்ப அந்த செல்வந்தர் ஐயாயிரம் ரூபாய் கொடுக்க பிறகு அப்பணம் வ.உ.சி யிடம் சேர்க்கப்பட்டதாம்.

1912 ம் ஆண்டு கொடுக்கப்பட்ட பணம் 1920 ம் ஆண்டுதான் சேர்க்கப்பட்டது என்று இந்த நூல் சொல்கிறது. சபர்மதி ஆசிரமத்திற்கு வேதியன் பிள்ளையோடு உடன் சென்றிருந்த தண்டபாணிப் பிள்ளை என்பவர் எழுதி வைத்திருந்த குறிப்பு ஒன்றுதான் இதற்கு ஆதாரமாக சொல்லப்படுகிறது. அந்த குறிப்பின் நகல் எதுவும் புத்தகத்தில் கொடுக்கப்படவில்லை.

இப்படி ஒரு சமபவம் உண்மையிலேயே நடந்ததா என்று கொஞ்சம் முயற்சி எடுத்து தேடிப் பார்ப்போமா என்று யோசித்தேன்.

காந்தியவாதிகளும் காந்தியின் பெயரால் மக்கள் இயக்கம் நடத்தி காந்தியை கொலை செய்தவர்களின் வாரிசுகளை அரியணையில் அமர்த்த பாடுபடும் மனிதர்களூம் இருக்கும் போது நான் எதற்கு என் நேரத்தை விரயம் செய்ய வேண்டும் என்று யோசித்து  விட்டு விட்டேன்.

ஆக இதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு காந்தியை பெயரில் வைத்து இயக்கம் நடத்துபவர்களுக்கு மட்டுமே உண்டு. பதில் சொல்லுங்கள்

இந்த நூலில் இன்னும் சில சர்ச்சைகள் உண்டு. அவை நாளை

18 comments:

  1. இதற்கு தன தனிப்பட்ட வாழ்க்கையில் மிகபெரியகாந்திய வாதிகளாய் வாழ்ந்த பொது உடமை இயக்க தலைவர்களையே கேட்கலாம்.EMS ,தோழர்ஜீவாவைவிட பெரிய காந்தியர்கள் யாரும் இல்லை என்பதில் என்னை போன்ற கம்யூனிஸ்ட் விரோதிகளும் ஒப்புகொள்ளும் விஷயம்.

    ReplyDelete
  2. ஐயா விஜயன் அது எப்படி நான் எழுதுவதை எப்போதுமே மிகவும் தவறாகவே புரிந்து கொள்ள முடிகிறது? கம்யூனிஸ்ட் எதிரி என்று நேர்மையாக ஒப்புக் கொண்டதற்கு நன்றி. அந்த மஞ்சள் கண்ணாடியை எப்போதுமே அணிந்து கொண்டிருந்தால் இப்படி எல்லாவற்றையும் தப்பு தப்பாகத்தான் புரிந்து கொள்வீர்கள் போல

    ReplyDelete
  3. எந்த ஆதாரமும் இல்லாமல் போகிற போக்கில் சேற்றை வாரி இறைக்கும் இது போன்ற நூல்களுக்கு எதற்கு விளக்கம் அளிக்கவேண்டும்? இவற்றுக்கு பதில் சொல்லும் பொறுப்பு யாருக்கும் இல்லை. மேலும், பதில் அளித்து இவர்களை வளர்க்கவும் கூடாது!

    ReplyDelete
    Replies
    1. Remote possibility.Gandhi was maintaining account for every single paisa of public money, unlike the present day congressmen. We know he had donated the jewels presented to hom on his personal capacity to the public fund after a long fight with Kasturba.Tamilians also have a tendency of exaggregating everything.We

      Delete
  4. //அந்த புத்தகத்தின் மையக் கருத்தாக சொல்லப்படுவது காந்தி ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்பதுதான்.//
    அந்த புத்தகம் தான் எப்படிபட்டது என்பதை தெரியபடுத்திவிட்டீர்களே.

