2011 ம் ஆண்டிற்கான சூப்பர் விருதுகள்
முதல் கட்ட விருதுகள் இன்று
வழங்கப்படுகின்றன. போகப் போக
மேலும் பலருக்கு மேலும் பல
விருதுகள் வழங்கப்படும்
கடைசி உண்ணாவிரத பல்டி காரணமாக
ஹீரோவிலிருந்து ஸீரோ விருது
குடிசைகளில் தங்கி வாக்கு சேர்க்க முயல்வதால்
மாடி வீட்டு ஏழை விருது
திஹார் சிறைவாசம் மூலம் கண்ணீர் வரவழைத்ததால்
நானே ஒரு டி.வி. சீரியல் விருது
வேட்டி கிழிபடும் கலாசாரம் கொண்ட
கட்சியின் மாநிலத் தலைவரானதால்
புதிய பலி கடா விருது
செய்வதை ஒழுங்காக செய்யத் தெரியாமல் மாட்டிக் கொண்டவருக்கு
மச்சம், மறு ஒட்டி மாறு வேட விருது
ரத யாத்திரையை விடாமல் பிடித்து தொங்குவதால்
நானே நல்ல சாரதி விருது
வீதியில் அமர்ந்து வேலை பார்ப்பேன் என்று வீரம் பேசியதால்
வாய்ச்சொல் கடமை வீரர் விற்றது
இரண்டு அறை வாங்கியும் தெம்பாக சமாளித்ததால்
ஸ்ட்ராங் மேன் விருது
பிரிவினை நாடகமாய் இருக்கும் என்ற சந்தேகம் இருப்பதால்
ஃ பெவிகால் விருது
நூறாவது நூறுக்காக ரசிகர்களை காக்க வைப்பதால்
கன்னித்தீவு சிந்துபாத் விருது
கடாபியை போட்டுத் தள்ளியதால்
சிறந்த கூலிப்படை பாஸ் விருது
கேரளக் காங்கிரசைக் கண்டித்து உடன் பல்டி அடித்ததால்
சர்க்கஸ் பபூன் விருது
அண்ணன் மன்மோகனுக்கு விருது இல்லாமல்
ஒரு பட்டியலா?
எனக்கு எதுவும் தெரியாது என்றே
சொல்லிக் கொள்வதால்
அவருக்கு
மக்கு பிளாஸ்திரி விருது
வழங்கி சிறப்பு செய்கிறோம்.
அடுத்த பட்டியல் விரைவில்