Saturday, May 14, 2011

ஜெ வுக்கு இப்போதாவது பணிவு வர வேண்டும்!






தமிழக மக்கள்  ஜெயலலிதாவை  மூன்றாவது முறையாக  முதலமைச்சராகதேர்ந்தெடுத்துள்ளனர்.  ஊழல் புகார்கள், ஆடாத ஆட்டங்கள், ஊதாரி செலவினங்கள்  காரணமாக  முதல் முறையாக  பதவியிழந்தார். அராஜக அணுகுமுறை, தன்னிச்சையான எடுத்தேன் கவிழ்த்தேன்   செயல்பாடுகள் காரணமாக  இரண்டாவது முறையாக  பதவியிழந்தார். 
இப்போது  ஆட்சிக்கு  வருவதற்கு  கருணாநிதிக்கு  எதிரான  கோபம்தான் 
முக்கிய காரணம்.  ஜெ மீதான நம்பிக்கை  என்பது கூட இரண்டாம் பட்சம்தான்.  கலைஞர்  அரசின் குற்றம் குறைகளை  அம்பலப்படுத்தி மக்கள்  முன் வைக்கிற  பணியைக் கூட  மார்க்சிஸ்ட் கட்சி போன்ற மற்ற
கட்சிகள்தான்  செய்தார்களே  தவிர  பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 
அல்ல. 

வாராது  வந்த  மாமணி  போல  அவருக்கு கிடைத்துள்ள  இந்த அரிய
வாய்ப்பை  அவர் முழுமையாக  நல்ல முறையில்  பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.  எதிர்க்கட்சி  என்பதே  இல்லாத நிலையில் தோழமைக் கட்சிகள்  சொல்வதை கேட்டு மதிக்க வேண்டும். அவர்களை  அலட்சியப் 
படுத்துவது  ஜெ வுக்குத்தான்  எதிர்காலத்தில்  பிரச்சினைகளை  உருவாக்கும். 

அவரது  தலைவரின்  பாடல் வரிகளை நினைவில் கொள்ள வேண்டும். 

' பதவி வரும் போது பணிவு வர வேண்டும் தோழா"  

மூன்றாவது முறையாக பதவிக்கு 
வரும் போதாவது  ஜெ விற்கு பணிவு 
வர வேண்டும்.    

6 comments:

  1. நல்ல பதிவு.
    பார்க்கலாம்.

    ReplyDelete
  2. unmaithan,naanum athaiye vizhaigiren.kannan,chennai

    ReplyDelete
  3. நிச்சயம் வராது

    ReplyDelete
  4. ஒரிரு மாதங்களில் ஜெ, மன்மோகன்சிங், சிதம்பரம் அலுவாலியாக்களை தூக்கிசாப்பிட்டுவிட்டு அவர்கள் கொள்கைகளை தீவிரமாக அமல்செய்வார். இடதுசாரிகள் எப்போதும் போல மீண்டும் எதிர்(ரி)க்கட்சியாக போராட்டகளத்தில்.

    ReplyDelete
  5. //ஒரிரு மாதங்களில் ஜெ, மன்மோகன்சிங், சிதம்பரம் அலுவாலியாக்களை தூக்கிசாப்பிட்டுவிட்டு அவர்கள் கொள்கைகளை தீவிரமாக அமல்செய்வார். இடதுசாரிகள் எப்போதும் போல மீண்டும் எதிர்(ரி)க்கட்சியாக போராட்டகளத்தில்//

    அனுமானங்களின் அடிப்படையில் விமர்சிப்பதை விட செயல்பாடுகளை ஒப்பிட்டு விமர்சிக்கலாமே!
    எந்த ஆட்சிக்கும் 100 நாள் ஒப்பீடு என்பது வழக்கத்தில் உள்ள நடைமுறை.

    ReplyDelete
  6. ஹரிஹரன், yes it's correct.

    ReplyDelete