    ReplyDelete
  5. திரு Bandhu சொன்னதில் எனக்கும் உடன்பாடு உண்டு. சிலர் தங்களை பிரபல்யபடுத்த முயற்சியாக இப்படி எல்லாம் தொடங்குகிறார்கள்.

    ReplyDelete
  6. துண்டு பிரசுரங்களின் உண்மையை நம்ப முடியாது! விட்டுத்தள்ளுங்கள்!

    ReplyDelete
  7. ஆமாம் நீங்களாம் காந்தியப்பத்தி கவலைப்பட ஆரம்பிச்சுட்டிங்களே அவ்வ்! இனிமே கார்ல் மார்க்ஸ்,ஏங்கெல்ஸ் எல்லாம் அநாதையாகிட மாட்டாங்கோ?

    இந்தியாவில கம்யூனிஸ்ட் கட்சியே காங்கிரசில ,காந்திக்கொள்கை புடிக்காதவங்க பிச்சிக்கிட்டு வந்து தான் உருவாச்சு அவ்வ்!

    அந்த புத்தகத்தில் சொல்லி இருக்கும் நபர்களின் பெயர்,காலம் ஆகியன பற்றிய கருத்துக்கு செல்ல விரும்பவில்லை, ஆனால் தென்னாப்பிரிக்காவில் இருந்து வ.வூசி.க்கு வந்த நிதியை காந்தி வ.வு.சிக்கு அளிக்காமல் அலைக்கழித்தார் என்பது மட்டும் உண்மை, அவரோட சுய சரிதத்திலும் இருக்கு, மேலும் வ,வூ.சி கப்பல் ஓட்டி நட்டம் அடைந்த போது காங்கிரஸ் கண்டும் கொள்ளவில்லை, சிறை சென்றால் பென்ஷன் உண்டு , வவுசிக்கு கடைசி காலத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டம் ஆனப்போதும் அந்த பென்ஷனை கொடுக்காமல் காங்கிரஸ் இழுத்தடித்தது வரலாறு, ராஜாஜியுடன் சண்டை எல்லாம் ஆச்சுனு சொல்வார்கள்,

    கடைசியில் பெரியாரிடம் தான் உதவிக்கேட்டு போனார், பெரியார் அப்போது காங்கிரஸ் விட்டு வெளியே வந்திருந்தார், நான் சொன்னது கொஞ்சம் முன்னப்பின்ன இருக்கலாம், ஆனால் உங்கள் அளவுக்கு சும்மா தோழர் சொன்னார் , அப்போ அது குப்பைனு பதிவா போட்டு தேத்திக்கலை :-))

    பின்னூட்டம் வெளியீடுவீர்கள்னு நினைக்கிறேன்(இந்தக்காலத்துல புரட்சி பேசுறவங்க தான் கமுக்கமா காரித்த முடிக்கிறாங்க அவ்வ்)

    ReplyDelete
  8. தோழர் ராமன் .. எனக்கென்னவோ காந்தி அப்படி செய்திருக்க மாட்டார் என்று தோன்றுகிறது.. காரணம்.. சத்ய சோதனை என்று வெளிப்படையாக தன்னுடைய வாழ்க்கையை எழுதியவர்.. அவர் இந்தியா வந்தவுடன் அவருக்கு செய்ய வேண்டிய வேலைகள் சந்திக்க வேண்டிய பிரச்சனைகள் என 5 லட்சம் இருந்திருக்கும்.. கொந்தளிப்பான கால கட்டம் அது.. அப்போது தவறு நிகழ்ந்திருக்கும்.. நீங்கள் காந்தியை ஏற்கிறீர்களோ இல்லையோ.. ஒரு காலத்தில் காந்தியின் மீது தவறான பிம்பம் கொண்டிருந்தேன்.. ஆனால் தற்போது அவருடைய தகவல் பலவற்றை படித்தவுடன் கிட்டத்தட்ட அவரின் ரசிகனாகவே மாறிவிட்டேன்...

    ReplyDelete
    Replies
    1. காந்தி கணக்கு என்றாலே கிட்டதட்ட நாமம் என்கிற அர்த்தத்தைதான் உருவாக்கி வைத்திருக்கிறோம் நாமெல்லாம். ஆனால் காந்தி கணக்கு என்றால் என்ன என்பதற்கான உண்மையான அர்த்தம் என்னவென்று விசாரித்தபோது...மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்த போது அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் மானசீகமாக ஆதரவு அளித்தார்களாம். நேரடியாக எங்களால் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாது. ஆனால் எப்படியாவது உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இதில் கலந்து கொள்ள வரும் தொண்டர்களை எங்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள சொல்லுங்கள். பணம் தர வேண்டாம். அடையாளம் தெரியாமல் பணம் கேட்க நேரும்போது காந்தி கணக்கு என்று எங்களுக்கு புரியும்படி சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க மாட்டோம் என்றார்களாம் அந்த வியாபாரிகள். அப்படி வந்ததுதான் காந்தி கணக்கு.

      Delete
    2. காந்தி கணக்கு என்றாலே கிட்டதட்ட நாமம் என்கிற அர்த்தத்தைதான் உருவாக்கி வைத்திருக்கிறோம் நாமெல்லாம். ஆனால் காந்தி கணக்கு என்றால் என்ன என்பதற்கான உண்மையான அர்த்தம் என்னவென்று விசாரித்தபோது...மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்த போது அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் மானசீகமாக ஆதரவு அளித்தார்களாம். நேரடியாக எங்களால் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாது. ஆனால் எப்படியாவது உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இதில் கலந்து கொள்ள வரும் தொண்டர்களை எங்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள சொல்லுங்கள். பணம் தர வேண்டாம். அடையாளம் தெரியாமல் பணம் கேட்க நேரும்போது காந்தி கணக்கு என்று எங்களுக்கு புரியும்படி சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க மாட்டோம் என்றார்களாம் அந்த வியாபாரிகள். அப்படி வந்ததுதான் காந்தி கணக்கு.

      Delete
    3. http://tamil.thehindu.com/society/kids/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/article5117426.ece

      Delete
  9. பத்ரிநாத்,

    //அவர் இந்தியா வந்தவுடன் அவருக்கு செய்ய வேண்டிய வேலைகள் சந்திக்க வேண்டிய பிரச்சனைகள் என 5 லட்சம் இருந்திருக்கும்.. கொந்தளிப்பான கால கட்டம் அது.. //

    மெய்யாலுமே சத்தியசோதனைய படிச்சீரா அவ்வ்!

    இந்தியா திரும்பிய பின்னர் உள்ளூரில் (மும்பை) காங்கிரஸ் தலைவர்களிடம் அறிமுகம் ஆக நடையாக நடந்தேன், யாரும் கண்டுக்கலை என்பது போல தான் எழுதி இருக்கார்(உண்மையில பல கிலோ மீட்டர் நடந்தாரம் சும்மாத்தானே இருக்கோம் ஏன் செலவு செய்யனும்னு), கொஞ்ச நாள் இப்படி வெட்டி ஆபிசராகத்தான் இந்தியாவில் சுத்தினார் அவ்வ்!

    வந்து இறங்கியவுடன் யாரும் தலைமேல தூக்கி வச்சிட்டு பாட்டு பாடி "5 லட்சம் பிரச்சினைகளை சுமக்க வைக்கலை"


    கோகலே அறிமுகம் கிடைச்சு அவரு தூக்கிவிடலைனா ,மகாத்மா எல்லாம் இல்லை ஒன்லி மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி ஆக மட்டுமே அறியப்பட்டிருப்பார்!

    ReplyDelete
  10. மிஸ்டர் அவ்வ... நீங்கள் காந்தியைப் பற்றிய புரிதல் இல்லாமல் எழுதியிருப்பதாகத்தான் தோன்றுகிறது.. எதைப் பற்றியும் நாம் எதிர்மறையாக கருத்து தெரிவிக்கலாம்.. அது ஒரு ஃபேஷன்.. அதன் தாக்கம்தான் காந்தியைப் பற்றியதும் ஆகும் என்பது என் கருத்து.. 30 கோடி மக்கள் (1 சதவிகிதம் ஏற்றுக் கொள்ளவில்லை) ஏற்றுக் கொண்ட ஒரு தலைவனை வெளியிலிருந்து ஒருவன் induct செய்ய அவர் என்ன அரசியல் சினிமா வாரிசா...? அப்படி வாரிசாக இருப்பவரும் stuff இல்லைஎன்றால் காணாமல் போய்விடுகிறார்கள்.. காந்தியின் வழி என்பது அகிம்சை என்கிற புது வழி.. உலகில் பலரால் கைகொள்ளாத வழி.. நாகரீக உலகில் மனிதம் சனநாயகப் படுத்தப்படும் காலகட்டத்தில் அவர் கையாண்ட வழி.. வெறும் நடைபயணம் மட்டுமன்றி நாடெங்கும் ரயில் பயணமும் செய்திருக்கிறார்.. சரி.. உங்களுக்கு அவரைப் பற்றியும் அவரின் தத்துவத்தைப் பற்றியும் மிகச் சரியாக துல்லியமாக கூற இயலும் என்றால் காந்தியிசத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை ஒரு புத்தகமாகப் போடுங்களேன்.. படித்துவிட்டு என் கருத்தைச் சொல்கிறேன்....

    ReplyDelete
  11. வவ்வால், பத்ரிநாத்திற்கு பதில் சொல்லுங்கள்

    ReplyDelete
  12. காந்தி கணக்கு என்றாலே கிட்டதட்ட நாமம் என்கிற அர்த்தத்தைதான் உருவாக்கி வைத்திருக்கிறோம் நாமெல்லாம். ஆனால் காந்தி கணக்கு என்றால் என்ன என்பதற்கான உண்மையான அர்த்தம் என்னவென்று விசாரித்தபோது...மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்த போது அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் மானசீகமாக ஆதரவு அளித்தார்களாம். நேரடியாக எங்களால் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாது. ஆனால் எப்படியாவது உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இதில் கலந்து கொள்ள வரும் தொண்டர்களை எங்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள சொல்லுங்கள். பணம் தர வேண்டாம். அடையாளம் தெரியாமல் பணம் கேட்க நேரும்போது காந்தி கணக்கு என்று எங்களுக்கு புரியும்படி சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க மாட்டோம் என்றார்களாம் அந்த வியாபாரிகள். அப்படி வந்ததுதான் காந்தி கணக்கு. ([1])
    பயன்பாடு

    ReplyDelete
  13. இதை தான் மேலையே குறிப்பிட்டு விட்டார்களே சாதியை அடிப்படை நோக்கில் எழுதியது என

    காந்தி தென்ஆப்ரிக்காவில் இருந்த வரை வேதியன் பிள்ளை என்ற ஒருவரை சந்தித்ததாக குறிப்பிட வில்லை

    அப்படி ஒருவர் இருந்தாலும் காந்தியிடம் அவர் எப்படி 5000 ரூவா கொடுப்பார் காந்தி இருப்பதோ வட இந்தியா 1912வரை அவருக்கு தமிழகம் எங்க இருக்குனே சரியா தேரியாது அப்பேர் பட்ட ஒருவரிடம் பணம் கொடுத்து விட வேதியன் பிள்ளை என்ன கேடு கெட்ட கூறே இல்லாத முட்டாளா இல்ல பைத்தியமா?

    அவை அனைத்தும் சுதந்திர இந்தியாவின் பிறகு வ.உ.சி சாதி காரவர்களால் எழுப்ப பட்ட புரளி., வதந்தி


    காந்தி கணக்கு என்பது உப்பு சத்தியாகிரகத்தின் போது காந்திக்கும், போராட்ட வீரர்களுக்கும் மக்கள் பொருளுதவி, உணவு கொடுத்து உதவினர் அதற்க்கு பாஸ்கோட் போல் செயல் பட்ட வார்த்தையே "காந்தி கணக்கு"

    ReplyDelete